Sunday, August 18, 2013

கோச்சடையானில் ரஜினியின் டான்ஸ் அற்புதம்: ஏ.ஆர். ரஹ்மான்

சென்னை: கோச்சடையானில் ரஜினி இளைமையாகத் தெரிவதுடன் அவரது நடனக் காட்சிகள் அற்புதமாக வந்துள்ளது என்று இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ரஜினியின் கோச்சடையான் படத்திற்கும், ஷங்கர் இயக்கி வரும் ஐ படத்திற்கும் இசைப் பணியை கவனிக்கிறார்.
இந்நிலையில் அவர் இந்த 2 படங்கள் குறித்து கூறுகையில், கோச்சடையான் படப் பாடல்கள் அருமையாக வந்துள்ன.
இது குறித்து நான் மேலும் கூற விரும்பவில்லை. மொத்தத்தில் ரஜினி மிகவும் இளமையாகத் தோன்றுகிறார். படத்தில் அவரது நடன காட்சிகள் அற்புதமாக வந்துள்ளது.
ஐ படத்திற்கு இன்னும் ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைக்க வேண்டியுள்ளது. இந்த 2 படங்களின் பாடல்களுமே வித்தியாசமாக இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment