Thursday, August 22, 2013


வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மனிஷா யாதவ். இப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்த மனிஷா, அதன்பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் கல்லூரி மாணவி வேடத்தில் நடித்தார். இவரது நடிப்பு பேசும்படி இருந்தால் தற்போது கோலிவுட் இயக்குனர்களின் பார்வை இவர்மேல் விழத் தொடங்கியுள்ளது.
‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே கரு.பழனியப்பன் இயக்கும் ‘ஜன்னல் ஓரம்’ மற்றும் விதார் நடிக்கும் ‘பட்டைய கிளப்பு பாண்டியா’ ஆகிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
இப்போது, தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் தொடங்கவிருக்கும் ‘வேங்கை சாமி’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்காக கடந்த சில மாதங்களாக கதாநாயகியை தேடி வந்த வெற்றிமாறன், ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் மனிஷாவின் நடிப்பை பார்த்தபிறகு, தனுசுக்கு ஏற்ற ஜோடியாக இவரால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஒப்பந்தம் செய்துள்ளாராம்.
இதனால், கோலிவுட்டில் முன்னணி நாயகி பட்டியலில் இவரும் இடம்பிடிக்க முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment