Friday, September 6, 2013
தி சீக்ரெட் வில்லேஜ் - இந்திய தமிழர் இயக்கிய ஹாலிவுட் படம்
இந்தியத் தமிழர் சுவாமிகந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள தி சீக்ரெட் வில்லேஜ் என்ற ஹாலிவுட் படம், தமிழ் உள்பட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
ஜோனாதன் பென்னட் , அலிஃபால்க்னர், ஸ்டெலியேசவன்டே, ரிச்சர்ட்ரைல் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் கதையை ஜேசன்பி.விட்டியருடன் இணைந்து எழுதியிருக்கிறார் சுவாமிகந்தன்.
ஜோனாதன் பென்னட்-ன் 50வது படம் இந்த ‘தி சீக்ரெட் வில்லேஜ்'. இவர் ‘மெமோரியல்டே', மீன்கேர்ள்ஸ்' படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அலிஃபால்க்னர், தி டிவிலைட் சகா, பிரேக்கிங் டான் - பார்ட் 1 மற்றும் "பேட்கிட்ஸ்கோடூஹெல்"படத்திலும், ஸ்டெலியேசவன்டே-"ஏ பியூட்டிபுல்மைன்ட்," "அக்லிபெட்டி" படத்திலும் நடித்தவர். ‘ஹாலோவின்', ஆபீஸ்ஸ்பேஸ்" படங்களில் நடித்தவ ரிச்சர்ட் ரைலுக்கு இது 210வது படம்.
ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள், திடீர் திடீரென நோய் வாய்ப்பட்டு இறந்து போவது தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வந்தால் இந்த திகில் சம்பவங்கள் நடப்பது புரியாத புதிராக உள்ளது. வெற்றிபெற முடியாத திரைக்கதை
ஃபிலெடெல்பியாவைச் சேர்ந்த இப்படத்தின் இயக்குனரான சுவாமிகந்தன் இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் செட்டில் ஆனவர். அமெரிக்காவிற்குச் சென்ற பின், திரைப்படத் தயாரிப்பு, விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் திரைப்பட மார்க்கெட்டிங் பற்றிய படிப்பை நியூயார்க் பல்கலைக்கழகத்திலுள்ள ஃபிலிம்ஸ் கூலில் படித்தவர்.
2008ல் வெளிவந்த ‘கேட்ச் யுவர் மைன்ட்' என்ற படம்தான் சுவாமி கந்தன் எழுதி, இயக்கி, தயாரித்த முதல் ஹாலிவுட் படம். குடும்பக் கதையான இப்படம் அமெரிக்கா, கனடா, கரீபியன்தீவுகள் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளியானது. 2009ல் டிவிடி வடிவில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
தற்போது திகில், மர்மப்படமான ‘திசீக்ரெட்வில்லேஜ்' படத்தை முடித்துள்ளார். ‘தி பெர்க்ஷயர்ஸ்' என்ற இடத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இப்படம் உலகம் முழுவதும் வெளிவரத் தயாராகஉள்ளது.
‘தி மெசென்சர்' என்ற ஆக்ஷன் திரில்லர் படத்தையும் தற்போது இயக்கி வருகிறார். ஆரம்ப நிலையில் உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கிறது. சுவாமிகந்தன் மற்றும் டாக்டர் ராஜன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருப்பதோடு, உலகம் முழுவதும் வெளியிடுகிறார்கள்.

மதகஜராஜா இன்று ரிலீஸ் இல்லை!
சென்னை: விஷாலின் மதகஜராஜா படம் இன்று ரிலீஸ் ஆகவில்லை. பைனாஸ்சியர்கள் சிக்கல் நீடிப்பதால், படம் நாளை அல்லது அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விஷால் - அஞ்சலி - வரலட்சுமி நடித்துள்ள படம் மதகஜராஜா. சுந்தர் சி இயக்கியுள்ள இந்தப் படத்தை ஜெமினி நிறுவனம் தயாரித்தது. கடந்த பொங்கலுக்கே வெளியாக வேண்டிய இந்தப் படம், ஜெமினி நிறுவனத்தின் பழைய கடன்களால் முடங்கிப் போனது.
கடைசியாக விஷால் பெரும் முயற்சி எடுத்து, பல கோடிகள் கொடுத்து வாங்கி தன் சொந்த நிறுவனத்தின் பெயரில் வெளியிட முனைந்தார்.
படம் சிறப்பாக வந்திருப்பதால், நம்பிக்கையுடன் பெரும் செலவில் விளம்பரங்கள் செய்தார் விஷால். இந்த நிலையில், திடீரென ஜெமினி நிறுவனத்தின் முந்தைய தயாரிப்புகளுக்கு பணம் கொடுத்தவர்கள், இந்தப் படம் வெளியாகும் முன் தங்களின் மொத்தக் கடன்களையும் அடைத்தாக வேண்டும் என மல்லுக்கு நிற்க, டென்ஷனில் விஷால் மருத்துவமனைக்கு போக வேண்டியதாயிற்று.
கடந்த இரு தினங்களாக விஷால் தரப்புக்கும் பைனான்சியர்களுக்குமிடையிலான பேச்சு முடிவுக்கு வராததால், மதகஜராஜா வெளியீடு இன்று நிறுத்தப்பட்டது.
படம் நாளை வெளியாகிவிடும் என நடிகை குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார். அப்படி வெளியாகாவிட்டால் அடுத்த வெள்ளிக்கு தள்ளிப் போகலாம் என்கிறார்கள்.

விஜய்யின் ஜில்லாவில் 'அது' 1 சதவீதம் கூட இருக்காது: இயக்குனர்
சென்னை: ஜில்லாவில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு சதவீதம் கூட இருக்காது என்று இயக்குனர் நேசன் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தலைவா படம் பட்டபாட்டை பார்த்து ஜில்லாவில் இருந்த அரசியல் பஞ்ச் வசனங்களை தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி நீக்கிவிட்டார். மேலும் தனது படத்தில் அரசியல் பஞ்ச் வசனங்களே கூடாது என்று கூறிவிட்டார்.
இந்நிலையில் இது குறித்து இயக்குனர் நேசன் கூறுகையில்,
ஜில்லாவில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு சதவீதம் கூட இருக்காது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய திரைக்கதை அப்படியே தான் உள்ளது என்றார்.
ஜில்லா என்ற தலைப்பை விஜய்யிடம் நேசன் தெரிவித்ததுமே அவர் குஷியாகி இதுவே இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம். முன்னதாக நேசன் விஜய்யின் வேலாயுதம் படத்தில் துணை இயக்குனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வரூபம் 2... இந்திய தேசிய முஸ்லிம் லீக் உருவில் ஆரம்பமானது முதல் எதிர்ப்பு!
சென்னை: கமலஹாசனின் ‘விஸ்வரூபம்2' படத்துக்கு முதல் எதிர்ப்பு கிளம்பி விட்டது. இந்தப் படமும் இஸ்லாமியருக்கு எதிரான காட்சிகளைக் கொண்டிருப்பதாக இந்திய தேசிய முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.
‘விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகம் வெளியானபோது ஏற்பட்ட நெருக்கடிகள் உலகறிந்தது. தமிழக அரசே தடை விதித்து, பின்னர் சமரச முயற்சியால், சில காட்சிகளைப் பலி கொடுத்த பிறகு அந்தப் படம் வெளியனது நினைவிருக்கலாம்.
அதுபோல் ‘விஸ்வரூபம் 2' படமும் இப்போது பிரச்சினைக்குள்ளாகியுள்ளது. இந்த படத்தையும் கமலே இயக்கி நடித்துள்ளார். தீபாவளி அல்லது நவம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.
இந்த நிலையில் படத்துக்கு முதல் எதிர்ப்புக் குரல் கிளம்பிவிட்டது. இப்படம் குறித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவஹர்அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கமலஹாசன் நடித்து இயக்கி வரும் விஸ்வரூபம் பார்ட்-2 தீபாவளிக்கு வர இருப்பதாகவும், விஸ்வரூபம் படத்தை போன்று இப்படத்திலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து முஸ்லிம்களின் மனம் புண்படும்படியான காட்சிகள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளதை கண்டு மிகவும் வேதனை அடைந்துள்ளோம்.
சகோதரர் கமலஹாசன் தொடர்ந்து முஸ்லிம்களை காயப்படுத்தி படம் எடுத்து வருவதும் பிறகு கருத்து சுதந்திரம் என்று பேசி அதன் மூலம் படத்தை விளம்பரப் படுத்தி கொள்வதும் நல்ல கலைஞனுக்கு அழகல்ல. யார் மனதையும், காயப்படுத்தி திரைப்படம் எடுப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். டாம் 999 மற்றும் மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்கள் ஏன் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை படைப்பாளி புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ‘விஸ்வரூபம்2' திரைப் படத்தில் முஸ்லிம்களை காயப்படுத்தும் காட்சிகள் இல்லாதவாறும் சமூக ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் திரைப்படத்தை எடுத்து காயப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் நெஞ்சங்களில் மருந்து தடவ வேண்டும் என்று கமலஹாசனை இந்திய தேசிய முஸ்லிம் லீக் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீபாவளிப் படங்கள்... இப்பவே மூணு ரெடி!
சென்னை: இந்த தீபாவளிக்கு இப்போதே மூன்று திரைப்படங்கள் தொடை தட்டிக் களம் இறங்கிவிட்டன. அவை ஆரம்பம், இரண்டாம் உலகம் மற்றும் ஆல் இன் ஆல் அழகு ராஜா. இந்த மூன்று படங்களைத் தவிர மேலும் சில படங்களும் கடைசி நேரத்தில் களமிறங்கக் காத்திருக்கின்றன

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். ரொம்ப நாளாக எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்துக்கு சமீபத்தில்தான் தலைப்பு அறிவித்தார்கள். அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கார்த்தி - காஜல் அகர்வால் நடித்துள்ள ஆல் இன் ஆல் அழகுராஜாவை ராஜேஷ் எம் இயக்கியுள்ளார். பாஸ் என்கிற பாஸ்கரனுக்குப் பின் அவர் இயக்கியுள்ள படம் இது. ஞானவேல் ராஜா தயாரிப்பு இது. கார்த்திக்கு பெரியஹிட் தேவைப்படும் நிலையில் இந்தப் படம் வருகிறது.
ரூ 60 கோடி செலவில் செல்வராகவன் மிக நீண்ட அவகாசம் எடுத்து உருவாக்கிவரும் படம் இரண்டாம் உலகம். இதில் ஆர்யா நாயகன். அனுஷ்கா நாயகி. வித்தியாசமான கதைக் களத்துடன் வரும் படம் இது
இவை தவிர வணக்கம் சென்னை, ஆனந்தத் தொல்லை உள்பட சில படங்களும் தீபாவளிக்கு வெளியாகக் காத்திருக்கின்றன.

Thursday, September 5, 2013
‘கொலவெறி’ நாயகனுக்கு இசையமைப்பாளர்கள் மத்தியில் மவுசு
பல்வேறு பொழுதுபோக்கு படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் தனுஷ், ‘கொலவெறி’ பாடலுக்குப் பிறகு பாடகராகவும் பிரபலமா
கியிருக்கிறார். இசையமைப்பாளர்கள் மத்தியில் அவருக்கு மவுசும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக அவர் நடிக்கும் படங்களில் அவருக்கு பாடும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அந்த வகையில் தான் நடிக்கும் நய்யாண்டி படத்திலும் ஒரு பாடலைப் பாடி அசத்தியிருக்கிறார் தனுஷ். ஜிப்ரான் இசையில் அந்தப் பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் நடிக்காவிட்டாலும்கூட, ஒரு பாடலில் பாடும்படி இசையமைப்பாளர்கள் அவரை அணுகி வருகின்றனர். அந்த வகையில், தனது சகோதரரின் ‘இரண்டாம் உலகம்‘ படத்திலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
கேமரா பிரியையான பியா
பொய் சொல்லப் போறோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறியப்பட்டவர் பியா பாஜ்பாய், தொடர்ந்து, ‘ஏகன்’, ‘கோவா’, ‘பலே பாண்டியா’, ‘கோ’, ‘சட்டம் ஒரு இருட்டறை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ‘கோ’ படம் இவருக்கு நல்ல ஹீரோயின் அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.
முழுநேர நடிகையாக மாறிவிட்டாலும், பியா தற்போது கேமராவும் கையுமாக அலைந்து கொண்டிருக்கிறாராம். ‘ஏகன்’ படத்தில் அஜீத்துடன் நடித்தபோது, எந்நேரமும் கேமராவுடன் சுற்றிக்கொண்டிருந்த அஜீத்தைப் பார்த்து பியாவுக்கும் கேமரா மீது ஆசை வந்துவிட்டதாம்.
அப்பொழுதிலிருந்து பொழுதுபோக்குக்காக கேமராவை வாங்கி படங்களை எடுக்கத் தொடங்கிய பழக்கம், இப்போது கேமரா மீது வெறியாக மாறிவிட்டதாம். ஆகையால், தற்போது விதவிதமான கேமிராவை வாங்கி குவிக்கிறாராம். ஏதேனும் வித்தியாசமான காட்சியைப் பார்த்தால் கிளிக் செய்தும் விடுகிறாராம்.
மீண்டும் நடிக்க வருகிறார் ஜீவன்
‘யுனிவர்சிட்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஜீவன். தொடர்ந்து ‘காக்க காக்க’, ‘திருட்டுப்பயலே’, ‘நான் அவனில்லை‘, ‘தோட்டா’, ‘மச்சக்காரன்’ ஆகிய படங்களில் நடித்தார். ஆரம்பம் முதலே தமிழ் சினிமாவில் இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவருக்கு நெகட்டிவ் கதாபாத்திரத்திமாகவே அமைந்தது. ஆனால், நிஜத்தில் இவர் கெட்டவனில்லை.
சுமார் இரண்டரை வருடங்களாக திரையுலகி
ல் இருந்து விலகி இருந்த ஜீவன் தற்போது மீண்டும் அவதாரம் எடுத்திருக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,
‘கிருஷ்ணா லீலை’ முடிந்து ரிலீஸுக்கு தயாரானது. ஆனால், சில காரணங்களால் தடைபட்டு போனது. அது ரிலீஸாகி இருந்தால் இந்த இடைவெளி தெரியாமல் போயிருக்கும். நான் கலையுலகில் பயணித்த காலம் வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம், ஆனால் நடித்த படங்கள் குறைவுதான். அதனால் இந்த இடைவெளி எனக்கு பெரிதாக தெரியவில்லை.
இதையெல்லாம்விட சமீபத்தில்தான் என் அப்பா இறந்தார். எங்களுக்கு இருக்கிற வியாபாரங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பில் நான் இறங்கியதால் இந்த இடைவெளி.
வெளிநாட்டில் இருந்து சென்னை வந்ததும் செல்வா சார் ஒரு கதை சொன்னார். நான் எதிர்பார்த்த திருப்தி அதில் இருந்தது. அதோடு ஏற்கனவே நானும் அவரும் ‘நான் அவனில்லை’, ‘நான் அவனில்லை பார்ட்-2 ’, ‘தோட்டா’ என மூன்று படங்களில் இணைந்தோம், வெற்றி பெற்றோம். இது நான்காவது முறை. தயாரிப்பாளர் விஷ்வாஸ் சுந்தர். பெரிய தயாரிப்பாளர். அதனால் மீண்டும் வருவேன்.
கெட்டவன் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போகிறீர்களே? நீங்கள் நல்லவனா? கெட்டவனா? என்ற கேள்விக்கு, ‘திருட்டு பயலே’ படத்தில் நான் மட்டுமல்ல. சோனியா அகர்வால், மாளவிகா, அப்பாஸ், என எல்லோருக்குமே நெகடிவ் ரோல்தான். கிளைமாக்ஸில் நல்லவர்களாக மாறுவது மாதிரி முடித்திருந்தார் சுசிகணேசன்.
அதுமாதிரி ‘காக்க காக்க’ படத்தில், முழு வில்லன். ‘நான் அவனில்லை’ படத்தில் கெட்டவன் மாதிரியான நல்லவன் பாத்திரம். ‘தோட்டா’வில் கெட்டவன் ஒருவன் நல்ல போலீஸ்காரனை உருவாக்க முடியும் என்ற கதாபாத்திரம். சில கதாபாத்திரங்கள் என்னை முன்னிலைப்படுத்தியதால் அப்படியொரு வில்லன் தோற்றம் எனக்கு. அதுவும் என்னை லைம்லைடில் வைத்திருப்பதால் எனக்கு சந்தோசமே.
இனி வேட்டையை ஆரம்பித்து விட்டேன். நல்ல கதைகளையும், கதாபாத்திரங்களையும் வேட்டையாடி என்னை நான் நிலைநிறுத்தி கொள்வேன். முதலில் செல்வா இயக்கும் படத்திற்கு நல்ல டைட்டிலை வேட்டையாடி கொண்டிருக்கிறோம் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
இவ்வாறு ஜீவன் கூறினார்.
ஆண்ட்ரியா திரையுலகின் முக்கியமான நடிகை: இயக்குனர் ராம்
‘தங்கமீன்கள்’ படத்தை அடுத்து இயக்குனர் ராம், இயக்கும் அடுத்த படத்திற்கு ‘தரமணி’ என்று பெயரிட்டிருக்கின்றனர். இப்படத்தை ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கிறது. வசந்த் ரவி நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர்.
இப்படத்திற்காக ஒரு பாடல் காட்சியை இயக்குனர் ராம் படமாக்கிவிட்டார். வரும் 2014-ஆம் ஆண்டு ஜனவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை பெருபான்மையான ரசிகர்களின் ரசனைக்கேற்ப உருவாக்க இயக்குனரும், தயாரிப்
பாளரும் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதை பார்த்த திரைப்பட விநியோகஸ்தர்கள் தங்களின் விருப்பதை இயக்குனர் ராமிடம் தெரிவித்துள்ளனராம்.
இப்படம் குறித்து இயக்குனர் ராம் கூறும்போது, உலகமயமாக்கலின் நடைபெறும் ஒரு நகர்ப்புறக் காதல் கதையாக இப்படத்தை சித்தரித்துள்ளேன். மோதல், செக்ஸ், காமம் மற்றும் பொருளாதார பிரச்சினைகளின் இடையே ஆண், பெண் இருவருக்கும் இடையே ஏற்படும் நிரந்தரமான காதல் குறித்து இதில் சொல்லவிருக்கிறேன்.
இப்படத்தின் நாயகியாக நடித்து வரும் ஆண்ட்ரியாவின் திறமைகள் திரைத்துறையில் குறைவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த படம் ஆண்ட்ரியாவின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக அமையும். இவர் திரையுலகின் ஒரு முக்கியமான நடிகை எனவும் புகழ்ந்து கூறினார்.
‘வாகை சூடவா’ படத்திற்கு புதுச்சேரி மாநில விருது
மத்திய அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை மற்றும் திரைப்பட விழா இயக்குனரகம், நவதர்சன் திரைப்படக் கழகம், அலையன்ஸ் பிரான்சேஸ் ஆகியவை இணைந்து நடத்தும் ‘இந்தியத் திரைப்பட விழா-2013’ என்ற நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள முருகா திரையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் 2012-ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளும் வழங்கப்படவிருக்கிறது. இதில் புதுவை முதலமைச்சர் ந.ரங்கசாமி கலந்துகொண்டு, விழாவை தொடங்கி வைப்பதோடு, விருது வழங்கியும் சிறப்புரையாற்றவுள்ளார்.
இவ்விழாவில், 2012-ம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான ‘சங்கரதாஸ் சுவாமிகள்’ விருது விமல், இனியா நடிப்பில் 2012-ம் ஆண்டு வெளிவந்த ‘வாகை சூடவா’ படத்திற்கு கிடைத்துள்ளது. இதற்காக அப்படத்தின் இயக்குனர் எ.சற்குணத்திற்கு 1 லட்சம் ரூபாய் பரிசு பணமும், வெள்ளி மெமெண்டமும் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து இயக்குனர் சற்குணம் கூறும்போது, ‘வாகை சூடவா’ சிறந்த திரைப்படத்திற்காக புதுச்சேரி அரசின் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.
இந்த திரைப்பட தொடக்க விழாவில் ‘வாகை சூடவா’ படம் பொதுமக்களுக்கு இலவசமாக திரையிடப்படுகிறது. மேலும் நாளை முதல் 10.09.2013 வரை தினமும் ஒரு பிராந்திய மொழித் திரைப்படம் மாலை 6 மணிக்கு முருகா திரையரங்கத்தில் இலவசமாக திரையிடப்படுகிறது.
விஷாலின் மதகஜராஜா படத்துக்கு சிக்கல்: ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு
தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மோதலால் மதகஜ ராஜா படம் நாளை ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் விஷால் வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் நடித்துள்ளனர். சுந்தர். சி இயக்கியுள்ளார். இதனை ஜெமினி பிலிம் சர்க்யூட் பட நிறுவனம் தயாரித்தது. படப்பிடிப்பு கடந்த ஜனவரியிலேயே முடிந்து விட்டது.
பொங்கல், தமிழ்புத் தாண்டு என எதிர்பார்த்தும் படம் ரிலீசாகவில்லை. நிதி நெருக்கடியால் தள்ளிப் போவதாக கூறப்பட்டது. இறுதியாக நாளை (6–ந்தேதி) ரிலீசாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்கான விளம்பரங்களும் செய்யப்பட்டன. தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு நடந்தது.
இதற்கிடையே மதகஜ ராஜா படத்தை பெரும் தொகைக்கு விலைபேசி விஷாலே தனது விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பில் வெளியிட வாங்கி விட்டார். நாளை வரும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. தயாரிப்பு நிறுவனமான ஜெமினிக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தங்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் ரிலீஸ் செய்யக் கூடாது என்று விநியோகஸ்தர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாக்கியை செட்டில் செய்யாமல் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்று கூறுகிறார்களாம். விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பு தரப்பினருக்கும் இரு தினங்களாக பேச்சு வார்த்தை நடந்தும் தீர்வு ஏற்படவில்லை. இன்றும் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடக்கிறது.
குஷ்பு தனது டுவிட்டரில் மதகஜராஜா படம் ஒரு நாள் தாமதமாக நாளை மறுநாள் (7–ந்தேதி) ரிலீசாகும் என குறிப்பிட்டு உள்ளார். விஷாலுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக் கொண்டு திரும்பியுள்ளார்.
சத்யராஜை கஷ்டப்பட்டு கலாய்த்தேன்: சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இந்த வாரம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முதன்முதலாக பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார். இப்படத்தில் இவருடன் சூரி, சத்யராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, அழகான கிராமத்துல நடக்கிற காமெடியான கதை இது. நான் போஸ் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தோட தலைவராக நடிக்கிறேன். இந்த சங்கத்தின் செயலாளராக சூரி நடித்திருக்கிறார்.
அந்த ஊரில் எந்த விசேஷம் நடந்தாலும் நாங்கதான் முன்னால நிப்போம். பேனர், கொடின்னு ஏரியா முழுக்க எங்க ராஜ்யம்தான் கொடிகட்டி பறக்கும். இது பிடிக்காமல், எங்களுக்கு எதிராக முறுக்கிட்டு நிற்கிறார் சிவனாண்டி கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்யராஜ். அதன்பிறகு எங்கள் இரண்டு அணிக்கும் நடக்கிற ஜாலியான மோதல்கள்தான் படத்தோட கதை.
சத்யராஜ் சாரை பார்த்ததும் முதலில் கொஞ்சம் பயந்தேன். ஆனால், அவரோ ரொம்பவும் சகஜமாக பழகினார். ஒரு சீன்ல அவரை கலாய்க்கலாம்னு ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா’ என்று அவர் ஸ்டைல்ல சொன்னேன். அவர் ரொம்பவும் ரசிச்சார்.
ரொம்பவும் தெனாவட்டாக, கெத்தாக திரியுற என்னோட கதாபாத்திரமும், எனக்கு எதிராக இருக்கிற சத்யராஜ் சார் கதாபாத்திரமும் ரொம்பவும் பேசப்படும். இந்த படம் யாரையும் வருத்தப்பட வைக்காது. இடைவெளியே இல்லாம சிரிக்க வைக்கும் என்றார்
Wednesday, September 4, 2013
ஒரே படத்தில் பிரபலமான நஸ்ரியா நசீம்
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்தளித்து வந்தவர் நஸ்ரியா நசீம். ‘நேரம்’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் இவர் ஒரே இரவில் நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்துவிட்டார். இப்போது, மலையாளத்திலும், தமிழிலும் குறிப்பிடத்தக்க அளவு படங்களை அதுவும் முன்னணி நடிகர்களுடன் இவர் கைவசம் வைத்துள்ளார்.
நேரம் திரைப்படம் அவரது வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களைக் குறித்து கேட்டபோது, அதிகப் படங்களில் வாய்ப்புக் கிடைத்திருப்பதைத் தவிர தனக்குப் பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்று நஸ்ரியா தெரிவித்தார். குழந்தை நட்சத்திரமாக இருந்த தன்னை கதாநாயகியாக மக்கள் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள், இதனால் தனக்குப் பொறுப்புகள் கூடியுள்ளதாக அவர் கருதுவதாகக் கூறினார்.
தனக்குக் கிடைத்த பாராட்டுகள் மகிழ்ச்சியை அளித்ததாகக் குறிப்பிட்ட நஸ்ரியா இந்தப் பாராட்டுகள் மக்கள் தன்னை கதாநாயகியாக ஏற்றுக்கொண்டதைக் காட்டுகின்றது. ஒரே படத்தின் மூலம் இவ்வளவு உயரத்திற்கு வந்திருப்பது தன்னால் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவேண்டும் என்ற அச்சத்தையும் தருகின்றது. ஆயினும் தன்னால் இயன்றவரை சிறப்பாக செய்வேன் என்றும் நஸ்ரியா தெரிவித்தார்.
மும்பையில் தனது மெழுகுச் சிலையை திறந்துவைத்த பிரபுதேவா
தமிழ் திரையுலகில் நடன உதவியாளராக ஆரம்பித்து பின்னர் நடிகராகி, தற்போது இயக்குனராக வலம் வருபவர் பிரபுதேவா. நடன வகைகளில் பல புதிய முறைகளையும் இவர் உருவாக்கியுள்ளார். திரைப்படத்தில் தான் அமைத்த நடனத்திற்காக இவர் இரண்டு முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துவரும் இவர் இந்தியில் இப்போது முன்னணி இயக்குனராக உள்ளார். இந்தியில் இவர் இயக்கி வெற்றி பெற்ற ‘ரவுடி ரத்தோர்’ இவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. ஷாஹித் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் ‘ராம்போ ராஜ்குமார்’ படப்பிடிப்பில் இவர் தற்போது தீவிரமாகப் பணியாற்றி வருகின்றார்.
அஜய் தேவ்கான் மற்றும் சல்மான்கான் ஆகியோர் நடிக்கும் பெயரிடப்படாத இரண்டு திரைப்படங்களையும் இவர் இயக்க உள்ளார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனப்படும் பிரபுதேவாவின் மும்பை ரசிகர்கள் லோனாவாலா வேக்ஸ் மியூசியத்தில் இவரது மெழுகுச்சிலையை உருவாக்கியுள்ளார்கள். இந்தச் சிலையை பிரபுதேவா நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
ரசிகர்களின் இந்தச் செயலால் மனம் நெகிழ்ந்த அவர், இதுகுறித்து இணையதளத்தில் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். இந்தச் சிலை உருவாவதற்குக் காரணமான சுனில் குழுவினரையும் அவர் பாராட்டியுள்ளார்.
நடிகை ரஞ்சிதா ‘வீடியோ’ ஒளிபரப்பு வழக்கு: 7 நாட்களுக்கு தொடர்ந்து வருத்தம் தெரிவிக்க கோர்ட்டு உத்தரவு
நடிகை ரஞ்சிதா சாமியார் நித்யானந்தா பற்றி ஒரு தனியார் தொலைக் காட்சியில் ‘‘நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்’’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் இடம் பெற்றது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்தார்.
அதில் தன்னையும், நித்தியானந்தாவையும் இணைத்து ஒளிபரப்பான வீடியோ காட்சிகள், போலியாக சித்தரிக்கப்பட்டவை என்று கூ
றியிருந்தார். இது தனிப்பட்ட முறையில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
வீடியோவை ஒளிபரப்பிய டி.வி.செய்தி சேனல் அல்ல, பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் டி.வி.என்பதால் இது பற்றி டி.வி. ஒளிபரப்பு புகார்கள் குழு விசாரணை நடத்த கர்நாடக ஐகோர்ட்டு உத்தர விட்டது. நீதிபதி ஏ.பி.ஷா (ஓய்வு) தலைமையிலான இந்தக்குழு விசாரணை நடத்தியது. நேற்று முன்தினம் அந்த வழக்கில் அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அந்த வீடியோ காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் மனுதாரரின் மதிப்பையும், மரியாதையும் கெடுப்பதாக உள்ளது. சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த கருத்தும் கேட்காமல் ஒளிபரப்பு செய்யப்பட்டு உள்ளது. இது ஒளிபரப்பு உரிமையை மீறும் செயலாகும்.
தனிப்பட்ட நபரின் உரிமையை அப்பட்டமாக மீறிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட தனியார் டி.வி. வருகிற 9–ந் தேதி முதல் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை எழுத்துக்கள் மூலம் ஆங்கிலத்திலும், தமிழிலும் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து 7 நாட்களுக்கு வருத்தத்தை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நலிந்தோருக்கு நிதி திரட்ட மாண்டலின் ராஜேஷ், பாடகர் கார்த்திக் இசை
நலிந்தோருக்கு நிதி திரட்டுவதற்காக ‘ஸ்ருஷ்டி’ என்ற பெயரில் சென்னை மியூசிக் அகடமியில் நாளை மறுநாள் (6-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு இசை விழா நடக்கிறது.
இதில் மாண்டலின் ராஜேஷ் இசை நிகழ்ச்சியும் சினிமா பின்னணி பாடகர் கார்த்திக்கின் பாடலும் இடம் பெறுகிறது. பிரபல இசை குழுவினரான லூயிஸ் பாங்க்ஸ் ஜியே பாங்க்ஸ் மற்றும் ஷெல்டல் டிசில்வா, பைசல் குரேஷி இசை பாடல்கள் இடம் பெறுகின்றன.
இது குறித்து மாண்டலின் ராஜேஷ், கார்த்திக் கூறும்போது,
இதயகோளாறு உள்ள சிறு குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்காகவும், நலிவுற்றோருக்கு புற்று நோய் விழிப்புணர்வு பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காகவும் பிறந்த குழந்தைகளுக்கு பார்வை இருளாமல் தடுக்கவும் நிதி திரட்டுவதற்காக சென்னை டவர்ஸ் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இந்த இசை விழாவை நடத்துகிறோம்.
பெண்கள், குழந்தைகளின் மருத்துவ, கல்வி நலன் களுக்கும் இந்த நிதி பயன் படுத்தப்படும் என்றனர். சென்னை பவர்ஸ் ரோட்டரி சங்க தலைவர் கிருஷ்ண சந்தர், பில்ரோத் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் ராஜேஷ் உடன் இருந்தனர்.
‘ஷிவானி’ திகல் படத்தில் பத்திரிகையாளராக வரும் காவ்யா
பெங்களூரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்துள்ளவர் காவ்யா ஷெட்டி. தமிழில் ‘ஷிவானி’ படம் மூலம் அறிமுகமாக உள்ளார். இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
அவர் சினிமாவுக்கு வந்தது குறித்து கூறியதாவது:-
நான் கல்லூரியில் படிக்குபோதே மாடலிங் செய்திருக்கிறேன். நான் ஒரு என்ஜீனியரிங் மாணவி. எனக்கு படிப்பை விட மாடலிங் மீதுதான் அதிக ஆர்வம். முதல் முறையாக கன்னட படத்தில் அறிமுகமானேன். அப்படம் நன்றாக ஓடியது. தற்போது நவ்தீப் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன்.
தமிழில் ‘ஷிவானி’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் முதல் படம் இதுதான். இப்படத்தில் ரிலீசை எதிர்பார்த்துக்கொண்டிக்கிறேன். இந்தப்படம் திகல் நிறைந்ததாகும். பேய் என்றாலே எனக்குப் பயம். ஆனாலும், படப்பிடிப்பின்போது எனது பயத்தை வெளிக்காட்டாமல் நடித்தேன்.
மித்ரா என்ற கேரக்டரில் பத்திரிகையாளராக வருகிறேன். நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறேன். ஒரு நடிகையாக வளம் வருவதற்கு இதுவே நல்ல வழியாகும் என்றார்.
திரிஷாவுக்கு விரைவில் திருமணம்
திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் மாப்பிள்ளை தெலுங்கு நடிகர் ராணா என்றும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திரிஷாவின் சம காலத்து நடிகைகளான சிம்ரன், ஜோதிகா, லைலா, ரம்பா, மீனா போன்றோர் திருமணம் செய்து கொ
ண்டு குடும்பம், குழந்தை என செட்டில் ஆகி விட்டனர்.
ஆனால் திரிஷாவுக்கு முப்பது வயது கடந்த பிறகும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. திரிஷா தாய் உமா கிருஷ்ணன் விரைவில் திருமணம் நடத்தி விட அவசரப்படுகிறார். திரிஷாவுக்கு இப்போது படங்களும் இல்லை. முன்னணி ஹீரோக்கள் புதுவரவுகளான இளம் நாயகிகளுடன் ஜோடி சேரவே விரும்புகிறார்கள்.
எனவே திரிஷாவும் திருமணத்துக்கு சம்மதித்துள்ளாராம். தெலுங்கு நடிகர் ராணாவை திருமணம் செய்து கொள்ள அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்று அதற்கு பதில் அளித்தார்கள். ஆனால் அது உண்மையல்ல என்றும் காதலிப்பது உறுதி என்றும் தற்போது தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடந்த ஜெயம்ரவி உறவினர் வீட்டு திருமணத்துக்கு திரிஷாவும், ராணாவும் கைகோர்த்தபடி வந்து பரபரப்பு ஏற்படுத்தினார்கள். திருமண கூட்டத்தினர் அவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். ஐதராபாத்தில் திரிஷா தந்தை இறந்தபோது திரிஷா கூடவே ராணா இருந்தார்.
பட விழாவுகளுக்கும் ஜோடியாக போனார்கள். ராணா வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் திருமணத்துக்கு தாமதம் ஆனதாகவும் இப்போது அவர்கள் சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே ஒரு சில மாதங்களில் திரிஷா–ராணா திருமணம் நடக்கும் என நெருக்கமானவர்கள் கூறினர்.
கலைஞர்களின் படைப்புகளை பயன்படுத்தி நன்றி என டைட்டில் போடுவது நொண்டி, மொடம் போன்றது: இளையராஜா
தமிழ் சினிமாவில் இசைஞானியான திகழ்பவர் இளையராஜா. இவர் 950-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஒரு ரேடியோ எப்.எம். உடன் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தனது பாணியில் விடையளித்தார்.
இளையராஜாவுக்குள்ளும் ஒரு கதையாசிரியர் இருக்கிறாராமே? என்று கேட்டதற்கு, கதையாசிரியர் இருக்கிறார். ஆனால் இசை மட்டும்தான் எனக்கு தெரியும் என்றார்.
மேலும், சமீபத்தில் பாடகர்கள் தாங்கள் பாடும் பாடலுக்கு ‘ராயல்டி’ கேட்கிறார்கள். இது தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் நடத்தினார்களே? என்று கேட்டதற்கு,
அவர்கள் பாடியதற்கு சம்பளம் வாங்குகிறார்கள். வேறு எதற்கு ராயல்டி. ராயல்டி கேட்பது அவர்களை உரிமை. அதனால் கேட்கிறார்கள்.
உங்களைப்போன்ற மிகச்சிறந்த படைப்பாளர்களின் படைப்புகளை தற்போது சிலர் பயன்படுத்தி விட்டு நன்றி என்று போட்டுக்கொள்கிறார்களே? இதைப்பற்றி தங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு,
இப்படி அடுத்தவர்களின் படைப்புகளை பயன்படுத்திக் கொண்டு ‘நன்றி’ என்று போடுவது, நொண்டி, மொடம், கையாளாகாத தனம் என்றார்.
இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் டெக்னாலஜியை பயன்படுத்துவது பற்றி தாங்கள் கூறுவதென்ன என்று கேட்டதற்கு,
டெக்னாலஜியை பயன்படுத்துவன் மூலம் இளம் இசையமைப்பாளர்கள் சோம்பேறியாகிறார்கள் என்றார்.
மருதநாயகம் ‘கிளாடியேட்டர்’ படத்தைப்போல் இருக்கும்
உலகநாயகன் கமல்ஹாசனின் லட்சியப் படமான ‘மருதநாயகம்’ 1997-ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெறவில்லை. இதுபற்றி கமல்ஹாசன் ஏற்கனவே அளித்த பேட்டியில் என்றாவது ஒருநாள் மருதநாயகம் படத்தை வெளியிட்டே தீர்வேன் என்றார்.
படம் அறிவிப்பு வந்து 16 வருடங்கள் முடிந்த பிறகும், பெரிய பட்ஜெட் ஆன மருதநாயகம் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு இன்றும் குறையவில்லை.
இப்படம் குறித்து தற்பொது கமலின் விஎப்எக்ஸ் சூப்பர்வைசர் மதுசூதனன் கூறியதாவது:-
‘மருதநாயகம்’ ஒரு உலகத்தரம் வாய்ந்த ஸ்கிரிப்ட். என்ன நடந்தாலும் இப்படத்தில் வேலை செய்ய விரும்புகிறேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இப்படத்தின் ஸ்கிரிப்ட் பழசாகவில்லை. இது ஒரு இந்திய ‘கிளாடியேட்டர்’ படமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
“நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட” – ஸ்ருதிஹாசனை கடுபேத்திய இயக்குனர்! -
தென்னிந்திய
முக சாயலில் ஒரு ஹீரோயின் வேண்டும் என்பதால் வலிய வந்த ஹிந்திப்பட
வாய்ப்பு ஒன்று ஸ்ருதியை விட்டு கை நழுவிப் போயிருக்கிறது.
தமிழில் முருகதாஸ் டைரக்ஷனில் விஜயகாந்த் நடித்து ரிலீஸாகி மெகா ஹிட்டான படம் தான் ‘ரமணா’. ஹிந்தியில் ரீமேக்காகும் இந்த்யப்படத்தை பிரபல ஹிந்திப்பட டைரக்டர் சஞ்சய் பன்சாலி தான் டைரக்ட் செய்கிறார்.
ஹீரோவாக அக்ஷய்குமார் நடிக்கும் இந்தப்படத்திற்கு ‘கப்பார்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். வரும் டிசம்பரில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
இப்படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடிக்க முதலில் ஸ்ருதிஹாசனுக்கும், இலியானாவுக்கு கடும் போட்டி கிளம்பியது. ஆனால், இலியானைவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இறுதியில் ஸ்ருதிதான் கமிட்டானார். ஆனால் தற்போது அவரையும் பேக்கப் செய்து விட்டு அமலாபாலை கமிட் செய்திருக்கிறதாம் ‘கப்பார்’ டீம்.
“நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட…” என்று வடிவேலுவை சிங்கமுத்து ஒரு படத்தில் சொல்லுவது போல படத்தின் ஹீரோயின் தென்னிந்திய முக சாயலில் இருக்க வேண்டும் என்பதால் டைரக்டர் சஞ்சய் பன்சாலி இந்தப்படத்திலிருந்து ஸ்ருதியை அதிரடியாக நீக்கி விட்டாராம்.
தற்போது இந்தப்படத்துக்காக போட்டோஷூட் மும்பையில் நடந்து வருவதால் அடிக்கடி அமலாபால் மும்பைக்கு சென்று வருகிறார். - See more at: http://www.tamilspace.com/2013/09/sanjay-leela-bansali-rejects-sruthi-haasan.html#sthash.cTtvoR16.dpuf தென்னிந்திய முக சாயலில் ஒரு ஹீரோயின் வேண்டும் என்பதால் வலிய வந்த ஹிந்திப்பட வாய்ப்பு ஒன்று ஸ்ருதியை விட்டு கை நழுவிப் போயிருக்கிறது.

தற்போது இந்தப்படத்துக்காக போட்டோஷூட் மும்பையில் நடந்து வருவதால் அடிக்கடி அமலாபால் மும்பைக்கு சென்று வருகிறார்
Tuesday, September 3, 2013
25 ஆண்டுகளில் கிரேட்டஸ்ட் இந்தியர் பட்டியலில் ரஜினிக்கு முதலிடம்!
மும்பை: கடந்த 25 ஆண்டுகளில் வாழும் இந்தியர்களில் மிகச் சிறந்த 25 பேர் பட்டியிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளிவிழாவையொட்டி, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச் சிறந்த 25 மனிதர்கள் யார் என்ற நாடு தழுவிய ஒரு கருத்துக் கணிப்பை இணைய தளம் மூலம் நடத்துகிறது. பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம்.
இந்தப் பட்டியலில் ரஜினி, சச்சின் டெண்டுல்கர், அப்துல் கலாம், ஏ ஆர் ரஹ்மான், டோனி, கபில்தேவ், ரத்தன் டாடா என அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுமை கொண்ட விவிஐபிக்கள் இடம்பெற்றுள்ளன.
ஆன்லைனில் லைவ்வாக உள்ள கருத்துக் கணிப்பு இது என்பதால், ஒவ்வொரு நாளும் வாக்குகளின் அடிப்படையில் யாருக்கு என்ன இடம் என்ற விவரம் அந்த நிறுவன இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளது.
மூன்று தினங்களுக்கு முன் 5-ம் இடத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அவருக்கு 7.03 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அவருக்கு அடுத்து சச்சின் டெண்டுகர் வருகிறார் 6.99 சதவீத வாக்குகளுடன். அப்துல் கலாமுக்கு மூன்றாவது இடமும், ஏ ஆர் ரஹ்மானுக்கு நான்காவது இடமும் கிடைத்துள்ளன. அமிதாப் பச்சனுக்கு 10வது இடமும், ஷாரூக்கானுக்கு 13 வது இடமும் கிடைத்துள்ளன.

தீபாவளிக்கு அஜீத்தின் ஆரம்பம் ரிலீஸ்: தயாரிப்பாளர் அறிவிப்பு
சென்னை: அஜீத்தின் ஆரம்பம் படம் சோலோவாக இல்லையாம் மாறாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என்று படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஆரம்பம்' அஜீத் ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி விருந்தாக இருக்கும். படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் படத்தை மெருகேற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மிகப்பெரிய அளவில் பேசப்படும். ‘ஆரம்பம்' படத்தின் இசை வெளியீடு குறித்து செய்தி இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆரம்பம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது என்றும், அதன் பிறகு சோலோவாக ரிலீஸ் ஆகும் என்றும் பேச்சு அடிபட்டது.
தீபாவளி அஜீத் குமாருக்கு ராசியான பண்டிகை என்று தான் கூற வேண்டும். முன்பு தீபாவளி அன்று ரிலீஸ் ஆன அவரது படங்கள் ஹிட்டாகின. இந்நிலையில் தான் ஆரம்பம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. தீபாவளி... தல தீபாவளி...

Subscribe to:
Posts (Atom)