Tuesday, August 20, 2013

இந்தி பட வாய்ப்பை பறித்தார்: அசினை முந்தும் ஸ்ருதிஹாசன்



ஸ்ருதிஹாசன் இந்தியில் அசினை முந்துகிறார். அசின் நடிக்க இருந்த ஒரு பட வாய்ப்பையும் பறித்து உள்ளார்.
லக் என்ற இந்தி படத்தில் சுருதிஹாசன் அறிமுகமானார். இப்படம் 2009–ல் வந்தது. அதன் பிறகு தில்தோ பச்சா ஹைஜி, ராமையா வஸ்தாவையா, டிடே படங்களில் நடித்தார். இதில் ராமையா வஸ்தாவையா, டிடே படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தன. இதையடுத்து இந்தியில் ஸ்ருதிஹாசன் மார்க்கெட் உயர்ந்தது.
தற்போது வெல்கம் பேக் என்ற இந்தி படத்துக்கும் ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் அசின் நடிப்பதாக இருந்தது. அவரைத்தான் தேர்வு செய்து வைத்து இருந்தனர். சமீபத்தில் இரண்டு படங்களில் ஸ்ருதிஹாசன் நடிப்பை பார்த்தவர்கள் அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று கருதி அசினை நீக்கிவிட்டனர். படத்தில் கதாநாயகன் அக்சய்குமாரும் ஸ்ருதிஹாசனை சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அசின் அதிர்ச்சியில் உள்ளார்.
தமிழில் ஹிட்டான ரமணா படம் இந்தியில் கப்பார் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதிலும் அக்சய்குமார் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

No comments:

Post a Comment