Tuesday, August 20, 2013

சல்மான் கான் மீதான கார் விபத்து வழக்கின் விசாரணை செப்டம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மும்பை புறநகர் பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் சல்மான் கான் போதையில் ஓட்டிச் சென்ற கார் கடை மீது மோதியது. அப்போது அதன் அருகில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை 2005-ம் ஆண்டு தொடங்கியது. வேகமாகவும், அலட்சியமாகவும் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சல்மான்கான் மரணம் விளைவிக்கும் குற்றம் புரிந்ததாக போலீசார் ஆதாரம் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சல்மான் கான் வழக்கை மீண்டும் மும்பை கோர்ட் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி கோர்ட்டில் ஆஜரான சல்மான் கானுக்கு குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதியின் முன் வந்தது. சல்மான் கான் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இவ்வழக்கின் அடுத்த விசாரணையை வேறொரு நீதிபதி மேற்கொள்வார் என்றும் மறுவிசாரணையை அடுத்த (செப்டம்பர்) மாதம் 5ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் நீதிபதி அறிவித்தார்.
இவ்வழக்கில் சல்மான் கான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment