Friday, August 23, 2013

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை: விஜய் அதிரடி தகவல்


பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து தமிழகத்தில் ‘தலைவா’ திரைப்படம் தற்போது திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம், வெற்றியடைய வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
இதற்கிடையில் ரசிகர் மன்றங்கள் சார்பில் விஜய்-ன் பிரமாண்ட கட் அவுட்டுகள், பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில பேனர்களில் அரசியல் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் ரசிகர்களுக்கு கண்டிப்புடன் கூடிய வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. தயவுசெய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்களை போடவேண்டாம். அதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட மன்றங்களை கலைக்கக்கூட தயங்க மாட்டேன். இனி ரசிகர் மன்ற விஷயங்களில் நானே நேரடியாக ஈடுபடுவேன். என் தந்தையோ, வேறு யாரோ மன்ற விஷயங்களில் தலையிடமாட்டார்கள்.

No comments:

Post a Comment