நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோருக்கும் காப்புரிமை (ராயல்டி)யில் பங்கு கிடைக்கும் வகையில் 2012-ல் நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சங்கத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் கூறும்போது,
தொலைக்காட்சி, வானொலி, இணையதளம், தொலைபேசி ரிங்டோன் என எந்த வகையிலும் பாடல் ஒலிப்பரப்பினால் ராயல்டி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். நேரடி இசைக்கச்சேரிகள் சங்கத்தின் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
பின்னணி பாடகர்கள் அனைவரும் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தால் ராயல்டியை பெறலாம். இந்த சங்கத்தில் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி பின்னணி பாடகர்கள் உறுப்பினர் ஆகலாம். 1963-ல் தொடங்கி பின்னணி பாடிய அனைத்து பாடகர்களுக்கும் ராயல்டி பெற இதில் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசும்போது,
நாங்கள் மக்களின் சந்தோஷத்திற்காகவும், சோகத்திற்காகவும் மட்டுமல்ல, எங்களின் வயிற்றுப்பிழைப்பிற்காகவும் பாடுகிறோம். உங்களின் சோகங்களிலும், சந்தோஷங்களிலும் எங்கள் பாடல் ஒலிக்கிறது. எங்களுக்கு சண்டை போட தெரியாது. சண்டைப்போடுவதுபோல் பாட்டுப் பாடுவோம். ராயல்டியால் இளைய தலைமுறையினர் பயன்அடைவார்கள். பாடகர்களுக்கு ராயல்டி தருவதால் பட தயாரிப்பாளர்களுக்கோ, இசையமைப்பாளர்களுக்கோ, பாடலாசிரியர்களுக்கோ எந்த பாதிப்பும் கிடையாது. நாங்கள் யாரிடமும் இருந்து எங்களுக்கு ராயல்டி தாருங்கள் என்று பறிக்கவில்லை. சினிமாவைத் தவிர மற்ற இடங்களில் எங்கள் குரல் பயன்படுத்துவதற்கு ராயல்டி கேட்கிறோம். அவ்வளவுதான் என்றார்.
கே.ஜே.ஏசுதாஸ் பேசும்போது,
இசையமைப்பாளர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் வருகிற ராயல்டியில் நாங்கள் பங்கு கேட்கவில்லை. அதற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. ஒரு பாடல், பாடகர் மட்டும் பாடினால் உருவாகிவிடாது. அதில் பல இசைக்கலைஞர்கள், கோரஸ் பாடகர்களும் அடங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் பிற்காலத்தில் ராயல்டி கிடைக்குமானால் அதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. 50 வருடத்திற்கு பிறகுதான் பின்னணி பாடகர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கிறது.
இன்னும் பிற்காலத்தில் நல்லது நடக்கும் என்று நம்புவோம். பல இசையமைப்பாளர்கள், நடிகை, நடிகைகள் பின்னணி பாடகர்களாக இருக்கிறார்கள். அவர்களும் இந்த சங்கத்தில் உறுப்பினராக ஆகலாம். பெரிய பாடகர், சிறிய பாடகர் என்ற வேறுபாடு இங்கு இல்லை. எல்லா பாடகர்களும் சரிசமம்தான் என்றார்.
No comments:
Post a Comment