Friday, August 23, 2013

சுருதி, சமந்தாவுடன் போட்டியா?: அமலாபால்

அமலாபால் பிசியான நடிகையாகி உள்ளார். தமிழில் ‘நிமிர்த்து நில்’, ‘வேலையில்லா பட்டதாரி’ படங்கள் கைவசம் உள்ளன. தெலுங்கு, மலையாளத்தில் ஒரு படங்களில் நடிக்கிறார். விஜய் ஜோடியாக நடித்த ‘தலைவா’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.
அமலாபால் அளித்த பேட்டி விவரம் வருமாறு:–
விஜய்யுடன் நடிக்க ஆசை இருந்தது. ‘தலைவா’ படம் மூலம் அது நிறைவேறியுள்ளது. விஜய் தொழிலில் ஈடுபாடு காட்டுவார். அர்ப்பணிப்பு உணர்வோடு நடிப்பார். டைரக்டர் எத்தனை ‘டேக்’ கேட்டாலும் சலிக்காமல் நடிப்பார். இவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். என்னை இந்த படத்தில் நடிக்க டைரக்டர் விஜய் தேர்வு செய்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
என் வாழ்க்கையில் எதிர்பாராதவைகள் நிறைய நடந்துள்ளன. நடிப்பை ரொம்ப நேசிக்கிறேன். பெரிய நடிகர்கள் படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்காது. காதல், பாடல் சீன்களில் மட்டுமே வருவார்கள். ஆனால் ‘தலைவா’ படம் அப்படி இல்லை. என் கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. போலீஸ் கெட்டப்பிலும் வந்தேன். சவாலாக இருந்தது. விஜய் எனக்கு ரொம்ப உதவியாக இருந்தார்.
புதுமுக நடிகர்களை விட அனுபவமுள்ள பெரிய ஹூரோக்களுடன் நடிப்பது எளிதானது. ஹன்சிகா, சுருதிஹாசன், சமந்தா வளர்ச்சியில் பயம் இல்லை. எனது வேலையை மட்டுமே பார்க்கிறேன். எங்கள் எல்லோருக்குமே போதுமான படங்கள் கைவசம் உள்ளன. போட்டி எதுவும் இல்லை. ஒவ்வொரு வரும் நட்பாகவே பழகுகிறோம்.
இவ்வாறு அமலாபால் கூறினார்.

No comments:

Post a Comment