இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த முதல்படமான ‘ஜெயம் கொண்டான்’ படத்தில் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து, கண்ணன் இயக்கிய ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’ ஆகிய படங்களிலும் சந்தானம் நடித்தார்.
கண்ணன் தற்போது ‘அலங்காரம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திலும் சந்தானத்தை நடிக்க வைக்க கண்ணன் விரும்பினார். இதற்காக ‘இது கதிர்வேலன் காதல்’ படப்பிடிப்பு தளத்தில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்த சந்தானத்தை சந்தித்த கண்ணன், தன்னுடைய படத்தில் சந்தானத்தின் கதாபாத்திரத்தை அவரிடம் விவரமாக விளக்கினார்.
இது சந்தானத்துக்கு பிடித்துப்போகவே அவர் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனால் தொடர்ந்து கண்ணன் இயக்கும் ஐந்தாவது படத்திலும் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். கார்த்தியும்- சந்தானமும் இந்த படத்தின் மூலம் ஐந்தாவது முறையாக இணைகிறார்கள். ‘சிறுத்தை’, ‘சகுனி’, ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ ஆகிய படங்களில் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment