Thursday, August 22, 2013

மெட்ராஸ் கபே படத்தின் தமிழ்ப் பதிப்பை உரிய சான்றிதழ் இல்லாமல் வெளியிடத் தடை!

சென்னை: தமிழருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட மெட்ராஸ் கபே படத்தின் தமிழ்ப் பதிப்பை உரிய சான்றிதழ் இல்லாமல் தமிழகத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 


தமிழ்ப் பதிப்புக்கு இன்றும் சான்றிதழ் தரப்படவில்லை என சென்சார் போர்டு நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்தே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் கபே படத்தின் தமிழ்ப் பதிப்பை தமிழகத்தில் வெளியிட்டால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் எழும் வாய்ப்புள்ளது. 


தமிழ் உணர்வாளர்கள், ஈழப் போர் ஆதரவாளர்கள் இந்தப் படத்தை எதிர்ப்பதால், தமிழகத்தில் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு சென்சார் சான்று வழங்கப்பட்டுவிட்டதா என நீதிமன்றம் விசாரித்தபோது, இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தது சென்சார் போர்டு.


இதைத் தொடர்ந்து படத்தின் தமிழ்ப் பதிப்பு உரிய சான்றிதழ் இல்லாமல் தமிழகத்தில் வெளியாகத் தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

அதேநேரம் படத்தின் இந்திப் பதிப்பு வெளியாகத் தடை இல்லை என்று கூறிவிட்டது உயர்நீதிமன்றம்.


இந்தப் படத்தின் எந்தப் பதிப்பும் தமிழகத்திலோ தமிழர் வாழும் பகுதிகளிலோ திரையிடப்பட்டால் முற்றுகையிடுவோம் என தமிழ் அமைப்புகள், கட்சிகள் கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment