விஜய் நடித்துள்ள தலைவா படம் வருகிற 9ந் தேதி ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தலைவா படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் அதற்கு யுஏ சான்றிதழ் கொடுத்தனர்.
படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக தணிக்கை குழு கூறியது. இதனால் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பினார். அவர்கள் படத்தை பார்த்து விட்டு யு சான்றிதழ் வழங்க ஒப்புக் கொண்டனர். ஆனாலும் ஒரு சில காட்சிளை நீக்க வேண்டும். சில காட்சிகளின் நீளத்தை குறைக்க வேண்டும் என்றனர்.
இதனை தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து படத்துக்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து படம் ரம்ஜானுக்கு ரிலீசாகும் சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளது.