Sunday, August 18, 2013

சுருதிஹாசனுடன் மோதலா? –பிரபுதேவா



பிரபுதேவா இந்தியில் பிசியான டைரக்டராகியுள்ளார். தமிழில் களவாடிய பொழுதுகள் என்ற படத்தில் நடித்தும் உள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:–
சினிமாவில் டான்சர் ஆவேன், நடிப்பேன், இயக்குனர் ஆவேன் என்றெல்லாம் நான் நினைக்கவே இல்லை. அனைத்தும் எதிர்பாராமல் நடந்தன. ஒரு டைரக்டர் என்ற முறையில் படம் பார்க்க வரும் ரசிகர்களை சந்தோஷப் படுத்துவது முக்கியம். அது மாதிரி கதைகளையே படமாக்குகிறேன்.
என்னைப் பற்றி வரும் கிசுகிசுக்களை பொருட்படுத்துவது இல்லை. தோல்விகளில் இருந்து நிறைய பாடம் கற்றுள்ளேன். திருமணம் பற்றி சிந்திக்க எனக்கு நேரம் இல்லை. படவேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளேன். என் குழந்தைகளுடன் ஓய்வை செலவிட விரும்புகிறேன். குழந்தைகளை பார்க்க சென்னை வருகிறேன். மும்பையில் இருக்கும் போது அவர்களை அங்கே வரவைக்கிறேன். நிறைய இடங்களுக்கு அவர்களை அழைத்து போகிறேன். சமீபத்தில் குறிப்பிட்ட பொம்மை வேண்டும் என கேட்டனர். அவை ஆஸ்திரேலியாவில் மட்டுமே கிடைக்க கூடியது. இதற்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து போய் வாங்கி கொடுத்தேன்.
என் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். ராமையா வஸ்தாவையா படப்பிடிப்பில் எனக்கும் சுருதிஹாசனுக்கும் மோதல் ஏற்பட்டதாக செய்திகள் பரவி உள்ளன. அதில் உண்மை இல்லை. படப்பிடிப்பு சுமூகமாக நடந்தது. எங்களுக்குள் எந்த பிரச்சினையும் ஏற்பட வில்லை. சுருதி ஹாசன் சிறந்த டான்சர்.
இவ்வாறு பிரபு தேவா கூறினார்.

No comments:

Post a Comment