சங்கர் டைரக்டு செய்த ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் பரத். பாலாஜி சக்திவேல் டைரக்டு செய்த ‘காதல்’ என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இதுவரை அவர் 24 படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஐந்து ஐந்து ஐந்து’ இவருடைய 24-வது படமாகும். பரத்தும், துபாயில் பல் டாக்டராக இருக்கும் ஜெஸ்லி என்பவருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக காதல் இருந்து வந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.

காதல் திருமணம் செய்து கொள்வது பற்றி நடிகர் பரத் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
“ஜெஸ்லியை சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது, தற்செயலாக சந்தித்தேன். 2 பேரும் நட்புடன் பழக ஆரம்பித்தோம். பின்னர் அதுவே காதலாக மாறியது. 2 பேரும் காதலை பகிர்ந்து கொண்டோம். திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தோம்.
எங்கள் திருமணத்திற்கு 2 குடும்பங்களை சேர்ந்தவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். பெற்றோர்கள் சம்மதத்துடன் நானும், ஜெஸ்லியும் திருமணம் செய்து கொள்கிறோம். ஜெஸ்லி பி.டி.எஸ். படித்தவர்.
துபாயில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். திருமணத்துக்கு பின் எம்.டி.எஸ். படிக்க முடிவு செய்திருக்கிறார்.”
இவ்வாறு பரத் கூறினார்.
No comments:
Post a Comment