Saturday, August 24, 2013

Madha Gaja Raja Trailer (OFFICIAL)


சிம்பு, ஹன்சிகா ஜப்பான் பயணம்


சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வருகிறார்கள். இருவரும் காதலை பகிரங்கமாக அறிவித்து உள்ளனர். சமீபத்தில் ஹன்சிகா தனது பிறந்த நாளை கொண்டாடினார். சிம்பு பரிசு வழங்கினார். இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் இருவரும் ஜோடியாக ஜப்பான் செல்கிறார்கள். வாலு, வேட்டை மன்னன் ஆகிய இரு படங்களில் ஹன்சிகாவும், சிம்புவும் ஜோடியாக நடிக்கின்றனர். இதில் வாலு, படப்பிடிப்பு முடிந்துள்ளது. வேட்டை மன்னன் படம் பாதி முடிவடைந்து உள்ளது. இதன் இறுதி கட்ட படப்பிடிப்பை ஜப்பானில் நடத்துகின்றனர். இதில் ஒன்றாக சேர்ந்து நடிப்பதற்காக இருவரும் ஜப்பான் போகிறார்கள்.

மாயை படத்துக்கு ஐகோர்ட் தடை


புது முகங்கள் நடிக்கும் படம் மாயை. இப்படத்தை கண்ணன் இயக்கியுள்ளார். இவரே இதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். நாயகியாக சனம் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த எழில் இனியன் இப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
மாயை படத்துக்கு முதலில் ‘சை’ என பெயரிடப்பட்டு இருந்தது. இந்த படத்தை சென்னை புரொடக்சன் நிறுவனம் சார்பில் நான் தயாரித்த தோடு கதாநாயகிக்கு அப்பாவாகவும் நடித்தேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு சில காட்சிகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும் எனவே மீண்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும் கண்ணன் தெரிவித்தார்.
இதில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நான் படத்தில் இருந்து விலக முடிவு செய்தேன். படத்துக்கு செலவிட்ட பணத்தை படம் ரிலீசுக்கு முன் எனக்கு தந்து விடுவதாக கண்ணன் ஒப்புக்கொண்டார். தற்போது பணத்தை திருப்பித் தராமல் படத்தை வெளியிட முயற்சித்து வருகிறார். பாடலையும் வெளியிட்டு விட்டார். தனது பெயரையே தயாரிப்பாளர் என்றும் போட்டுள்ளார். எனக்கு பணத்தை தராமல் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுதாகர் மாயை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

கோலிவுட்டில் மீண்டும் மார்கெட்டை நிலைநிறுத்த அசின் திட்டம்

தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் அசின். இவர் நடித்த சன் ஆப் மகாலட்சுமி, கஜினி, போக்கிரி போன்ற படங்கள் வெற்றி பெற்றன. கஜினி படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் அசின் நடித்தார். இதன்மூலம் பாலிவுட்டில் பிரபல நடிகையானார். இந்த வெற்றி அவருக்கு சல்மான்கானுடன் ஜோடி சேரும் வாய்ப்பை தேடிக்கொடுத்தது.
அதன்பிற்கு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்கினார். இதனால் தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது மற்ற நடிகைகளின் போட்டி காரணமாக அசினுக்கு இந்தி பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அபிசேக் பச்சான் உடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அந்த வாய்ப்பை ஸ்ருதிஹாசன் பறித்துக்கொண்டார். இதனால் பாலிவுட்டில் பட வாய்ப்பு ஏதும் இல்லாத அசின் பார்வை மீண்டும் கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது.
லிங்குசாமியின் தயாரிப்பில் கமல் ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் அசின்தான் கதாநாயகி. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் உருவாக உள்ளது. மேலும், கமல் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். இதனால் இந்த படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வரலாம் என அசின் திட்டமிட்டுள்ளார்.

ரசிகர் மன்றத்தை கலைப்பதாக விஜய் பெயரில் இன்டர்நெட்டில் மோசடி


அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றத்தை கலைப்பேன் என்றும் நடிகர் விஜய் அறிவித்துள்ளதாக அவர் பெயரிலான போலி டுவிட்டரில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் நடித்த போது அவர் பெயரில் ரசிகர் மன்றம் துவங்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரசிகர் மன்ற கிளை அமைப்புகள் உள்ளன. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ரசிகர் மன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் ரசிகர் மன்றம் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் சமூக சேவை பணிகளில் விஜய் ஈடுபட்டார். ஏழை மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்குதல் ஏழை பெண்களுக்கு தையல் எந்திரங்கள், ஊனமுற்றோருக்கு உபகரணங்கள் வழங்குதல், ஏழை மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளித்தல் போன்ற பணிகளை செய்தார். சமீபத்தில் மீனப்பாக்கம் விமான நிலையம் எதிரில் ரசிகர் மன்ற மாநாடு நடத்தி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடைசி நேரத்தில் அவ்விழா ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் விஜய்யின் தலைவா படத்துக்கும் சிக்கல்கள் ஏற்பட்டன. கடந்த 9–ந்தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தியேட்டர் அதிபர்கள் ‘தலைவா’ படத்தை ரிலீஸ் செய்ய மறுத்து விட்டனர். வெளி மாநிலங்களில் திட்டமிட்டபடி படம் ரிலீசாகி தமிழகத்தில் திருட்டு சி.டி.க்கள் பரவிவிட்டன. இதனால் தலைவா பட குழுவினருக்கு பாதிப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு தலைவா படத்தின் விளம்பர தலைப்பின் கீழ் இடம் பெற்ற ‘டைம் டு லீடு’ (தலைமை ஏற்கும் நேரம்) என்ற ஆங்கில வாசகம் நீக்கப்பட்டது. சில அரசியல் வசனங்களும் நீக்கப்பட்டன. இதையடுத்து கடந்த 20–ந் தேதி தியேட்டர்களில் படம் ரிலீசானது.
இந்த நிலையில்தான் டுவிட்டரில் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக செய்தி வெளியானது. எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. ரசிகர்கள் தயவு செய்து பேனர்களில் அரசியல் வசனங்களை எழுத வேண்டாம். என் வேண்டுகோளையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் ரசிகர் மன்றத்தை கலைப்பேன். ரசிகர் மன்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இனி நானே நேரடியாக ஈடுபடுவேன். என் தந்தையோ வேறு யாரோ ரசிகர் மன்ற விஷயங்களில் தலையிட மாட்டார்கள் என்று விஜய் குறிப்பிட்டுள்ளதாக வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் கூறும் போது, விஜய் டுவிட்டரில் இல்லை. அவர் பெயரில் போலியாக இச்செய்தியை வெளியிட்டுள்ளனர். யாரும் இதை நம்ப வேண்டாம்’ என்று தெரிவித்தார்.

தனுசை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி: வேல்ராஜ்


தனுஷ் தற்போது ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை புது இயக்குனர் வேல்ராஜ் இயக்குகிறார். இவர் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனர் ஆனவர். வெற்றிமாறனின் அனைத்து படங்களிலும் ஒளிப்பதிவு செய்துள்ள இவர், தனுசின் படங்களிலும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தனுஷ் உடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பற்றி வேல்ராஜ் கூறுகையில், நானும், தனுசும் பட சூட்டிங் இடைவேளையில் நிறைய பேசிக்கொள்வோம். ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒளிப்பதிவாளராக இருக்கும் நீங்கள் கடினமான இயக்குனர் துறையை பற்றி உணர்ந்திருக்கிறீர்களா? என்று ஜாலியாக கேட்டார். மேலும், நான் தேதி ஒதுக்கி தந்தால் உங்களால் படம் இயக்க முடியுமா? என்றும் தனுஷ் கேட்டார் என்று பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
இந்த சவாலை அடுத்து புதிய இயக்குனராக வேல்ராஜ், தனுசுடன் கைகோர்த்துள்ளார்.
இந்த படத்தைப்பற்றி மேலும் வேல்ராஜ் கூறுகையில், இது ஒரு அழகான காதல் கதை. தனுஷ் ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். இவர் டாக்டராக வருகிறார். இயக்குனர் சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன் தனுசுக்கு பெற்றோராக வருகின்றனர்.

ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் விஜய்க்கு ஜோடி சமந்தா?


ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய்- காஜல் அகர்வால் நடித்த ‘துப்பாக்கி’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது துப்பாக்கி படத்தை இந்தியில் முருகதாஸ் ‘பிஸ்டல்’ என்ற தலைப்பில் இயக்கி வருகிறார்.
விஜய் ‘தலைவா’ படத்திற்குப் பிறகு நேசன் இயக்கத்தில் ‘ஜில்லா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளிவரும் நோக்கத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்தப் படங்களுக்குப் பிறகு ஏ.ஆர். முருகதாசும், விஜயும் புதுப்படம் ஒன்றில் இணைகிறார்கள். இந்த படத்திற்கு ‘அதிரடி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக விஜய் ரசிகர்களிடம் செய்தி பரவியது. ஆனால் அதை இயக்குனர் முருகதாஸ் மறுத்துள்ளார். இது ஒரு வதந்தி. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதே வேளையில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். அனிருத் இசையமைக்கிறார் என்று நம்பத் தகுந்த வட்டாராங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்கான வேலைகள் டிசம்பர் மாதம் இறுதி அல்லது ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிங்கு ராஜா


புலியூர், கிளியூர் என இரண்டு ஊர்களுக்கிடையே உள்ள பரம்பரை பிரச்சனையில் இருந்து படம் துவங்குகிறது. கிளியூரை சேர்ந்த இதயக்கனி என்னும் கேரக்டரில் வருகிறார் விமல். புலியூரை சேர்ந்த தாமரை என்னும் கேரக்டரில் பிந்துமாதவி வருகிறார்.
படம் ஆரம்பத்தில் விமலுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆக வேண்டும் என்று விமலின் மாமாக்கள், சிங்கம் புலி மற்றும் சாம்ஸ் கோவிலில் பிராத்தனை செய்கிறார்கள். அங்கு பிந்துமாதவியை சந்திக்கிறார் விமல். பார்த்தவுடனே அவள் மீது காதல் வயப்படுகிறார். முதலில் காதலை மறுக்கும் பிந்துமாதவி பிறகு ஏற்றுக்கொள்கிறார்.
பாட்டன்கள் காலத்தில் இருந்து இந்த இரண்டு ஊர்களுக்கிடையே சண்டை இருந்து வருகிறது. விமல் அப்பாவை பிந்துமாதவி அப்பா கொன்றுவிடுகிறார். பதிலுக்கு விமலின் தாத்தா பிந்துமாதவியின் அண்ணனை ஆள் வைத்து வெட்டிக் கொலை செய்கிறார். பதிலுக்கு விமலை தீர்த்துகட்ட பிந்துமாதவியின் அப்பாவும், சித்தப்பாவும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் இவர்களின் காதல் வலுவடைகிறது. இதன் உச்சக்கட்டமாக கொஞ்சம் அவசரப்பட்டு உடல் ரீதியாக ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். இவர்களின் காதல் விஷயம் பிந்துமாதவியின் வீட்டுக்கு தெரியவருகிறது. பிரச்சினை பெரியதாக வெடிக்கிறது. பிந்துமாதவி, தன் அப்பாவை சமாதானம் செய்து விமலை ஊர் எல்லையில் உள்ள கோவிலுக்கு தனியாக வரும்படி அழைக்கிறார். அங்கு விமலை தீர்த்து கட்டவேண்டும் என அவள் அப்பாவும், சித்தப்பாவும் கங்கணம் கட்டுகிறார்கள். ஆனால் அங்கு விமலுக்கும் பிந்துமாதவி அப்பாவுக்கும் இடையே சண்டை ஆகிறது. கோபத்தில் பிந்துமாதவி கழுத்தில் தாலி கட்டுகிறார் விமல். அந்த இடத்திற்கு விமலின் ஆட்கள் வந்து பிந்துமாதவியின் அப்பாவை கொலை செய்துவிடுகிறார்கள். விமலையும் அழைத்து சென்று விடுகிறார்கள்.
ஊர் பஞ்சாயத்துகூடி பிந்துமாதவியை விமலுடன் அனுப்பி வைக்கிறார்கள். அவள், நான் உன்னிடம் சேர்ந்து குடும்பம் நடத்த வரவில்லை உன்னை கொலை செய்யதான் வருகிறேன் என்கிறாள்.
இறுதியில் இருவரும் சேர்ந்தார்களா? இல்லை, பிந்துமாதவி விமலை கொலை செய்தாரா? பிந்துமாதவி சித்தப்பா விமலை பழிவாங்கினாரா? என்பது மீதி கதை.
விமல் வழக்கம்போல் தனது பாணியில் நடித்திருக்கிறார். தாமரை கேரக்டரில் வரும் பிந்துமாதவி பாவடை தாவணியில் மிகவும் அழகாக தெரிகிறார். சிங்கம் புலி மற்றும் சூரி காமெடியில் கலக்குகிறார்கள். விமலின் தாத்தாவாக வரும் வினுசக்கரவர்த்தி சிறப்பாக நடித்திருக்கிறார். மிகவும் கோபக்காரனாக, பிந்துமாதவியின் சித்தப்பாவாக வரும் ரவிமரியா கிளைமாக்ஸில் நானும் காமெடியன்தான் என்று நிருப்பிக்கிறார்.
டி.இமான் இசையில் ‘நெலாவட்டம் நெத்தியிலே…’ பாடல் தாளம் போட வைக்கிறது. இந்தப் பாடலுக்கு தாமிரபரணி பானு குத்தாட்டம் ஆடுகிறார். பழைய கதை என்றாலும் அதை தூசி தட்டி காமெடி கலந்து எல்லாரையும் சிரிக்க வைக்கிறார் இயக்குனர் எழில்.
மொத்தத்தில் தேசிங்குராஜா காமெடி ராஜா.

DESINGU RAJA PRESS MEET PART 1 -


Friday, August 23, 2013

Kamal Haasan and Ilayaraja geared up for the big show!--- Gallery !!!




















AR Murugadoss speaks about Raja Rani and Director Atlee | Audio Launch | Arya, Nayanthara


Sathyaraj : I want to see Arya and Nayantara together | Raja Rani Audio Launch |


ஜெயம் ரவி- திரிஷா நடித்துள்ள ‘பூலோகம்’ படப்பிடிப்பு முடிவடைந்தது

ஜெயம் ரவி- திரிஷா இணைந்து நடிக்கும் படம் பூலோகம். இப்படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
ஆசிய குத்துச்சண்டை வீரர் மதனால் ஈர்க்கப்பட்ட இயக்குனர், இந்தத் திரைப்படத்தின் கதையை ஒரு குத்துச் சண்டை வீரரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்திற்கு ஒரு புதிய பரிணாமம் கொடுப்பதற்காக நடிகர் ஜெயம் ரவி தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு நடித்துள்ளார். படம் முடிவடைந்ததை அடுத்து படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

‘ஐ’ படத்துக்காக உருமாறிய விக்ரம்

ஐ’ படப்பிடிப்பில் விக்ரம் உருவம் மாறி காட்சியளிக்கிறார். இப்படத்தை ஷங்கர் இயக்குகிறார். இதில் விக்ரம் முதல் பாதியில் சாதாரண தோற்றத்திலும் இரண்டாம் பாதியில் உடல் மெலிந்தும் இரு கெட்டப்பில் வருகிறாராம்.
ஒல்லி கேரக்டருக்காக கடும் உடற்பயிற்சிகள் செய்து பாதியாக குறைந்துள்ளார். இதுகுறித்து விக்ரம் கூறும்போது, ‘‘படப்பிடிப்புக்கு முன் 84 கிலோ எடை இருந்தேன். இப்போது 14 கிலோ எடை குறைத்துள்ளேன் என்றார்.
அரிசி உணவுகளை சாப்பிடுவதே இல்லையாம். பச்சைக்காய்கறிகள் பழங்களை மட்டுமே சாப்பிட்டு வருகிறார்.

இயக்குனர் கண்ணன்- கார்த்தியுடன் ஐந்தாவது முறையாக இணையும் சந்தனாம்


இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த முதல்படமான ‘ஜெயம் கொண்டான்’ படத்தில் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து, கண்ணன் இயக்கிய ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’ ஆகிய படங்களிலும் சந்தானம் நடித்தார்.
கண்ணன் தற்போது ‘அலங்காரம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திலும் சந்தானத்தை நடிக்க வைக்க கண்ணன் விரும்பினார். இதற்காக ‘இது கதிர்வேலன் காதல்’ படப்பிடிப்பு தளத்தில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்த சந்தானத்தை சந்தித்த கண்ணன், தன்னுடைய படத்தில் சந்தானத்தின் கதாபாத்திரத்தை அவரிடம் விவரமாக விளக்கினார்.
இது சந்தானத்துக்கு பிடித்துப்போகவே அவர் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனால் தொடர்ந்து கண்ணன் இயக்கும் ஐந்தாவது படத்திலும் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். கார்த்தியும்- சந்தானமும் இந்த படத்தின் மூலம் ஐந்தாவது முறையாக இணைகிறார்கள். ‘சிறுத்தை’, ‘சகுனி’, ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ ஆகிய படங்களில் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுருதி, சமந்தாவுடன் போட்டியா?: அமலாபால்

அமலாபால் பிசியான நடிகையாகி உள்ளார். தமிழில் ‘நிமிர்த்து நில்’, ‘வேலையில்லா பட்டதாரி’ படங்கள் கைவசம் உள்ளன. தெலுங்கு, மலையாளத்தில் ஒரு படங்களில் நடிக்கிறார். விஜய் ஜோடியாக நடித்த ‘தலைவா’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.
அமலாபால் அளித்த பேட்டி விவரம் வருமாறு:–
விஜய்யுடன் நடிக்க ஆசை இருந்தது. ‘தலைவா’ படம் மூலம் அது நிறைவேறியுள்ளது. விஜய் தொழிலில் ஈடுபாடு காட்டுவார். அர்ப்பணிப்பு உணர்வோடு நடிப்பார். டைரக்டர் எத்தனை ‘டேக்’ கேட்டாலும் சலிக்காமல் நடிப்பார். இவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். என்னை இந்த படத்தில் நடிக்க டைரக்டர் விஜய் தேர்வு செய்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
என் வாழ்க்கையில் எதிர்பாராதவைகள் நிறைய நடந்துள்ளன. நடிப்பை ரொம்ப நேசிக்கிறேன். பெரிய நடிகர்கள் படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்காது. காதல், பாடல் சீன்களில் மட்டுமே வருவார்கள். ஆனால் ‘தலைவா’ படம் அப்படி இல்லை. என் கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. போலீஸ் கெட்டப்பிலும் வந்தேன். சவாலாக இருந்தது. விஜய் எனக்கு ரொம்ப உதவியாக இருந்தார்.
புதுமுக நடிகர்களை விட அனுபவமுள்ள பெரிய ஹூரோக்களுடன் நடிப்பது எளிதானது. ஹன்சிகா, சுருதிஹாசன், சமந்தா வளர்ச்சியில் பயம் இல்லை. எனது வேலையை மட்டுமே பார்க்கிறேன். எங்கள் எல்லோருக்குமே போதுமான படங்கள் கைவசம் உள்ளன. போட்டி எதுவும் இல்லை. ஒவ்வொரு வரும் நட்பாகவே பழகுகிறோம்.
இவ்வாறு அமலாபால் கூறினார்.

விஜய் ஆண்டனிக்கு திருமணம்!: அழைப்பிதழ் வெளியீடு

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. இந்நிலையில், அவருக்கு மீண்டும் திருமணமா? என அதிர்ச்சியாக இருக்கிறதா?. இது, நிஜ திருமணம் இல்லை.
‘நான்’ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘சலீம்’ என்ற 

படத்திற்காகத்தான் இந்த திருமண ஏற்பாடு. அந்த திருமணத்திற்கான அழைப்பிதழை தற்போது படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். அதில், படத்தைப் பற்றிய நிறைய தகவல்கள் உள்ளன.
விஜய் ஆண்டனி, இப்படத்தில் சலீம் என்ற பெயரில் டாக்டராக நடிக்கிறார் என்பதும், நடிகை அக்ஷா, நிஷா என்ற பெயரில் விஜய் ஆண்டனியின் வருங்கால மனைவியாக நடிக்கிறார் என்பதும் இப்போது தெளிவாகியிருக்கிறது.
இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தை ஸ்டுடியோ 9, ஸ்ரீ கிரீன் மற்றும் விஜய் ஆண்டனியின் பிலிம் கார்ப்பரேஷன் ஆகிய 3 தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரித்து வருகிறது.
இந்த திருமண அழைப்பிதழ் படத்தில் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அப்படி என்னதான் முக்கியத்துவம்? என்பதை வெள்ளித்திரையில் விரைவில் காணலாம்.
ஏற்கெனவே, ‘ராஜாராணி’ படத்தில் ஆர்யாவுக்கும், நயன்தராவுக்கும் திருமணம் என அழைப்பிதழ் அச்சிடப்பட்டு, பரபரப்பை உண்டாக்கினார்கள். அந்த வரிசையில் தற்போது ‘சலீம்’ படத்திலும் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு, பரபரப்பை ஏற்படுத்தவே படக்குழுவினர் இந்த அழைப்பிதழை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிப்பில் சிவகார்த்திகேயன்



‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இப்படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார். வருகிற செப்டம்பர் மாதம் 6-ந் தேதி இந்த படம் வெளியாகவிருக்கிறது.
இதையடுத்து, இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான ‘திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிக்கும் புதிய படத்தையும் பொன்ராம் இயக்கவிருக்கிறார். இந்த படத்திலும் சிவகார்த்திகேயனையே நடிகராக ஒப்பந்தம் செய்துள்ளனர். இவருக்கு ஜோடியாக இந்திய சினிமாவையை கலக்கிய பிரபல நடிகையை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளனர். ஆனால், அவர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.
‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தற்போது ‘யு.டி.வி.மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘இவன் வேற மாதிரி’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பிலும் ஒரு படத்தை தயாரிக்கிறது.

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை: விஜய் அதிரடி தகவல்


பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து தமிழகத்தில் ‘தலைவா’ திரைப்படம் தற்போது திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம், வெற்றியடைய வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
இதற்கிடையில் ரசிகர் மன்றங்கள் சார்பில் விஜய்-ன் பிரமாண்ட கட் அவுட்டுகள், பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில பேனர்களில் அரசியல் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் ரசிகர்களுக்கு கண்டிப்புடன் கூடிய வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. தயவுசெய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்களை போடவேண்டாம். அதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட மன்றங்களை கலைக்கக்கூட தயங்க மாட்டேன். இனி ரசிகர் மன்ற விஷயங்களில் நானே நேரடியாக ஈடுபடுவேன். என் தந்தையோ, வேறு யாரோ மன்ற விஷயங்களில் தலையிடமாட்டார்கள்.

Rajini speaks about Viswaroopam - Kamal - Ganesh Babu


Thursday, August 22, 2013

A Beautiful Moment in Engeyum Eppothum Raaja


'காக்க காக்க' வந்து 10 வருஷமாச்சாம்!

சென்னை: சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான காக்க காக்க படம் வந்து 10 வருடமாகியுள்ளது. 





அன்புச் செல்வன் என்ற போலீஸ் கேரக்டரில் வந்து அதகளம் செய்திருந்தார் சூர்யா இந்தப் படத்தில். இப்படம் நேற்றுதான் வெளியானது போல உள்ளது. 
இப்படத்தில் அன்புச்செல்வன் என்ற போலீஸ் அதிகாரியாக வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருந்தார் சூர்யா.


இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடி போட்டிருந்தார் ஜோதிகா. பாந்தமான டீச்சர் கேரக்டரில் கலக்கியிருப்பார். அந்த சேலைக்கட்டும், லுக்கும், நிதானமான நடிப்பும் அப்படியே அள்ளிக் கொண்டு போனது.
ஆனால் அதற்குள் 10 வருடங்களைத் தொட்டு விட்டது காக்க காக்க.
இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட். எல்லாம் ஹாரிஸ் ஜெயராஜ் புண்ணியம்.



கெளதம் வாசுதேவ மேனனின் நேர்த்தியான இயக்கம், திரில்லான காட்சிகள், திட்டமிட்ட காட்சியமைப்பு என அனைத்துமே பிரமாதமாக இருந்தது.
படத்தின் வில்லனாக வந்த ஜீவன், ஹீரோவாகநடித்துக் கொண்டிருந்த போது இந்தப் படத்துக்காக கொடூரமான வில்லனாக வந்திருந்தார். நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருப்பார் ஜீவன்.

இந்தப் படம் காவல்துறையினரையும் வெகுவாக கவர்ந்தது. பல போலீஸ் அதிகாரிகள் சூர்யாவையும், கெளதம் மேனனையும் வாய் விட்டுப் பாராட்டினர்.

மெட்ராஸ் கபே படத்தின் தமிழ்ப் பதிப்பை உரிய சான்றிதழ் இல்லாமல் வெளியிடத் தடை!

சென்னை: தமிழருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட மெட்ராஸ் கபே படத்தின் தமிழ்ப் பதிப்பை உரிய சான்றிதழ் இல்லாமல் தமிழகத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 


தமிழ்ப் பதிப்புக்கு இன்றும் சான்றிதழ் தரப்படவில்லை என சென்சார் போர்டு நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்தே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் கபே படத்தின் தமிழ்ப் பதிப்பை தமிழகத்தில் வெளியிட்டால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் எழும் வாய்ப்புள்ளது. 


தமிழ் உணர்வாளர்கள், ஈழப் போர் ஆதரவாளர்கள் இந்தப் படத்தை எதிர்ப்பதால், தமிழகத்தில் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு சென்சார் சான்று வழங்கப்பட்டுவிட்டதா என நீதிமன்றம் விசாரித்தபோது, இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தது சென்சார் போர்டு.


இதைத் தொடர்ந்து படத்தின் தமிழ்ப் பதிப்பு உரிய சான்றிதழ் இல்லாமல் தமிழகத்தில் வெளியாகத் தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

அதேநேரம் படத்தின் இந்திப் பதிப்பு வெளியாகத் தடை இல்லை என்று கூறிவிட்டது உயர்நீதிமன்றம்.


இந்தப் படத்தின் எந்தப் பதிப்பும் தமிழகத்திலோ தமிழர் வாழும் பகுதிகளிலோ திரையிடப்பட்டால் முற்றுகையிடுவோம் என தமிழ் அமைப்புகள், கட்சிகள் கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி? செஃப் விஜய் விளக்கம்- ஃபேஸ்புக்கில் கலகல!


தலைவா பட்டர் மசால் - செஃப் .விஜய் 

நாயகன் - ஒரு கிலோ 

சர்க்கார் - அரை கிலோ

பாம்பே -1 துண்டு

தேவர்மகன் - 6 பல்

இந்திரா - ஒரு தேக்கரண்டி

பில்லா - அரை கப்

புதிய பறவை - கோபால் கோபால் மிக்ஸ் ஒரு டீஸ்பூன்

பொல்லாதவன் - தேவையான அளவு

கதாபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்திரா, பம்பாய் சேர்த்து வதக்கவும். 

இத்துடன் நைசாக அரைத்து வைத்திருக்கும் தேவர்மகன் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும் .

 பொன்னிறமாக வரும் போது கோபால் கோபால் மிக்ஸ் சிறிது சேர்த்து மிதமான சூட்டில் வேகவைக்கவும்.

நன்றாக வதங்கியதும் சுத்தபடுத்தி வைத்திருக்கும் நாயகன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.

 நாயகன் வெந்ததும் அரைத்த சர்க்கார் சேர்த்து கொதிக்க விடவும்.

 நன்றாக கொதித்ததும் பொல்லாதவன் தூவி இறக்கவும். தலைவா ரெடி. 

ரத்தம் சிந்துவதை விட வியர்வை சிந்துவது மேல்: அஜீத் குமார்

சென்னை: பைக் ஓட்டுகையில் அதற்கான சூட் மற்றும் ஹெல்மெட் போடுவதன் அவசியம் குறித்து அஜீத் குமார் தெரிவித்துள்ளார்.

 அஜீத் குமாருக்கு பைக் என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பிஎம்டபுள்யூ பைக்கில் சென்னை சாலைகளில் வலம் வந்தார். பின்னர் ரோட்டோரக் கடையிலும் சாப்பிட்டார்.

 இதையடுத்து அவர் சென்னையில் இருந்து பெங்களூருக்கு பைக்கில் சென்றார். இந்த தகவல் அனைவருக்கும் தெரிந்ததே. 


அவர் ஏன் ரேஸ் சூட்டில் பைக் ஓட்டினார் என்று தெரியுமா?

நான் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சொகுசு பைக்கில் சென்றது ஜாலிக்காக இல்லை என்று அஜீத் தெரிவித்துள்ளார்.

பைக் ஓட்டுபவர்கள் பாதுகாப்புக்கு சூட், ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பைக் பயணம் என்றார் அஜீத். ரேஸ் சூட் போட்டு பைக் ஓட்டியதால் நான் பந்தயத்திற்கு சென்றேன் என்று அர்த்தம் இல்லை. பயணத்தின்போது பாதுகாப்பாக இருக்க வேண்டியதை வலியுறுத்தத் தான் இவ்வாறு செய்தேன் என்று அஜீத் கூறினார்.

நானும் எனது நண்பர்களும் சேர்ந்து ஒரு நல்ல காரணத்திற்காக பைக் பயணத்தை மேற்கொண்டு வருகிறோம் என்றார் அஜீத்.

அலுவலகங்களுக்கு பைக்கில் செல்பவர்களும் பாதுகாப்பு உடை, ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நான் மக்களை ஊக்குவிக்கிறேன். இதெல்லாம் வாங்க பணம் அதிகம் செலவாகும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஏதாவது நடந்தால் சாதாரண எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கவே ரூ.7,000 ஆகிறது. அதனால் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சாலை விபத்தில் சிக்கி செலவழிப்பதற்கு பதில் பாதுகாப்பு உபகரணங்களுக்கு செலவழிக்காலம் என்றார் 'தல'.

வெயில் வாட்டி எடுக்கும் சென்னையில் சூட் போட்டு பைக் ஓட்டினால் மக்கள் வெந்துவிட மாட்டார்களா என்று கேட்டதற்கு அஜீத், ரத்தம் சிந்துவதை விட வியர்வை சிந்துவது மேல் என்றார்.