தனுஷின் தந்தையாக இயக்குனர் சமுத்திரக்கனி நடிக்கிறார்.
சமுத்திக்கனி பல படங்களில் நடித்திருக்கிறார். ஈசனில் ஒரு குழந்தைக்கு அப்பாவாகவும் நடித்திருக்கிறார். ஆனால் தனுஷின் தந்தையாக…? கற்பனை செய்ய சிரமமாகதான் இருக்கிறது.
தனுஷின் வுண்டர்பார் தயாரிக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் பெற்றோர்களாக சமுத்திரக்கனியும், சரண்யா பொன்வண்ணனும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பொல்லாதவன், ஆடுகளம், 3 படங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தை இயக்க, அமலா பால் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார்.
அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
No comments:
Post a Comment