Saturday, July 6, 2013

‘தெய்வத் திருமகள்’ நிலா பாப்பா நடிக்கும் சைவம்: டைரக்டஷன் விஜய்

சென்னை: தெய்வத்திருமகள் வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் விஜய், பேபி சாராவை வைத்து ‘சைவம்’ என்ற பெயரில் அடுத்த படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார்.




‘தலைவா’ படத்திற்குப் பிறகு விஜய்யை வைத்தே அடுத்த படத்தை இயக்கப் போகிறார் விஜய் என பரவிக் கொண்டிருந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் டைரக்டர் விஜய்.
இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாம். பெரிய, பிரபலமான நடிகர்களை வைத்து படம் பண்ணியவர்கள் மீண்டும் அது போன்ற படங்களைத் தயாரிக்கவே விரும்புவர். ஆனால், விஜய் இதிலிருந்து வேறு பட்டுள்ளார்.

நடிகக‌ர்களை‌த் தேடு‌‌ம் முருகதா‌ஸ்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தான் அடுத்து இயக்கும் புதிய படத்துக்கு நடிகர்களைத் தேர்வு செய்து வருகிறார். நடிகர்கள் ஹீரோ போல் கட்டுமஸ்த்தான இஞைனராக இருக்க வேண்டியதில்லை. 65 முதல் 70 வயதான தாத்தாக்களாக இருந்தாலே போதும்.



கதையில் மிக முக்கியமான கதாபாத்திரத்திற்கு இரண்டு வயதானவர்கள் தேவை என்பதோடு, இதுவரை படங்களில் முகம் காட்டாத, புதியவராக இருக்க வேண்டும் என்பதால்தான் விளம்பரம் கொடுத்து தாத்தாக்களைத் தேடி வருகிறார்.
அப்படியிருந்தும், எந்த மாதிரியான கதையாக இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாததே ஏ.ஆர்.முருகதாஸின் ஸ்டையில். ஆக, நடிக்க ஆர்வமுள்ளவர்கள் முருகதா‌ஸு‌க்கு தங்களின் புகைப் படங்களை அனுப்பி வைக்கலாம்.

சிஷ்யனுக்கு மரியாதை

இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் படங்கள் இயக்காவிட்டாலும் பிஸியாகவே இருந்து வருகிறார். முக்கியமான சில இயக்குனர் நண்பர்களுக்கு கதையில் ஏற்படும் சில சிக்கல்களுக்கு தீர்வு சொல்லி அனுப்புவார்.



இதற்கிடையே தான் இயக்கப் போகும் ஒரு படத்தின் கதை விவாதத்தை செய்து கொண்டிருக்கிறார். இன்றைய இளைய இயக்குனர்களுக்கு போட்டி போடும் விதமாக சீன்கள் புதுமையாகவும், வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என ஒவ்வொரு காட்சிகளையும் அழகாக செதுக்கி வருகிறார்.
இத்தனைப் பணிகளுக்கிடையேயும் தனது மகன் சாந்தனு, விஷ்னு, சந்தானம் மூவரும் நடிக்க, தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த சிஷ்யன் ஒருவர் இயக்கும் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி கொடுத்து, சிஷ்யனுக்கு மரியாதை செய்துள்ளார் இயக்குனர் பாக்யராஜ்.

சிங்கம் 2 வெற்றி பெற்றால் சிங்கம் 3 உறுதி – சூர்யா!

சிங்கம் 2 படம் ரிலீஸ் ஆனதையடுத்து பயங்கர உற்சாகத்தில் இருந்த சூர்யா சிங்கம் 2 அருமையான பொழுது போக்கு படம் என்றும், இது வெற்றியடைந்தால் சிங்கம் 3-ம் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
சிங்கம் 2 படம் ஒரு முழுக்க முழுக்க கமர்ஷையல் படம் ரசிகர்களுக்கு இது மிகவும் பிடிக்கும் என்றே கருதுகிறோம்.
சிங்கம் 2’ படத்தில் நிறைய புதுமைகள் உள்ளன. சந்தானம், ஹன்சிகா கேரக்டர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். வில்லன் கேரக்டர் கொடூரமாக இருக்கும். தேவி ஸ்ரீபிரசாத் இசை பெரிய பலம். கதையோடு இசை பயணிக்கும். படத்தை நாங்கள் பார்த்தோம். சிறந்த படம் என்ற உணர்வு ஏற்பட்டது. நிச்சயம் படம் வெற்றி பெறும். ரசிகர்கள் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்.



‘சிங்கம்’ படம் வெளியான பிறகு ரசிகர்கள் ‘சிங்கம் 2’ எப்போதும் வரும் என்று அடிக்கடி கேட்க தொடங்கினர். டைக்டர் ஹரியிடம் இதுகுறித்து பேசினேன். அவரும் அதற்கான கதையை தயார் செய்தார். இப்போது அதை எடுத்து முடித்து ரிலீஸ் செய்து விட்டோம். இதன் மூன்றாம் பகுதி வருமா? என்பது படத்தின் வெற்றியை பொறுத்து அமையும். ஹரி அதற்கான கதையை உருவாக்கினால் ‘சிங்கம்௩’ படம் எடுப்பது சாத்தியம் ஆகலாம்.
அடுத்து கவுதம்மேனன், லிங்குசாமி இயக்கும் படங்களில் நடிக்க உள்ளேன். இரண்டு படப்பிடிப்புகளும் ஒரே நேரத்தில்கூட நடக்கலாம். இவ்வாறு சூர்யா கூறினார்.

Friday, July 5, 2013

Singam 2 Review | Kashayam with Bosskey | Surya, Santhanam, Hansika motwani, Anushka, Vivek


‘ராமைய்யா வத்சவய்யா’ ஷூட்டிங்கில் பிரபு தேவாவுக்கும், ஸ்ருதிக்கும் முட்டிக்கிச்சாம்!

மும்பை: ‘ராமய்யா வத்சவய்யா' பட ஷூட்டிக் போது பிரபுதேவாவுக்கும், ஸ்ருதிக்கும் முட்டிக் கொண்டதாம். இதனால், படத்தின் புரமோஷனில் ஜாஜ்ஜிலினை முன்னிறுத்தி செயல் படுகிறாராம் பிரபு தேவா. 




டான்ஸ் மாஸ்டராக அறிமுகம் ஆகி, மெல்ல நடிகராகி தற்போது பிரபல டைரக்டராகி இருக்கிறார் பிரபு தேவா. இவர் தற்போது ஹிந்தியில் ‘ராமய்யா வத்சவய்யா' என்ற படத்தை இயக்கி வருகிறார். 


தமிழிலும், தெலுங்கிலும் வெளிவந்து வெற்றி பெற்ற படமான, ‘சம்திங் சம்திங்' படத்தின் ஹிந்தி ரீமேக் தான் இப்படம். இதில் கிரீஷ் ஹீரோவாகவும், ஸ்ருதி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.

டான்ஸில் உருவான பிரச்சினை... 


இப்படத்தின் ஷூட்டிங்கின் போது, பிரபுதேவா சொல்லிக் கொடுத்த டான்ஸை ஸ்ருதி சரியாக செய்ய வில்லையாம். இதனால் ஸ்ருதியைக் கண்டித்துள்ளார் பிரபு தேவா. பதிலுக்கு ஸ்ருதியும் பேசியுள்ளார்.

தொடரும் மனஸ்தாபம்... 

இருவருக்கும் இடையில் அப்போது உண்டான மனஸ்தாபம் இன்னும் தொடர்கிறதாம். இந்நிலையில் ராமைய்யா வத்சாவய்யா வரும் 19ல் ரிலீசாக உள்ளது.

கோபத்தில் ஸ்ருதி..

படத்திற்கான புரமோஷன் வேலைகளைல் எதுவும் ஸ்ருதி பங்கு கொள்வதில்லையாம். அதனால், பிரபுதேவா சில காட்சிகளில் மட்டுமே தலை காட்டிய ஜாக்குலினை வைத்து மீதமுள்ள வேலைகளை முடித்து வருகிறாராம் பிரபுதேவா.

சிங்கம் 2... எலே படம் நல்லாருக்காம்லே!!

சென்னை: இதுவரை சூர்யா நடித்த எந்தப் படத்துக்கும் இல்லாத பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியாகியுள்ள சிங்கம் 2 படம் பார்த்தவர்கள் படம் விறுவிறுப்பாகவும் ரசிகனை ஒரு நிமிடம் கூட யோசிக்க விடாமல் கட்டிப் போடும் வகையில் இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். 

வருகிற முதல் தகவல் செய்திகளை வைத்துப் பார்க்கும்போது சூர்யாவைப் பொறுத்தவரை இந்தப் படம் அவரை மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து காப்பாற்றியிருக்கிறது.




சூர்யா நடித்த ஏழாம் அறிவு படம் அவருக்கு வசூல் ரீதியாக நன்றாக அமைந்தாலும், எதிர்மறை விமர்சனங்களையே சந்தித்தது. சமீபத்தில் வெளியான மாற்றான் படம் தோல்வியைத் தழுவியது.

 இந்த சூழலில் சிங்கம் 2 படம் குறித்து ஆரம்பத்தில் அவ்வளவு உற்சாகமான செய்திகள் வரவில்லை. இதனால் சூர்யா சற்று நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தார்.


 இப்போதோ, சிங்கம் 2 படம் குறித்த முதல் தகவல்கள் சூர்யாவையும் அவரது ரசிகர்களையும் உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.


இந்தப் படத்தை ஒரு நாள் முன்பாகவே வெளிநாடுகளில் திரையிட்டுவிட்டனர். படம் பார்த்த ரசிகர்களில் ஒருவர், "இதற்கு முன் சூர்யாவுக்கு இப்படி ஒரு படம் அமையவே இல்லை. சிங்கம் படத்தை விட, இந்த இரண்டாம் பாகம் இரு மடங்கு விறுவிறுப்பாகவும் பொழுதுபோக்காகவும் உள்ளது. ஹரியின் கடும் உழைப்பு, சூர்யாவின் அநாயாசமான நடிப்பு, விவேக் - சந்தானத்தின் காமெடி, இந்தப் படத்தை வசூலில் அள்ள வைக்கப் போதுமானது," என்று கூறியுள்ளார்.




ஒரு இணையதளம் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், "இரண்டே முக்கால் மணிநேரம் இந்தப் படம் ஓடினாலும், ஒரு இடத்தில் கூட போரடிக்கவில்லை," என்று குறிப்பிட்டுள்ளது. 

சென்னையில் இன்று சிங்கம் 2 ஏக அமர்க்களத்துடன் வெளியாகியுள்ளது. காலையிலேயே சிறப்புக் காட்சிகள் பார்த்தவர்கள் படம் குறித்து நல்லவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 நம்ம விமர்சனம் எப்போங்கிறீங்களா... தோ... படத்துக்கு கிளம்பிட்டே இருக்கேன்!





கோலிவுட்டுக்கு தாவத் துடிக்கும் அசினுக்கு உதவுவாரா கௌதம் மேனன்?


சென்னை: பாலிவுட்டில் இருந்து மீண்டும் கோலிவுட் பக்கம் போய்விடலாமா என்ற யோசனையில் இருக்கும் அசினுக்கு கௌதம் மேனன் உதவி செய்வாரா? 

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தபோது அசின் பாலிவுட்டில் சாதிக்க வேண்டும் என்று மும்பையில் செட்டிலானார். பாலிவுட்டில் நான் தான் நம்பர் 1 ஹீரோயின் என்று அவர் கூறியதை யாரும் காது கொடுத்து கேட்கவில்லை. அங்கு அவருக்கு அப்படி ஒன்றும் பட வாய்ப்புகளும் வருவதில்லை. 

இந்நிலையில் அவருக்கு வெளிநாட்டில் காதலர் உள்ளதாகவும் அதனால் தான் அவர் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வருவதாகவும் வட இந்திய ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. பேசாமல் பாலிவுட்டில் இருந்து கோலிவுட் பக்கம் போய்விடலாமா என்று அசின் நீண்ட நாட்களாக யோசனையில் உள்ளார்.

 இந்நிலையில் கௌதம் மேனன் தனது துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அசின் அல்லது சோனம் கபூரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம். அப்படி அவர் அசினை தேர்வு செய்தால் அவருக்கு இது பெரிய உதவியாக இருக்கும். அதே சமயம் அண்மையில் தமிழகத்தில் வெளியான அம்பிகாபதி படத்தில் நடித்துள்ள சோனம் கபூரை நம் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. இதையும் மனதில் வைத்து தான் கௌதம் ஹீரோயினை தேர்வு செய்யக்கூடும்.

Thursday, July 4, 2013

சமுத்திரம் தாண்டும் சரஸ்வதி சபதம்

சிவா‌ஜி கணேசனின் மறக்க முடியாத காவியம் சரஸ்வதி சபதம். அந்தப் பெயரை வேறொரு படத்துக்கு வைப்பதா என்று சில முரட்டு நடிகர் திலகம் பக்தர்கள் கோபப்பட்டதுடன் போராட்டமும் நடத்தினர். படத்தின் பெயரை உடனே மாற்றுவார்கள் என்றே பலரும் நம்பினர். ஆனால் புதிய சரஸ்வதி சபதம் டீம் டபுள் ஸ்ட்ராங். அதே பெயரில் படப்பிடிப்பை தொடர்கிறார்கள்.
பாங்காங்கில் படப்பிடிப்பு நடத்தவில்லையென்றால் சென்சார் கிடையாது என்று புதிய விதி எதுவும் வைக்கப்பட்டிருக்கிறதா தெரியவில்லை. தமிழில் படம் எடுக்கிற எல்லோரும் ஒரு ட்‌ரிப் பாங்காக் போய்விடுகிறார்கள். என்ன ரகசியம்… கண்டுபிடிப்பவர்களுக்கு பாங்காக் விமான டிக்கெட் பாpசு தரலாம்.
சரஸ்வதி சபதம் படத்துக்காக சமுத்திரம் தாண்டி பாங்காக், மலேசியா எல்லாம் செல்லவிருப்பதாக படத்தின் இயக்குனர் சந்துரு தெரிவித்தார். ஜெய், சத்யன், விடிவி கணேஷ் அப்புறம் ரா‌ஜ்குமார். இந்த நால்வரை பற்றிய கதைதான் சரஸ்வதி சபதம். முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.


ஏ‌ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் படத்தை தயா‌ரிக்கிறது.

பேத்தியுடன் ரசிகர்களை சந்தித்த அமிதாப்பச்சன்


அமிதாப்பச்சன் முதல் தடவையாக பேத்தியுடன் ரசிகர்களை சந்தித்தார். மும்பையில் உள்ள வீட்டில் இச்சந்திப்பு நடந்தது.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வீட்டில் ரசிகர்களை பார்ப்பதை அமிதாப்பச்சன் வழக்கமாக வைத்துள்ளார். அன்றைய தினம் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து நிற்பது உண்டு. வீட்டு மாடியில் வந்து அவர்களை அமிதாப்பச்சன் பார்த்து கையசைப்பார். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்வார்கள்.
தனியாகத்தான் ரசிகர்களை அவர் பார்ப்பார். ஆனால் இந்த முறை குடும்பத்தினரோடு சந்தித்தார். மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய், பேத்தி ஆரத்யா ஆகியோருடன் வீட்டு மாடியில் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார். பேத்தியை பார்த்ததும் கூட்டத்தினர் உற்சாக மிகுதியால் குரல் எழுப்பினர். போட்டோவும் எடுத்தார்கள்.
ஆரத்யாவுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 2 வயது ஆகப்போகிறது. பொது நிகழ்ச்சிகளுக்கு ஐஸ்வர்யாராய் மகளுடன் சென்று பங்கேற்று வருகிறார். வெளிநாட்டு படவிழாக்களுக்கும் மகளுடன் சென்று வந்தார்.

அரசி வேடத்தில் நடிக்கும் அனுஷ்காவுக்கு ரூ.5 கோடிக்கு நகைகள் வாங்கப்பட்டன

தமிழ் தெலுங்கில் தயாராகும் ‘ருத்ரமாதேவி’ படத்தில் நடிக்கும் அனுஷ்காவுக்கு ரூ.5 கோடிக்கு ஒரிஜினல் தங்க, வைர நகைகள் வாங்கப்பட்டு உள்ளது.
‘ருத்ரமா தேவி’ அரசியின் வரலாற்றை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கின்றனர். இதில் அனுஷ்கா ருத்ரமாதேவி ராணி கேரக்டரில் வருகிறார். ராணா, பிரகாஷ் ராஜ் போன்றோரும் நடிக்கின்றனர். ரூ.40 கோடி செலவில் இப்படம் எடுக்கப்படுகிறது.
இதில் நடிப்பதற்காக அனுஷ்கா குதிரையேற்றம் யானை சவாரி பயிற்சிகள் பெற்றார். வாள் சண்டையும் கற்றார். ஏற்கனவே ‘அருந்ததி’ படத்தில் அரசி வேடத்தில் நடித்துள்ளார். எனவேதான் ‘ருத்ரமாதேவி’ படவாய்ப்பு அவருக்கு கிட்டியது. 3டியில் உருவாகிறது.
இந்த படத்தில் அனுஷ்கா அணிந்து கொண்டு நடிப்பதற்காக ஒரிஜினல் தங்க, வைர நகைகளை விலைக்கு வாங்கியுள்ளனர். ரூ.5 கோடி மதிப்பிலான நகைகளை அணிந்து நடித்து வருகிறார். இதுவரை வேறு எந்த இந்திய மொழிப் படங்களுக்கும் படப்பிடிப்புக்காக இவ்வளவு செலவில் நகைகள் வாங்கப்பட்டது இல்லை. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

உதயநிதி, சந்தானம் நடிக்கும் நண்பேன்டா

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு நண்பேன்டா டைட்டில்தான் முதலில் பரிசீலனையில் இருந்தது. இப்போது அதே பெயரில் அதே உதயநிதி நடிக்க விரைவில் ஒரு படம் ஆரம்பமாகிறது.
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்து வரும் உதயநிதி மீண்டும் அவரது இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். அதற்கு முன் அவர் நடிக்கயிருக்கும் படம்தான் நண்பேன்டா.
இந்தப் படத்தை ராஜேஷின் அசிஸ்டெண்ட் ஜெகதீஷ் இயக்குகிறார். உதயநிதியுடன் சந்தானமும் முக்கியமான வேடத்தில் (என்ன முக்கியமான… வழக்கமான நண்பன் வேஷம்தான்) நடிக்கிறார். ஹீரோயின் மற்றும் பிற விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை.
உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நண்பேன்டாவை தயாரிக்கிறது

சினிமா இயக்குனர் மீது திருநங்கை ரோஸ் பரபரப்பு புகார்

டி.வி.நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் திருநங்கை ரோஸ். தற்போது ‘வாய்மை’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் இன்று மதியம் திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து சினிமா இயக்குனர் செந்தில்குமார் மற்றும் உதவி இயக்குனர் சீனு ஆகியோர் மீது பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-
நான் ‘வாய்மை’ என்ற படத்தில் திருநங்கை கலெக்டராக நடித்து வருகிறேன். இந்த படத்தை செந்தில் குமார் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை மாநிலக்கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
நேற்று காலையில் சூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது படப்பிடிப்பு குழுவினருடன் அனுமதி பெற்று காரில் வெளியில் சென்றேன். அண்ணாசாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் இன்னோரு காரில் சினிமா உதவி இயக்குனர்கள் சிலர் என்னை தொடர்ந்து வந்தனர்.
அவர்கள் எனது காரை மறித்து திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். எனது கார் கண்ணாடியை உடைத்து கொலை செய்ய முயன்றனர். இதற்கு டைரக்டர் செந்தில்குமாரும், உதவி இயக்குனர் சீனுவும்தான் காரணம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தன்னிடமிருந்த வீடியோ ஆதாரங்களையும் போலீசாரிடம் கொடுத்தார்.

அன்னக்கொடி விவகாரம்: பாரதிராஜாவின் நீலாங்கரை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு



சென்னை: அன்னக்கொடி படத்தை கண்டித்து சில அமைப்புகள் இயக்குனர் பாரதிராஜாவின் வீட்டை முற்றுகையிடப் போவதாக கிடைத்த தகவலை அடுத்து அவரின் நீலாங்கரை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 புதுமுகம் லட்சுமண், கார்த்திகா, மனோஜ் உள்ளிட்டோர் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் அன்னக்கொடி. படத்தில் தலித் பையனான லட்சுமண், தேவர் வீட்டு பெண்ணான கார்த்திகாவை காதலிக்கிறார். இந்த சாதி கலப்புக்கு படம் வெளியாகும் முன்பே எதிர்ப்பு கிளம்பியது.

 தேவர் அமைப்பு சார்பில் படத்தை தென் மாவட்டங்களில் வெளியிட தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இது தவிர படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வர்டு பிளாக் உள்ளிட்ட சில அமைப்புகள் பாரதிராஜாவின் சொந்த ஊரான தேனியில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின. 

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டை முற்றுகையிட்டு சில அமைப்புகள் போராட்டம் நடத்தப் போவதாக வந்த தகவலை அடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொஞ்சமாவது ரகசியம் வேணுங்க!- நடிகர் விஜய்


சென்னை: மேக்கிங், புரமோஷன் என்ற பெயரில் சினிமாவின் அத்தனை விஷயங்களையும் வெளியில் விடுவது சரியல்ல,

 கொஞ்சமாவது ரகசியம் வேணும், என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். சமீபத்தில் ஆனந்த விகடன் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "சினிமா ரொம்ப எமோஷனல் மீடியம். ஒரு ரசிகன் தியேட்டருக்கு வந்தா, அவனை நாம தியேட்டர் சீட்ல உக்காரவைக்கக் கூடாது. கதை நடக்கும் களத்துக்கு... அந்த சூழ்நிலைக்கே கடத்திட்டுப் போயிடணும். அந்த அனுபவம்தான் சினிமாவின் மேஜிக்.

ஆனா இப்போ, 'மேக்கிங்', 'புரமோஷன்'னு படப்பிடிப்பு ரகசியங்களை ஜஸ்ட் லைக் தட் ஷேர் பண்ணிடுறாங்க. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்துல அதையெல்லாம் ரகசியமா வெச்சிருப்பாங்க. ரசிகர்களும் தியேட்டர் ஸ்க்ரீன்ல அவங்க நடிக்கிறதைப் பார்த்துப் பிரமிச்சுக் கைத்தட்டுவாங்க. அப்படி ஒரு ரகசியத் திரை கொஞ்சமாவது இப்போ தேவை. 


ஷூட்டிங்கில் நாங்க கஷ்டப்பட்டு நடிக்கிறதை, 'மேக்கிங்'கிற பேர்ல ஓப்பனா எல்லாத்தையும் காமிச்சுட்டா, அப்புறம் அந்தக் காட்சியை தியேட்டர்ல பார்க்கிறப்போ எந்தத் த்ரில்லும் இருக்காது. 'இந்த சீனா? இதை எப்படி எடுத்தாங்கன்னு நான் நெட்லயே பார்த்துட்டேனே'னு அசால்ட்டா சொல்லிட்டுப் போயிடுவாங்க. அது சினிமாவுக்கு நல்லதில்லைங்ணா! மேஜிக்கை ஸ்க்ரீன்ல காட்டுவோம் வாங்கங்ணா!', என்று குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, July 3, 2013

Bhagyaraj shares funny work experience with Director Bharathiraja |


வாடகைத் தாய் மூலம் ஷாரூக்கானுக்கு ஆண்குழந்தை - உறுதி செய்தார் கவுரி கான்



மும்பை: ஷாரூக்கானுக்கு வாடகைத் தாய் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அந்தக் குழந்தை நலமுடன் தங்களிடம் இருப்பதாகவும் கவுரி கான் தெரிவித்துள்ளார். 

கடந்த ஒரு மாத காலமாக பரபரப்பை ஏற்படுத்திய ஷாருக்கானின் வாடகைத்தாய் குழந்தை பற்றிய முழு தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.

 கடந்த மே மாதம் 27ஆம் தேதி, அந்தேரியில் உள்ள மஸ்ரானி பெண்கள் மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை ஒன்றின் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பம் மும்பை மாநகராட்சி கழகத்திற்கு வந்துள்ளது. அதில் பெற்றோர்களின் பெயராக ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரிகானின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. குழந்தை 34 வாரங்களில் பிறந்ததாகவும், 1.5 கிலோ எடையுடன் இருந்ததாகவும் மாநகராட்சிக் கழகத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அருண் பாம்னே தெரிவித்துள்ளார். 

அந்தக் குழந்தை மஸ்ரானி மருத்துவமனையில் இருந்து ஜூஹுவில் உள்ள நானாவதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. 


வாடகைத் தாய் நமிதா சிப்பர்

 தற்போது அந்தக் குழந்தை ஷாருக்கான் தம்பதியரிடம் சேர்க்கப்பட்டு, அவர்களது இல்லத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் வாடகைத் தாய் குறித்த விபரமும் வெளியாகியுள்ளது. அவர் பெயர் நமிதா சிப்பர். ஷாருக்கான் மனைவியின் நெருங்கிய உறவினர் இவர்.


 குழந்தையை பெற்றுக் கொடுத்துவிட்டு அவர் லண்டனுக்குச் சென்றுவிட்டதாக ஷாருக்கானின் நண்பர்கள் கூறுகின்றனர். 


ஜூன் மாத இறுதியில் குழந்தைப் பிறப்பு பற்றிய அறிக்கை கிடைத்ததாக மும்பை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் மனிஷா மைஸ்கர் தெரிவித்துள்ளார். 

அப்போது குழந்தையின் பாலினம் குறித்து கருவிலேயே சோதனை செய்து தெரிந்துகொண்டதாக பரபரப்பான செய்தி வெளியானதால், இந்த அறிக்கையை உடனடியாகத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியதாக அவர்கள் தெரிவித்தனர். 

வாடகைத் தாய்களை அனுமதிக்கும் இந்திய சட்டவிதிமுறைகள், குழந்தையின் பாலினத்தைக் கருவிலேயே பரிசோதித்துத் தெரிந்து கொள்வதை அனுமதிப்பதில்லை. இந்நிலையில் தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை நடிகர் ஷாருக்கான் மறுத்துள்ளார்

. விரைவில் இந்தக் குழந்தை குறித்து செய்தியாளர்களிடம் அவர் அறிவிப்பு வெளியிடப் போகிறாராம். ஷாரூக்கானுக்கு ஏற்கேனவே 15 வயதில் ஆர்யன் என்ற மகனும், 13 வயதில் சுஹானா என்ற மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புற்று நோயின் பிடியில் பிரபல இயக்குநர் ராசு மதுரவன்!



சிகரெட், போதைப் பாக்கு, போதைப் புகையிலை... இவற்றில் ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொள்ளாத சினிமாக்காரர்கள் ரொம்பக் கம்மி. மற்றவர்கள் இந்தப் பழக்கங்களுக்கு ஆளாகி உயிரை சிறுகச் சிறுக போகடித்துக் கொண்டிருப்பவர்களே.

 இந்தப் பழக்கத்தால் கேன்சர் நிச்சயம் என்று தெரிந்தும் அதை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது. 'இது மிகவும் கொடியது' என அரசுத் தரப்பு நியூஸ் ரீலை, சிகரெட் ஊதியபடிதான் சினி்மாக்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 அப்படிப்பட்டவர்கள் ராசு மதுரவன் நிலையை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவன் ராசு மதுரவன். மறைந்த மணிவண்ணனிடம் பணியாற்றியவர்.


 பூமகள் ஊர்வலம் என்ற படத்தில் இயக்குநராக அறிமுகமானார். குடும்பம், கிராமத்து உறவுகளை அருமையாகச் சித்தரித்த மாயாண்டி குடும்பத்தார் படம் இவர் உருவாக்கியதுதான்.

 இவருக்கு இப்போது நாக்கு மற்றும் தொண்டை பகுதியில் கேன்சர் நோய் பரவியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து தீவிர சிகிச்சை செய்து வருகின்றனர். இது கொஞ்சம் முற்றிய நிலையில் இருப்பதால், உறவினர்களும் நண்பர்களும் அதிர்ந்து நிற்கிறார்கள்.

 காரணம், இந்த சிகரெட் மற்றும் பாக்குப் பழக்கம்தான் என்பதை தெளிவாகச் சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள். 

மக்கள் நன்கறிந்த ஒரு கலைஞன் கண்ணெதிரே புற்றின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிறார் புகைப் பழக்கத்தால். புகையின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் திரையுலக கலைஞர்களும் மற்றவர்களும், எப்படி அதிலிருந்து வெளிவரப் போகிறார்கள்?

ஜூலை 5: சூர்யாவின் சிங்கம் 2 Vs சஞ்சய் தத்தின் போலீஸ் கிரி!


சிறைக்கு செல்லும் முன் சஞ்சய் நடித்த கடைசி படமான போலீஸ் கிரியை தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறார் இயக்குநர் ராம நாராயணன் மகன் என் ராமசாமி. அதே நாளில் வெளியாகிறது இன்னொரு போலீஸ் படமான சிங்கம் 2.

 விக்ரம் தமிழில் நடித்த சாமி படம் இந்தியில் போலீஸ் கிரி என்ற பெயரில் உருவாகியுள்ளது. விக்ரம் வேடத்தில் சஞ்சய் தத் நடித்துள்ள இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

வரும் ஜூலை 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தை தமிழகம் முழுவதும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இராம.நாராயணனின் மகன் என்.ராமசாமி வெளியிடுகிறார்.


 தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ள போலீஸ் கிரி, மிகப்பிரமாண்டமான முறையில் அதிரடி, ஆக்ஷன் காட்சிகளோடு உருவாகியுள்ளது. 

சூரியா நடிப்பில் வெளியாகவுள்ள சிங்கம் 2 படமும் போலீஸ் சம்மந்தப்பட்ட படம் தான், அதே நாளில் வெளியாகும் போலீஸ் கிரி படமும், போலீஸ் சம்மந்தப்பட்ட கதைதான். மிகப் பெரிய பொருட்செலவில் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஆக்ஷன் காட்சிகளோடு உருவாகியுள்ள போலீஸ் கிரி இந்திப் படமாக இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில், கே.எஸ்.ரவிகுமார் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக' ராமசாமி தெரிவித்துள்ளார்.

பாப்பாவ ஸ்கூலுக்கு அனுப்பிட்டு திரும்பவும் நடிக்கப் போறாராம் ஐஸ்


மும்பை: மகள் ஆரத்யாவை பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்து விட்டால், மீண்டும் பழைய படி தன் நடிப்பைத் தொடரலாம் என முடிவெடுத்துள்ளாராம் ஐஸ். 

ரசிகப் பெருமக்கள் ஐஸ்வர்யா ராயின் புதுப்படங்களைப் பார்த்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகப் போகிறது. கர்ப்பமானதிலிருந்து புதிய படம் ஒத்துக் கொள்வதைத் தவிர்த்தார் ஐஸ்.

 இப்போது, அவரது மகள் ஆரத்யாவிற்கு இரண்டு வயதாகப் போகிறது. அடுத்ததாக அவளை பிளே ஸ்கூல் அனுப்ப திட்டமிட்டுள்ள ஐஸ், விரைவில் பழைய படி தனது திரையுலகப் பயணத்தைத் தொடரப் போகிறாராம்.

Ajith 53 - Official Teaser By Director Vishnuvardhan


Thalaivaa - Official Theatrical Trailer


Singam 2 Official Trailer HD First on Net


Tuesday, July 2, 2013

உத்தரகாண்ட் வெள்ளத்துக்கு ரூ.10 லட்சம்: நடிகர்கள் சூர்யா – கார்த்தி வழங்கினர்

நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி தியாகராயநகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் இன்று நடந்தது.
விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2.5 லட்சம் பரிசு வழங்கினார்கள். ஏழை மாணவர்களுக்காக தாய் தமிழ் பள்ளிக்கு ரூ.1 லட்சமும் வாழை சமூக சேவை இயக்கத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கினர்.
விழாவில் சூர்யா பேசியதாவது:-
கடந்த 34 வருடமாக சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வேறு உதவிகளைவிட கல்விக்கு செய்கின்ற உதவி ஒருவருக்கு காலத்திற்கும் பயன்படும். அகரம் பவுண்டேசன் அடிதட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகிறது.
650-க்கும் அதிகமான மாணவர்களின் கல்லூரி கனவை நனவாக்கி இருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை ஏழை குழந்தைகளின் கல்விக்கு வழங்க வேண்டும். உத்தரகாண்ட் வெள்ளத்தில் மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். நமது ராணுவத்தினர் திறமையாக செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அந்த பேரழிவு 3, 4 ஆண்டுகளுக்கு நாட்டை பின்னோக்கி கொண்டு சென்று விட்டது என்கின்றனர். இதற்காக எங்கள் குடும்பம் சார்பில் ரூ.10 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.
இவ்வாறு சூர்யா பேசினார்.

மலையாளத்தில் அறிமுகமாகும் பிரேம்ஜி!

தன் தந்தை கங்கை அமரனைப் போலவே இசை, இயக்கம் மற்றும் நடிப்பு என சினிமாவின் பல துறைகளிலும் தேறியவர் பிரேம்ஜி.
இப்போதைக்கு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தாலும், இசையமைப்பது, படம் இயக்குவது போன்றவற்றை நீண்ட காலத் திட்டங்களாக வைத்திருக்கிறார் மனிதர். வெங்கட் பிரபு படங்களில் காமெடியனாக வந்தாலும், கிட்டத்தட்ட படத்தின் ஹீரோ லெவலுக்கு ரசிகர்களைக் கவர்ந்துவிடுபவர் பிரேம்ஜி.ஆனால் மற்ற இயக்குநர்களிடன் படங்களில் அவ்வளவாக எடுபடவில்லை.
இந்த நிலையில் தமிழைத் தாண்டி மலையாளத்திலும் கால்பதிக்கிறார் பிரேம்ஜி. அனில் ராதாகிருஷ்ண மேனன் என்பவர் இயக்கத்தில் பகத் பாஸில் – ஸ்வாதி ரெட்டி நடிக்கும் நார்த் 24 காதம் என்ற மலையாளப் படத்தில் பிரேம்ஜியும் நடிக்கிறார்.
இது அவரது முதல் மலையாளப் படமாகும். இதுகுறித்து இயக்குநர் கூறுகையில், “எங்கள் படத்தில் பிரேம்ஜிக்கு சின்ன வேடம்தான். ஆனால் அவருடன் பணியாற்றியது மிக உற்சாகமான அனுபவமாக இருந்தது. எதிர்காலத்தில் அவருடன் மேலும் பணியாற்ற ஆசையாக உள்ளது,” என்றார்.

ஆக்ஷன் கதையில் சுள்ளான் தனுஷ்!

அரும்பு மீசை முளைத்தபோது நடிக்கத் தொடங்கிய தனுஷ், அப்போதெல்லாம் தனக்கு பொருந்தக்கூடிய கதைகளாகத்தான் நடித்தார். ஆனால், சில நடிகர்கள் ஆக்ஷன் கதைகளில் நடிப்பதைப்பார்த்து அவருக்கும் அந்த ஆசை வந்ததால், சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், படிக்காதவன், வேங்கை போன்ற படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக அவதரித்தார்.
ஆனால், ஒல்லிகுச்சி நடிகரான தனுஷ், கைக்கு பத்து பேரை பந்தாடியதை ரசிகர்கள் ஏற்கவில்லை. மாறாக கிண்டலடித்தனர். அதனால், இது நமக்கு சரிப்படாது என்று பின்னர் ரொமாண்டிக்கான கதைகள் பக்கம் திரும்பினார் தனுஷ். அது அவருக்கு ரொம்பவே மேட்சாக இருந்தது. அதோடு அவரது நடிப்பும் பேசும்படியாக வெளிப்பட்டது. அதனால்தான் விஜய் உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களே தனுஷை சிறந்த நடிகர் என்று ஓப்பனாக பேசி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது அம்பிகாபதியிலும் கவித்துவமான காதல் கதையில் நடித்துள்ள தனுஷ், அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் மீண்டும் ஆக்ஷன் கோதாவில் குதிக்கப்போகிறாராம். அதைப்பார்த்து, வேண்டாம் தம்பி இதெல்லாம் உன் உடம்புக்கு ஒத்து வராது என்று சில அபிமானிகள் அட்வைஸ் செய்தும் கேட்கவில்லையாம் தனுஷ். அது அப்ப, ஆனா இப்ப ஓரளவுக்கு என உடம்பு தேறிட்டுல்ல. இப்ப நான் பத்து பேரை அடிச்சாலும் பாக்கிறவங்க கண்டிப்பாக ஏத்துக்குவாங்க என்று அவர்களை சமாதானப்படுத்தி வருகிறாராம் சுள்ளான்.

ஆர்யாவுடன் நயன்தாரா நெருக்கமாக நடிப்பதேன்?

முதல் இன்னிங்சில் நயன்தாரா பிசியாக இருந்த நேரத்தில், அவருடன் ஒரு படத்திலாவது, ஜோடி சேர்ந்துவிட வேண்டும் என்று, துடியாய் துடித்தவர் ஆர்யா. அவரது ஆசையை, “பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மூலம் நிறைவேற்றி வைத்தார் இயக்குனர் ராஜேஷ்.
அதனால், அப்படத்தில் ஆர்யா – நயன்தாரா நடிப்பு, பேசும்படியாக இருந்தது. அதையடுத்து, “ராஜா ராணியில் மீண்டும் அவர்கள் இணைந்துள்ளனர். இதில், முந்தைய படத்தை விட, மிக நெருக்கமாக நடித்துள்ளனராம்.அதைப்பார்த்து, “மற்ற நடிகர்களை விட, ஆர்யாவுடன் மட்டும் அதிக நெருக்கமாக நடிப்பதேன் என்று நயன்தாராவைக் கேட்டால், “சினிமாவைப் பொறுத்தவரை எப்படி நடிக்க வேண்டும் என்பதை, கதை தான் முடிவு செய்கிறது. ஆர்யா எனக்கு நல்ல நண்பர்.
எங்களுக்கிடையே நல்ல புரிதல் உள்ளது. அதனால், நடிப்பிலும் எங்களையும் அறியாமல் அதிகம் நெருக்கம் வெளிப்படுகிறது என்கிறார்.

சிவ கார்த்திகேயனின் காமெடி ஆர்வம்

இயல்பாகவே, சிவ கார்த்திகேயனுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாம். படிக்கிற காலத்தில் இருந்தே, நண்பர்கள் மத்தியில் அவ்வபோது காமெடி பட்டாசுகளை கொளுத்திப் போட்டு, அவர்களை சிரிக்க வைப்பது தான் அவரது பொழுதுபோக்காம்.சின்னத்திரையில் நிகழ்ச்சிப் தொகுப்பாளரான போதும், அதே ரூட்டை பின்பற்றி, “டிவி நேயர்களை சிரிக்க வைத்தார்.
தனுஷ் நடித்த, “3 படம் மூலம் சினிமாவிலும் காமெடியனாகவே நுழைந்தார். இப்போது ஹீரோ ஆன பின்னும், காமெடிக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அவர் கூறுகையில், “என், ஒவ்வொரு படங்களிலும், காமெடி காட்சிகளில், என் பங்களிப்பை கூடுதலாக வெளிப்படுத்துகிறேன். டைரக்டர்களின் அனுமதியுடன், சில வசனங்களை மாற்றி வடிவமைக்கிறேன் என்கிறார்.


சினிமாவில் நடிக்க சம்மதிப்பவரையே திருமணம் செய்வேன்! சொல்கிறார் ஸ்ருதிஹாசன்

சினிமாவில் நடிக்க வந்து சில வருடங்களிலேயே முன்னணி நடிகையாகி விட்டவர் ஸ்ருதிஹாசன். தற்போது தெலுங்கு படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வரும் அவர், டிடே என்ற இந்தி படத்தில் விலைமாதுவாக நடித்திருக்கிறார். இப்படத்தில் அவரது பெட்ரூம் காட்சி புகைப்படங்கள் வெளியாகியிருப்பதால் பலரும் ஸ்ருதியை விமர்சித்து வருகின்றனர்.
ஆனால், அதற்கு பதிலளிக்கும் வகையில், சினிமாவில் நடிப்பவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். மேலும், நடிப்பவர்கள் எடுத்துக்கொள்ளும் கேரக்டருக்கேற்ப நடித்தாக வேண்டிய நிலை உள்ளது. அப்படி நடிக்கிறபோதுதான் அந்த கேரக்டர் முழுமை பெறும். அதனால்தான், விலைமாது ரோல் என்கிறபோது விலைமாதுவாகவே மாறி விடுகிறேன். அதனால் இதை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், என்னைப்பொறுத்தவரை வாழ்க்கை முழுவதும் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கவே ஆசைப்படுகிறேன். அதனால் எதிர்காலத்தில் நான் திருமணம் செய்து கொள்ள முற்படும்போது, என்னை புரிந்து கொண்டு, எக்காரணம் கொண்டும் என் நடிப்புக்கு தடைபோடாதவரையே திருமணம் செய்து கொள்வேன் என்கிறார் ஸ்ருதிஹாசன்.

த்ரிஷா – அமலா பாலை பின்னுக்கு தள்ளிய சமந்தா

கவுதம் மேனன் கடைசியாக இயக்கி, வெளியான, “நீ தானே என் பொன் வசந்தம் தமிழை விட தெலுங்கில் ஓரளவு ஓடியது.
அதில், சமந்தாவும், நானியும் நடித்திருந்தனர்.அதனால், தற்போதைய இயக்கத்தில் தயாராகும், “துருவ நட்சத்திரம் படத்தையும், தமிழ், தெலுங்கில் தயாரிக்கும் கவுதம் மேனன், இரண்டு மொழிகளிலுமே, சமந்தாவையே ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்தி கசிந்துள்ளது.
முன்னதாக, இப்படத்தில் த்ரிஷா பரிசீலிக்கப்பட்டு, பின் அமலா பாலையே மனதில் வைத்திருந்தார் கவுதம். பல கட்ட பரிசீலனைக்கு பின், இறுதியாக சமந்தாவையே தேர்வு செய்து விட்டாராம். இதனால், சந்தோஷத்தில் இருக்கிறார், சமந்தா.

வதந்தியை பொய்யாக்கிய ஃபாக்ஸ் - ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தை தயாரிக்கிறது!



சென்னை: ராஜா ராணி படத்துக்குப் பிறகு ஏஆர் முருகதாஸும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் பிரிவதாக கடந்த சில தினங்களாக வதந்திகள் உலா வந்தன. 

இப்போது அந்த வதந்தியை பொய்யாக்கியிருக்கிறது ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம். 

ஹாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஃபாக்ஸ், இந்தியாவில் ஃபாக்ஸ் ஸ்டார் என்ற பெயரில் தயாரிப்பில் இறங்கியது. தமிழ், இந்திப் படங்களைத் தயாரித்தது. தமிழில் ஏ ஆர் முருகதாஸின் சொந்தப்பட நிறுவனத்துடன் இணைந்து எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி படங்களைத் தயாரித்தது. இப்போது ராஜா ராணி படத்தை தயாரித்து வருகிறது.

 இந்த நிலையில் ராஜா ராணியுடன் முருகதாஸ் - பாக்ஸ் ஸ்டார் கூட்டணி முறிந்துவிட்டதாக வதந்தி கிளம்பியது. 

ஆனால் அது பொய் என்பதை நிரூபிக்கும் வகையில், 'தங்களின் அடுத்த இந்திப் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குவார்' என ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்தப் படம் 2014-ம் ஆண்டு தயாராகிறது. இந்த அறிவிப்பை இயக்குநர் ஏஆர் முருகதாஸும் உறுதிப்படுத்தியுள்ளார்.

நான் தமிழங்க... வேட்டிதான் என் உடை, என் அடையாளம்! - தனுஷ்



தமிழ்நாட்டில், தமிழ்க் குடியில் பிறந்தவர்கள் கூட, நடிகரான பிறகு வடநாட்டு உடைகள் அல்லது இங்கிலீஷ் உடைகளை விரும்பி அணியும் காலம் இது. 

ஆனால் நடிகர் தனுஷ் அவர்களில் விதிவிலக்கு. உடை விஷயத்தில் அவர் எப்போதுமே விரும்பி அணிவது வேட்டி சட்டைதான். 

பெரும்பாலும் சினிமா விழாக்களுக்கு அவர் வேட்டியில்தான் வருவார். வெளி நிகழ்ச்சிகளிலும் அப்படியே. அட, வட இந்தியாவில் நடந்த விழா ஒன்றில் கூட வேட்டி கட்டிக் கொண்டு போயிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 


அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, "நான் வேட்டி - சட்டையில் இல்லாமல் வேறு உடையில் வந்தால்தான் நீங்கள் ஆச்சர்யப்பட வேண்டும். என்னைப் பார்த்து ஏன் இப்படிக் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. 

நான் தமிழங்க... வேட்டி சட்டையை அணிய இதைவிட சிறப்பான காரணம் தேவையில்லையே... இதுதான் என் அடையாளம். எங்கே போனாலும் இந்த அடையாளத்தை நான் தொடர விரும்புகிறேன். இதைவிட வசதியான உடை வேறு எதுவும் இல்லை.

 ஏதோ ஸ்டைலுக்காக, விளம்பரத்துக்காக இப்படி உடை அணிவதாக நினைக்க வேண்டாம்," என்றார்.

R

அஜீத், விஜய்க்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா? - விஷால் காட்டம்



சென்னை: அஜீத், விஜய்க்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா என்று விஷால் கோபத்தில் உள்ளாராம்.

 விஜய், அமலா பால் நடித்துள்ள தலைவா படத்தை வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது. இந்நிலையில் அஜீத்தின் பெயரிடப்படாத படத்தையும் வேந்தர் மூவீஸ் தான் ரிலீஸ் செய்கிறதாம். அந்த 2 படங்களையும் பார்க்காமலே வாங்கியுள்ளனர். 

இந்நிலையில் விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்துள்ள பட்டத்து யானை படத்தை வெளியிடுவது குறித்து வேந்தர் மூவீஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்களோ முதலில் படத்தைப் போட்டுக் காட்டுங்கள் அதன் பிறகு வாங்குவது பற்றி முடிவு செய்யலாம் என்றார்களாம். இதைக் கேட்ட விஷால் கடுப்பாகிவிட்டாராம். 

விஜய், அஜீத் படங்களை மட்டும் பார்க்காமல் வாங்கியுள்ளீர்கள். அதே போன்று என் படத்தையும் வாங்கிக்கொள்ள வேண்டிது தானே என்றாராம் விஷால். அதற்கு வேந்தர் மூவிஸ் தரப்பில், அஜீத், விஜய் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்கள். 


அவர்கள் படத்தை வெளியிட்டால் போட்ட பணத்தை எடுத்துவிடலாம். உங்களுக்கு அப்படி இல்லையே என்று கூறினார்களாம். இதையடுத்து விஷால் படத்தை வாங்கும் முயற்சியை வேந்தர் மூவிஸ் கைவிட்டுவிட்டதாம். இப்போது ரெட்ஜெயன்ட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் பேச்சு நடத்தி வருகிறார்களாம் பட்டத்து யானை தரப்பில்.

Sunday, June 30, 2013

விஜய்யின் ‘தலைவா’ படக்கதை அம்பலம்!


-

என் அம்மா சரிகா, நான் ஏன் கௌதமியை அம்மான்னு கூப்பிடணும்?: ஸ்ருதி R



சென்னை: எனக்கு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. நான் ஏன் கௌதமியை அம்மா என்று அழைக்கணும் என ஸ்ருதி ஹாஸன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 கமல் ஹாஸன், சரிகாவின் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா. இந்நிலையில் கமல், சரிகா விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு கமல் நடிகை கௌதமியுடன் ஒரே வீட்டில் வாழ்கிறார்.

 இந்நிலையில் இது குறித்து ஸ்ருதி கூறுகையில், 


பிரிந்து செல்ல வேண்டும் என்பது என் பெற்றோரின் சொந்த விஷயம். அதனால் அது குறித்து நான் பேச விரும்பவில்லை. எனக்கு என் பெற்றோரின் சந்தோஷம் தான் முக்கியம். அவர்களே சந்தோஷமாக பிரிந்துவிட்டதால் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை. என் தாய் மற்றும் தந்தையுடன் 

எனக்கு நல்ல நெருக்கம். இருப்பினும் என் தாயுடன் தான் அதிக நெருக்கம். நாங்கள் தோழிகளுக்கும் மேல் என்றார்.


 நீங்கள் கௌதமியை அம்மா என்று அழைப்பீர்களா என்று கேட்டதற்கு,


 நான் ஏன் அப்படி கூப்பிடணும். எனக்கு ஒரு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. என் தந்தை கௌதமியுடன் இருப்பதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

இனி வருஷத்துக்கு 2, அதுவும் பெருசு மட்டுமே: விமல் முடிவு


சென்னை: விமல் சரிந்து கொண்டிருக்கும் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த ஒரு முடிவை எடுத்துள்ளார். 

கூத்துப் பட்டறையில் இருந்து வந்த விமல் மற்றும் விதார்த் ஆகியோரின் மார்க்கெட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆனால் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டோ எகிறிக் கொண்டிருக்கிறது. 

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நானும் தானே நடித்தேன். அப்படி இருக்கையில் இந்த சிவகார்த்திகேயனுக்கு மட்டும் எப்படி பெயர் கிடைத்தது என்று புலம்பித் தள்ளுகிறாராம் விமல். இனி வரும், போகும் கம்பெனிகளின் படங்களில் எல்லாம் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளாராம். 

ஆண்டுக்கு 2 படங்கள் அதுவும் பெரிய இயக்குனர், பெரிய நிறுவனத்தின் படங்களில் மட்டும் தான் நடிப்பது என்று தீர்மானித்துள்ளாராம். தேசிங்கு ராஜா படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகராக விமல் நடித்துள்ளார். இந்த படம் தனக்கு நிச்சயம் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று நம்புகிறார். 

அஜீத்தின் பெயரிடப்படாத பட ஷூட்டிங் முடிந்தது: செப்டம்பரில் ரிலீஸ்?



சென்னை: ஒரு ஆண்டுகாலமாக நடந்த அஜீத்தின் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முடிந்துவிட்டது. 

அஜீத் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்துள்ள படத்தின் வேலைகள் ஓராண்டு காலமாக நடந்தது. இந்த படத்தின் வேலைகள் எப்பொழுது முடியும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.


 இந்நிலையில் ஒரு வழியாக ஷூட்டிங் முடிந்துவிட்டது. அஜீத்தும் அடுத்த பட வேலைகளில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டார்
.