Saturday, June 15, 2013

இசையமைப்பாளரையும் மாற்றினார் கமல்ஹாசன்


விஸ்வரூபம் 2 படத்துக்கு முதல் பாகத்தில் ஒளிப்பதிவு செய்த சானு வர்க்கீஸை மாற்றி ஷாம்தத் சைனுதீனை ஒப்பந்தம் செய்த கமல்ஹாசன் தற்போது இசையமைப்பாளரையும் மாற்றியிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஸ்வரூபத்துக்கு சங்கர் எசான் லாய் இசையமைத்தனர். படத்தின் குவாலிட்டியில் இசைக்கு பெரும் பங்கு இருந்தது. இந்நிலையில் அவர்களுக்குப் பதில் விஸ்வரூபம் 2 க்கு ஜிப்ரானை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளம் இசையமைப்பாளர்களில் ஜிப்ரான் கவனம் ஈர்ப்பவராக இருக்கிறார், பாடல்களிலும், பின்னணி இசையிலும். அவரின் இசையை கேட்ட கமல் அவரையே தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

அமீர் கதாநாயகனாக நடிக்கும் 'பேரன்பு கொண்ட பெரியோர்களே'!

இயக்குநர் அமீர் மீண்டும் கதாநாயகனாக நடிக்க உள்ளார் படத்தின் தலைப்பு ‘பேரன்பு கொண்ட பெரியோர்களே'. இது காமெடி கலந்த அரசியல் படம் என்கின்றனர் கோலிவுட் வட்டாரங்களில். பருத்திவீரன் வெற்றிக்குப் பின்னர் தமிழ் திரை உலகில் அறியப்பட்ட இயக்குநர் அமீர். சமீபத்தில் ஓவர் பில்டப் கொடுக்கப்பட்ட ஆதிபகவன் படத்தை அவ்வளவாக ரசிகர்கள் ரசிக்கவில்லை. எனவே இயக்குநர் வேலையை கொஞ்சம் நிறுத்திவிட்டு நடிக்கப் போய்விடலாம் என்று நினைத்துவிட்டார் அமீர். இவர் ஏற்கனவே யோகி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மிஸ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் ‘கன்னித் தீவு பொண்ணா'... என்ற குத்துப் பாட்டுக்கு நடனமாடியுள்ளார். நீண்ட நாட்களாக ஆதி பகவான் படத்தை எடுத்து ரிலீஸ் செய்த அமீர் இப்போது மறுபடியும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேரன்பு கொண்ட பெரியோர்களே என்று படத்துக்கு பெயரிட்டுள்ளனர். காமெடி கலந்த அரசியல் படம் என்று கூறப்படுகிறது. இதனை இயக்குபவர் சந்திரன். அமீரிடம் உதவி இயக்குநராக இருந்த ஆதாம் பாலாதான் படத்தை தயாரிக்கிறார்

தில்லு முல்லு - விமர்சனம்

ஒரிஜினல் தில்லுமுல்லுவில் மீசையை வைத்து ஆள்மாறாட்டம் செய்வதாகக் காட்டியிருப்பார்கள். இந்தப் படத்தில் சாதாரண கண் பசுபதி, பூனைக் கண் கங்குலி கந்தன் என ஆள்மாறாட்டம் செய்கிறார் சிவா. கிட்டத்தட்ட எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வசனத்தை ஒப்பிக்கிறார் சிவா. இதையே நடிப்பு என நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் இன்றைய ரசிகர்களும் விமர்சகர்களும். ராகங்கள் பதினாறு பாடலில் சிவாவின் உடல் மொழியும் பாவங்களும்... ரொம்ப்ப பாவம்! 'தமிழ்சினிமா'வை ஒரு முறைதான் ரசிக்க முடியும். நடிக்கிற எல்லா படமும் 'தமிழ்சினிமா'வாகவே இருந்தால், உங்களை நீங்களே ஸ்பூஃப் பண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான்! தேங்காய் சீனிவாசன் பின்னியெடுத்த அந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி வேடத்தில் பிரகாஷ் ராஜ். சிவகுருநாதன் எனும் முருகபக்தராக, எதையும் சீக்கிரம் நம்புகிற அல்லது சந்தேகப்படுவராக வருகிறார். அவ்வளவு பெரிய நிறுவனத்தின் உரிமையாளர், திறமையாளர் இத்தனை மாங்காவாகவா இருப்பார்... ஆனால் ஒரிஜினலில் இப்படிக் கேட்க முடியாத அளவுக்கு தேங்காய் சீனிவாசன் பாத்திரமும் நிகழ்வுகளும் பின்னப்பட்டிருக்கும். சௌகார் நடித்த ஆள்மாறாட்ட அம்மா பாத்திரத்தில் கோவை சரளா. கொஞ்சமும் பொருந்தவில்லை. பிரகாஷ் ராஜ் சந்தேகத்துடன் இவரைப் பார்க்க வரும் நேரங்களிலெல்லாம் நாக்கில் வேலைக் குத்தி அவரை உட்கார வைத்து விடுகிறார்கள். ஒரு முறை இரு முறை என்றால் கூட பரவாயில்லை. கோயிலில், நிச்சயதார்த்தத்தின்போது, சாதாரணமாக வீட்டிலிருக்கும்போது என எப்போதும் நாக்கில் வேலோடு கோவை சரளா. முடியல! படத்தின் பெரிய மைனஸ் கதாநாயகி இஷா தல்வார். ஏதோ மும்பை எக்ஸ்ட்ரா மாதிரி தெரிகிறார். முகத்தில் ஒரு களை இல்லை. நடிப்பு....? வீசை என்ன விலை!! நண்பன் கூடவே இருந்து அவன் தங்கையை கரெக்ட் பண்ணுபவராக வருகிறார் பரோட்டா சூரி. ரொம்ப ஸாரி... இந்த முறை உங்கள் ஷோ எடுபடவில்லை! பாத்திரங்கள், அதற்கான தேர்வுகளில் இயக்குநர் கோட்டைவிட்டாலும், வசனங்கள் அவருக்குக் கைகொடுக்கின்றன. சின்னச் சின்ன டைமிங் வசனங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

இயக்குனர் நடிகர் மணிவண்ணன் காலமானார்.

பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில், 50 படங்களுக்கு டைரக்டராகவும், சுமார் 400 படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ள மணிவண்ணன், சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று(ஜூன் 15ம் தேதி) அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட அவரது இல்லத்திலேயே உயிர் பிரிந்தது. 

கோவை மாவட்டம் சூலூரில் 1954-ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி பிறந்தவர் மணிவண்ணன். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சினிமா துறைக்கு வந்தார். ஆரம்பத்தில் சின்ன வேடங்களில் நடித்தவர், பின்பு பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார். பாரதிராஜாவின் நிழல்கள், டிக் டிக் டிக், சிவப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனராக அவதரித்தார். தொடர்ந்து இளமை காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்ன தம்பி பெரிய தம்பி, வாழ்க்கை சக்கரம், மூன்றாவது கண், தெற்கு தெரு மச்சான், அமைதிப்படை உள்ளிட்ட 50 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக சமீபத்தில் நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., என்ற படத்தை இயக்கினார்.

இயக்குனராக மட்டுமல்லாமல் காமெடி, வில்லன், அப்பா கேரக்டர் உள்ளிட்ட பல்வேறு குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்துள்ளார். ரஜினி, கமல், விஜயகாந்த், அஜீத், விஜய், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சினிமா மட்டுமல்லாது அரசியல் மற்றும் சமூகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர். ஆரம்பத்தில் மதிமுக கட்சியில் இருந்தவர் பின்பு டைரக்டர் சீமானின் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தார். தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து வந்தார்.

இந்நிலையில், சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வந்த மணிவண்ணனுக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பினார். இரவு மருத்துவர்கள் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளார். காலையில் வெகுநேரமாகியும் மணிவண்ணன் எழுந்‌திருக்கவில்லை. சந்தேகமடைந்த அவரது மனைவி அருகில் சென்று பார்த்துள்ளார். ஆனால் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது. மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும், ஜோதி என்ற மகளும், ரகு என்ற மகனும் உள்ளனர்.

மணிவண்ணனின் இறுதிச்சடங்கு நாளை(ஜூன் 16ம் தேதி) நடைபெற உள்ளது. மணிவண்ணனின் திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. விஷயம் குறித்து கேள்விப்பட்ட பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்த வண்ணம் உள்ளனர். பலர் ‌தங்களது இரங்கலையும் தெரிவித்துள்ளனர். 

Friday, June 14, 2013

தனுசின் 2 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்



நடிகர் தனுஷ் நடித்த மரியான், அம்பிகாபதி ஆகிய இரு படங்களும் வருகிற 21-ந் தேதி ஒரே நாளில் ரிலீசாகின்றன மரியான் படத்தை பரத்பாலா இயக்கியுள்ளார். நாயகியாக பார்வதி நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்துள்ளார்.
ஆயில் நிறுவனத்தில் பணியாற்றும் தனுஷ் உள்பட மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்டு சூடானில் கைதிகளாக வைக்கப்படுகின்றனர். அங்கிருந்து தனுஷ் எப்படி தப்புகிறார் என்பது கதை.
அம்பிகாபதி படம் தமிழிலும், இந்தியில் ராஞ்சனா என்ற பெயரிலும் வருகிறது. ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். நாயகியாக சோனம் கபூர் நடித்துள்ளார். தனுசும் சோனம் கபூரும் காதல் வயப்படுகின்றனர். பின்னர் உயர் படிப்புக்காக சோனம் கபூர் டெல்லி செல்கிறார். அங்கு இன்னொரு இளைஞனுடன் நட்பு ஏற்படுகிறது. அந்த இளைஞன் சோனம் கபூர் மீது காதல் வயப்படுகிறான். தனுஷ் காதல் என்னவாகிறது என்பது கதை.

நலத்திட்ட விழா ரத்தானதற்கு காரணம் யார்? மௌனம் கலைத்தார் விஜய்


சென்னை: தனது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை அரசியல் கட்சி விழா என்று யாரோ தவறான தகவல் கொடுத்ததால் கல்லூரி நிர்வாகத்தினர் தான் விழாவுக்கு தடை போட்டதாக விஜய் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி ரூ. 1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கடந்த 8ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் விழா திடீர் என்று ரத்து செய்யப்பட்டது. விழா ரத்தானதற்கு அரசியல் கட்சிகள் காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து விஜய் மௌனம் கலைத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், எனக்கு சமூகத்தின் மீது அக்கறை இருக்கிறது. எனது ரசிகர்களுக்கு அதே உணர்வு உள்ளது. ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது, பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது, ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்து, ரத்ததானம் செய்வது என்று பல நல்ல காரியங்களை நான் செய்து கொண்டிருக்கிறேன். என் ரசிகர்களும் என்னைப் போன்று பிறருக்கு உதவி செய்து வருகிறார்கள். என் பிறந்தநாளில் நான் மட்டுமின்றி ஏழைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனால் தான் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த 3,900 ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நினைத்தேன். இந்த விழாவை நடத்த மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் இடம் கேட்டோம். அவர்களும் அளித்தார்கள். ஆனால் நான் நல்ல காரியங்கள் செய்வது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் கூறாதவற்றை, அறிவிக்காத செய்திகளை எல்லாம் வைத்து வதந்தியை பரப்பினார்கள். பிறந்தநாளைக் கூட நிம்மதியாக கொண்டாட முடியவில்லை. என் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி என்று கூறித் தான் எங்கள் மாநிலப் பொறுப்பாளர் ஆனந்த் கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றார். ஆனால் அந்த நிகழ்ச்சி என் அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளம் போடும் நிகழ்ச்சி என்று சிலர் வதந்தியை கிளப்பிவிட்டார்கள். அதை கல்லூரி நிர்வாகம் நம்பி அனுமதி மறுத்துவிட்டது. எங்களுக்கு வேண்டாதவர்கள் தான் இப்படி தவறான தகவல் கொடுத்துள்ளார்கள் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் கல்லூரி நிர்வாகம் நம்பவில்லை. காவல் துறையினரும் அரசியல் விழா என்று நினைத்து தான் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்கள் போன்று. இந்த விழாவுக்காக நிர்வாகிகள் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்தார்கள். அது எல்லாம் அவர்களின் சொந்த பணம். விழாவில் வழங்க ஆட்டோ, கம்ப்யூட்டர், தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு வண்டி எல்லாம் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வாங்கிவிட்டனர். ரசிகர்களை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது. அவர்கள் செலவு செய்த பணத்தை நான் அவர்களுக்கு கொடுத்துவிடுவேன். ஆனால் ஏமாற்றம் மற்றும் மனவேதனைக்கு என்னால் எப்படி மருந்து போட முடியும்? இதற்கு யார் பதில் சொல்வார்கள்? நடிப்பது தான் என் தொழில். ஓய்வின்றி நடித்துக் கொண்டிருக்கிறேன். கடவுளும், ரசிகர்களும் என்னுடன் இருக்கிறார்கள். கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அதற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். இந்நேரத்தில் அரசியலை பற்றி யோசிக்கக் கூட எனக்கு நேரம் இல்லை. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று பேரறிஞர் அண்ணா தெரிவித்தார். என் விழா மட்டும் நடந்திருந்தால் 3.900 ஏழைகள் சிரித்திருப்பார்கள். ஏழைகளின் சிரிப்பை அழித்தவர்களுக்கு நன்றி. நான் வேறு என்ன கூற முடியுங்ணா என்றார். 

Thursday, June 13, 2013

செப்டம்பரிலேயே விஸ்வரூபம் 2 ?

சென்னை: கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படத்தை செப்டம்பர் மாதத்திலேயே வெளியிட முடிவு செய்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விஸ்வரூபம் 2 படத்தை இந்த ஆண்டு வெளிக் கொணர்வதில் தீவிரமாக உள்ளார் கமல்ஹாஸன். 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆஸ்கர் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை தீபாவளிக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தார் கமல். ஆனால் இந்த தீபாவளிக்கு ரஜினியின் கோச்சடையான் வரும் என்று தெரிகிறது. எனவே தன் முடிவை மாற்றிக் கொண்ட கமல், மிச்சமிருக்கும் காட்சிகளை சென்னை மற்றும் புனேவில் படமாக்கிவிட்டு, செப்டம்பரிலேயே படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம். ' விஸ்வரூபம் 2' வெளியீட்டுக்கு தயாரானவுடன், அதை வெளியிடும் பொறுப்பை ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் கொடுத்துவிட்டு, லிங்குசாமி தயாரிக்கும் படத்தினை இயக்கப் போகிறார் கமல். 

யுவன் சங்கர் ராஜா ஆல்பத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம்!





சென்னை: முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஆல்பத்தில் நடிக்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கனவு நாயகன் என்றால் அது அப்துல் கலாம்தான். அவரது கொள்கைகளை அடிப்படையாக வைத்து 'எதிர்கால இந்தியா, இளைஞர்களின் கையில்...' என்ற கருத்துடன் ஒரு ஆல்பத்தை உருவாக்குகிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த ஆல்பத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால், அவரிடமே கேட்டுள்ளார் யுவன். இரு வாரங்களுக்கு முன் டெல்லி சென்று அப்துல் கலாமை நேரில் சந்தித்து இந்த ஆல்பம் குறித்து விளக்கியுள்ளார் யுவன்.விஷயத்தைக் கேட்டதும் அவரும் ஒப்புதல் கொடுத்துள்ளார். கலாமுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் யுவன், இதற்கு முன் எந்த ஆல்பமும் இப்படி பிரபலமடைந்ததில்லை என்று சொல்ல வைக்கும் அளவுக்கு தீவிரமாக வேலையில் இறங்கியுள்ளார்.

தீபாவளி ஸ்பெஷலாக வருகிறது ரஜினியின் கோச்சடையான்!!



கோச்சடையான் திரைப்படத்தை தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் என்றாலே, படம் தொடங்குவதற்கு பல மாதங்கள் முன்பே பரபரப்பு எகிறிவிடும். இதற்கு கோச்சடையானும் விலக்கல்ல. ஆரம்பத்தில் கோச்சடையான் எந்த மாதிரி படம் என்பதில் பலருக்கும் குழப்பம் இருந்ததது. எனவே எதிர்ப்பார்ப்பும் இல்லாமலிருந்தது. ஆனால் பரபரப்பான செய்திகளுக்குப் பஞ்சமில்லை. இதுவும் கூட நல்லதுதான் என்றே ரஜினியும் கருதினார். ஆனால் அவரது படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதால், தலைவரின் அடுத்த படம் என்ன என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். கோச்சடையான் சர்வதேசத் தரத்தில் உருவாகியுள்ளதாக இயக்குநர் சௌந்தர்யா உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து கூறிவருவதால், அவதார், டின் டின் ரேஞ்சுக்கு இப்போது எதிர்ப்பார்க்க ஆரம்பித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீடு இதோ அதோ என தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. மூன்று ஸ்டில்கள் தவிர ரசிகர்களுக்கு படத்தின் தோற்றம் குறித்து எதுவும் தெரியாது. ஆனாலும் இந்த மாதத்துக்குள் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகிவிடும் என்று கோச்சடையான் தரப்பில் கூறப்பட்டுள்ளதால், ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையே கோச்சடையான் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதாகவும் படத்தின் புரமோஷன் வேலைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்துள்ளனர். படத்தின் டீஸர், 'மேக்கிங் ஆஃப் கோச்சடையான்', டிரெய்லர், பாடல்கள் உருவான விதம், கோச்சடையான் செல்போன் என இதுவரை எந்தப் படத்துக்கும் செய்யாத அளவு விளம்பரங்கள் இனி அணி வகுக்கப் போகின்றனவாம். தீபாவளியன்று கோச்சடையான் ரிலீஸ் செய்து ரசிகர்களை டபுள் தீபாவளி கொண்டாட வைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.

Wednesday, June 12, 2013

கமலுடன் ஜோடி சேரும் 'குத்து' ரம்யா?



சென்னை: கமல் இயக்கி, நடிக்கவிருக்கும் புதிய படத்தில் காஜல் நடிக்க மறுத்ததை அடுத்து திவ்யா ஸ்பாந்தனாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம். லிங்குசாமி தயாரிப்பில் கமல் இயக்கி, நடிக்கும் படத்திற்கு உத்தம வில்லன் என்று பெயர் வைக்கப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்குமாறு காஜல் அகர்வாலை கேட்டனர். அவரோ டேட்ஸ் இல்லை என்று கூறி நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் காஜலுக்கு பதிலாக திவ்யா ஸ்பாந்தனா அல்லது லேகா வாஷிங்டனை நடிக்க வைக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிலும் திவ்யாவுக்கு தான் முக்கியத்துவமாம். இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் துவங்குகிறது. கமல் இயக்குவதால் தனது படத்தில் நடிக்கப் போகும் நடிகர், நடிகைகளை அவர் கவனமாக தேர்வு செய்து வருகிறாராம். சிம்பு, தனுஷ், சூர்யாவுடன் நடித்த திவ்யாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தால் ஜாக்பாட் தான்.