Sunday, August 18, 2013

இணையத்தில் பிரியாணி பாடல்கள் – யுவன் ஷாக்

பிரியாணி படத்தின் மொத்தப் பாடல்களும் இணையத்தில் வெளியானதால் யுவன் உள்பட மொத்த யூனிட்டும் அதிர்ச்சியடைந்துள்ளது.
பிhpயாணி யுவனின் 100 வது படம். சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் பாடல்களை ஆகஸ்ட் 10 வெளியிட திட்டமிட்டனர். பிறகு அனைவரும் கலந்து கொள்வதற்கு வசதியாக ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு விழாவை மாற்றினர்.
என்ன நடந்ததோ. 15 ஆம் தேதியும் மற்றப்பட்டது. யுவனின் பிறந்தநாளில் – ஆகஸ்ட் 31 பாடல்களை வெளியிடுவது என பிறகு அறிவித்தனர்.
இந்நிலையில் இணையத்தில் பிரியாணி பாடல்கள் அனைத்தும் வெளியாகியிருக்கிறது. இது மொத்த யூனிட்டையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. யுவனும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
சொன்ன தேதிக்கு படத்தை வெளியிடவில்லை என்றால் மொத்தப் படத்தையும் விஷமிகள் இணையத்தில் வெளியிட்டாலும் வெளியிடுவார்கள். போலிருக்கிறது. சமீபத்தில், அஜித் படத்தின் பெயரை அறிவிக்காமல் விஷ்ணுவர்தன் இழுத்துக்கொண்டே போக, படத்தின் 57 விநாடிகள் கிளிப்பிங்ஸ் இணையத்தில் வெளியானது முக்கியமானது.

No comments:

Post a Comment