Sunday, August 18, 2013

ராஜா ராணி படத்தில் இடம் பெறும் ஆர்யா–நயன்தாரா திருமண போஸ்டர்


ஆர்யா–நயன்தாரா திருமண போஸ்டர் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளது. ஆர்யா கோட்–சூட் அணிந்து வர அவரது கையை நயன்தாரா பிடித்துக் கொண்டு பூச்சென்டுடன் வருவது போல் போஸ்டர் உள்ளது. அவர்களது அருகில் சத்யராஜ், சந்தானம் இருந்தனர்.
இந்த போட்டோ பத்திரிகை அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டது. ஆர்யா–நயன்தாரா காதலித்து வருவதாக வரும் செய்திகளுக்கிடையே இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரித்த போது ஆர்யா–நயன்தாரா திருமண போட்டோ ‘ராஜா ராணி’ படத்துக்கான விளம்பர போஸ்டர் என்று இயக்குனர் அட்லி தெரிவித்தார். இந்த படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். இதில் சத்யராஜ், சந்தானம், ஜெய், நஸ்ரியா நசீம் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீடு வருகிற 23–ந்தேதி நடக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஆர்யா–நயன்தாரா இருவரும் மோதிரம் மாற்றி கொண்டது போல திருமண அழைப்பிதழ் அனைத்து பத்திரிக்கை அலுவலகங்களுக்கு வந்தது. இதனால் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர் என்று பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் அது ராஜா ராணி படத்துக்கு விளம்பரத்துக்காக அனுப்பப்பட்டது என தெரிந்தது.

No comments:

Post a Comment