மணிரத்னம் இயக்கத்தில் வெளியான, அக்னி நட்சத்திரம் படம், 1980களில், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம். பிரபு – கார்த்திக் இருவரும் இணைந்து, இந்த படத்தில் மிரட்டியிருந்தனர்.
இந்த படம், “ரீ-மேக் செய்யப்படவுள்ளதாக, ஏற்கனவே ஒரு செய்தி வெளியானது. ஆனால், அது,வதந்தி என, பின் தெரியவந்தது. இப்போது, நீண்ட இடைவெளிக்கு பின், கார்த்திக்கும், பிரபுவும் மீண்டும் இணையப் போவதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. கவுதம் கார்த்திக் நடிக்கும் புது படத்தில், பிரபுவும், கார்த்திக்கும், சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்களாம். ஆனாலும், இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, இன்னும் வெளியாகவில்லை.
No comments:
Post a Comment