Saturday, July 27, 2013

எனக்கு கவுண்டமணியை ரொம்ப பிடிக்கும்: தனுஷ்




எனக்கு கவுண்டமணியை ரொம்ப பிடிக்கும் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார். கவுண்டமணியின் நடிப்பு டி.வி. முகமோ, சினிமா முகமோ கிடையாது. அவர் நம்மில் ஒருவராக இருப்பார்.
அதுதான் அவரது வெற்றிக்கு காரணம். அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அவருக்கான நல்ல கதையை தயார் செய்துகொண்டு கண்டிப்பாக அவர் முன்னால் போய் நிற்பேன். அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனக்கு இரண்டு பேருடன் போட்டோ எடுக்க ஆசை. ஒருவர் இளையராஜா மற்றொருவர் கவுண்டமணி என்றார்.
மேலும், சிவகார்த்திகேயன் தான் காமெடியில் எனக்கு ஏற்ற ஜோடி. அவர் ஹீரோவானது சந்தோசம்தான் என்றாலும் வருத்தமும் இருக்கிறது. ஏனென்றால், அவர் காமெடியனாகவே இருந்திருந்தால் எனக்கு சரியான ஜோடியாக அவர் தான் இருந்திருப்பார் என்றார்.

தலைவாவுக்கு ‘யு‘ சான்று தர தணிக்கை குழு மறுப்பு


விஜய் நடித்து முடித்துள்ள படம் தலைவா. அமலாபால், ஹீரோயின். மும்பை தமிழர்களுக்காக போராடும் தலைவனின் கதை. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடி.
வருகிற 9ந் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டார்கள். போஸ்டர்களும் அடித்து குவித்து விட்டார்கள். டி.வி. எப்.எம். பத்திரிகை அனைத்திலும் விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்து விட்டார்கள். படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை வாங்கி இருக்கும் வேந்தர் மூவீஸ் விளம்பரத்துக்காக மட்டும் கோடிக்கணக்கில் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க தலைவா படத்திற்கு தணிக்கை குழு யு சான்று கொடுத்ததாக சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது. ஆனால் அது உண்மையில்லை. இயக்குனர் ஏ.எல்.விஜய் தலைமையிலான படக்குழுவினர் விஜய் படம்தானே தணிக்கை குழு தாராளமாக யு சான்றிதழ் தந்து விடும் என்று அபாரமாக நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நிலைமை தலைகீழானது.
படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது என்று சொல்லி ஏ கொடுக்க முடிவு செய்தனர். தயாரிப்பாளர், இயக்குனர் அனைவரும் வாதாடியதால் கடைசியில் தணிக்கை குழுவினர் யு/ஏ கொடுக்க முன்வந்தனர். ஆனால் படக்கு குழுவினர் யு தான் வேண்டும் என்று பிடிவாதமாக சொன்னார்கள். அதனை ஏற்க தணிக்கை குழு மறுத்துவிட்டது. சில காட்சிகளை நீக்கினால் யு தருவாதாக சொன்னார்கள். அந்தக் சீன்கள்தான் படத்தில் முக்கியமானது கோடிகள் செலவு செய்து எடுக்கப்பட்டது.
இதனால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறார்கள். அங்கும் யு/ஏ உறுதி செய்யப்பட்டால் மும்பையில் மறு தணிக்கை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். யு/ஏ சான்றிதழுடன் படம் வெளிவந்தால் வரிவிலக்கு கிடைக்காது.
இதனால் தயாரிப்பாளருக்கு வரவேண்டிய கோடிக் கணக்கான ரூபாய் அரசுக்கு வரியாகச் சென்று விடும். வரிவிலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த வருமானத்தையும் சேர்த்துதான் வேந்தர் மூவீஸ் பெரும் தொகை கொடுத்து படத்தை வாங்கி உள்ளது.
ஒரு வேளை வரிவிலக்கு கிடைக்காவிட்டால் கொடுத்த பணத்தின் ஒரு பகுதியை திருப்பித் தரவேண்டும் என்று வேந்தர் மூவீஸ் கோரலாம். அதனால்தான் யு வாங்கியே தீருவது என்ற தயாரிப்பு தரப்பு உறுதியாக இருக்கிறது. இதனால் படத்தின் வெளியீடு தள்ளிப்போகவும் வாய்ப்பிருக்கிறது.
சமீப காலமா தமிழக அரசு விஜய்க்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது என்றும், விமானநிலையம் அருகே நடைபெற இருந்த பிரமாண்ட ரசிகர் மன்ற விழாவுக்கு தடைவிதித்தது. இப்போது தலைவா படத்துக்கு தொல்லை தருகிறது என்றும் விஜய் தரப்பு கருதுகிறது. எது எப்படி இருந்தாலும் அறிவித்த தேதிக்குள் படத்தை வெளியிட்டு விடுஙங்கள் என்று விஜய் கூறியிருக்கிறாராம்.

கௌதம் மேனன் படத்தில் சூர்யாவிற்கு பதில் சிம்பு…?!


கௌதம் மேனன் படத்தில் சூர்யாவிற்கு பதிலாக சிம்பு நடிக்கயுள்ளதாக வதந்தி கிளம்பியுள்ளது. கௌதம் மேனன், சூர்யா ஜோடி என்றாலே தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும்.
அதே எதிர்பார்ப்புடன் தான் துருவ நட்சத்திரம் படமும் அறிவிக்கப்பட்டது. சூர்யா ஒரு படத்துக்கு கமிட் ஆனால், நேரத்தை சரியாக கடைபிடிப்பார். ஆனால், முதல் முறையாக துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க அவர் தயக்கம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகின.
இப்படத்திற்கான பூஜையில் சூர்யா கலந்து கொண்டார். இருப்பினும், லிங்குசாமியின் படத்தில் நடிக்க இருப்பதாகவும், கவுதம் மேனனை சூர்யா காத்திருக்க சொன்னதாகவும் கூறப்பட்டது. இதனால், துருவ நட்சத்திரம் படத்தை கவுதம் மேனன் டிராப் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருவ நட்சத்திரம் படத்திற்கு பதிலாக கவுதம் மேனன், விண்ணைதாண்டி வருவாயா ஹீரோ சிம்புவை வைத்து புதிய கதை ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆதலால் காதல் செய்வீர் – ஆகஸ்ட் 23ல் வெளியீடு!!





‘‘ஆதலால் காதல் செய்வீர்’’ படம் அடுத்த மாதம் (ஆகஸ்ட் 23ம்தேதி) வெளியிடப்படவுள்ளது. சுசீந்திரன் கடைசியாக இயக்கிய படம் ‘‘ராஜபாட்டை’’. விக்ரம், தீக்ஷா சேத் ஆகியோரை வைத்து இயக்கிய இந்த அதிரடிப் படம் பெரிதாக ஓடவில்லை. அதற்கு பிறகு, மென்மையான காதல் பக்கம் திரும்பியுள்ள சுசீந்திரன், ‘‘ஆதலால் காதல் செய்வீர்’’ படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் ஹீரோவாக சந்தோஷ் நடிக்கிறார். இவர் லயோலா கல்லூரியின் 2ம் ஆண்டு மாணவராம். ‘வழக்கு எண் 18/9’ படத்தில் நடித்து பெயர் வாங்கிய மனீஷா யாதவ் தான் படத்தின் ஹீரோயின். இவர்கள் தவிர, லயோலா மற்றும் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி மாணவர்களும் கூட நடித்துள்ளனராம்.
நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் பூர்ணிமா பாக்கியராஜ் இப்படத்தின் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா, பாடல்களை வாலியும், யுகபாரதியும் எழுதியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத காதல் கதையாகவும், மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாகவும் இப்படம் இருக்கும் என்று சுசீந்திரன் கூறியுள்ளார். படத்தை ஆகஸ்ட் 23ல் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

Friday, July 26, 2013

மரியானில் எனது கதாபாத்திரம் மறக்கமுடியாதது: தனுஷ்





மரியான் படத்தில் எனது கதாபாத்திரம் மறக்கமுடியாதது என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, எனது சினிமா பயணத்தில் மரியான் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த படத்திற்காக நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன். ஆப்ரிக்காவில் எடுக்கப்பட்ட காட்சிகள் மிகவும் சவாலாக அமைந்தது.
இந்தி படங்களில் தொடர்ந்து நடிக்கவுள்ளேன். எனக்கு அனைத்தையும் தந்தது தமிழ் சினிமாதான். எனது முழு கவனமும் அதன் மீதுதான் இருக்கும், என்றார்.

கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறேன்; உறுதி செய்தார் சரத்குமார்


இயக்குனர் கவுதம் மேனன், அடுத்து, சூர்யா நடிப்பில் துருவ நட்சத்திரம் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் பூஜையில் சூர்யா கலந்து கொண்டார். இப்போது சூர்யா லிங்குசாமியின் படத்தில் நடிக்க இருப்பதாகவும், கவுதம் மேனனை வெயிட் பண்ணச் சொன்னதாகவும் கூறப்பட்டது. இதனால் கோபம் அடைந்த கவுதம் துருவ நட்சத்திரத்தை சரத்குமாரை வைத்து டைரக்ட் பண்ணப்போவதாக கூறப்பட்டது.
இதுகுறித்து சரத்குமாரிடம் கேட்டபோது “கவுதம்மேனன் எனக்கு ஒரு ஆக்ஷன் கதை சொல்லியிருக்கிறார். கதை மிகவும் பிடித்திருந்தது. நடிக்க ஒப்புக் கொண்டேன். விரைவில் நடிக்க இருக்கிறேன். அது துருவ நட்சத்திரம் கதையா அல்லது வேறு கதையா என்று எனக்குத் தெரியாது” என்றார்.

ஐஸ்வர்யா அர்ஜூனை பார்க்க தவிக்கும் இயக்குனர்கள்





பட்டத்து யானை படத்தின் மூலம் அறிமுகமாக உள்ள அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவை பார்க்க இயக்குனர்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். பட்டத்து யானை படம் வெளிவரும் முன்பே ஐஸ்வர்யாவின் இமேஜ் கூடியுள்ளது. இதனால், அவரை புக் செய்ய இயக்குனர்கள் அலைமோதுகின்றனர்.


ஆனால், போன வேகத்திலேயே அனைவரும் திரும்பி வந்து விடுகின்றனர். ஏனென்றால், அவரை பார்க்க எப்போது சென்றாலும், மேடம் இப்போதைக்கு கதை கேட்கிற மூடில் இல்லை என்ற பதில் மட்டும் தான் வருகிறதாம்.

எனக்கு போட்டி ஷாருக் தான்: மிர்ச்சி சிவா



கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் சொன்னா புரியாது படத்தில் நடித்துவரும் சிவா, தனக்கு போட்டி ஷாருக் தான் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, சொன்னா புரியாது படத்தில், ஆங்கில படங்களுக்கு தமிழ் டப்பிங் குரல் கொடுக்கும் வேடத்தில் நானும், வில்லன்களுக்கு குரல் கொடுக்கும் வேடத்தில் பிளேடு சங்கரும் நடித்துள்ளோம்.
இந்த படத்தில் நான் இந்தி பாடல் ஒன்றை எழுதி, பாடியும் உள்ளேன். என்னிடம், திரை உலகில் உங்களுக்கு யார் போட்டி என்று கேட்டால், நான் ஷாருக் என்றுதான் சொல்வேன். ஏனென்றால், சென்னை எக்ஸ்பிரஸ் என்ற இந்தி படத்தில் தமிழ் வசனம் பேசி, பாட்டு பாடுகிறார் ஷாருக். நான் தமிழ் படத்தில் இந்தி பாடல் பாடி, வசனம் பேசியிருக்கிறேன். அதனால், எனக்கு ஷாருக்தான் போட்டி, என்று கூறியுள்ளார்


என் தோற்றத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்: மனிஷா கொய்ராலா






சினிமா ரசிகர்களின் உள்ளங்களை கிறங்கடித்த நடிகைகளில் ஒருவர் மனிஷா கொய்ராலா. பம்பாய், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்களில் அவரது அழகை பார்த்து மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்று கூட சொல்லலாம்.

ஆனால், இப்போதோ அவர் ஆளே உருமாறி இருக்கிறார். அவரது திருமண வாழ்க்கை கசந்ததால், விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்தார். இதனால், மனரீதியாக பாதிக்கப்பட்ட அவருக்கு, உடல் ரீதியாகவும் சோதனை வந்தது. புற்று நோயால் தாக்கப்பட்ட அவர், மரணத்தின் விளிம்பிற்கே சென்று மீண்டு வந்தார்.
அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்ற அவர், தற்போது அவரது தோற்றத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தனது தலைமுடியை இழந்து, கண்ணாடி அணிந்தது போலுள்ள அந்த படத்தில், அவர் மிகவும் வயதான பெண் போல தோற்றமளிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, என் தோற்றத்தை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். வெளி உலகுக்கும் இதை தெரிவிக்கிறேன். கறுப்பு வெள்ளையாக கடந்த காலம் இருந்தது.

என்னுடைய நிகழ்காலம் நன்றாக உள்ளது. கடவுள் என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பார் என்றார். இதன் மூலம், மனிஷா கொய்ராலா மற்ற நடிகைகளுக்கு மட்டும் உதாரணமாக இல்லாமல், பெண் இனத்திற்கே தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அளித்துள்ளார்.

அசினுக்கு கோலிவுட்டில் தடை?





கஜினி ரீ-மேக் மூலம் இந்திக்கு சென்ற அசின், போன வேகத்திலேயே பிரபல நடிகையாகி விட்டார். அதன் பின், தமிழ்ப் பட வாய்ப்புகள் சென்ற போது, நடிக்க மறுத்தவர், இப்போது பாலிவுட்டில் அசினின் மார்க்கெட் சரிந்து விட்டதால், மீண்டும், கோலிவுட்டில் கொடி நாட்ட ஆசைப்படுகிறார்.

“துருவ நட்சத்திரம் படத்தில், அசினுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஏற்கனவே, ஒரு இந்தி படப்பிடிப்புக்காக அசின் இலங்கைக்கு சென்ற போது, சர்ச்சை ஏற்பட்டது. “அசின் இலங்கைக்கு செல்லக் கூடாது என, எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கோபமடைந்த அசின், “நான் ஒன்றும், தமிழ் நடிகை இல்லை என்று கூறி விட்டுச் சென்றார்.
அதனால், இப்போது அதை முன் வைத்து, “அசினுக்கு தமிழில் வாய்ப்பு தரக்கூடாது என்று, சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல், மும்பைக்கே திரும்பி விட்டார் அசின்.

Thursday, July 25, 2013

Tamil Cinema 80's Actress


Tamil Cinema 80's Shooting Spot


Tamil Cinema 80's Actors...


மஞ்சுளாவை இழந்து வாடும் குடும்பத்துக்கு நன்றி..- டங் ஸ்லிப்பாகி சமாளித்த 'கேப்டன்'!!


சென்னை: மஞ்சுளாவின் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும்போது வார்த்தை தடுமாறி நன்றி என்று கூறிவிட்டார்.
 இதனால் சுற்றியிருந்தவர்கள் சங்கடத்தில் நெளிய நேர்ந்தது. 

விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிகளுக்கு மிக வேண்டிய நெருக்கமானவர்களில் ஒருவர் விஜயகாந்த். குடும்பத்தில் ஒருவரைப் போலத்தான் பழகினார்.

இரங்கல் தெரிவிக்க வந்தார்... 
மஞ்சுளா மறைந்த செய்தி அறிந்ததுமே மனைவியுடன் விஜயகுமாரின் ஆலப்பாக்கம் வீட்டுக்கு விரைந்து வந்தார் விஜயகாந்த். விஜயகுமாரை கட்டிப்பிடித்து அழுதார். அவருக்கு ஆறுதல் கூறினார்.
 பிரேமலதா ஆறுதல் 
 உடன் வந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் விஜயகுமார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் விஜயகாந்தை தொலைக்காட்சி செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு ஏகப்பட்ட மைக்குகளை முகத்துக்கு நேரே நீட்டினர். 
பந்தா இல்லாத மஞ்சுளா 
அவர் பேசுகையில், "நடிகை மஞ்சுளா எம்ஜிஆர், சிவாஜி போன்ற முன்னணி கலைஞர்களோடு பணியாற்றினாலும் கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் பழகினார். அவர் குடும்பத்தில் ஒருவராக இருந்தோம். எப்போது அவரது வீட்டுக்கு வந்தாலும் மோர், நல்ல உணவு தந்து உபசரிப்பார். குறிப்பாக அவர் தன் மூன்று பெண் பிள்ளைகளையும் பையனுக்கு நிகராக வளர்த்தார்...
" நன்றி... .. 
இப்படி சொல்லிக் கொண்டே வந்த விஜயகாந்த், "என்ன சொல்றதுன்னே தெரியல... மஞ்சுளாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த நன்றி.. என்றவர் சட்டென சுதாரித்து "நன்றிங்கறேன்.. என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இதெல்லாம்... எங்க அண்ணன் சொல்லிக் கொடுத்த நடிப்பு: தனுஷ்




சென்னை: சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற நடிகரான தனுஷ், தற்போது தமிழிலும் ஹிந்தியிலும் செம பிஸியோ பிஸி. 
 
வடக்கே, ஹிந்தியில் ராஞ்ச்னா வெற்றிகரமாக ஓடி, வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்க, தெற்கே தமிழில் மரியான் ரிலீசாகி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில், மரியான் பட இயக்குநர் பரத் பாலாவும், தனுஷும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்களுடன் உரையாற்றினர். ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக அதேசமயம் மனம் திறந்து பதிலுரைத்தார் தனுஷ்.
 
 நிகழ்ச்சியில் ஒரு ரசிகர், ‘உங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தது யார் ? எனக் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தனுஷ்...
என் அண்ணன் செல்வராகவன் தான் நடிப்பு பற்றி எனக்குச் சொல்லிக் கொடுத்தார். கேமரா முன்பு பயமில்லாமல் எப்படி நடிக்க வேண்டும் என்பது அவர் சொல்லிக் கொடுத்ததே...

 
உணர்ச்சிகளை, பாவங்களை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என அவரிடம் தான் கற்றுக் கொண்டேன்.

 
அதேசமயம், அடுத்தடுத்து எனக்கு அமைந்த வாய்ப்புகள் என் அதிர்ஷ்டம். இயக்குநர் பாலு மகேந்திரா, வெற்றிமாறன் மற்றும் பரத்பாலா போன்றோர் மூலம் நடிப்பின் பன் முகங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.
இயக்குநர்கள் சூரஜ், சுப்ரமணிய சிவா மற்றும் பூபதி பாண்டியன் போன்றோரால் தான் எனக்குள் இருந்த நகைச்சுவை நடிகன் உலகிற்கு தெரிய வந்தான்.
சரியான் நேரத்தில் சரியான இயக்குநர்களின் படங்களில் நடிக்க வைத்த கடவுளுக்கு என் நன்றிகள். எல்லாம் கடவுளின் ஆசிர்வாதம் ‘ என வெளிப்படையாக பேசினார் தனுஷ்

நானிக்கு இன்ப அதிர்ச்சி தந்த கமல்!




 
நான் ஈ நாயகன் நானிக்கு, தன் ஆதர்ச நடிகர் கமல்ஹாஸனைச் சந்திக்க வேண்டும் என்று சிறுவனாக இருக்கும் போதிலிருந்தே ஆசை. 
 
ஆனால் சந்தர்ப்பம் அமையவில்லை. நானி ஒரு நடிகராக உருவான பிறகு, தனது ரோல்மாடலாக நினைத்தது கமல்ஹாஸனைத்தான். அப்போதும் கூட கமலைச் சந்திக்கும் வாய்ப்பு நானிக்கு அமையவில்லை. 
 
 சமீபத்தில் ஹைதராபாதில் யாஷ்ராஜ் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நானிக்கு, பக்கத்து ப்ளோரில் கமல்ஹாஸன் தன் விஸ்வரூபம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் தகவல் தெரிந்தது. இதுதான் கமலைச் சந்திக்க சரியான சமயம் என்று முடிவு செய்து, அனுமதி கேட்டார் நானி. உடனே வரச் சொன்ன கமல்,
 
 நானியை அன்புடன் வரவேற்று உபசரித்தார். அதுமட்டுள்ள, தன்னுடன் நடித்துக்கொண்டிருந்த நாயகிகள் பூஜா குமார், ஆன்ட்ரியா இருவருக்கும் நானியை அறிமுகப்படுத்தியதோடு, சிறிது நேரம் நானி நடிக்கும் படங்கள் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தாராம்.
 
 அவரது இந்த அன்பும் உபசரிப்பும் பேச்சும் தனக்கு வானில் பறப்பது போன்ற உணர்வைத் தந்ததாக நானி தெரிவித்தார்.

கோச்சடையான் கதை முழு விவரம்


ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் இந்த வருடம் இறுதியில் ரிலீசாகிறது. பின்னணி இசை சேர்ப்பு, எடிட்டிங், மிக்சிங் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் கிராபிக்ஸ் போன்ற பணிகள் சென்னை, மும்பை ஸ்டூடியோக்களில் முழுவீச்சில் நடக்கிறது.
‘அவதார்’, ‘டின்டின்’ போன்ற ஹாலிவுட் அனிமேஷன் படங்கள் போன்று முதல் இந்திய அனிமேஷன் படமாக ‘கோச்சடையான்’ வருகிறது. ரூ.120 கோடி செலவில் எடுத்துள்ளனர். இதில் ரஜினி தந்தை மகன் என இரு வேடங்களில் வருகிறார். தந்தை ஜோடியாக ஷோபனாவும், மகன் ஜோடியாக தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். சரத்குமார், ஆதி, ருக்மணி, ஜாக்கி ஷெராப், நாசர் ஆகியோரும் உள்ளனர்.
இந்த படத்துக்கான கதையை கே.எஸ்.ரவிக்குமார் எழுதியுள்ளார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். ராஜீவ்மேனன் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவும் செய்துள்ளனர்.
சரித்திரகால பாணியில் தயாராகியுள்ளதாக கதை பற்றிய விவரம் கசிந்துள்ளது. தந்தை ரஜினி ஒரு நாட்டை ஆட்சி செய்கிறார். மக்களை மகிழ்ச்சியாக வாழவைப்பதே அவர் குறிக்கோள். இதற்காக நிறைய திட்டங்களை நிறைவேற்றுகிறார். செல்வத்தை மக்களுக்கு வாரி வாரி கொடுக்கிறார். பொற்கால ஆட்சி நடத்துவதாக மக்கள் கொண்டாடுகிறார்கள்.
அப்போது மண்ணன் ரஜினிக்கு எதிராக சதித் திட்டங்கள் அரங்கேறுகின்றன. நெருக்கமான நண்பனாக இருக்கும் ஒருவன் தளபதிகளை கையில் போட்டுக் கொண்டு நாட்டை அபகரிக்கிறான். ரஜினியை நாட்டை விட்டே துரத்துகிறான். அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தைதான் இன்னொரு ரஜினி.
வீர தீர சாகச சண்டைகளில் மகன் ரஜினி தந்தையை மிஞ்சுகிறார். காட்டுக்குள் சிறு படையை உருவாக்குகிறார். அங்கிருந்து நாட்டுக்குள் ஊடுருவி சண்டையிடுவதும் நாட்டை மீட்பதுமே கதை. சுறா மீனுடன் ரஜினி மோதும் காட்சி ஹாலிவுட்டுக்கு இணையாக எடுக்கப்பட்டு உள்ளதாம்.
இப்படத்தை ரஜினி சமீபத்தில் பார்த்து பாராட்டியதாக டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:–
கோச்சடையான் படம் பிரமாதமாக வந்துள்ளது. சர்வதேச தரத்தில் இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. ரஜினியும் நானும் படத்தை பார்த்தோம். படம் முடிந்ததும் சிறப்பாக இருப்பதாக ரஜினி பாராட்டினார். சவுந்தர்யா அனிமேஷன் படிப்பு படித்துள்ளார். கிராபிக்ஸ் வேலைகளும் தெரியும் எனவேதான் இவரிடம் இப்படத்தை இயக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. திறமையாக படத்தை எடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

அஜீத்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவான படத்தின் பெயர் ‘ஆரம்பம்’



ஸ்ரீ சத்ய சாய் மூவீஸ் சார்பில் ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கும் அஜீத் படத்திற்கு கடந்த ஒரு வருடமாக பெயர் சூட்டப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் இந்த படத்துக்கு ‘ஆரம்பம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அஜீத் சுய விளம்பரம் செய்யும் வகையில் வரும் தலைப்பையோ, சுய புகழ் பாடும் தலைப்பையோ வைக்ககூடாது என்று தயாரிப்பாளரிடமும் இயக்குனரிடமும் கோரிக்கை வைக்க, கதையின் கருவுக்கு ஏற்றவாறு இப்போது ஆரம்பம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஆர்யா, டாப்ஸி ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படம் முடிந்து தற்போது தணிக்கை குழுவுக்கு அனுப்பும் நிலையில் உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
ஏற்கெனவே விஷ்ணுவர்தன்-அஜீத் கூட்டணியில் வெளிவந்த ‘பில்லா’ பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Wednesday, July 24, 2013

அஜீத் கூட நடிச்சதுதான் கடைசிப்படம். இனி, நடிக்கற ஐடியாவே இல்ல..: லைலா




 
 
சென்னை: ரசிகர்களால் ‘குல்பி' என செல்லமாக அழைக்கப்பட்ட நடிகை லைலா, ‘இனி மீண்டும் நடிக்கும் ஐடியா இல்லை' எனக் கூறி, திருமணத்திற்குப் பிறகு அவர் மீண்டும் நடிக்கப்போகிறார் என்று பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 
 
ஒரு காலத்தில் கதாநாயகியாக வலம் வந்த நடிகைகள், திருமணத்திற்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வருவது சகஜமான ஒன்று தான். ஆனால், என்ன கதாநாயகியாக நடித்த நாயகர்களுக்கே அம்மா, அக்கா, அண்ணி என வேஷம் கட்டுவார்கள். 
 
அந்த வரிசையில் கல்யாணமாகி மும்பையில் செட்டிலாகிவிட்ட நடிகை லைலா மீண்டும் நடிக்க வருகிறார் என சமீபத்தில் ஒரு செய்தி உலா வந்தது. அது குறித்து கருத்து தெரிவித்துள்ள லைலா கூறியிருப்பதாவது...
நான் கடைசியாக நடித்தது அஜீத் படம் தான். திருப்பதியில் கௌரவத் தோற்றத்தில் அஜீத்துடன் நடித்திருந்தேன்.

 
தற்போது நான் மீண்டும் நடிக்கப் போவதாகவும், படம் தயாரிக்கப் போவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், எனக்கு அத்தகைய எண்ணம் சிறிதும் இல்லை

மும்பையில் குடும்பத்தோடு செட்டில் ஆகி விட்டேன். குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது.

எனவே, மீண்டும் படங்களில் நடிக்கும் ஆர்வம் எனக்கு துளியும் இல்லை' என லைலா தெரிவித்துள்ளார்.

ராஞ்ஜனா ரூ 100 கோடி வசூல்... முதல் படத்திலேயே தனுஷ் சாதனை!

 
 
மும்பை: தனுஷ்- சோனம் கபூர் நடிப்பில் இந்தியில் வெளியான ராஞ்ஜனா ரூ 100 கோடியை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. 
 
பாலிவுட்டில் எந்த புதிய நடிகருக்கும் கிடைக்காத கவுரவமாக இது பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி தனுஷின் சமீபத்திய வெளியீடான மரியானுக்குக் கிடைத்த மரண அடிக்கு ஒத்தடமாக அமைந்துள்ளது.
 
தனுஷ் நடித்த முதல் இந்திப் படம் இந்த ராஞ்ஜனா. ஆனந்த் எல் ராய் இயக்கியிருந்தார். சோனம் கபூர் நாயகியாக நடித்தார். ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த ஓராண்டாக தயாரிப்பிலிருந்த ராஞ்சனா கடந்த மாதம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே

படத்தை வட இந்திய மீடியாக்கள் கொண்டாடின என்றால் மிகையல்ல. குறிப்பாக தனுஷ் நடிப்பை பாராட்டின. இந்த ஆண்டும் அவருக்குத்தான் தேசிய விருது என்றெல்லாம் எழுதின. அதற்கு தான் தகுதியானவர்தான் என தனுஷும் படத்தில் நிரூபித்திருந்தார்.

 
தமிழில் இந்தப் படம் அம்பிகாபதி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் இந்தப் படத்துக்கும் சிறப்பான ஓபனிங் கிடைத்தது தமிழகத்தில். முதல் மூன்று நாட்களில் ரூ 2 கோடி வரை இந்த டப்பிங் படம் வசூலித்தது.

ராஞ்ஜனா படம் உலகம் முழுவதும் வெளியானது. அமெரிக்காவில் ஓரளவு திரையரங்குகள் பிடித்திருந்தனர். படத்தின் வெற்றி கூடுதல் அரங்குகளில் படத்தை வெளியிட வைத்தது. இந்தியாவில் உபி, டெல்லி, பீகார் பகுதிகளில் படம் சூப்பர் ஹிட். ஒரு படத்தின் வசூலை நிர்ணயிக்கும் பெரிய ஏரியாக்கள் இவை.

படத்தின் இந்த பிரமாண்ட வெற்றியைக் கொண்டாடும் விதமாக இன்று மும்பையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்கிறார்கள் நடிகர் தனுஷ். அவரைப் பொறுத்தவரை, கடின உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் கிடைத்த பெரிய வெற்றி இந்த ரூ 100 கோடி!

நல்லவன்… வல்லவன்… வேற மாதி‌ரியானவன்





எங்கேயும் எப்போதும் என்ற மென்மையான படத்தை தந்த சரவணனின் அடுத்தப் படம் இவன் வேற மாதி‌ரி. நெகடிவாக தெ‌ரியும் பெயராக தெ‌ரிந்தாலும், பாஸிடிவான கேரக்டர் படத்தின் நாயகன் விக்ரம் பிரபுக்கு.

படத்தின் ஒன் லைன் ரொம்ப சிம்பிள். பல எம்.‌ஜி.ஆர், ர‌ஜினி படங்களில் வந்ததுதான். அநியாயங்களைப் பார்க்கும் போது, இப்படி செய்திருந்தால் நன்றாக இருக்கும் என கற்பனையாக அதனை யோசித்து கடந்துவிடுவோம். இவன் வேற மாதி‌ரி, கற்பனை செய்யாமல் களத்தில் இறங்குகிறவன்.
ஆக்சனுக்கு முக்கியத்துவம் தந்து சரவணன் படத்தை எடுத்திருக்கிறார். சுரபி படத்தின் நாயகி. தமிழ் என்பதையே ஆங்கிலத்தில் எழுதிப் படிக்கும் அளவுக்கு தமிழ் ஞானம் கொண்டவர். ஒரு மாதம் டியூசன் எடுத்த பிறகுதான் கேமரா முன் நிற்க வைத்தார்களாம். பைனல் இயர் என்‌ஜினிய‌ரிங் ஸ்டூடண்டாக நடித்திருக்கிறார்.
இவர்கள் தவிர போலீஸ் அதிகா‌ரியாக கணேஷ் வெங்கட்ராம் நடித்துள்ளார். வில்லனாக அறிமுகமாகிறவர் வம்சி கிருஷ்ணா. இவர் கன்னட நடிகர். சாதாரண வில்லனாக இல்லாமல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும்விதத்தில் இருக்குமா‌ம் இவ‌ரின் வில்லன் கதாபாத்திரம்.
படத்தின் கதையை ஒரே வ‌ரியில் சொல்வதென்றால்… நல்லவன், வல்லவன், வேற மாதி‌ரியானவன்.

ஹன்சிகா படத்தில் சாயாசிங்






திருடா திருடி படத்தில் அறிமுகமான சாயாசிங்குக்கு அந்தப் படம்தான் முதலும் கடைசியும் போல் ஆனது. திருடா திருடிக்குப் பிறகு ச‌ரியான வாய்ப்பு அமையாமல் திருப்பாச்சியில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு ஆடினார். அதன் பிறகு சாயாசிங் மாயாசிங்கானார். ஆளை காணவேயில்லை.

நடுவில், சாயாசிங் படம் இயக்கப் போவதாக செய்திகள் வந்தன. அதுவும் கிணற்றில் போட்ட கல்லான நிலையில், மீண்டும் சாயாசிங்.
முன்னாள் கனவுக்கன்னி ஜெயப்ரதாவின் மகன் சித்தார்த் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தில் சாயாசிங்குக்கும் முக்கியமான வேடம் இருக்கிறது. அவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருப்பவர் ராஜசேகர். விஷாலை வைத்து சத்யம் படத்தை இயக்கியவர்.
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. முதல் படத்தில் ஆக்சனை முயன்று அடிபட்டவர், இரண்டாவது படத்தில் காதலை ப‌ம்ரீட்சித்திருக்கிறார். ஹன்சிகா, சாயாசிங் நடிக்கும் படம் ஒரு ஜாலியான லவ் ஜர்னியா.

கல்லூரியில் படித்த போது ரவுடித்தனம் செய்தேன்: சமந்தா


தெலுங்கில் பிசியாக இருக்கிறார் சமந்தா. தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. `நான் ஈ’ படத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான `பிலிம் பேர்’ விருதும் அவருக்கு கிடைத்துள்ளது. சினிமாவுக்கு வரும் முன் கல்லூரியில் படித்த போது நடந்த சம்பவங்களை மலரும் நினைவுகளாக சமந்தா வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
கல்லூரியில் படித்த போது நான் அடங்காத பெண். சுட்டித்தனமாக இருப்பேன். பேராசியர்களுக்கு நான் அமைதியான பெண் படிக்கிற பெண். ஆனால் என் தோழிகளுக்கு மட்டுமே எனது உண்மையான சுயரூபம் தெரியும். பேராசிரியர்கள் முன்பு நல்ல பெண் மாதிரி இருப்பேன். அவர்கள் போனதும் வகுப்பில் அட்டகாசம் செய்வேன். சகமாணவிகளை கிண்டல், கேலி என கலாய்ப்பேன். ரவுடித்தனங்கள் செய்வேன். பேராசிரியர்கள் வந்ததும் ஒன்றும் தெரியாதது போல் அப்பாவியாக இருப்பேன். இதனால் நான் செய்யும் தப்புகள் என் தோழிகள் தலையில் விழும்.
ஆசிரியைகளிடம் திட்டு வாங்குவார்கள். இதனால் வெளியே வந்ததும் என் மேல் கோபமாக இருப்பார்கள். நான் கெஞ்சி சமாதானம் செய்து விடுவேன். சினிமாவுக்கு அடிக்கடி போவேன். காலேஜுக்கு கட் அடித்துவிட்டு படத்துக்கு போய் இருக்கிறேன். கல்லூரி சுவர் ஏறி குதித்தும் படத்துக்கு போய் உள்ளேன். ஒரு தடவை சுவர் ஏறும் போது வாட்ச்மேன் பிடித்து பிரின்ஸ்பாலிடம் நிறுத்தி விட்டார்.
அவர் அமைதியான பெண்ணுன்னு நினைச்சேன். நீயா இப்படி என்று கண்டித்தார். நிறைய அறிவுரை சொன்னார். அன்று முதல் அடாவடித்தனங்களை மூட்டை கட்டி விட்டு அமைதியான பெண்ணாக மாற ஆரம்பித்தேன்.

இரட்டிப்பு சந்தோஷத்தில் விஜய் ஆண்டனி


தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி, ‘நான்’ படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்து வெற்றி பெற்றவர் விஜய் ஆண்டனி. இவர், தற்போது ‘சலீம்’, ‘திருடன்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இருபடங்களுக்கும் இவரே இசையமைத்து வருகிறார்.
பல ராப் பாடல்களையும், மெலோடிகளையும் தமிழ் சினிமாவுக்கு கொடுத்து ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்த விஜய் ஆண்டனி, தற்போது அழகிய பெண் குழந்தைக்கு தந்தை ஆகியிருக்கிறார். இன்று காலை இந்த குழந்தை பிறந்தது. இது அவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நாளில் இன்னொரு விசேஷமும் இருக்கிறது. அது என்னவென்றால், இன்றைக்குத்தான் விஜய் ஆண்டனிக்கும் பிறந்தநாள்.
இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

சினிமாவில் சிறந்த இயக்குனர் ஆவேன்: பார்த்திபன் மகள் கீர்த்தனா


மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பார்த்திபன் மகள் கீர்த்தனா சினிமா இயக்குனராகிறார். இதுகுறித்து ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:–
என் அப்பா பார்த்திபன் இயக்குனராகவும், அம்மா சீதா நாயகியாகவும் இருந்ததால் சிறு வயதிலேயே சூட்டிங் போய் சினிமா விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
5–வது வகுப்பு படிக்கும்போது மணிரத்னம் எங்கள் வீட்டுக்கு வந்து என்னை அவர் படத்தில் நடிக்க கேட்டார். அப்பாவும் சம்மதித்தார். இப்போது கதாநாயனாக உள்ள சித்தார்த் அப்போது மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்தார். அவர் என் வீட்டுக்கு வந்து எனக்கு நடிப்பு பயிற்சி அளித்தார். அதில் நடித்ததற்காக பாராட்டுகள் கிடைத்தன.
அதன் பிறகு எனக்கு நடிக்க விருப்பம் இல்லை. இசை, நடனங்கள் கற்றேன். மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றினேன். அடுத்து டைரக்டராக முடிவு செய்துள்ளேன். விரைவில் நல்ல கதையொன்றுடன் டைரக்டராக அறிமுகமாக உள்ளேன்.
இவ்வாறு கீர்த்தனா கூறினார்.

என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ர


பம்பாய், இந்தியன், முதல்வன் படங்களில் அழகாக வந்து கவர்ந்தவர் மனிஷாகொய்ரலா. பம்பாய் படத்தில் உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு பாட்டுக்கு அவர் ஓடி வரும் காட்சி ரசிகர்களை கிறங்கடிப்பதாக இருந்தது.
அப்படிப்பட்ட மனிஷா கொய்ரலா இன்று ஆளே உரு மாறிப் போய் உள்ளார். திருமணம் அவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை. விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகும் நிம்மதி பெறவில்லை. புற்று நோய் தாக்கியது. அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். மரணத்தின் விளிம்புவரை போய் மீண்டுள்ளார். பூரண குண மடைந்து விட்டார். முதல் தடவையாக இப்போதுள்ள தனது தோற்றத்தை படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அழகான தலை முடியை இழந்துள்ளார். கண்ணாடி அணிந்து இருக்கிறார். 42 வயதாகும் அவர் 62 வயது நிரம்பியவர் போல் காட்சி அளிக்கிறார்.
இந்த தோற்றத்துக்காக அவர் வருத்தம் அடைய வில்லை. தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். அதுவே படத்தை வெளியிட தூண்டியுள்ளது. இதன் மூலம் மற்ற நடிகைகளுக்கு உதாரணமாக திகழ்கிறார். இது குறித்து மனிஷா கொய்ரலா கூறும் போது இப்போதுள்ள என் தோற்றத்தை அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். வெளி உலகுக்கும் இதை தெரிவிக்கிறேன். கறுப்பு வெள்ளையாக கடந்த காலம் இருந்தது. நிகழ்காலம் நன்றாக உள்ளது. கடவுள் மகிழ்ச்சியாக வைப்பார் என்றார்.

மஞ்சுளாவுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி – இன்று இறுதிச் சடங்கு!


மறைந்த நடிகை மஞ்சுளாவுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 59 வயது மஞ்சுளா தனது ஆலப்பாக்கம் பங்களாவில் கட்டிலில் விழுந்து படுகாயமடைந்ததால், மருத்துவமனையில் மரணமடைந்தார்.
கலைமாமணி விருது பெற்ற மஞ்சுளா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.
அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகமே திரண்டு அஞ்சலி செலுத்தியது. தெலுங்கு மற்றும் கன்னட படவுலகினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மஞ்சுளாவின் மகள்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி மற்றும் அவர்களின் கணவர்கள், மஞ்சுளாவின் மகன் முறையாகும் நடிகர் அருண்குமார், அவரது சகோதரி கீதா, பேரக்குழந்தைகள் உள்ளிட்டோர் கண்ணீர்விட்டு கதறினர்.
இயக்குநரும் மஞ்சுளாவின் மருமகனுமான ஹரி அஞ்சலி செலுத்தினார். நேற்று மருத்துவமனைக்கே நேரில் போய் பார்த்து நலம் விசாரித்துள்ளார் லதா ரஜினி. இன்று ஐஸ்வர்யா தனுஷ் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகைகள் குஷ்பு, ராதிகா, இயக்குநர் பி வாசு, நடிகர்கள் செந்தில் மற்றும் நடிகைகள் பலரும் வந்து மஞ்சுளாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மஞ்சுளாவின் இறுதிச் சடங்கு இன்று காலை ஆலப்பாக்கத்தில் நடக்கிறது. வீட்டிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

Tuesday, July 23, 2013

சம்பாதித்த பணத்தை பதுக்கும் காமெடியர்கள்: மயில்சாமி பாய்ச்சல்






சம்பாதித்த பணத்தை காமெடி நடிகர்கள் பதுக்குவதாக மயில்சாமி குற்றம் சாட்டினார்.



நகைச்சுவை நடிகர் கருணாஸ் ரகளபுரம் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார்.

 இதன் பாடல் வெளியீட்டு விழா வடபழனியில் உள்ள ஸ்டூடியோவில் நடந்தது. தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கலைப்புலி தானு, டைரக்டர் நாராயணசாமி, நடிகர்கள் மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், நடிகை சஞ்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

விழாவில் மயில்சாமி பேசியதாவது:–


கருணாசையும், கஞ்சா கருப்பையும் நான் பாராட்டுகிறேன். சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்து படங்கள் தயாரிக்கிற இரண்டே இரண்டு காமெடியர்கள் இவர்கள் மட்டும்தான். இந்த காமெடி நடிகர்களால் திரையுலகில் உள்ள நூறு குடும்பங்கள் சந்தோஷமாக வாழ்கிறது. மற்றவர்கள் செலவழிக்காமல் பதுக்குகின்றனர்.


ஒரு குட்டிக்கதை சொல்றேன். ஒருத்தன் கோடி கோடியா சம்பாதித்து தானம் தர்மம் செய்யாமல் குழி தோண்டி பணத்தை புதைத்து வைத்தான். அப்பப்பப அந்த பணத்தை பார்த்துவிட்டு மூடி விடுவான். இதை கவனித்த ஒருவன் அந்த பணத்தை திருடிக் கொண்டு போய்விட்டான். பணத்தை காணாமல் அவன் வாயில் அடித்து அழுதான். அந்த வழியாக வந்த ஒருவர் அவனிடம் கேட்டார். ஏண்டா இந்த பணத்தை நீ யாருக்காவது கொடுப்பியா? இல்லை இல்லை கொடுக்க மாட்டேன்னான் அவன்.


தானதர்மம் பண்ணுவியா. இல்ல மாட்டவே மாட்டேன் என்றான் அவன். இதை எடுத்து உனக்கு தேவையானதை வாங்க செலவாவது செய்வியா? அதையும் செய்யமாட்டேன்னான். கடைசியா சொன்னார். செலவே செய்யாம இந்த பணத்தை வச்சிக்கிறதுக்கு இந்த பணம் காணாம போச்சுன்னு ஏன் நினைக்கிற இங்கதான் இருக்குன்னு நினைச்சுக்க வேண்டியது தானே என்றார். அப்படி பணத்தை வெட்டியா புதைச்சு வைக்காமல் சினிமாவுல முதலீடு செய்து குடும்பங்களை வாழ வைக்கும் கருணாசையும், கஞ்சா கருப்பையும் வாழ்த்துகிறேன்.

நீண்ட இடைவெளிக்கு பின் நடிக்கிறார் மீண்டும் கே.ஆர்.விஜயா


தமிழ் திரையுலகில் 1960–களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் கே.ஆர்.விஜயா. அதன் பிறகு குணசித்திர வேடங்களில் நடித்தார். கடைசியாக தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் நடித்தார். அதன் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘நிலாவில் மழை’ என்ற படத்தில் தற்போது நடிக்கிறார்.



முதலில் மறுத்த அவர் கதை கேட்ட பிறகு பிடித்து போய் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இந்த படத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்வதை லட்சியமாக கொண்ட டாக்டர் வேடத்தில் வருகிறார்.


குறைந்த வருவாய் கிடைத்தாலும் போதும் என்று டாக்டர் தொழில் செய்யும் கே.ஆர். விஜயாவுக்கு உயிருக்கு போராடும் வாலிபரை காப்பாற்ற வேண்டிய கட்டாய பொறுப்பு வந்து சேர்கிறது. அந்த இளைஞரை நோயில் இருந்து மீட்கும் போராட்டத்தில் வென்றாரா என்பது கிளைமாக்ஸ்.
எஸ்.பி.ஆர்.பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பாண்டு முக்கிய வேடத்தில் வருகிறார். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.பி.ஆர். இயக்குகிறார்.

நடிகர் சூர்யா பிறந்தநாள்: ரசிகர்கள் கொண்டாட்டம்






நடிகர் சூர்யா இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார். அவருடைய ரசிகர்கள் ரத்ததானம், சமூக சேவை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர்.



‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சூர்யா. நடிகர் சிவகுமாரின் மகன் என்ற அறிமுகத்துடன் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்துவைத்த சூர்யா, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘ப்ரெண்ட்ஸ்’ ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘நந்தா’ படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.


அதைத் தொடர்ந்து ‘பிதாமகன்’, ‘காக்க காக்க’, ‘கஜினி’, ‘வாரணம் ஆயிரம்’, ‘அயன்’, ‘சிங்கம்’ ஆகிய படங்களில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து திறமையான நடிகர் என்பதை நிரூபித்தார்.

இவர் தான் நடித்த 29 படங்களிலேயே தமிழில் முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார். தற்போது ‘சிங்கம் 2’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகை ஜோதிகாவை கடந்த 2006- ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தியா, தேவ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.


படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ‘அகரம் பவுண்டேசன்’ என்ற தொண்டு நிறுவனம் நடத்தி, அதன்மூலம் ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பயில வழிவகை செய்து வருகிறார்.

‘பிரியாணி’ பரிமாற ரெடி







‘மங்காத்தா’ வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படம் ‘பிரியாணி’. இப்படத்தில் நடிகர் கார்த்தி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடிக்கிறார். 

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இது அவருக்கு 100-வது படமாகும். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.




வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் வித்தியாசமாக தயாராகிவரும் ‘பிரியாணி’யை பரிமாறும் நேரம் தயாராகிவிட்டது. ஆம், பிரியாணி படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 6-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
‘பிரியாணி’ படத்தின் புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றது. ஆகையால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிமாக்கியுள்ளது.

Veteran actress Manjula Vijayakumar, died this afternoon in Ramachandra hospital Chennai



ஜில்லாவில் போலீசா வர்றாராம் விஜய்!


துப்பாக்கியில் ராணுவ வீரர், தலைவாவில் 'அரசியல் புள்ளி' என நடித்த விஜய், அடுத்த படமான ஜில்லாவில் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. 
 
 சமீபத்தில் சென்னை ஆவடியில் உள்ள காவலர் மைதானத்தில் விஜய்யும் மற்றவர்களும் பங்கேற்ற காட்சியைப் பார்த்த சிலர் வெளியிட்ட தகவலில் அடிப்படையில் இந்த செய்தி பரவி வருகிறது. 
 
ஜில்லா படத்தை முருகா படம் இயக்கிய நேசன் இயக்குகிறார். 
 
விஜய்க்கு மீண்டும் இந்தப் படத்தில் ஜோடியாகியுள்ளார் காஜல் அகர்வால். முக்கிய வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
 
 டி.இமான் இசையமைக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. படம் மதுரையை பின்னணியாக கொண்டு உருவாகிறது. இந்தப் படத்தில் விஜய் முஸ்லிம் இளைஞராக நடிக்கிறார் என முதலில் செய்தி வெளியாகி, பலவிதமான கமெண்ட்கள் பறக்க காரணமானது நினைவிருக்கலாம். 
 
ஏற்கெனவே போக்கிரி படத்தில் போலீசாக சில காட்சிகளில் தோன்றினார் விஜய் என்பது நினைவிருக்கலாம்.

புரூஸ் லீக்கு நினைவு தினம்... காஞ்சிபுரத்தில் போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்!


குங்ஃபூ தற்காப்புக் கலை வீரரும் உலகையே வியக்க வைத்த நடிகருமான புரூஸ் லீயின் 40 வது நினைவு தினத்தை போஸ்டர் ஒட்டி அனுசரித்துள்ளனர் காஞ்சிபுரம் வாசிகள். 
 
என்டர் தி ட்ரேகன், பிஸ்ட் ஆஃப் பியூரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும், அவற்றின் மூலமே உலகப் புகழ் பெற்றவர் புரூஸ் லீ. 40 ஆண்டுகளுக்கு முன் தனது 32 வது வயிதில் மர்மமான முறையில் இறந்தார். 
 
அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு பக்கமும், கொல்லப்பட்டு விட்டார் என்றும் சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன இன்னமும். அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் பல ஆயிரம் மக்கள் அவர் பிறந்த ஹாங்காங்கில் கூடி மரியாதை செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் அவருக்கு பிரமாண்ட வெண்கலச் சிலை நிறுவப்பட்டது ஹாங்காங்கில்.



 
பிறந்த ஊர் தவிர, உலகின் மற்ற நாடு நகரங்களிலும் புரூஸ் லீக்கு உள்ள ரசிகர்கள் இன்னும் அவரை நினைவில் வைத்துப் போற்றி வருகின்றனர். மற்ற நாடுகளைவிட, இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் புரூஸ்லீக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். 
 
சென்னை போன்ற நகரங்கள் மட்டுமல்ல, காஞ்சிபுரம், வேலூர் போன்ற ஊர்களில் கூட புரூஸ்லீக்கு ரசிகர்கள் உள்ளனர். நேற்று முன்தினம் ஜூலை 20-ம் தேதி அவரது நினைவு நாளை கொண்டாடியுள்ளனர்.






 
 
இந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் போஸ்டர்கள் அடித்து ஒட்டி புரூஸ் லீக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர் அவரது ரசிகர்கள். 
 
சென்னை, வேலூர் போன்ற நகரங்களில் தற்காப்புக் கலைப் பயிற்சி மையம் நடத்தும் பலரும் நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தினர்.

ரஜினிக்கு மரியாதை செய்ய 'லுங்கி டான்ஸ்' ஆடும் ஷாரூக்- தீபிகா!


'லுங்கி டான்ஸ் - தலைவருக்கு மரியாதை' ( Lungi Dance - Thalaivar Tribute) எனும் பெயரில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர் பாலிவுட் கலைஞர்கள். 
 
ஷாரூக்கான், தீபிகா படுகோன் இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். ஷாரூக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் பட வெளியீட்டை ஒட்டியே இந்தப் பாடல் உருவாக்கப்பட்டாலும், படத்துக்கும் பாட்டுக்கும் சம்பந்தமில்லை என அறிவித்துள்ளனர். 
 
ஹனி சிங் உருவாக்கியுள்ள இந்த லுங்கி டான்ஸ், டி சீரிஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.
 
 சில தினங்களுக்கு முன் டி சீரிஸ் நிறுவன தலைவர் பூஷன் குமார் இந்தப் பாடல் குறித்து ஷாரூக்கானிடம் கூறி, நடனமாடக் கேட்டபோது, "ரஜினியை யாருக்குத்தான் பிடிக்காது! அவரது தீவிர ரசிகர்களில் ஒருவன் என்ற முறையில் இந்தப் பாடலுக்கு நடனமாடுவது எனக்குப் பெருமை," என்றவர் 
 
தீபிகாவிடம் இதுகுறித்துப் பேசியபோது, மிக விருப்பத்துடன் ஒப்புக் கொண்டாராம் லுங்கி டான்ஸில் ஆட. "ரஜினி சார் மிகப் பெரிய நடிகர், சாதனையாளர். 
 
அவரைக் கவுரவிக்க இந்தப் பாடல் மூலம் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி," என்றார் ஷாரூக்கான். இந்தப் பாடலுக்கு சின்னி பிரகாஷ் நடனம் அமைத்துள்ளார்.
 
 தலைவருக்கு மரியாதை என்ற தலைப்புடன் விரைவில் இந்தப் பாடல் வெளியாகிறது.

என்னது… கோச்சடையான் கைவிடப்பட்டதா?- தயாரிப்பாளர் விளக்கம்





கடந்த சில தினங்களாக ரசிகர்கள் மத்தியில் உலாவரும் பரபரப்பு கேள்வி கோச்சடையான் படத்தை கைவிட்டுவிட்டார்களாமே என்பதுதான்.
ஆரம்பத்தில் இந்தக் கேள்வியை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் நாளாக ஆக, இந்த கேள்விகள் ஒரு செய்தியாகவே மாறும் அளவுக்கு பெரிதாகிவிட்டன.
சில இணையதளங்களும் அதேபோல செய்தியை வெளியிட்டு வருகின்றன. ஆனால் ரஜினி தரப்பிலோ, படத்தின் இயக்குநர் சௌந்தர்யா தரப்பிலோ எந்த விளக்கமும் இல்லை.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு நாம் விசாரித்தோம். இதுகுறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகர் கூறுகையில், “இதெல்லாம் மிகத் தவறான செய்திகள். இந்தப் படத்தின் ப்ரமோஷனை மனதில் வைத்து நாங்கள் திட்டமிட்ட ஓரிரு நிகழ்ச்சிகளை தவிர்க்க முடியாத காரணங்களால் மேற்கொள்ள முடியவில்லை.
ஆனால் எந்த குழப்பமும் இல்லாமல் மிக நம்பிக்கையுடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தின் பிரமாண்டம் பார்த்தவர்களை பிரமிக்க வைத்துள்ளது. ரஜினி சார் டப்பிங்கைக் கூட முடித்துவிட்டார்.
இன்னும் கொஞ்சம் வேலைகள் முடிந்த பிறகு இசை மற்றும் பாடல்களை வெளியிடவிருக்கிறோம். ஆனால் அது கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதால், பொறுமை காக்கிறோம். ரஜினி சார் ரசிகர்கள் புரிந்து கொண்டு ஒரு நல்ல படத்துக்காக காத்திருப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார்