Thursday, August 22, 2013

தமிழில் ரீமேக் ஆகும் ஜாக்கிசான் படம்!



ஜாக்கிசான் நடித்த படங்களில் ஒன்று தி கராத்தே கிட். இப்படத்தில் ஜாக்கியுடன் ஜேடன்ஸ்மித் என்ற சிறுவனும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்யும் முயற்சி ஒன்று நடக்கிறது. படத்தை பல படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள ஸ்டன்ட் சிவா இயக்குகிறாராம்.
இந்த அதிரடியான ஆக்சன் படத்தில் ஹீரோவாக நடிப்பது யார் என்று விசாரித்தால், ஜாக்கிசான் வேடத்தில் ஸ்டன்ட் சிவாவின் மனைவியே நடிக்கிறாராம். வியட்நாமை சேர்ந்த பிரபல ஸ்டன்ட் மாஸ்டரான பீட்டர் ஹெயினின் சகோதரிதான் சிவாவின் மனைவியாம். அவரது முக அமைப்பு ஜாக்கிசானைப்போல் இருக்கும் என்பதால் அவரையே ஆண் கெட்டப்புக்கு மாற்றி நடிக்க வைக்கப்போகிறார்களாம்.
மேலும், 12 வயது பையன் கேரக்டருக்கு சிவாவின் 12 வயது மகனே நடிக்கிறாராம்.
இதையடுத்து படத்துக்கு தமிழில் நல்ல டைட்டீல் யோசித்து வரும் ஸ்டன்ட் சிவா, பாடல் மற்றும் வசனம் எழுதும் பொறுப்பை மதன் கார்க்கியிடம் கொடுத்துள்ளார். மற்றபடி டெக்னீஷியன்கள் யார் யாரை நியமிக்கலாம் என்பது பற்றிய ஆலோசனைகளை நடத்தி வரும் சிவா, ஹாலிவுட் படத்துக்கு இணையாக இந்த படத்தை என்னால் கொடுக்க முடியும் என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறாராம்.

No comments:

Post a Comment