Friday, June 28, 2013

சிங்கம் 2 படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்று வழங்கியுள்ளது.




சென்னை: சூர்யா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் சிங்கம் 2 படத்துக்கு தணிக்கைக் குழு எந்த வெட்டுமில்லாத யு சான்று வழங்கியுள்ளது.
எஸ் லக்ஷ்மண் குமாரின் பிரின்ஸ் பிக்சர் தயாரிப்பில், ஹரி இயக்கி வரும் படம் சிங்கம் 2. சிங்கம் 2 ஹரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா – ஹன்சிகா நடித்துள்ளனர்.
விவேக்கும், சந்தானமும் காமெடியில் கலக்கியுள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் வெளியாகியுள்ள பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தை சென்சார் குழுவினர் சமீபத்தில் பார்த்தனர். படத்தில் எந்த வெட்டுமில்லாமல் க்ளீன் யு சான்று அளித்தனர்.
ஜூலை 5-ம் தேதி இந்தப் படம் உலகமெங்கும் வெளியாகிறது. இதுவரை சூர்யாவின் எந்தப் படமும் வெளியாகாத அளவுக்கு 2400 தியேட்டர்களில் சிங்கம் 2 வெளியாகிறது.
தமிழகத்தில் மட்டும் 600 அரங்குகளுக்குமேல் படம் வெளியாகவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

என்னை சினிமாவை விட்டு விரட்டிடுவாங்களோன்னு பயந்தேன்: சூர்யா


சென்னை: என்னை சினிமாவை விட்டு தூக்கி எறிந்துவிடுவார்களோ என்று பயந்தேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
சூர்யா தனது நண்பர் விஜய் நடித்த நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். அந்த படத்தில் வரும் எங்கெங்கே எங்கெங்கே என்ற பாடலை சூர்யா ஓடி, ஓடியே ஓட்டியிருப்பார்.
அதன் பிறகு ஒரு சில படங்களில் பாடல் காட்சி வந்தால் நடந்து, ஓடி நாட்களை கழித்தார். பின்னர் ஒரு வழியாக டான்ஸ் ஆடத் துவங்கினார். மேலும் நடிப்பிலும் கலக்கத் துவங்கினார். இந்நிலையில் சூர்யா தனது திரையுலக பயணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

எனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளுக்கு மிரட்டல்: வடிவேலு


சுமார் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்கும் படம் ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்’. இந்த படத்தில் அவர் தெனாலிராமன், மன்னர் கிருஷ்ண தேவராயர் ஆகிய இரு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பல நடிகைகள் நடிக்கின்றனர்.
குறிப்பாக கிருஷ்ண தேவராயராக வரும் வடிவேலுக்கு ஜோடியாக மட்டும் 20-க்கும் மேற்பட்ட நடிகைகள் நடிக்க இருக்கிறார்களாம். முதலில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் பார்வதி ஓமன குட்டன். உலக அழகி போட்டிக்கு சென்ற இவர் அஜித் ஜோடியாக ‘பில்லா 2′ படத்தில் நடித்தவர்.
ஆனால் திடீரென இந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டார். அவருக்கு பதிலாக கதாநாயகியாக மீனாட்சி தீக்சித் என்பவர் நடிக்கிறார். இதுகுறித்து வடிவேலு கூறியதாவது:-
முதலில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை பார்வதி ஓமனகுட்டன் ஒப்பந்தமாகி இருந்தார். திடீரென அவர் விலகிக் கொண்டார். வடிவேலுக்கு ஜோடியாக நடித்தால் உங்கள் எதிர்காலம் பாழாகி விடும் என அவரிடம் நிறைய பேர் தவறாக கூறி பயமுறித்த இந்த படத்தில் இருந்து அவரை விலக வைத்து விட்டனர்.
இதையெல்லாம் நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன். அதனால் பயப்படமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

'உ' பட இசைத் தகடு... இயக்குநர் விக்ரமன் வெளியிட்டார் l



சென்னை: விஷுவல் கம்யூனிகேசன் படித்த இளைஞர்கள் உருவாக்கிய 'உ' என்ற தமிழ் படத்தின் இசையை பிரபல இயக்குநர் விக்ரமன் வெளியிட்டார். தயாரிப்பாளர் தேனப்பன் பெற்றுக் கொண்டார்.

 இந்த இசை வெளியீட்டு விழா நேற்று மாலை வடபழனியில் நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தேனப்பன், இயக்குனர் விக்ரமன், யூ.டிவி, தனஞ்செயன், எஸ்.எஸ். குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


 இப்படத்தில் கதை நாயகனாக தம்பி ராமையா வருகிறார். இவருடன் 4 இளைஞர்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்தை பீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஆஷிக் இயக்குகிறார். இவர் எஸ்எஸ் குமரனிடம் பணியாற்றியவர். இப்படத்தில் 25-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.


 சென்னை, கொடைக்கானல், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரைக்கும் வருகிறது. பத்திரிகையாளர் முருகன் மந்திரம் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். அபிஜித் ராமசாமி இசையமைத்துள்ளார். 


விழாவில் பேசிய தம்பி ராமையா, "சரி...கேட்டுத்தான் பார்ப்போமே என்றுதான் கதை கேட்க ஆரம்பித்தேன்...சும்மா சொல்லக்கூடாது பயல்கள் மிரட்டியிருக்கிறார்கள்... என்னைப் பாடவைத்து ஆடவைத்து அமர்க்களப் படுத்தி விட்டார்கள்,"


 என்றார். பாடலாசிரியர் முருகன் மந்திரம் பேசுகையில், "பத்து வருடங்களுக்கு முன்பு சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்கிற வேட்கையோடு சென்னைக்கு வந்து... குடும்பம் குட்டி என்று ஆகி வாழ்வாதாரத்திற்கே ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும்... சினிமா பத்திரிக்கையாளராகவே எனது பயணம் இருந்ததால் சினிமாவுக்குள்ளேயே இருக்கமுடிந்தது... இன்று பாடலாசிரியராக இந்த மேடையில் நிற்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது... அதுவும் எனது பாடல்களைப் பாடி தேசிய விருது பெற்ற தம்பிராமையாவும், விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் பட்டம் வென்ற ஆஜித்தும் திரைப்படப் பாடகர்களாக அறிமுகமாகியிருக்கிறார் என்பதும் எனக்கு பெருமையாக உள்ளது," என்றார்.

கவர்ச்சிக்கு 'பை' 'பை'.. இனி நான் குடும்பப்பாங்கினி- அஞ்சலியின் புது முடிவு



கவர்ச்சிக்கு முற்றாக 'பை' சொல்லும் மூடுக்கு வந்துவிட்டார் நடிகை அஞ்சலி. 


காரணங்கள் இரண்டு:


 தான் கவர்ச்சியாக நடித்த படங்கள் பெரிதாகப் போகவில்லை..

அடுத்து கவர்ச்சி காட்டும் அளவுக்கு வாகாக அவர் உடலும் அமையவில்லை. இடுப்பு பெருத்து, பார்க்க சகிக்க முடியாத அளவுக்குப் போய்விட்டது.


 இந்த காரணங்களை வைத்து, இனி தம்மாத்தூண்டு உடையுடன் வரும் இயக்குநர்களைப் பார்த்தாலே காத தூரத்துக்கு ஓடுகிறாராம் அஞ்சலி.


 இனி தனக்கு அங்காடித் தெரு, கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள்தான் வேண்டும் என்றும், இந்த மாதிரி கதைகள் கிடைத்தால் பாதிச் சம்பளமே கூடப் போதும் என்றும் கறாராகச் சொல்கிறாராம் அஞ்சலி. 


ஆனால் அம்மணியின் கண்டிஷன் எல்லாம் தமிழுக்குதான். தெலுங்கிலோ, மேடையிலேயே கிட்டத்தட்ட டூ பீஸ் உடையில் வந்து கதி கலங்க வைக்கிறார் அஞ்சலி. இங்கே நீங்கள் பார்ப்பது, சமீபத்தில் நடந்த தெலுங்கு டிவி சினிமா விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அஞ்சலியின் 'குடும்பப் பாங்கான' தோற்றம்தான்!

நடுக்கடலில் டால்பின்களுடன் ரஜினி நீச்சல்... மிருகங்களுடன் பைட்- கோச்சடையான் அப்டேட்



கோச்சடையான் படத்தில் நடுக்கடலில் ரஜினி டால்பின்களுடன் நீந்துவது போலவும், கொடிய மிருகங்களுடன் சண்டையிடுவதுபோலவும் காட்சிகள் அமைத்துள்ளார்களாம்.

 ரஜினி - தீபிகா படுகோன் நடித்துள்ள கோச்சடையான் படம், அதிகபட்ச கிராபிக்ஸ் மற்றும் அதை 3 டிக்கு மாற்றும் பணிகள் காரணமாக தாமதமாகி வருகிறது.

 இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவிருக்கிறது
.
இந்த நிலையில் படத்தில் இடம்பெறும் காட்சிகள் குறித்து கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.


 இந்தப் படத்தில் ராட்சத சுறா மீன்களுடன் ரஜினி சண்டையிடுவது போல கிராபிக்ஸ் காட்சி வடிவமைக்கப்பட்டதாக முதலில் செய்தி வெளியானது. 

இப்போது அதற்கு விளக்கமளித்துள்ள படத்தின் இயக்குநர் சௌந்தர்யா, "கோச்சடையானில் ரஜினி சுறாவுடன் சண்டை போடுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை. ஆனால் அவர் டால்ஃபின்களுடன் நீந்துவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 

அதே நேரம் கொடிய மிருகங்களுடன் அவர் சண்டையிடும் காட்சிகள் இருக்கின்றன. முதலில் ரிலீஸ் தேதியை உறுதி செய்துவிட்டுத்தான் டிரெய்லர், இசை வெளியிடுவது குறித்து முடிவுகள் எடுக்கப்படும்," என்று கூறியிருக்கிறார்.

Thursday, June 27, 2013

ஒரு அழகான ஹீரோயின் கூட நான் டூயட் பாடறது கூட பொறுக்கல பல ஹீரோக்களுக்கு! - வடிவேலு



     ஒரு அழகான ஹீரோயினுடன் நான் டூயட் பாடினா கூட இங்குள்ள பல ஹீரோக்களுக்கு பொறுக்கவில்லை, என்று கூறியுள்ளார் வடிவேலு.

2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்கும் படம் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன். இதில் அவர் தெனாலிராமன், மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆகிய இரு வேடங்களில் நடிக்கிறார். 


அவருக்கு இந்தப் படத்தில் ஏகப்பட்ட ஜோடிகள். குறிப்பாக கிருஷ்ணதேவராயராக வரும் வடிவேலுவுக்கு 36 மனைவிகளாம்! 

படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தவர் பில்லா 2 படத்தில் நடித்த பார்வதி ஓமணக் குட்டன். 


ஆனால் இப்போது அவர் இல்லை. மீனாட்சி தீக்ஷித் என்பவர் நடிக்கிறார். இதுகுறித்து வடிவேலு கூறுகையில், "அந்தப் புள்ளை தாங்க முதலில் ஹீரோயினா நடிக்க ஒப்பந்தமாச்சு. அப்புறம் என்னாச்சின்னே தெரியல... அது நடிக்கல. அப்புறம்தான் தெரியுது... ஒருத்தன் ரெண்டு பேருல்லண்ணே... ஒரு கூட்டமே போய் அந்த புள்ள மனசை கலைச்சிருக்காய்ங்கன்னு... 


            'வடிவேலுவுக்கெல்லாம் ஜோடியா நடிக்கிறீங்களே... உங்க எதிர்காலம் அவ்ளோதான்னெல்லாம்' பயமுறுத்தி இருக்காணுங்க... இருக்கட்டும்ணே... இதையெல்லாம் ஏற்கெனவே பாத்ததுதானே...", என்றார். 

ஜீ.வி.பிரகாஷ்-சைந்தவி திருமணம்: படங்கள்










ஜீ.வி.பிரகாஷ்-சைந்தவி திருமணம்: நடிகர்-நடிகைகள் வாழ்த்து


இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்-பின்னணி பாடகி சைந்தவி திருமணம் இன்று சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் சென்டரில் நடந்தது.சரியாக காலை 10.23 மணிக்கு மணமகன் ஜீ.வி.பிரகாஷ், மணமகள் சைந்தவிக்கு மேள-தாளங்கள் முழங்க முறைப்படி தாலி கட்டினார். மணவிழாவுக்கு வந்திருந்த அனைவரும் மணமக்களுக்கு அட்சதை தூவி ஆசி வழங்கினர்.
இத்திருமண விழாவில் இயக்குனர்கள் பாலுமகேந்திரா, மணிரத்னம், பாலா, விஜய், காயத்ரி, கதிர் மற்றும் நடிகர்கள் சூர்யா, சாந்தனு, நடிகைகள் சுஹாசினி, பூர்ணிமா பாக்கியராஜ், பழம்பெரும் பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, இசையமைப்பாளர் தேவா, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், எடிட்டர் மோகன், பாடலாசிரியர் சினேகன், நடிகர் கிரேசி மோகன், நடிகர் விஜய்-யின் தாயார் ஷோபா சந்திரசேகர், மனைவி சங்கீதா உள்ளிட்ட திரைப்பட கலைஞர்கள் மற்றும் பல்வேறு துறையினரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இன்று மாலை 6.30 மணிக்கு திருமணம் நடந்த மேயர் ராமநாதன் செட்டியார் சென்டரிலேயே திருமண வரவேற்பும் நடக்கிறது. இதிலும் திரையுலகம் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்கிறார்கள்.
ஜீ.வி.பிரகாஷ் ‘மதராச பட்டினம்’, ‘தாண்டவம்’, ‘குசேலன்’, ‘பரதேசி’, ‘தலைவா’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். சைந்தவி ‘அந்நியன்’ படத்தில் இடம்பெற்ற ‘அண்டங்காக்கா கொண்டைக்காரி’ என்ற பாடல் மூலம் திரைஇசையில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல பாடல்கள் பாடி திரை இசையின் முன்னணி பாடகியாகவும் வலம் வருகிறார். ஜீ.வி.பிரகாஷும், சைந்தவியும் இணைந்து பாடிய பல பாடல்கள் இசை ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றவை.
இன்று மணவிழாவில் ஒன்று சேரும் ஜீ.வி.பிரகாஷ்-சைந்தவி தம்பதியர் எல்லா வளங்களும் நிரம்ப பெற்று வாழ்க்கையில் மேலும் பல வெற்றிகள் பெற மாலைமலர் இணையதளம் மனதார வாழ்த்துகிறது. வாழ்க மணமக்கள்.

இந்தியில் நடிக்க விருப்பமில்லையா? ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன், “லக் என்ற இந்தி படத்தின் மூலம் தான், திரையுலகிற்கு அறிமுகமானார். அதற்கு பின்,”தில் தோ பச்சா ஹை என்ற இந்தி படத்திலும் நடித்தார். இரண்டு படங்களுமே, பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியதால், பாலிவுட் வெளிச்சத்திலிருந்து விலகி இருந்தார். சற்று இடைவெளிக்கு பின், தற்போது மீண்டும் பாலிவுட் மீது, அவரின் கவனம் திரும்பியுள்ளது. அவர் நடித்துள்ள, “ராமய்யா வஸ்தாவைய்யா, “டி-டே ஆகிய இரண்டு இந்தி படங்கள், விரைவில் வெளியாகவுள்ளன.
இதனால், சந்தோஷத்தில் இருக்கும் ஸ்ருதியிடம், “பாலிவுட் மீது, உங்களுக்கு என்ன கோபம், அதிகம் நடிப்பது இல்லையே என, கேள்வி கேட்டால், சிரிக்கிறார்.
“தெலுங்கில் பிசியாக இருப்பதால் தான், இந்தியில் அதிகம் நடிக்க முடியவில்லை. மற்றபடி, இந்தியில் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான், என் ஆசை என்கிறார். மேலும், “நான் நடிக்கும் இரண்டு படங்களிலுமே, முற்றிலும் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்துள்ளேன் என்கிறார், ஸ்ருதி.

டி.ஆருக்கு இணையாக ஆட்டம் போட திணறிய முமைத்கான்

கவர்ச்சி நடிகை முமைத்கான் சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழ் படங்களில் குத்தாட்டம் போட வந்துள்ளார்.
ராமநாராயணன் இயக்கும் ஆர்யா-சூர்யா படத்தில் டி.ராஜேந்தர் எழுதி இசையமைத்த குத்துப்பாடலுக்கு கவர்ச்சி நடனம் போட்டுள்ளார் முமைத்கான்.
இளம் நடிகர்களுடன் இணைந்து ஆடும் போது சலிக்காமல் ஆடும் முமைத்கான் டி.ஆருடன் ஆடும் போது திணறிவிட்டாராம். 

Wednesday, June 26, 2013

அமிதாப் பச்சனைப் பொறாமைப்பட வைத்த தனுஷின் ராஞ்சனா

மும்பை,  தனுஷின் முதல் இந்தித் திரைப்படமான ராஞ்சனா சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில், தனுசும், சோனம் கபூரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுதல்களை அளிக்கின்றனர்.
இந்தித் திரையுலகின் மூத்த நடிகரும், சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன் ஞாயிற்றுக்கிழமை அன்று சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றது குறித்து நடந்த விழாவில் இந்தப் படத்தைப் பார்வையிட்டுள்ளார்.
இந்தத் திரைப்படத்தை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. இதுபோன்ற சிறந்த திரைப்படங்களைப் பார்க்கும்போது இந்தப் படத்தில் என்னுடைய பங்களிப்பு சிறிய அளவிலாவது இருந்திருக்கலாமே என்று என்னைப் புலம்பவும், பொறாமைப்படவும் வைத்துவிடுகின்றது. இளைய தலைமுறையினர் வெளிப்படுத்தும் அபரிமிதமான திறமையும், கலை நுணுக்கத்திறனும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும் என்று அமிதாப் தனது இணையதளச் செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார்.


இன்னும் சில திறமையான இயக்குனர்கள், நடிகர்கள் நடித்து வெளிவரவிருக்கும் சில படங்களையும் பார்க்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அமிதாப், இத்தகைய திரைப்படங்களைப் பார்ப்பது தனக்கு சந்தோஷத்தையே அளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் பிரகாஷ் ஜாவின் இயக்கத்தில், அமிதாப் நடித்துள்ள சத்யகிரஹா விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது.

முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை சினிமாவாகிறது

கணேஷ் வெங்கட்ராம் நடித்த பனித்துளி படத்தை இயக்கியவர் நட்டிகுமார். இவர், முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவாக இருந்தது. அது இப்போது நினைவாகப்போகிறது என்று கூறுகிறார்.
இந்தியாவின் இரும்பு பெண்மணியாக போற்றப்படும் இந்திராவின் வாழ்கை வரலாற்றை திரைக்கதையாக்கிக் கொண்டிருக்கிறார். இப்படம் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. அநேகமாக தலைப்பும் ‘அயர்ன் லேடி இந்திராகாந்தி’ என்று இருக்கலாம். படத்தில் இந்திரா வேடத்தில் நடிக்க பொருத்தமானவராக நான் நினைப்பது ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டாவைத்தான். காலம் கனியும் போது எல்லாம் நன்றாக நடக்கும் என்கிறார் இயக்குனர் நட்டிகுமார்.

இந்த 'பரோட்டா' அலும்பல் தாங்க முடியலப்பா!: சொந்த செலவில் ஆப்பு வைத்துக்கொள்வாரோ?



சென்னை: பரோட்டா சூரி செய்யும் அலப்பறையால் அவரே அவருக்கு ஆப்பு வைத்துக் கொள்வார் போல என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. 


வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டாவை அசால்டாக சாப்பிட்ட காட்சி மூலம் பிரபலமானவர் பரோட்டா சூரி. அதன் பிறகு அவர் படிப்படியாக வளர்ந்து வருகிறார். விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்தார். அவரின் நடிப்பை பார்த்தவர்கள் சூரி பெரிய ஆளாக வருவார் என்று கூறினார்கள்.


 இந்நிலையில் கொஞ்சம் வளர்ந்ததும் சூரி தனது சேட்டையைக் காண்பிக்க ஆரம்பித்துள்ளாராம். அவர் பண்ணும் அலப்பறையால் அவருக்கு அவரே ஆப்பு வைத்துக் கொள்வாரோ என்று அவரது நலம் விரும்பிகள் வருத்தப்படுகிறார்களாம். 


உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இது கதிர்வேலன் காதல் படத்தில் முதல் பாதியில் சூரியும், இரண்டாவது பாதியில் சந்தானமும் வருகிறார்களாம். முதல் பாதியில் நடித்த சூரி இரண்டாம் பாதியிலும் நான் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்துள்ளார். இதைப் பார்த்து சந்தானத்தின் நண்பரனான உதயநிதி டென்ஷனாகிவிட்டாராம்.


அதன் பிறகு சந்தானமே வந்து சூரியை சமாதானம் செய்தாராம். முன்னதாக தில்லுமுல்லு படத்தில் சந்தானம் சூரியை நக்கலடிக்கும் காட்சிகளுக்கு முதலில் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன் பிறகு தான் வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டுள்ளார்.



 இப்படி ஓவரா அலும்பு பண்ணினால் கோலிவுட்டில் நீண்ட காலம் தாக்குபிடிக்க முடியாது தம்பி என்று சினிமா வட்டாரத்தில் கூறுகிறார்களாம்.

இமான் இசையில் பாடிய சிவகார்த்திக்கேயன்



வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சிவகார்த்திகேயன் அந்தப் படத்தில் பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளாராம்.

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மெரினா படம் மூலம் ஹீரோவானார். 3, மனம் கொத்திப் பறவை, கேடிபில்லா, கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் என சிவகார்த்திக்கேயன் நடித்த அனைத்து படங்களுமே வெற்றிபெற்றுள்ளன.

 நடிப்போடு நகைச்சுவைத் திறனும் இருப்பதால் ரசிகர்களுக்கு சிவகார்த்திக்கேயனை பிடித்துப்போனது. இப்போது கைவசம் சில படங்களை வைத்துள்ளார். அதில் ஒன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம். இதில் சத்தியராஜ் உடன் இணைந்து நடிக்கிறார். 


ராஜேஸ் இயக்கும் இந்தப் படத்திற்கு இசை இமான். நடிகராக மட்டுமே இருந்த சிவகார்த்திகேயனை பாடகராக அறிமுகம் செய்துள்ளார் இமான். இதனை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து சிவகார்த்திகேயனும் டுவிட்டியுள்ளார். கமல், ரஜினி, கார்த்திக், விஜய், சிம்பு, தனுஷ், வரிசையில் சிவகார்த்திகேயனும் பாடியுள்ளார். நடிகராக ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் பாடகராக சிவகார்த்திகேயனை அங்கீகரிப்பார்களாக என்பதை படம் வெளியான பின்னர் தெரிந்து கொள்ளலாம்.


நகைச்சுவை கலந்த பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஜூலை மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துடுச்சு- அஞ்சலி மகிழ்ச்சி



ஹைதராபாத்: என்னைச் சூழ்ந்திருந்த எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டன. இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்கிறார் அஞ்சலி.

                     சித்தி கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறி, சில நாட்கள் தலைமறைவாக இருந்து, பரபரப்பைக் கிளப்பி பின் போலீசில் ஆஜரானார்.

தமிழ் - தெலுங்குப் படங்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் தன் சித்தியுடன் சமரசமும் ஆகிவிட்டார். 


           இதுவரை தன் வாழ்க்கையில் நடந்தவை குறித்து செய்தியாளர்களிடம் அஞ்சலி கூறுகையில், "இதுவரை என் வாழ்வில் நடந்தவற்றை மறக்கவே விரும்புகிறேன். என்னால் சமாளிக்க முடியாத ஒரு சூழ்நிலையில்தான் வீட்டை விட்டு வெளியேறினேன்.


                            இந்த முடிவுதான் என் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. இப்போது நான் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். இனி என் வாழ்க்கை என் கையில்தான்.


               மற்றவர்களுக்கு கீழ்படிந்து வாழ்வதும் இழிவாக நடத்தப்படுவதும் எனக்கு பிடிக்கவில்லை. நான் சர்ச்சையில் சிக்கி இருந்த போது நிறைய பேர் ஆறுதலாக இருந்தார்கள். நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் போன்றோர் நம்பிக்கையூட்டினார்கள். அவர்களின் ஆதரவுடன் இனி தொடர்ந்து நல்ல படங்களில் நடிப்பேன். சினிமாதான் இனி எல்லாமே," என்றார்.

எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துடுச்சு- அஞ்சலி மகிழ்ச்சி Read more at: http://tamil.oneindia.in/movies/heroines/2013/06/i-m-happy-peaceful-now-says-anjali-177666.html


ஸ்ரீதேவியுடன் நடனமாடப் போகும் பிரபு தேவா!




       வயசானாலும் அழகும் இளமையும் மாறாதவர் ரஜினி மட்டுமல்ல, அவருடன் அதிகப் படங்களில் நடித்த பெருமைக்குரியவரான ஸ்ரீதேவியும்தான்.

              இந்த வயதிலும் ஹீரோயினாகவே நடிக்கிறார். அதை ரசிக்கிறார்கள். அந்த அளவு அவருக்கு இன்னும் மார்க்கெட் ஸ்டெடியாகவே உள்ளது. சமீபத்தில் அவர் நடித்து வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் நல்ல வரவேற்பைப் பெற்றது நினைவிருக்கலாம்.

            அடுத்து புதிய படங்கள் பலவற்றுக்கும் நாயகியாக அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் சர்வேதேச திரைப்பட விழா ஒன்றில் நடனமாட ஒப்புக் கொண்டுள்ளார் ஸ்ரீதேவி.


            ஆண்டுதோறும் ஐஃபா விருது விழா வழங்கும் விழா வெளிநாடுகளில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு இவ்விழா மக்காவ்வில் அடுத்த மாதம் 4,ம் தேதி நடக்க உள்ளது. இதன் சிறம்பம்சமாக ஸ்ரீதேவி நடனமாடுகிறார். அவருடன் இணைந்து ஆடப் போகிறவர்... பிரபுதேவா!



 விழாவில் ஸ்ரீதேவி நடித்த படங்களில் இருந்து பாடல்களும் இடம்பெற உள்ளன. இதற்கான ஒத்திகையில் ஸ்ரீதேவியும், பிரபுதேவாவும் ஈடுபட்டு வருகிறார்கள்!

Tuesday, June 25, 2013

அஜீத்தை கவர்ந்த ஔவையின் ஆத்திச்சூடி



   சென்னை: ஔவையாரின் ஆத்திச்சூடி அஜீத் குமாரை வெகுவாக கவர்ந்துள்ளது. 

           அஜீத் குமார் ஷூட்டிங்ஸ்பாட்டில் ஔவையாரின் ஆத்திச்சூடியை படிக்கிறாராம். படிப்பதோடுமட்டுமல்லாமல் தனக்கு நெருங்கிய நண்பர்களுக்கு தினமும் ஒரு ஆத்திச்சூடியை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கிறாராம்.


தினமும் காலையில் முதல் வேலையாக ஆத்திச்சூடியை எஸ்.எம்.எஸ். அனுப்புகிறாராம். அண்மையில் அவர் பெங்களூர் சென்றபோது அவரது நண்பர் ஒருவர் செல்போனில் ஆத்திச்சூடி அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யுமாறு கூறினாராம். அஜீத்தும் டவுன்லோட் செய்தாராம். 

                   அதில் இருந்து ஆத்திச்சூடியும் கையுமாக திரிகிறாராம். மேலும் தனது மகள் அனௌஷ்காவையும் ஆத்திச்சூடியை படிக்குமாறு கூறியுள்ளாராம். அஜீத் தற்போது விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இந்த வாரம் படப்பிடிப்பு முடிந்துவிடும். 

அப்பா கமலுன் சேர்ந்து நடிக்க வேண்டும்!- ஸ்ருதி






       ஹைதராபாத்: அப்பா கமல்ஹாஸனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் கூறினார்.

       தெலுங்கில் பிசியாக உள்ள ஸ்ருதி ஹாஸன் ஹைதராபாதில் நேற்று நிருபர்களைச் சந்தித்தார். அவர் அளித்த பேட்டியில், "நான் நடிகையாக வேண்டும் என சினிமாவுக்கு வரவில்லை. இசையமைப்பாளராக வேண்டும் என்று வந்தேன். மாடலிங்கில் நுழைந்தேன். இப்போது ஹீரோயினாகிவிட்டேன்.

     மாடலிங், இசை, சினிமா மூன்றுமே எனக்குப் பிடித்தவை. என்னைப் பற்றிய எல்லா விஷயகளையும் அப்பா கமல், அம்மா சரிகா, தங்கை அக்ஷரா ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறேன். 

       அம்மாவுடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறேன். அவர் பல வகைகளில் எனக்கு வழிகாட்டியாக உள்ளார். என்னை வேதனைப்படுத்திய சம்பவங்களாக நான் கருதுவது அப்பா, அம்மா பிரிந்து போனது. அப்பாவுக்கு நேர்ந்த கார் விபத்து, அம்மா மாடியில் இருந்து கீழே விழுந்தது ஆகிய மூன்றும்தான்.


     என் அப்பா கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்றும் ஆசை உள்ளது. என்னைப் பற்றி அப்பா பெருமையாக பேசும் அளவுக்கு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும். 

        
          எல்லா முடிவுகளையும் நானே எடுக்க வேண்டும் என்று அப்பா அடிக்கடி சொல்வார். சினிமா பற்றி நான் ஏதேனும் பேசினாலும் அவர் ஆர்வம் காட்ட மாட்டார். வீட்டு வாசலோடு சினிமாவை விட்டுவிட்டு வருவார். எனக்கும் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்," என்றார். 

தலைவா நிச்சயம் வெற்றி பெறும்:அமலாபால் நம்பிக்கை!

இளைய தளபதி விஜய்- அமலாபால் இணைந்து நடித்துள்ள படம் தலைவா.
இயக்குனர் ஏ.எல். விஜய்யின் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.
அப்போது பேசிய அமலா பால், தலைவா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது பெருமையாக உள்ளது.
ஒவ்வொரு நடிகைக்கும் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது கனவு.
தலைவா படத்தின் மூலம் என்னுடைய கனவு நிறைவேறி உள்ளது.
விஜய் மிக இனிமையானவர், அன்பாக பேசி பழகுவார்.
திறமையானவர்களை கொண்டு உருவாகியுள்ள இப்படம், நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஏற்கனவே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தெய்வ திருமகள் படத்தில் நடித்தேன்.
இதில் நடித்ததும் நல்லதொரு அனுபவத்தை தந்தது என தெரிவித்துள்ளார்.
விழாவில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஏ.எல்.அழகப்பன், நடிகை சரண்யா, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விஷாலை கட்டிபிடித்து அழுத பூபதிபாண்டியன்: பட்டத்து யானை பட விழாவில் உருக்கம்

விஷால் நடிக்கும் புதிய படம் ‘பட்டத்து யானை’. இதில் நாயகியாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அறிமுகமாகிறார். பூபதிபாண்டியன் இயக்குகிறார். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
நடிகர் ஆர்யா பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டார். விழாவில் ஆர்யா பேசும் போது புரட்சித் தளபதி, அண்ணன், கேப்டன் விஷாலும் டைரக்டர் பூபதிபாண்டியனும் நல்ல காம்பினேஷன் படம் வெற்றி பெறும் என்றார். டைரக்டர் பூபதிபாண்டியன் பேசும் போது பட்டத்து யானை படத்தை நான் டைரக்டு செய்வதற்கு காரணம் விஷால்தான் அவரிடம் போய் கதை சொன்னேன். இடைவேளையில் கதையை முடித்த போது தயாரிப்பாளரிடம் போனில் பேசி இந்த கதையை படமாக்கலாம் என்றார். என் வாழ்க்கையில் விஷாலை மறக்க மாட்டேன் என்று கூறிவிட்டு மைக்முன் கண் கலங்கினார். பின்னர் விஷால் அருகில் சென்று அவரை கட்டிப்பிடித்தும் அழுதார். இது உருக்கமாக இருந்தது.
விஷால் பேசியதாவது:-
மலைக்கோட்டை படம் முடிந்த போதே நானும் பூபதிபாண்டியனும் மீண்டும் சேர்ந்து படம் பண்ண விரும்பினோம். நேரம் அமையாததால் நடக்கவில்லை. ஐந்து வருடத்துக்கு பிறகு இப்போது சேர்ந்துள்ளோம். இங்கு அவர் நிற்பதற்கு நான் காரணம் என்றார். பூபதிபாண்டியன் காமெடியாக கதை சொல்பவர். நிறைய இயக்குனர்கள் காமெடியில் ஹிட் படங்கள் கொடுப்பதற்கு பூபதி பாண்டியன் தான் வழி காட்டி. மற்றவர்களை சிரிக்க வைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்.
பூபதி பாண்டியன் இனி இடைவெளியில்லாமல் படங்கள் இயக்க வேண்டும் பட்டத்து யானை கதையை அவர் சொன்ன போது பிடித்தது. இடைவேளையில் முக்கியமாக ஒரு விஷயம் இருக்கும் நாயகனுக்கும் டைரக்டருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தால் படம் ஜெயிக்கும். இப்படத்தில் அது இருந்தது. அத்துடன் மைக்கேல் ராயப்பன் என்ற நல்ல தயாரிப்பாளரும் கிடைத்தார் நிறைய செலவு செய்து படத்தை எடுத்துள்ளார்.
அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நாயகியாக அறிமுகமாகிறார். அர்ஜுன் எனது குரு நாதர். ஐஸ்வர்யாவுக்கு ரசிகர்கள் வரவேற்பு அளிக்க வேண்டும். சந்தானம் காமெடியில் கலக்கி உள்ளார்.
இவ்வாறு விஷால் பேசினார்.


சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ. தயாரிப்பாளர்கள் மைக்கேல் ராயப்பன், செராபின் சேவியர் நடிகர்கள் மயில் சாமி, ஜான் விஜய், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோர் பேசினர்.

ஜொலிக்குமா சூர்யாவின் 'துருவ நட்சத்திரம்'?


கவுதம் மேனன் இயக்கம், தமிழ் சினிமாவில் இன்றைக்கு அனைவருக்கும் பிடித்தமான ஹீரோவாகத் திகழும் சூர்யா நடிப்பு, இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இயக்கம்... என பெரிய எதிர்ப்பார்ப்புடன் அறிவிக்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம், இன்னும் அறிவிப்போடே நிற்கிறது.

                  கடந்த ஜூன் 17-ம் தேதியே படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கவுதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் தயாராக நிற்கிறார்கள். ஆனால் சூர்யாதான் இன்னும் தயாராக இல்லை.


            பொதுவாக ஒரு படத்துக்கு கமிட் ஆன பின், இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளமாட்டார் சூர்யா. ஆனால் முதல் முறையாக அவர் படப்பிடிப்பை ஆரம்பிக்க முடியாத அளவு தயக்கம் காட்டி வருகிறார்.


                 இந்தப் படத்தை கவுதம் மேனனே தன் போட்டான் கதாஸ் மூலம் தயாரிக்கிறார். சூர்யாவுடன், சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


     ஆனால் சூர்யாவின் ஜோடி யார் என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை. இந்தப் படத்துக்காக முதலில் த்ரிஷாவை அணுகினாராம் இயக்குநர். அவரும் ஒப்புக் கொண் நிலையில், படப்பிடிப்பு தாமதமானதால் த்ரிஷா விலகிக் கொண்டதாக கூறுகிறார்கள். ஆனால் த்ரிஷா வேண்டவே வேண்டாம் என சூர்யா கண்டிப்புடன் கூறியதால்தான் த்ரிஷா நடிக்கவில்லை என்று ஒரு பேச்சு நிலவுகிறது. மேலும் சூர்யாதான் அமலா பாலை ஒப்பந்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்டாராம்.


              ஆனால் இப்போது அமலாவும் இந்தப் படத்தில் இல்லை என்கிறார்கள். படம் எப்போது தொடங்கும் என்பதும் நிச்சயமாகத் தெரியவில்லை. இதனால் துருவ நட்சத்திரம் தொடங்குமா, அல்லது யோஹன் மாதிரி ஆகிவிடுமா என கவலையோடு கைபிசைகிறது கவுதம் யூனிட்!

Monday, June 24, 2013

தனுஷை பாலிவுட் ஏன் கொண்டாடுகிறது தெரியுமா?

மும்பை: தனுஷின் முதல் இந்தி படமான ராஞ்ஹனாவைப் பார்த்த வட இந்திய மக்கள் அவரின் நடிப்பை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிக் கொண்டுள்ளனர். 

   தனுஷ், சோனம் கபூர் நடித்த ராஞ்ஹனா இந்தி படம் கடந்த 21ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் தனுஷின் நடிப்பில் அசந்துவிட்டனர். அடடா என்ன அருமையாக நடித்திருக்கிறார், படத்தை தனுஷுக்காக பார்க்கலாம் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 



            என்னடா, நம்ம தனுஷை நமக்கு தெரியாதா, இவர்கள் என்ன இப்படி கொண்டாடுகிறார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்? காரணம் இருக்கிறது. பாலிவுட் இளம் ஹீரோக்கள், வயதாகியும் ஹீரோவாகவே தொடரும் ஹீரோக்கள் என அனைவரும் 6 பேக்கை காட்டுவதில் தான் குறியாக உள்ளனர். அப்படிபட்டவர்களுக்கு மத்தியில் ஆமீர் கான், ரன்பிர் கபூர், ஷாருக் மாதிரி சிலர் தான் நடிக்கத் தெரிந்தவர்கள் என்று கூறலாம்.



 இப்படி நடிப்பை விட்டு பாடியில் கவனம் செலுத்தும் நடிகர்களுக்கு மத்தியில் நடிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். ஆள் பார்க்க சுள்ளானாக இருந்தாலும் நடிப்பில் தன்னை யார் என்று நிரூபித்திருக்கிறார். அதனால் தான் பாலிவுட்டும், வட இந்திய மீடியாக்களும் அவரை கொண்டாடுகிறது. படத்தின் நாயகி சோனம் கபூர் பற்றி ஒருத்தர் கூட பேச மாட்டேன் என்கிறார்கள்.


          இந்நிலையில் கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் ராஞ்ஹனா படம் ரூ.21 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்- சைந்தவி ஜூன் 27-ம் தேதி திருமணம்



சென்னை: முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிவி பிரகாஷ்குமார் - பின்னணி பாடகி சைந்தவி திருமணம் வரும் ஜூன் 27-ம் தேதி வியாழக்கிழமை சென்னையில் நடக்கிறது.

        ‘வெயில்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர், ஜி.வி.பிரகாஷ் குமார். இவர், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார்.

      கிரீடம், மதராச பட்டினம், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, தெய்வத்திருமகள், தாண்டவம், பரதேசி, தலைவா ஆகிய படங்களுக்கும் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார்.

        பாரதிராஜா, மகேந்திரன் போன்ற இயக்குநர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இவருக்கும், சினிமா பின்னணி பாடகி சைந்தவிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்கள் திருமணத்துக்கு இருவரது பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து நிச்சயதார்த்தம் நடந்தது. 

          ஜீ.வி.பிரகாஷ் குமார்-சைந்தவி திருமணம் வருகிற 27-ந்தேதி       காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் மண்டபத்தில் நடக்கிறது. மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி, அன்று மாலை 6-30 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இருதரப்பு குடும்பத்தினரும் கவனித்து வருகிறார்கள்.

த்ரிஷா : சூர்யா முதல்ல நீ வளரணும் தம்பி


ஜில்லாவில் விஜய், மோகன்லாலுடன் கைகோர்க்கும் 3வது நாயகன்

ஜில்லா படத்தின் ஆச்சரியங்கள் ஒவ்வொன்றாக அவிழ்ந்து வருகிறது. முதல் முறையாக மோகன்லால் விஜய்யுடன் நடிக்கும் இந்தப் படத்தில் இன்னொரு கதாநாயகனும் இடம்பெறுகிறார். 

அவர் வேறு யாருமல்ல, விஜய்யுடன் நண்பன் அதேபோல் அரண் படத்தில் மோகன்லால் ஆகியோருடன் நடித்த ஜீவா தான். ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் ஜில்லாவை தயாரிக்கிறது. 

நடிப்பில் கோட்டைவிட்ட சௌத்ரியின் மூத்த மகன் ஜித்தன் ரமேஷ் தயாரிப்பு தரப்பை கவனித்துக் கொள்கிறார். இது ரமேஷ் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுப்பதற்கான முன்னோட்டம் என்கிறார்கள். 

இந்தப் படத்தில் சௌத்ரியின் இளைய மகன் ஜீவா கௌரவ வேடத்தில் தோன்றுகிறார். படக் குழுவினர் இந்தத் தகவலை உறுதி செய்திருக்கின்றனர்.

“கண்டிப்பாக நடிகையை திருமணம் செய்ய மாட்டேன்” : சமந்தாவுக்கு ‘ஷாக்’ கொடுத்த சித்தார்த்!



தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தோட தமிழ்நாட்டு தியேட்டர்களோட முதல்வார கலெக்‌ஷன் மட்டும் 10 கோடி என்ற சந்தோஷ செய்தியோடு நம்மை சந்தித்தார் சித்தார்த்.“ரொம்ப நாளா பசில இருந்த ஒருத்தனுக்கு, கன்னா பின்னான்னு வடை,பாயசம் விருந்து கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு சந்தோஷத்துல நான் இருக்கேன். கழுத்து வரைக்கும் திகட்டற மாதிரி எனக்குள்ள அப்படி ஒரு சந்தோஷம்.

முதல் வார கலெக்‌ஷனே தமிழ்நாட்டுல 10 கோடியை தாண்டிடுச்சு, ஆந்திராவிலும் படம் நல்லா போய்க்கிட்டிருக்கு. என்னோட கேரியர்ல இதுவரை நான் நடிச்ச படங்களோட முதல்வார கலெக்‌ஷனை இந்தப்படம் முறியடிச்சிடுச்சு. அந்த வகையில எனக்கு ரொம்ம சந்தோஷமா இருக்கு.


பொதுவா நம்மளோட சந்தோஷத்தை மத்தவங்க கிட்ட ஷேர் பண்ணிக்கிறது ரொம்ப நல்ல விஷயம், அதனால தான் இந்த சந்தோஷத்தை நான் உங்க கூட ஷேர் பண்ணிக வந்திருக்கேன்.
எல்லாரும் ஏன் நீங்க தமிழ்ப்படங்கள்ல நடிக்கிறதில்லேன்னு ஒரு 10 வருஷமா கேட்டுக்கிட்டிருக்காங்க.., அதுக்கு நான் நல்ல டைரக்டர்களையும், நல்ல ஸ்க்ரிப்ட்டையும் தேடி ஓடிக்கிட்டிருக்கேன்னு சொன்னேன்.

அந்தவகையில என்னோட 10 வருஷ கேரியர்ல இந்த ரவுண்ட்டுல தமிழ்ல கண்டினியூசா 4 படங்கள் பண்ணிட்டேன். இந்த தீயா வேலை செய்யணும் படத்துக்கப்புறம் ஜிகர்தண்டா, காவியத்தலைவன், அப்புறம் என்னோட சொந்த புரொடக்‌ஷன்ல ஒரு படம்னு நடிக்கப்போறேன்.
இந்தப்படத்தோட டைட்டில்னாலேயோ என்னன்னு தெரியல, இண்டஸ்ட்ரியில நெறைய பேர் எனக்கு போன் பண்ணி தீயா வேலை செஞ்சிட்ட சித்து, திரும்ப தமிழுக்கு வந்துட்டேன்னு சொல்லி பாராட்டுறாங்க,

இதெல்லாம் மீடியாவான நீங்க கொடுத்த சப்போர்ட் தான், அதனால உங்களுக்கு நான் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சொல்றேன்.


தமிழ்நாட்டு ரசிகர்கள் சூது கவ்வும் மாதிரியான டிபரெண்ட்டான கதைகளை ரசிச்சி அதை ஹிட்டாக்குறாங்க, அப்படிப்பட்ட ஆடியன்ஸ் மத்தியில நானும் வந்து நிக்குறது எனக்கு சந்தோஷமா இருக்கு


தீயா வேலை செய்யணும் குமாரு படத்தோட வெற்றிக்காக சுந்தர்.சி சாருக்கு நான் ரொம்ப ரொம்ப சின்ஸியரா ஒரு தேங்க்ஸ் சொல்லணும், ஏன்னா அவரு எனக்கு முன்னபின்ன அறிமுகம் கிடையாது, சும்மா எதேச்சயாக அவரை மீட் பண்ணி ரெண்டே நாள்ல ப்ளான் பண்ணி ஷூட்டிங் ஆரம்பிச்சது தான் இந்தப்படம். இந்தப்படத்துக்கப்புறம் என்னோட குடும்பத்துல ஒருத்தரா நான் அவரை பார்க்கிறேன்.

என்ற சித்தார்த்திடம் உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின் யார் என்று கேட்டபோது :


“ என்னோட முதல்பட ஹீரோயின் ஜெனிலியா எனக்கு பிடித்த நடிகை. ஏன்னா என்னோட பாய்ஸ் படத்துல ஒரு காலேஜ் படிக்கிற பொண்ணா சினிமாவுல கேரியரை ஸ்டார்ட் பண்ணிணாங்க.., அங்கேர்ந்து ஸ்டார்ட் பண்ணி அவங்க கேரியரை நல்ல அமைச்சிக்கிட்டாங்க, அவங்க கல்யாணம் அன்னிக்கு அவங்க கூட மும்பையில இருந்தேன். திருமணத்துக்கு அப்புறம் கூட அவங்க ரொம்ப சந்தோஷமா வாழ்க்கையை அமைச்சிக்கிட்டுருக்காங்க, ஜெனிலியாவோட கணவரும் எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர் தான், சினிமா, கேரியர், கல்யாணம்னு பக்காவா ப்ளான் பண்ணிட்டு வெற்றியடைஞ்ச ஒரு ஜோடியாத்தான் நான் அவங்களை பார்க்கிறேன்.

சமந்தா,ஹன்ஷிகா மோத்வானி ரெணு பேர்ல யார் பழகுறந்துக்கு ரொம்ப ஸ்வீட்டா இருப்பாங்க..? என்ற கேள்விக்கு பதிலளித்த சித்தார்த்
“கண்டிப்பா சமந்தா தான் ஸ்வீட்டா இருப்பாங்க. ஏன்னா சமந்தா தமிழ்ல பேசுவாங்க, ஹன்ஷிகா தமிழ்ல பேச மாட்டாங்க, ஹன்ஷிகாவும் ஸ்வீட் தான்”. நீங்க சமந்தாவா..? ஹன்ஷிகாவான்னு கேட்டீங்கன்னா நான் சமந்தா தான் சொல்வேன், வேற ஏதாவது சாய்ஸா இருந்தா வேணும்னா ஹன்ஷிகாவை சொல்லிக்கிறேன். என்றார்.

உங்கள் திருமணம் எப்போது? ஏதாவது நடிகையை திருமணம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த சித்தார்த்,

“இப்போதைக்கு நான் என்னோட சினிமா கேரியரைத்தான் பாலோ பண்ணிக்கிட்டிருக்கேன். ஆனா கண்டிப்பாக நான் நடிகையை திருமணம் செய்துகொள்ள மாட்டேன், விரைவில் திருமணம் செய்துகொள்வேன், ஆனால் அது எப்போது என்று தான் தெரியவில்லை.
இவ்வாறு சித்தார்த் கூறினார்.

அய்யய்யோ… அப்போ சமந்தாவோட நிலைமை..?

Sunday, June 23, 2013

கிண்டலடிப்பதா? ஸ்ருதி நடித்த தெலுங்கு படத்துக்கு பிராமணர்கள் எதிர்ப்பு


ஐதராபாத்: நடிகை ஸ்ருதி நடித்துள்ள தெலுங்கு படத்தில் பிராமணர்களை கிண்டல் செய்யும் விதமாக காட்சியமைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

                      ரவி தேஜா, ஸ்ருதிஹாசன், அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு படம் ‘பலுபு'. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதில் பிராமணர்களுக்கு எதிரான காட்சியமைப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 


                   இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பிராமணர் சங்கத்தினர், ‘கடந்த ஆண்டு எங்கள் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு எதிராக ஒரு படம் திரைக்கு வந்தது. அதை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். அந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில வெளியான பலுபு படத்தில் கடந்த ஆண்டு நாங்கள் நடத்திய நியாயமான போராட்டதை கிண்டல் செய்யும் விதமாக வசனங்கள் வைத்திருக்கின்றனர். இதற்கு சென்சார் குழுவினர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சான்றிதழ் அளித்துள்ளனர். 


                எங்கள் சமூகத்துக்கு எதிராக உள்ள வசனத்தை நீக்க வேண்டும் என்று சென்சார் குழு, பிலிம்சேம்பர் மற்றும் ஆந்திர அரசுக்கு மனு அளித்திருக்கிறோம்‘ என்றார்.


 இதற்கு பதில் அளித்த பட இயக்குனர் மலினேனி கோபிசந்த் கூறும்போது,‘எந்த சமூகத்துக்கும் எதிராக படம் எடுக்கவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை சுமுகமாக பேசி தீர்ப்போம். படத்தை சங்கத்தினருக்கு திரையிட்டு காட்ட உள்ளோம்‘ என்று கூறியுள்ளார்.


            தமிழ்நாட்டில்தான் படத்தை தனியாக திரையிட்டுக் காட்ட வேண்டும் என்று பல அமைப்பினரும் போராட்டம் நடத்துவார்கள். இப்போது ஆந்திராவிலும் ஆரம்பித்துவிட்டார்கள் என்கின்றனர் பட தயாரிப்பாளர்கள்.

மூடு அவுட்டில் விஜய்... பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை!


சென்னை: கடும் மூட் அவுட்டில் இருக்கும் விஜய், இன்று நடக்கும் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்கவில்லை.

                நடிகர் விஜய்யின் 39-வது பிறந்தநாளை இன்று 22-ம் தேதி சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

 இதற்கிடையில் சமீபத்தில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்படவிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.

 விழா ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று பரவலாக பேசப்பட்டதால் விஜய் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர் (உள்ளுக்குள்தான்... வெளியே காட்டியிருந்தா உள்ளே போயிருப்பாங்கங்கிறது வேற விஷயம்!!).

                  ஆனால், ‘விழா ரத்தான விஷயத்தில் அரசியல் கட்சிகளின் தலையீடுகள் எதுவும் இல்லை.. கல்லூரி நிர்வாகம்தான் காரணம்' என்று விஜய்யே கூறியதால் அமைதியடைந்த ரசிகர்கள் ஆங்காங்கே தங்கள் ஊர்களில் நலத்திட்ட விழாக்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

                விஜய் வழக்கமாக தான் பிறந்த எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தனது பிறந்தநாளன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பது மற்றும் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை எந்த நிகழ்ச்சியிலும் விஜய் கலந்துகொள்ளவில்லை. 

                       இதுபற்றி விசாரித்தபோது, ஏற்கனவே திட்டமிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ரத்து செய்யப்பட்டது விஜய்யை மிகவும் பாதித்துள்ளதாம். எனவே இந்த பிறந்த நாளில் அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்று கூறினர். இன்று அவர் ஜில்லா படப்பிடிப்பில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. 

l