Saturday, July 13, 2013

Mariyaan Movie Preview | Red Carpet | Dhanush, AR Rahman, Parvathi, Bharat Bala | Tamil Movie | Song


கிரிக்கெட்டை ரசிப்பதெல்லாம் தேசப்பற்றாகிவிட முடியாது!- கமல் ஹாஸன்




மும்பை: கிரிக்கெட்டை ரசிப்பதை, அல்லது இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற வேண்டும் என விரும்புவதை தேசப்பற்று என்று சொல்லக் கூடாது என்று நடிகர் கமல் ஹாஸன் கூறினார். 

மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் கமல் ஹாஸன்.

கேள்வி 1 


தேசப்பற்று படங்களில் நடிக்க முக்கியத்துவம் அளிக்கிறீர்களே? ஏன்? 

தேசப் பற்று என்ற வார்த்தையை சரியாக பயன்படுத்தாவிட்டால் ஆபத்தாகி விடும். கிரிக்கெட் மீதான ஈடுபாடு தேசப்பற்று ஆகிவிடாது. இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பது தேசப்பற்றாகிவிடுமா? நான் காந்தியின் ரசிக



கேள்வி 2 


விஸ்வரூபம் படப்பிடிப்பின் லொகேஷன்களுக்கு சிரமப்பட்டீர்களா? 


உண்மாதான். படப்பிடிப்பு லொக்கேஷன்களுக்காக நிறைய ஆராய்ச்சி செய்தோம். ஆப்கானிஸ்தானில் படப்பிடிப்பை நடத்த முயன்றோம். ஆனால் அதில் பல சங்கடங்கள் இருந்ததால் தனிப்பட்ட முறையில் என்னால் போக முடியவில்லை. ஆப்கானிஸ்தான் ஜலாலா பாத்தின் 4 ஆயிரம் புகைப்படங்களை பார்த்தேன் அதன் பிறகு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

கேள்வி 3 


விஸ்வரூபம் 2 படம் எப்படி இருக்கும்?

  விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது முற்பகுதியாகவோ விஸ்வரூபம் இரண்டாம் பாகம் எடுக்கப்படவில்லை. ஆனால் முந்தைய படத்தின் உணர்வு தெரியும்.

கேள்வி 4 நேரடி இந்திப் படம் பண்ணும் திட்டமிருக்கிறதா? 



சில கதைகள் இருக்கின்றன. தயாரிப்பாளர் தேடுகிறேன்.



கேள்வி 5 


உங்களுடன் நடிக்க ஆர்வமாக உள்ளதாக ஸ்ருதி கூறியிருந்தாரே?

 ஸ்ருதி ஹாசன் பிசியான நடிகை இப்போது. அது பெருமையாகத்தான் இருக்கிறது. நேரம் அமைந்தால் இணைந்து நடிப்போம்.

இலக்கணங்களை மீறிய ஹீரோ விக்ரம் - பிசி ஸ்ரீராம்



இலக்கணங்களை மீறிய ஹீரோ விக்ரம் என்று பாராட்டியுள்ளார் முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பிசி ஸ்ரீராம். 
 
விக்ரமின் ஆரம்ப நாட்களில் அவரை வைத்து மீரா என்ற படத்தை இயக்கியவர் பிசி ஸ்ரீராம். பாடல்கள், ஒளிப்பதிவுக்காக பெரிய அளவில் பேசப்பட்ட படம். இப்போது விக்ரம் நடிக்கும் ஐ படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார் பிசி ஸ்ரீராம். 
 
 விக்ரம் பற்றி பிசி ஸ்ரீராம் கூறுகையில், "நடிகனாக மட்டுமல்ல...மனிதனாகவும் விக்ரம் ரொம்ப ஜென்டில்மேன். ஆச்சர்யப்படக்கூடிய ஒரு உழைப்பாளி. 
 
ஒரு ஹீரோவுக்கு நீங்க என்னலாம் சினிமா இலக்கணம் வெச்சிருந்தாலும் அது இல்லாத ஹீரோ அவர். தன்னை நடிகனாக மட்டுமே முன்நிறுத்திக்கொள்கிற ஒருத்தர். 'நமக்கு இவ்வளவுதான் வரும்'னு பெரும்பாலும் பயப்படுவாங்க.ஆனா, விக்ரம் 'தனக்கு இதெல்லாம் வருமா'னு சோதனை பன்றதையே வேலையா செய்றவர். 
 
மீரா படத்தில் ஹீரோவாக நடிச்ச விக்ரம் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் 'குருதிப் புனல்' படத்துல டப்பிங்லாம் பேசினார். என்ன செஞ்சுட்டு இருந்தாலும், அதை சினிமால செய்யணும்கிறதுதான் அவரோட ஐடியா. என்னைப் பொருத்தவரை திறைமையோடு கூடிய முயற்சிங்கிற விஞ்ஞானம் தப்பே பண்ணாது. அதுக்கு சரியான உதாரணம் விக்ரம்தான்," என்றார்.

 
 

விஸ்வரூபம் 2 படத்தில் தண்ணீருக்கு அடியில் சண்டைக்காட்சி - கமல் தகவல்

 
 
 
 
விஸ்வரூபம் 2 திரைப்படத்தில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தண்ணீருக்கடியில் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியுள்ளதாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். 
 
 
கமலின் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடும் வேலைகளில் மும்முரமாகிவிட்டார் கமல்ஹாஸன். இதன் முதல் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு வெளியிட்டனர். ‘விஸ்வரூபம் 2' படத்தில் கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல்போஸ், சேகர் கபூர், நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 
 
கமல் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். படத்தை கமல்ஹாஸனின் ராஜ்கமல் நிறுவனத்துடன், ஆஸ்கர் ரவிச்சந்திரன் இணைந்து தயாரிக்கிறார். தாய்லாந்து, பாங்காக்கில் இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ‘விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்களை கமல் வெளியிட்டார்.
 
 இந்த டிரைலருக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. விஸ்வரூபம் படத்தின் டிரைலரும் இந்த விழாவில் தான் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், படத்தின் சிறப்பம்சம் குறித்து சமீபத்தில் கமல் கூறுகையில், "விஸ்வரூபம் படத்தை உருவாகும் போதே, இரண்டாம் பாகம் பற்றி சிந்தித்தேன். விஸ்வரூபம் 2 படத்திற்கான 90 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன.
 
 
 முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இருக்கிறோம். தண்ணீருக்கு அடியில் வைத்து எடுக்கப்பட்ட சண்டைகாட்சிகள் நிச்சயம் பெரிதாகப் பேசப்படும். மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறேன்," என்றார்.
 
 
 
 
இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க விஜய் சேதுபதி, சிவகார்த்திக்கேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 
 
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து மூன்று படங்களை தயாரிக்கிறது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிக்கும் படம் விரைவில் துவங்குகிறது. 
 
 
இதனையடுத்து வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கிறது திருப்பதி பிரதர்ஸ்.


ஒரு படத்தை தேசிய விருது பெற்ற சீனு ராமசாமி இயக்குகிறார். அதில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய்சேதுபதியை அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி.


பூபதி பாண்டியன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. காமெடி ஆக்ஷன் படங்களை இயக்கும் பூபதி பாண்டியன் தற்போது விஷால், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கும் பட்டத்துயானை படத்தை இயக்கி வருகிறார். இதனையடுத்து சிவகார்த்திக்கேயனை இயக்குவார்.

Friday, July 12, 2013

உன் சமையல் அறையில்… பிரகாஷ் ராஜுக்கு ஜோடி சினேகா?


சால்ட் அண்ட் பெப்பர் மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரகாஷ் ராஜ் ஜோடியாக நடிக்கிறார் சினேகா. 2011-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ரொமான்டிக் காமெடி மலையாளப் படம் ‘சால்ட் அண்ட் பெப்பர் (Salt N Pepper).
இரண்டு தலைமுறைகளுக்கு இடையே ஏற்படும் காதல் எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் சொல்லி இருந்தார்கள். இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஒரே நேரத்தில் 3 மொழிகளிலும் இந்தப் படத்தை ரீமேக் செய்யப் போகிறார் பிரகாஷ்ராஜ். தமிழில் ‘உன் சமையல் அறையில்’ என்றும், தெலுங்கில் ‘உலவச்சாறு பிரியாணி’ என்றும் பெயர் சூட்டி உள்ளனர். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சினேகா ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் ஹீரோ யார் என்பதை இதுவரை சொல்லாமல் வைத்திருந்தார் படத்தை இயக்கும் பிரகாஷ்ராஜ். இப்போது அவரே ஹீரோவாகவும் நடிக்க முடிவு செய்துள்ளாராம். தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்றிலுமே பிரபல முகம் என்பது ஒரு காரணம். இன்னொன்று, பெரிய நடிகர்கள் யாரும் கிடைக்காதது!

சிம்புவின் ஆன்மீகப் பயணத்தின் பின்னணியில் சந்தானத்தின் ‘அட்வைஸ்’



சென்னை: காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்திற்கும், லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுக்கும் இடையில் அப்படி ஒரு நட்பு கொடி கட்டிப் பறக்கிறது.
சந்தானத்தை திரை உலகத்திற்கு அறிமுகப் படுத்தியதே சிம்பு தான். அது முதற்கொண்டு இருவரும் இணைந்த கைகளாகவே இருக்கிறார்கள். கால்சீட் பிரச்சினைகளால் இருவரும் சில படங்களில் சேர்ந்து நடிக்க முடியாத சூழல் உருவான போதிலும் கேமராவுக்குப் பின்னால் அவர்களின் நட்புத் தொடரவே செய்கிறதி.
இந்நிலையில் சமீபத்தில் சிம்பு மேற்கொண்ட ஆன்மீக சுற்றுப் பயணத்திற்கு பின்னால் தான் தான் காரணகர்த்தா என தெரிவித்துள்ளார் சந்தானம்

அடுத்த சூப்பர் ஸ்டார் சூர்யாதாம்லே: சிங்கம் 2 யூனிட்


சென்னை: அடுத்த சூப்பர்ஸ்டார் சூர்யா தான் என்று சிங்கம் 2 செய்தியாளர் சந்திப்பில் கூறப்பட்டது விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி அவ்வப்போது எழுவதும், மறைவதும் கோலிவிட்டில் புதிதன்று. ரஜினிகாந்த் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் அவருக்கு பிறகு யாரும் அப்படி இல்லை என்று ஒரு கூட்டம் கூறி வருகிறது.
அப்படி எல்லாம் இல்லை அடுத்த சூப்பர் ஸ்டார் எங்கள் தலைவர் தான் என்று ஒரு கூட்டம் கூறுகிறது.

எனக்கு பிடித்த வேடம்: நயன்தாரா


வித்யாபாலன் நடித்து இந்தியில் வெற்றிகரமாக ஓடிய `கஹானி’ படம் தமிழ், தெலுங்கில் `அனாமிகா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் வித்யாபாலன் வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். வெளி நாட்டில் இருந்து இந்தியா வரும் கர்ப்பிணி பெண் தனது கணவனை தேடி அலைவதே கதை.
நயன்தாரா கர்ப்பிணியாக வருகிறார். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. பஜார் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் காணாமல் போன கணவனை நயன்தாரா தேடி அலைவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. கஹானி படத்தில் நல்ல வேடம் அமைந்துள்ளது என்றும் இதில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் நயன்தாரா கூறினார்.
முழுக்க முழுக்க பெண்ணை மையப்படுத்திய கதை. பெண் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்படுகிறது. இந்த வலுவான கேரக்டரில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது. ரசிகர்கள் இந்த படத்தையும் எனது கேரக்டரையும் நிச்சயம் பாராட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.

தளபதி ரீமேக்கில் அஜீத், விஜய் நடிச்சா எப்படி இருக்கும்?


சென்னை: ரஜினி, மம்மூட்டி நடித்த தளபதி படத்தை ரீமேக் செய்தால் அதில் எந்த நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா, பானுப்ரியா நடித்த சூப்பர் ஹிட் படம் தளபதி. அதில் ரஜினி, மம்மூட்டி நட்பு பற்றி நாங்கள் கூறி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
தமிழில் ரீமேக் படங்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அதனால் இயக்குனர்களும் ரீமேக் படங்களை இயக்க ஆர்வம் காட்டுகின்றனர். பாலிவுட்டில் கூறவே வேண்டாம் ரீமேக் படங்கள் வசூலில் சாதனை படைத்து வருகின்றன.
இந்நிலையில் அண்மையில் வெளியான ரஜினியின் தில்லு முல்லு படத்தின் ரீமேக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே ரஜினியின் மாப்பிள்ளை படத்தை ரீமேக் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைப் பார்த்தவர்கள் தனுஷை திட்டித்தீர்த்தது வேறு கதை.
இந்நிலையில் தளபதி படத்தை ரீமேக் செய்தால் அதில் ரஜினி, மம்மூட்டி கதாபாத்திரங்களில் அஜீத்-விஜய், விஜய்-சூர்யா, சூர்யா-கார்த்தி, சிம்பு-தனுஷ், அஜீத்-விக்ரம் இவர்களில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இல்லை இவர்கள் இல்லாமல் வேறு ஏதாவது புதுமுகங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
சும்மா சொல்லுங்க. யார் கண்டது இந்த படத்தையும் யாராவது ரீமேக் செய்வார்கள்.

இந்தியில் நடிக்கும் அரவிந்த சாமி


ரோஜா ஹீரோ அரவிந்த சாமி இந்திப் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீஜே நம்பியாரின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
90களில் இளம் கதாநாயகனாக அறிமுகமானவர் அரவிந்தசாமி. தளபதியில் மணிரத்னம் படத்தில் கலெக்டராக நடித்து பிரபலமானவர். பின்னர் ரோஜா படத்தில் அரவிந்த சாமியை கதாநாயகனாக்கினார்.
பள்ளி, கல்லூரி மாணவிகள் மத்தியிலும், இளம் பெண்கள் மத்தியிலும் கனவு நாயகனாக வலம் வந்த அரவிந்த சாமி சில படங்களில் மட்டுமே நடித்துவிட்டு பிஸினசை கவனிக்கப் போய்விட்டார்

பீட்சா, சூதுகவ்வும் தயா‌ரிப்பாள‌ரின் புதிய த்‌ரில்லர்




அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும் போன்ற வித்தியாசமான படங்களை தயா‌ரித்த திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் தேக்கடி என்ற புதுப்படத்தை தயா‌ரிக்கிறது.
திருக்குமரன் தயா‌ரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கி‌ரீனுடன் இணைந்து பீட்சா படத்தின் இரண்டாம் பாகமான வில்லாவை தயா‌ரித்து வருகிறது. அத்துடன் புதிய படம் ஒன்றையும் தொடங்கியுள்ளது. நாளைய இயக்குனர் சீசன் 2 வில் முதலிடம் பிடித்த ரமேஷ் இந்த புதிய படத்தை இயக்குகிறார்.
சூது கவ்வும் படத்தில் மூன்று நண்பர்களில் ஐடி துறையைச் சேர்ந்தவராக வரும் அசோக் செல்வன் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் ஜனனி அய்யர்.
தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் இசையமைக்கிறார். பீட்சாவைப் போலவே இதுவும் த்‌ரில்லர் வகையைச் சேர்ந்தது.

Wednesday, July 10, 2013

சொன்னால் பு‌ரியாத மாற்றங்கள் !


கோடம்பாக்கத்தில் தற்போது கிசுகிசுக்கப்படும் செய்தி அத்தனை ஆரோக்கியமானதல்ல. அது உண்மையாக இருப்பின் தமிழ் சினிமாவுக்கு இழப்புதான்.
வ‌ரிசையாக படங்களை தயா‌ரித்தும், படங்களை விநியோகித்தும் கோடம்பாக்கத்தில் எக்ஸ்ட்ரா சுறுசுறுப்புடன் இருக்கும் தயா‌ரிப்பு நிறுவனம் ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கி‌ரீன். சிவகுமா‌ரின் உறவினர். அதனாலேயே சிவகுமார் குடும்பத்தின் பொருளாதார பின்புலம் ஸ்டுடியோ கி‌‌ரீனுக்கு உண்டு என இன்றளவும் பேசப்படுகிறது.
சூதுகவ்வும் படத்தை விநியோகித்த ஸ்டுடியோ கி‌ரீன் சுசீந்திரனின் ஆதலால் காதல் செய்வீர், சொன்னால் பு‌ரியாது படங்களின் விநியோக உ‌ரிமையை வாங்கியிருந்தது. கடைசியாக கிடைத்த தகவல், சொன்னால் பு‌ரியாது படத்தின் விநியோக உ‌ரிமையை ராம.நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸுக்கு ஞானவேல்ராஜா கைமாற்றியிருக்கிறார். அதேபோல் ஆதலால் காதல் செய்வீர் படத்தின் விநியோக உ‌ரிமையையும் தருவதற்கான முயற்சி நடந்து வருகிறது.
படங்களை தயா‌ரிப்பது, விநியோகிப்பது என்ற இரு செயல்பாட்டையும் ஸ்டுடியோ கி‌ரீன் நிறுத்தப் போகிறது, அதன் முதல் படிதான் இது என்கிறார்கள்.
உண்மையா பாஸ்…?

குருவுக்காக படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் தீனா படத்தை இயக்கும் முன் எஸ்.ஜே.சூர்யாவின் அசிஸ்டெண்ட். வாலி படத்தின் போது அவர் அஜித்திடம் சொன்ன கதைதான் தீனா. தீனா படத்தின் முதல் சில நாட்களில் முருகதாஸுக்கு உதவும்வகையில் எஸ்.ஜே..சூர்யாவும் உடனிருந்தார்.
காலம் இருவரையும் தலைகீழாக புரட்டியது. முருகதாஸ் இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவர். எஸ்.ஜே. சூர்யாவின் இன்றைய நிலை… நாம் சொல்லாமலே உங்களுக்கு தெரியும்.
எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்து வரும் இசை படத்தின் கடைசி ஷெட்யூல்ட் விரைவில் தொடங்குகிறது. கொடைக்கானலில் நாற்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளரின் மீது பழம்பெரும் இசையமைப்பாளர் கொள்ளும் பகைதான் படத்தின் அடிநாதம். இளையராஜாவையும், ஏ.ஆர்.ரஹ்மானையும் மனதில் வைத்து இசையை இயக்குவதாக எஸ்.ஜே.சூர்யா மீது குற்றச்சாற்று ஒன்றும் உள்ளது.
நிற்க. முருகதாஸ் விஷயத்துக்கு வருவோம். சினிமா இசையமைப்பாளர் பற்றிய கதை என்பதால் படத்தில் சில நிஜ இயக்குனர்களை நடிக்க வைக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. விஷ்ணுவர்தன், அழகம்பெருமாள் என சிலர் ஏற்கனவே நடிக்க சம்மதித்திருக்கும் நிலையில் குருவுக்காக சிஷ்யர் முருகதாஸும் நடிக்க சம்மதித்திருக்கிறார்.
இசைக்கு எஸ்.ஜே. சூர்யாவே இசையமைக்கிறார். ஜோடியாக நடிப்பவர் சாவித்ரி என்ற புதுமுகம்.

‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படம் மூலம் மீண்டும் இயக்குனராகிறார் ஸ்ரீபிரியா

தமிழில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீபிரியா. தற்போது தமிழில் இரண்டு தொலைக்காட்சி தொடர்களை இயக்கு வருகிறார். முதல் முறையாக இவர் கணவர் ராஜ்குமார் தயாரிக்கும் படத்தை இவர் இயக்குகிறார்.
மலையாளத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ’22 பீமேல் கோட்டயம்’ என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குகிறார். இப்படத்திற்கு தமிழில் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ என்று பெயரிட்டுள்ளர்.
இதில் கதாநாயகியாக நித்யா மேனன், புதுமுக நாயகனாக கிரிஷ் இணைந்து நடிக்க மற்றும் கோட்டா சீனிவாசராவ், கோவை சரளா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தபடத்தின் படப்பிடிப்பு வரும் 15-ந்தேதி தொடங்க உள்ளது.
இப்படத்தைப் பற்றி ஸ்ரீபிரியா கூறும்போது, ”இந்தப் படம் மலையாளத்தில் பார்த்தபோது என்னை மிகவும் கவர்ந்தது. இது இன்றைய காலக்கட்டத்தில் தினமும் நாம் பத்திரிகையில் சந்திக்கும் செய்திகளாக உள்ளது. இப்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படும்.
அதனால் இது எல்லா மொழிகளிலும் வெளிவர வேண்டும் என்று விரும்புகிறேன். இதனால் முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் கணவர் தயாரிக்க நான் இந்த படத்தை இயக்குகிறேன்” என்றார்.

இசையமைப்பாளரான சிம்பு தம்பி குறளரசன்



நடிகர் சிம்புவின் தம்பி குறளரசன் சினிமா இசையமைப்பாளராகியுள்ளார். பாண்டிராஜ் இயக்கும் புது படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் என்ற பெயரில் சிம்புவே தயாரிக்கிறார். காதல் கதையாக தயாராகும் இப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக முன்னணி நடிகை நடிக்கிறார். இதர நடிகர், நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.
இந்த படத்தில்தான் குறளரசனுக்கு இசையமைப்பாளர் வாய்ப்பு கிட்டியுள்ளது. குறளரசன் டியூன்களை கேட்டு வியப்பாகி இப்படத்துக்கு இசையமைக்க வைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
சிம்பு தற்போது லண்டனில் வி.டி.வி. கணேஷ், மீரா ஜாஸ்மின் நடிக்கும் ’இங்க என்ன செல்லுது’ என்ற படத்தின் பாடல் பதிவில் பங்கேற்று உள்ளார். வருகிற 19–ந் தேதி அவர் சென்னை திரும்புகிறார். அதன் பிறகு இப்படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

தெரு நாய்கள் பாதுகாப்பில் தீவிரமாகும் திரிஷா


திரிஷாவுக்கு படங்கள் குறைந்துள்ளதால் பிராணிகள் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறார்.
ஏற்கனவே பிராணிகள், நலஅமைப்புகள் திரிஷாவை விளம்பர தூதராக வைத்து பணிகளை செய்து வருகின்றன. திரிஷாவும் தனியாக அமைப்பு வைத்துள்ளார். இதன் மூலம் தெருவில் திரியும் நாய்களை பிடித்து குளிப்பாட்டி வீட்டில் வளர்க்கிறார். பிறகு வசதியானவர்களுக்கு அவற்றை தத்து கொடுக்கிறார். தினமும் நிறைய பேர் அவரிடம் நாய்க் குட்டிகளை தத்தெடுத்து செல்கின்றனர்.
சென்னை முழுவதும் இந்த இயக்கத்தை விரிவுப்படுத்தி பிராணிகள் பாதுகாப்பில் தீவிர கவனம் தெலுத்த முடிவு செய்துள்ளார். அவருடன் சேர்ந்து பணியாற்ற நிறைய பேர் முன் வந்துள்ளார்கள். விரைவில் இதற்கான செயல் திட்டங்களை திரிஷா அறிவிக்க போகிறாராம்.

நயன்தாராவை பிரிந்தது கடவுள் எடுத்த முடிவு –பிரபுதேவா



நயன்தாராவும், பிரபு தேவாவும் காதலித்து திருமணம் வரை வந்த பிறகு பிரிந்து விட்டனர்.
முறிவுக்கான காரணம் பற்றி இதுவரை இருவரும் பேசவில்லை. முதல் தடவையாக பிரபுதேவா தற்போது பிரிவு பற்றி கருத்து தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ஐதராபாத்தில் பிரபுதேவா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:–
கேள்வி:– மனைவி ரம்லத்தை விவகாரத்து செய்து விட்டீர்கள். இப்போது அவருடனான உறவு எப்படி இருக்கிறது?
பதில்:– அதுபற்றி பேச விரும்பவில்லை. எனது குழந்தைகளுடன் நான் தொடர்பில் இருக்கிறேன்.
கேள்வி:– மகன் இறந்ததால்தான் ரம்லத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதா?
பதில்:– என் மகன் மரணம் அடைந்தது கோரமான இழப்பு. வேறு விஷயங்கள் பற்றி சொல்ல விருப்பம் இல்லை. மற்ற இரு மகன்களையும் அடிக்கடி சந்திக்கிறேன். சூட்டிங் இல்லாதபோது மும்பைக்கு அழைத்து வந்து என்னுடன் வைத்துக் கொள்கிறேன். வெளிநாடுகளுக்கும் அழைத்து போனேன்.
கேள்வி:– நயன்தாராவும் நீங்களும் காதலித்தீர்கள்– முதலில் காதலை சொன்னது யார்?
பதில்:– அதுபற்றி இப்போது பேசுவது தேவை இல்லாத விஷயம்.
கேள்வி:– நயன்தாராவுடனான காதல் முறிந்ததற்கு என்ன காரணம்?
பதில்:– அது கடவுள் எடுத்த முடிவு. நாம் நினைத்த காரியம் நடந்து விட்டதால் சந்தோஷப்படுவோம். இஷ்டப்பட்ட காரியம் நடக்காமல் போனால் கடவுள் முடிவு என்று அவரிடம் விட்டு விடுவோம். இது கடவுள் எடுத்த முடிவு. காரணம் கடவுளை நான் நம்புகிறேன். நடந்தவை எல்லாம் சரிதான். அதைபற்றி நினைப்பதில் அர்த்தம் இல்லை.
கேள்வி:– மீண்டும் திருமணம் செய்து கொள்வீர்களா?
பதில்:– என்னை சந்திப்பவர்களெல்லாம் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். என் மீதுள்ள அக்கறையில் கேட்பதாகவே உணர்கிறேன். இப்போது என் சிந்தனை தொழிலில்தான் உள்ளது. தினமும் மணிக்கணக்கில் வேலை பார்க்கிறேன்.
கேள்வி:– இப்போதைய மனநிலையில் காதல் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:– காதலை மதிக்கிறேன். திருமணம் மீது மரியாதை இருக்கிறது.
இவ்வாறு பிரபுதேவா கூறினார்.

‘இளையராஜாவிடம் கோபித்து இசையமைப்பாளரானேன்’ : பாக்யராஜ்


கார்த்திகா மகாதேவ் இசையமைத்த ‘விலகுது திரை’ என்ற திரை தமிழிசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் டைரக்டர் பாக்யராஜ் பங்கேற்று முதல் சி.டி.யை வெளியிட இசையப்பாளர் பரத்வாஜ் பெற்றுக் கொண்டார். விழாவில் பாக்யராஜ் பேசியதாவது:–
நான் அரசியலுக்கு வந்த மாதிரி இசையமைப்பாளரானதும் ஒரு விபத்துதான். ‘டார்லிங் டார்லிங்’ படத்துக்காக சங்கர் கணேஷிடம் படத்தின் சூழ்நிலையை விளக்கி பாடல் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நானே ஒரு டியூனை ஹம்பிங் பண்ணிக் காட்டினேன்.
கணேஷ் உடனே இதையே வைச்சுரலாம். நல்லாத்தான் இருக்கு என்று சொல்ல அதையே பொருத்தமான வரிகளை போட்டு படமாக்கினோம். அந்த பாடல் தான் ஓ நெஞ்சே.
இளையராஜாவிடம் கோபித்துக் கொண்டுதான் நான் இசையமைப்பாளரானேன். கோபம் என்றால் நேரடி கோபம் இல்லை பாடல் பற்றி அவர்கள் விவாதிக்கும்போது சங்கீத ஞானம் இல்லாததால் அதில் கலந்து கொள்ள முடியாமல் தவித்தேன். இதை தவிர்க்க முறைப்படி இசை கற்றேன்.
அதன் பிறகு நான் போடும் டியூன்கள் எல்லாம் நானேதான் போடுகிறேனா என பலருக்கு சந்தேகம் வந்தது. இளையராஜாவுக்கும் என் மேல் பயங்கர கோபம் வந்தது. நீயெல்லாம் ஆர்மேனிய பெட்டியை எப்படி தொடலாம் என்று சண்டைக்கே வந்து விட்டார். நானும் சண்டை போட்டேன். பிறகு என் மீது அவருக்கு கோபம் குறைந்தது
அமெரிக்காவில் இருந்து வந்த கார்த்திகா இசையமைப்பாளராக இருந்து தமிழில் இப்படி ஒரு ஆல்பம் வெளியிட்டது பாராட்டுக்குரியது.
இவ்வாறு பேசினார்.
டைரக்டர் பேரரசு, யூ.டி.வி. தனஞ்செயன், இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன், பாடல் ஆசிரியர் முருகன் மந்திரம் ஆகியோரும் பங்கேற்றனர்.

கமலின் விஸ்வரூப தோற்றம்


விஸ்வரூபம் 2 முதல் பாகத்தின் சீக்வெல், ப்ரீக்வெல் இரண்டுமாக இருக்கும் என கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். அதாவது முதல் பாகத்துக்கு பிந்தைய காட்சிகளுடன், அதற்கு முந்தைய காட்சிகளும் இடம்பெறும்.
அப்படியானால் கமலின் கெட்டப் எப்படி இருக்கும்?
விஸ்வரூபம் 2 வில் கமல் முஸ்லீமாக ஆப்கானிஸ்தானில் பயிற்சி கொடுக்கும் காலகட்டம் வருகிறது. அதனால் மீசையில்லாத தாடி கெட்டப்பில் படத்தில் வருகிறார். அது கொஞ்ச நேரம். மீதி நேரங்களில் மீசை தாடி இல்லாத மழுமழு கெட்டப்.
முகத்தில் பிளாஸ்தி ஒட்டுவதில் கமலுக்கு அப்படியென்ன விருப்பம் என தெரியவில்லை. தசாவதாரத்தில் நெற்றியில் சிலுவைக்குறி போல பிளாஸ்திரி போட்டிருந்தார், விஸ்வரூபம் முதல் பாகத்தில் கன்னத்திலும், தாடையிலும், அதே இடத்தில் விஸ்வரூபம் 2 க்காக மீண்டும் பிளாஸ்திரி ஒட்டியிருக்கிறார்.
நமக்கு தெரியாத ஏதாவது ஒரு தோற்றமும் படத்தில் இருக்கும். கமலாச்சே.

Tuesday, July 9, 2013

DSP at Singam 2 Grand Success Press Meet


Surya at Singam II Grand Success Press Meet


பேய்க்கு குரல் கொடுத்த ஆண்ட்ரியா



கொலை நோக்குப் பார்வை படத்தில் பேய் பாடல் ஒன்றைப் பாடி ரசிகர்களை பயமுறுத்தியுள்ளாராம் நடிகை ஆண்ட்ரியா.

 திரு திரு துறு துறு படத்தின் இயக்குனர் நந்தினி இயக்கும் புதிய படம் கொலை நோக்கு பார்வை. இப்படத்தில் பேய் பாடல் ஒன்றை பாடியுள்ளாராம் ஆண்ட்ரியா. இப்பாடல் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அதிகமாகவே மெனக்கெட்டுள்ளாராம்.

 ஆண்ட்ரியா பாடிய பாடல் படத்தின் சூழலுக்கு ஏற்றவாறு பாடல் அமைந்துள்ளது, நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் நந்தினி. 

அஸ்வத்தின் பின்னணி இசை அபாரமாக வந்துள்ளது என்றார் நந்தினி. கொலை நோக்குப் பார்வை படத்தில் பின்னணிப் பாடகி சுசியின் கணவர் கார்த்திக் குமார், கன்னட பட நாயகி ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ளார். இசையமைப்பாளர் அஸ்வத்தின் இசையில், மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இயக்குனர் ராசு மதுரவன் புற்றுநோயால் மரணம்



மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் முத்துக்குமுத்தாக உள்ளிட்ட பல படங்களை இயக்கிய , பிரபல சினிமா இயக்குனர் ராசு மதுரவன் இன்று காலமானார்.

 புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி சென்னை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ராசு மதுரவன், மறைந்த மணிவண்ணனிடம் பணியாற்றியவர். பூமகள் ஊர்வலம் என்ற படத்தில் இயக்குநராக அறிமுகமானார். குடும்பம், கிராமத்து உறவுகளை அருமையாகச் சித்தரித்த இவரின் மாயாண்டி குடும்பத்தார் படம் இவரை பிரபலப் படுத்தியது.

 அதனைத் தொடர்ந்து மதுரையையும், திண்டுக்கல் மாவட்டத்தையும் பின்னணியாகக் கொண்ட திரைப்படங்களையே ராசு மதுரவன் இயக்கினார். கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டி ஒலிபெருக்கி நிலையம் உள்ளிட்டவை இவரது இயக்கத்தில் உருவான வேறு சில வெற்றிப் படங்கள்

சமீபத்தில், இவருக்கு நாக்கு மற்றும் தொண்டை பகுதியில் கேன்சர் நோய் பரவியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதன் தொடர்ச்சியாக, சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள காமாட்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 11 மணியளவில் ராசுமதுரவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈழ மாணவி தினுசியா இன்ஜினியரிங் படிக்க உதவிய நடிகர் சூர்யா R



நெல்லை: தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலம், குமரியில் வசித்து வரும் அகதியான மாணவி தினுசியா இன்ஜினியரிங் படிக்க உதவியுள்ளார் நடிகர் சூர்யா. 

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஈழத்து அகதிகள் முகாமில் வசிக்கும் செல்வி தினுசியா பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் கலந்து கொண்டார். அதில், தினுசியாவிற்கு நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. அக்கல்லூரியில் தமிழ் உணர்வாளர்கள் ரூபாய் 25,000 பணம் கட்டி தினுசியாவை சேர்த்தனர். 


ஆனால் அதற்கு மறுநாளே நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் இருந்து தினுசியாவிற்கு அழைப்பு வந்தது. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலையில் பொறியியல் படிக்க இடம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் நான்கு ஆண்டுகள் படிப்பிற்க்கான செலவையும் உணவு மற்றும் விடுதிக்கான செலவையும் அகரமே ஏற்க உள்ளதாக தெரிவித்தனர். அதனால் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தினுசியா கட்டிய பணம் திருப்பிக் கேட்க பணத்தை கல்லூரி நிறுவனம் திரும்ப அளித்தது.

அந்த பணத்தை அகதிகள் முகாமில் உள்ள மற்ற மாணவர்களின் கல்லூரி சேர்க்கைக்கு பயன்படுத்துவதாக மார்த்தாண்டம் அகதிகள் முகாமின் தலைவர் பிரேம்கூறினார். ஈழத்தில் இருந்து வந்து அகதிகள் முகாமில் இத்தனை ஆண்டுகள் காலத்தை கழித்த தினுசியாவிற்கு இனி புதிய அனுபவம் சென்னையில் காத்துக் கொண்டிருக்கிறது.

 அகதிகள் முகாமில் இருந்து எஸ்.ஆர்.எம் பல்கலையில் இடம் பிடித்த ஒரே மாணவிசெல்வி தினுசியா தான் என்பது மற்றுமொரு பெருமையான தகவல். 

தக்க தருணத்தில் உதவிக் கரம் நீட்டி மாணவியின் வாழ்கையில் ஒளியேற்றிய அகரம் அறக்கட்டளைக்கும் அதன் நிறுவனர் நடிகர் சூர்யாவுக்கும் ஈழத்து அகதிகள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

வழக்கு எண் 18/9, சாட்டை படங்களுக்கு தமுஎச விருது



பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9, எம்.அன்பழகன் இயக்கிய சாட்டை, சீனு ராமசாமி இயக்கிய நீர்ப்பறவை ஆகிய படங்களுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் விருது வழங்கப்பட உள்ளது. 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் 2012ம் ஆண்டிற்கான திரைப்பட விருது விழா வரும் 25ம் தேதி சென்னை தி.நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. 

விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட இயக்குநர் சமுத்திரகனி பங்கேற்று பேசுகிறார். கவிஞர் நந்தலாலா, கவிஞர் சைதை ஜெ. இயக்குநர் எஸ். கருணா ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.
வழக்கு எண் 18/9, நீர்ப்பறவை, சாட்டை போன்ற படங்கள் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மதுபானக்கடை படத்திற்கு புதிய முயற்சிக்கான விருது வழங்கப்பட உள்ளது. மௌனமொழி என்ற குறும்படத்திற்கு பா.ராமச்சந்திரன் நினைவு விருது வழங்கப்பட உள்ளது

.

Monday, July 8, 2013

டைரக்டர் களஞ்சியம் அவதூறு வழக்கு: நடிகை அஞ்சலிக்கு மீண்டும் சம்மன்


டைரக்டர் களஞ்சியம் மிரட்டுவதாக நடிகை அஞ்சலி புகார் கூறி இருந்தார். இதையடுத்து அஞ்சலி மீது களஞ்சியம் சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் நேரில் ஆஜராகும்படி அஞ்சலிக்கு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள அவரது வீட்டு முகவரிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த சம்மனை அஞ்சலி வாங்கவில்லை. கோர்ட்டுக்கு திரும்ப வந்து விட்டது.
இதையடுத்து அடுத்த மாதம் 12–ந்தேதி கோர்ட்டில் ஆஜராக அஞ்சலிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்

நவீன தொழில் நுட்பத்தில் விஸ்வரூபம் 2 படம்: கமலஹாசன் தகவல்


 கமலின் விஸ்வரூபம் 2 படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இதன் முதல் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசானது. இப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சீன்கள் இடம் பெற்றுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து சர்ச்சைக்குரிய சீன்களை நீக்கிவிட்டு வெளியிட்டனர்.
‘விஸ்வரூபம் 2’ படத்தில் கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல்போஸ், சேகர் கபூர், நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கமல் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். தாய்லாந்து, பாங்காக்கில் இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது.
மக்காவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் போஸ்டரை கமல் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:–
நான் ரசிகர்களுக்காகவே படங்கள் எடுக்கிறேன். விளம்பரத்துக்காக இந்த தொழிலை செய்ய வில்லை. விஸ்வரூபம் படத்தின் கதையை ஆரம்பத்திலேயே இரண்டு பாகமாக எழுதினேன். ஒரு படத்தை ரிலீஸ் செய்த பிறகுதான் அதன் இரண்டாம் பாகம் பற்றி அறிவிப்பது வழக்கும். ஆனால் நான் படத்தின் முதல் பகுதியை எடுக்கும் போதே இரண்டாம் பகுதி பற்றி தெரிவித்து விட்டேன்.
முதல் பகுதி படப்படிப்பை நடத்தும் போதே இரண்டாம் பகுதியையும் படமாக்கினேன். என் நம்பிக்கை வெளிப்படுத்தும் படமாக இது இருக்கும். மனித உறவுகளின் உணர்ச்சிகள் இருக்கும். அத்துடன் அதிநவீன தொழில் நுட்பத்தில் இரண்டாம் பாகத்தை படமாக்குகிறேன். தண்ணீருக்கு அடியிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் காதலும் இருக்கும்.
இவ்வாறு கமலஹாசன் கூறினார்.

ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் க்ரைம் த்‌ரில்லர்


கஸ்தூ‌ரிமான், அங்காடித்தெரு, நான் கடவுள், சிந்து சமவெளி, நீர்ப்பறவை, கடல் என ஆறு படங்களில் பணிபு‌ரிந்திருக்கிறார் ஜெயமோகன். அவ‌ரின் பட்டியலில் சிந்துசமவெளி இடம்பெறாது. சாமி சம்பளம் தரவில்லையோ என்னவோ?
வசந்தபாலனின் காவியத்தலைவன் படத்திலும் ஜெயமோகன் பணிபு‌ரிகிறார்.
தமிழகத்தைவிட கேரளாவில் ஜெயமோகனின் திரைக்கதைக்கு தேவையும், ம‌ரியாதையும் அதிகம். அவ‌ரின் ஒழிமுறி விருது வாங்கிய பிறகு இந்த இரண்டும் – தேவை, ம‌ரியாதை – அதிக‌ரித்திருக்கிறது. அரை டஜன் படங்களுக்கு மேல் மலையாளத்தில் அவர் பணிபு‌ரிவதாக கேள்வி.
மலையாள நடிகர் ஜெய்சூர்யா நடிக்கும் புதிய தமிழ்ப் படத்துக்கும் ஜெயமோகனே திரைக்கதை, வசனம் எழுதுகிறார். இந்தப் படம் ஒரு ஆக்சன் க்ரைம் த்‌ரில்லர். இதுவரை ஜெயமோகன் பணிபு‌ரிந்த படங்களிலிருந்து வித்தியாசப்பட்ட கதைக்களம்.
படத்தை குறித்த அதிக தகவல்கள் இந்த வாரம் தெ‌ரிவிக்கப்படும்.

OFFICIAL TRAILER - Chennai Express - Theatrical Trailer - Shah Rukh Khan & Deepika Padukone


ரிஸ்க் எடுக்கத் தயங்காதவர் அஜீத்: சூர்யா

சென்னை: அஜீத் குமார் படங்களில் ரிஸ்க் எடுக்க ஒருபோதும் தயங்காதவர் என்று சூர்யா தெரிவித்துள்ளார். 





ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் விமர்சனம் எப்படி இருந்தாலும் படம் கல்லா கட்டுகிறது. படத்தை சூர்யா தன் தோளில் தாங்குகிறார் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்
.

சூர்யாவுக்கும், அஜீத்துக்கும் இடையே எப்பொழுதும் நல்ல உறவு உண்டு. ஒருவரையொருவர் பாராட்ட தயங்கியதே இல்லை.



 இந்நிலையில் மங்காத்தாவில் அஜீத் ரிஸ்க் எடுத்தது பற்றி சூர்யாவிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில், 


அஜீத் ரிஸ்க் எடுக்கத் தயங்காத ஒரு நடிகர். மங்காத்தா அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அந்த படத்தில் நரை முடியுடன் அஜீத் வந்தது அழகாக இருந்தது. மங்காத்தா ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததில் மகிழ்ச்சி. எனக்கு பிடித்த படங்களின் பட்டியலில் மங்காத்தாவுக்கு இடம் உண்டு என்றார்.

மகாவ் ஐஐஎஃப்ஏ விருது விழாவை கலக்கிய பாலிவுட் நட்சத்திரங்கள் - படங்கள்


மகாவ்: சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் மாதுரி தீட்சித்தின் நடனம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. 

சீனாவின் மகாவ் நகரில் 14வது இந்திய திரைப்பட விழா நேற்று நடைபெற்றது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உலக நாயகன் கமல் ஹாசனும் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் வித்யா பாலன் சிறந்த நடிகைக்கான விருதையும், ரன்பிர் கபூர் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றனர். மேலும் நடனத்திற்கு பெயர்போன பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் தனது அற்புதமான நடனத்தால் அனைவரையும் கவர்ந்தார். இது தவிர ஸ்ரீதேவி, பிரபுதேவாவுடன் சேர்ந்து ஆடினார்.