புது முகங்கள் நடிக்கும் படம் மாயை. இப்படத்தை கண்ணன் இயக்கியுள்ளார். இவரே இதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். நாயகியாக சனம் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த எழில் இனியன் இப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
மாயை படத்துக்கு முதலில் ‘சை’ என பெயரிடப்பட்டு இருந்தது. இந்த படத்தை சென்னை புரொடக்சன் நிறுவனம் சார்பில் நான் தயாரித்த தோடு கதாநாயகிக்கு அப்பாவாகவும் நடித்தேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு சில காட்சிகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும் எனவே மீண்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும் கண்ணன் தெரிவித்தார்.
இதில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நான் படத்தில் இருந்து விலக முடிவு செய்தேன். படத்துக்கு செலவிட்ட பணத்தை படம் ரிலீசுக்கு முன் எனக்கு தந்து விடுவதாக கண்ணன் ஒப்புக்கொண்டார். தற்போது பணத்தை திருப்பித் தராமல் படத்தை வெளியிட முயற்சித்து வருகிறார். பாடலையும் வெளியிட்டு விட்டார். தனது பெயரையே தயாரிப்பாளர் என்றும் போட்டுள்ளார். எனக்கு பணத்தை தராமல் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுதாகர் மாயை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment