Saturday, August 17, 2013
Friday, August 16, 2013
ஆதலால் காதல் செய்வீர்
விளையாட்டு காதல், கருவாகி சாதியால், அரசியலால் சித்ரவதைப்பட்டு எப்படி அனாதைகளை உருவாக்குகிறது என்பதை தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் சாதீய காதலோடு யதார்த்தமாக சொல்ல வரும் படம்தான் ‘ஆதலால் காதல் செய்வீர்’.
நாயகி மனிஷாவிடம் நண்பனாக பழகிவரும் நாயகன் சந்தோஷ், மனிஷாவை ஒருதலையாய் காதலிக்கிறார். ஒருகட்டத்தில் தன் காதலை மனிஷாவிடம் நாயகன் சொல்ல, முதலில் மறுக்கும் மனிஷா, பிறகு அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். இவர்களுடைய காதல் இருவர் வீட்டுக்கும் தெரியாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறது. மாமல்லபுரம் சென்று ஒருநாள் இருவரும் தனிமையில் இருக்கிறார்கள். இதனால், மனிஷா கர்ப்பமாகிறாள்.
இந்த விஷயம் வீட்டுக்குத் தெரியாமல் நண்பர்கள் உதவியுடன் அந்த கருவை கலைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால், அது முடியாமல் போகவே, இருவருடைய பெற்றோர்களுக்கும் இந்த விஷயம் தெரிய வருகிறது.
இவர்கள் ஒன்று சேர முதலில் சந்தோஷின் சாதியும், அவனுடைய சாதியைச் சேர்ந்தவர்களும் தடையாக வருகிறார்கள். சந்தோஷின் அப்பா அரசியலில் பெரும் செல்வாக்குடன் இருப்பதால் மனிஷாவின் பெற்றோர்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனர்.
இதிலிருந்து தப்பித்து, இவர்களின் காதல் வெற்றி பெற்றதா? இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? மனிஷாவின் வயிற்றில் உருவான கரு என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.
சந்தோஷ், இன்றைய சூழலில் வாழும் யதார்த்தமான வாலிபனுக்குரிய தோற்றத்தில் அழகாக இருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். மனிஷா அட்டகாசமாக நடித்துள்ளார். இவரது நளினமான காதல் மிளிர்ச்சியும், ஆவேசமான பார்வையும் ரசிக்க வைக்கிறது.
மனிஷாவின் அப்பாவாக வரும் ஜெயப்பிரகாஷ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன் மகள் களங்கப்பட்டு நிற்கும் போது கண்கலங்கி நம்மையும் கண்கலங்கச் செய்கிறார். சந்தோஷின் அம்மாவாக வரும் பூர்ணிமா பாக்கியராஜ் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவே. அதேநேரத்தில் மனிஷாவின் அம்மாவாக நடித்துள்ள துளசி அன்பு, ஆவேசம் என இரண்டும் கலந்த கலவையாக நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார்.
முதல்பாதியில் கல்லூரி காதல், நகைச்சுவை என படம் ஆரம்பித்து, படிப்படியாக தமிழகத்தின் சாதீய காதலை கையில் எடுத்து, படம் பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். ஆனால், கிளைமாக்ஸில் நாம் நினைத்ததைவிட வேறுவிதமாய் முடித்திருப்பதில் சிகரம் தொடுகிறார் இயக்குனர்.
படத்தின் தலைப்பை வைத்து இயக்குனரை எடைபோட முடியாது. சமூக அவலங்களை நையாண்டியுடன் குண்டூசியால் குத்திக் காட்டி, இன்றைய கால சூழலில் வாழும் காதலர்களுக்கு பாடம் புகட்டுகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையில், பாடல்களும், பின்னணி இசையும் தாலாட்ட வைக்கிறது. மறைந்த கவிஞர் வாலி எழுதிய ‘தப்புத்தாண்டா’ பாடல் வரிகள் துள்ளல் போட வைக்கிறது. சூர்யாவின் ஒளிப்பதிவு, படத்துக்கு மேலும் வலுசேர்த்திருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் இவருடைய ஒளிப்பதிவில் மெருகு ஏறியிருக்கிறது.
மொத்தத்தில் ‘ஆதலால் காதல் செய்வீர்’ படம் அல்ல பாடம்.
கணவர் இறந்த 2 மாதத்தில் நடிகர் மணிவண்ணன் மனைவி மரணம்
பிரபல நடிகரும், இயக்குனருமான மணிவண்ணன் கடந்த ஜூன் 15–ந்தேதி மாரடைப்பால் இறந்தார். இதையடுத்து அவரது மனைவி செங்கமலம் (வயது 55) மகன் ரகுவண்ணனுடன் சென்னை கே.கே.நகர் ஜெய்பாலாஜி நகர் திருமலை தெருவில் வசித்து வந்தார். கணவர் இறந்த பின்னர் அவர் சோகமாக இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கமலத்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாக வில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை செங்கமலம் இறந்தார். இதுபற்றி அறிந்ததும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் நிர்வாகிகள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சினிமா பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். செங்கமலத்தின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கிறது. அவருக்கு ஜோதி என்ற மகள் உள்ளார்.
தெலுங்கு நடிகர் கோபிசந்துடன் ஜோடி சேர்ந்த நயன்தாரா
ஜெயபாலாஜி ரியல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் கோபிசந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை கோபால் இயக்குகிறார். இப்படத்தின் தொடக்க விழா இன்று ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடந்தது. இதில் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், தரணி, நடிகர் கோபிசந்த், நடிகை நயன்தாரா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் 1-ம் தேதி சுவிட்சர்லாந்தில் ஆரம்பிக்கப் போவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். மணிசர்மா இசையமைக்கிறார். பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
நடிகர் ‘கோபிசந்த்’ தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். தமிழில் ‘ஜெயம்’ படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்றார். தற்போது இந்த படத்தின் மூலம் முதன்முதலாக நேரடியாக தமிழ் படத்தில் நடிகராக நடிக்கிறார். நயன்தாரா, அஜீத் ஜோடியாக நடித்த ‘ஆரம்பம்’ படத்தின் வேலைகள் முடிவடைந்து வெளியாக தயாராக உள்ளது. மேலும் ‘ராஜாராணி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் வேலைகள் முடிந்ததும் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனுஷ்காவுடன் சார்மி மோதல்
அனுஷ்கா – சார்மி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு பட உலகம் கிசுகிசுக்கிறது. வரலாற்று படங்களில் அனுஷ்காவுக்கு போகும் கேரக்டர்களை பறிக்க சார்மி மல்லுக்கட்டுகிறார். ஏற்கனவே ‘அருந்ததி’ என்ற படத்தில் நடித்து வரலாற்று படங்கள் கேரக்டருக்கு பொருத்தமானவர் என பெயரெடுத்தார்.
தொடர்ந்து அதே மாதிரியான படம் வாய்ப்புகள் வந்தன. தற்போது ‘ருத்ரமாதேவி’ என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தனக்கும் வரலாற்று படங்கள் பொருத்தமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்க தொடங்கியுள்ளார் சார்மி.
இதற்கு வசதியாக ஏற்கனவே வரலாற்று கேரக்டரில் தான் நடித்த பட ஸ்டில்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இது அனுஷ்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் பனிப்போர் நடக்கிறது.
தலைவா' பட விவகாரம்: நடிகர் விஜய் உண்ணாவிரதம்!
சென்னை: "தலைவா" பட விவகாரம் தொடர்பாக சென்னையில் நடிகர் விஜய் உள்பட படக் குழுவினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
நடிகர் விஜய் நடித்துள்ள "தலைவா" படம் கடந்த 9ஆம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், படம் வெளியாவதற்கு முன்பே "தலைவா" வெளியாக இருந்த தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட படக்குழுவினர் கோடநாடு சென்றதாகவும், அவர்கள் வழியிலேயே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனிடையே, "தலைவா" படம் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் வெளியாகாவிட்டால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாவேன் என்றும், 'முதல்வர் அம்மா' மனமிறங்கி படம் வெளிவர நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்றும் அப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், "தலைவா" படம் வெளியிட நடவடிக்கை எடுக்க கோரி படத்தின் இயக்குனர் விஜய், உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டு சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் இன்று மனு கொடுத்துள்ளார்.
இந்த உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய், நடிகை அமலாபால், சத்யராஜ் மற்றும் படக்குழுவினர் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.
Thursday, August 15, 2013
உங்க கதைக்கு இவர்தான் ஹீரோ...!' - கோலிவுட் ஹீரோக்களை நறநறக்க வைக்கும் சந்தானம்
பொதுவாக ஒவ்வொரு காலகட்டத்திலும் யாராவது ஒரு முன்னணி காமெடி நடிகர் படத்தைத் தீர்மானிப்பவராக இருப்பார்.
கவுண்டமணி, வடிவேலுவுக்குப் பிறகு இப்போது சந்தானம்...
ஆனால் இவர் செய்வதையெல்லாம் கேட்டால்... கவுண்டரையும் வடிவேலுவையும் கையடுத்துக் கும்பிடுவார்கள்!
இப்போது ஒரு படத்தின் கதையை முடிவு செய்த கையோடு கால்ஷீட் கேட்டுப் போவது சந்தானத்திடம்தான்.
அவரோ கதையை முழுசாகக் கேட்டதும் யார் ஹீரோ என விசாரிப்பாராம். இவர்கள் குறிப்பிட்ட ஒரு ஹீரோ பெயரைச் சொன்னதும், அவர் சரிப்படமாட்டார், இவரை போடுங்கள்.
எனக்கும் சரியாக மேட்ச் ஆகும். காமெடி நல்லா வரும் என போட்டு வைக்க, சந்தானம் சொன்னவரே ஹீரோ! அடுத்த சில மாதங்களில் சந்தானம் நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்களின் ஹீரோ சந்தானத்தின் பரிந்துரைகள்தானாம்!
நான் ரஜினி ரசிகன், ஆனால் 'தல' ரசிகனும் கூட: வெங்கட் பிரபு
சென்னை: தான் அஜீத் குமாரை புகழ்வதில் சிலருக்கு பிரச்சனையாக இருந்தால் தான் என்ன செய்ய முடியும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
அஜீத்தும், விஜய்யும் தனது நண்பர்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு அஜீத் குமாரை புகழ்ந்து வருகிறார். திரைத்துறையில் எத்தனையோ நடிகர்கள் இருக்கையில் அவர் ஏன் அஜீத் புகழ் பாடுகிறார் என்று ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் என்ன பதில் அளித்தார் என்று பார்ப்போம்.
நான் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன். ஆனால் எனக்கு அஜீத்தும் பிடிக்கும் என்றார் வெங்கட் பிரபு.
என்னைவிட எஸ்.பி.பி. சரண் தான் அஜீத்துக்கு நெருக்கமானவர். அவர்கள் இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்று வெங்கட் கூறினார்.
நான் அஜீத்துடன் படம் பண்ணும் முன்பே அவருடைய ரசிகன்.
சென்னை 28 போன்ற லோக்கல் படத்தை எடுத்த என்னுடன் பணியாற்ற எந்த நடிகரும் முன் வரவில்லை. ஆனால் அஜீத் குமாரோ கதையைக் கூட கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்டார்.
அஜீத் என்னுடைய நண்பரும் கூட. நாங்கள் ஜி படத்தில் ஒன்றாக நடித்தோம். விஜய், சூர்யா, சிம்பு, விஷால் ஆகியோரும் எனது நண்பர்கள். நான் அஜீத்தை புகழ்வதில் அவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. சிலருக்கு அது பிரச்சனையாக இருந்தால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? என்றார்.
சுதந்திர தினத்தன்று பிறந்தநாள் கொண்டாடும் ஆக்ஷன் கிங்
சென்னை: ஆக்ஷன் கிங் அர்ஜுன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சுதந்திர தினமான இன்று ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நன்றி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்த அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தேசப்பற்றுள்ள அர்ஜுன் தனது கையில் நம் தேசியக் கொடியை பச்சைக் குத்தியுள்ளார். அவர் ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.
அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா தந்தை வழியில் நடிப்பைத் தேர்வு செய்துள்ளார். அவர் விஷாலுடன் சேர்ந்து நடித்த பட்டத்து யானை அண்மையில் தான் ரிலீஸ் ஆனது. முன்னதாக அர்ஜுனுக்கு ஷங்கரின் ஜென்டில்மேன் படம் தான் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது.
அந்த படத்திற்காக அவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவா... நிபந்தனை அடிப்படையில் 23-ம் தேதி வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு!
சென்னை: விஜய்யின் தலைவா படத்தை சில நிபந்தனைகளின் அடிப்படையில் வரும் 23-ம் தேதி வெளியிடலாம்... என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தலைவா படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிவிட்ட இந்தப் படம் தமிழகத்தில் வெளியாகாததால், திருட்டு டிவிடிகள் வெளியாகிவிட்டன.
இந்த நிலையில் படம் இன்று வருமா நாளை வருமா என தவிப்போடு இருப்பதாக விஜய் வீடியோவில் உருக்கம் காட்டினார். திரையுலக பிரமுகர்கள் சிலரும் படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
இந்தப் படம் வெளியாக முதல்வர் உதவ வேண்டும் என திரும்பத் திரும்ப விஜய்யும் அவரைச் சார்ந்தவர்களும் கூறிவருவது அரசுத் தரப்புக்கு கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
படத்தை வெளியிடுவதும் வெளியிடாததும் திரையரங்குகள் விருப்பம். அரசையோ முதல்வரையோ இதில் தொடர்பு படுத்தக் கூடாது என தலைவா படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
எனவே இனி படத்தை வெளியிடுவது தியேட்டர்காரர்கள் கையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று தேனாம்பேட்டையில் தங்கள் சங்க அலுவலகத்தில் கூடிய திரையரங்கு உரிமையாளர்கள், தலைவா படத்தை வரும் 23-ம் தேதி வெளியிடலாமா என ஆலோசித்தனர்.
ஆனால் அன்று தேசிங்கு ராஜா படத்துக்கு 350 அரங்குகள் கொடுத்திருப்பதால், விஜய் தரப்பு கேட்கும் 500 அரங்குகளில் வெளியிடுவது சாத்தியமில்லை என்று தெரிவித்தனர். 250 முத்ல 300 அரங்குகளில், சதவீத அடிப்படையில் வேண்டுமானால் தலைவாவை வெளியிடலாம்.
மினிமம் கியாரண்டி அடிப்படையில் என்றால், படத்தை வெளியிட முடியாது என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.
இந்த நிபந்தனைக்கு விஜய் தரப்பு ஒப்புக் கொண்டால், தலைவா படம் அடுத்த வாரம் வெளியாகக் கூடும்.
சென்னையை கலக்கும் வீரம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
சென்னை: அஜித் நடிக்கும் 54 வது படமான வீரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சென்னை மாநகரமெங்கும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
நாகி ரெட்டியின் விஜயா வாகினி நிறுவனம் தயாரிக்கும் 100 வது படத்தில் அஜித் நடிக்கிறார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்திற்கு விநாயகம் பிரதர்ஸ்' என டைட்டில் வைக்கப்பட உள்ளதாக பேசப்பட்டது.
ஆனால் ரொம்பவும் தாமதம் செய்யாமல் கடந்த வாரம் படத்திற்கு ‘வீரம்‘ என டைட்டில் அறிவிக்கப்பட்டது. சுதந்திர தினமான இன்று சென்னை நகரம் முழுவதும் பட்டு வேட்டி, பட்டு சட்டை பளபளக்க அஜீத் ஸ்டைலாக சிரித்தபடி அமர்ந்திருக்கும் போஸுடன் கூடிய ‘வீரம்' பட போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது
வீரம் போஸ்டர் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. காரணம், ‘ஆரம்பம்‘ படத்துக்குதான் டைட்டில் மாற்றி இருக்கிறார்கள் என்று சிலர் பேச ஆரம்பித்துவிட்டனர்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ‘ஆரம்பம்' கடந்த ஒரு வருடமாக இதன் ஷூட்டிங் நடந்தபோதிலும் டைட்டில் வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
போஸ்டரைப் பார்த்த சிலரோ ‘ஆரம்பம்' படத்துக்கு முன் ‘வீரம்'படம் தான் முதலில் திரைக்கு வரும் என்று சிலர் பேசிக்கொண்டனர். காரணம் ஆரம்பம் பட போஸ்டர் ஒரு இடத்தில் கூட காணப்படவில்லை. வீரம் போஸ்டர்தான் நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ளது.
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தின் அஜித்தின் 53 வது படத்திற்கு ‘வலை', ‘பறவை', ‘தல' என பல்வேறு டைட்டில்கள் ஆலோசிக்கப்பட்டது. ஒரு வழியாக ஆரம்பம் படத்தின் டைட்டிலை இயக்குனர் அறிவித்தார்
வீரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்போது வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தினாலும் ‘ஆரம்பம்' படம்தான் முதலில் திரைக்கு வரும். வீரம் அடுத்த ஆண்டு பொங்கலுக்குதான் ரிலீஸ் என்கின்றனர் பட யூனிட்டார்.
அம்மா மனமிறங்குங்க... தலைவா ரிலீஸ் ஆகலேன்னா நடுத்தெருவுக்கு வந்துருவேன்- சந்திரபிரகாஷ் ஜெயின்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மனமிறங்கி இந்த திரைப்படம் நாளை (16.8.2013) வெளிவர வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன் என தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலைவா படத்தை வெளியிட பல்வேறு வழிகளிலும் அதன் குழுவினர் முயற்சித்து வருகின்றனர். நேற்று நடிகர் விஜய் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அதன் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் பேட்டி அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கூடவே படத்தின் இயக்குநர் விஜய்யும் உடன் இருந்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அம்மா நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். இதற்கு முன் இரண்டு படங்கள் தயாரித்து நல்ல விதமாக வெளியிட்டு இருக்கிறேன்.
நான் ஒரு நல்ல தயாரிப்பாளனாகவும், நாணயமான தயாரிப்பாளனாகவும் தமிழ் திரை உலகில் பேர் எடுத்து இருக்கிறேன்.
கடந்த 4 வருடங்களாக முயற்சி செய்து நடிகர் விஜய்யின் கால்ஷீட் பெற்று பல கோடிகள் கடன் வாங்கி மிகுந்த பொருட்செலவில் இந்த தலைவா திரைப்படத்தை தயாரித்து இருக்கிறேன்.
கடந்த 9.8.2013 அன்று படத்தை வெளியிடுவதாக விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்து இருக்கிறேன்.
இந்த தலைவா திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தியேட்டர்களுக்கு யாரோ இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது என்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள்.
இதனால் தியேட்டர் அதிபர்கள் படத்தை திரையிட பயந்து படம் 9-ந் தேதி வெளியிட முடியாமல் ஆகிவிட்டது.
ஆனால் அதே நாளில் வெளிநாடுகளிலும், கேரளா, கர்நாடக, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலும் படம் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் வெளிவராமல் நின்றுவிட்டது.
இதற்கு இடையில் இன்டர்நெட்டிலும், திருட்டு வி.சி.டிகளிலும் படம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் எனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் நிலைமை உருவாகிவிட்டது.
இந்த படம் இந்த வாரம் கூட அதாவது 16.8.2013 (நாளை) அன்று கூட வெளியாகாவிட்டால் நான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாவேன்.
இந்த திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரை அரங்கு உரிமையாளர்களும் மிகவும் நஷ்டத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி உள்ளார்கள்.
ஆகவே முதல்- அமைச்சர் ஜெயலலிதா மனமிறங்கி இந்த திரைப்படம் நாளை (16.8.2013) வெளிவர வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்
10க்கும் மேற்பட்ட மொழிகளில் 'டப்' ஆகிறது ஷங்கரின் ஐ?
ஷங்கர் - விக்ரம் கூட்டணியில் உருவாகும் 'ஐ' திரைப்படத்தை 10க்கும் மேற்பட்ட மொழிகளில் டப் செய்து வெளியிடப் போகிறார்களாம்.
நண்பன் படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்கும் ஐ படம் கோலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
விக்ரம்- எமி ஜாக்சன் நடிக்கும் ஐ படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஏற்கெனவே ஷங்கர் - விக்ரம் கூட்டணியில் வந்த அந்நியன் தமிழ் - தெலுங்கில் வெற்றிகரமாக ஓடியது.
கிட்டதட்ட 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஐ படத்தை 10க்கும் மேற்பட்ட மொழிகளில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இதற்குமுன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படம் ஜப்பான் உள்பட 9 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
Wednesday, August 14, 2013
சென்னை எக்ஸ்பிரஸை கிழி, கிழின்னு கிழிக்கும் விமர்சகர்கள்: புடி, புடின்னு துரத்தும் ரசிகர்கள்
மும்பை: ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை விமர்சகர்கள் திட்டித் தீர்க்கையில் படம் கல்லாவில் கோடியைத் தாண்டி வசூல் செய்து கொண்டிருக்கிறது.
காமெடி படங்களை எடுப்பதில் வல்லவரான ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் ரம்ஜான் பண்டிகை தினத்தன்று ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸான 4 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
படம் என்னவோ தியேட்டர்களில் ஓடு, ஓடு என்று தான் ஓடுகிறது. ஆனால் விமர்சகர்கள் தான் படத்தை நார், நாராக கிழித்துக் கொண்டிருக்கின்றனர். பல படங்களில் இருந்து மசாலாவை எடுத்து அதை ஒரு குடுவையில் போட்டு குலுக்கு குலுக்கி அதையே புதிய மசாலாவாக காட்டியுள்ளார் ரோஹித் என்று விமர்சகர்கள் விளாசுகின்றனர்.
அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்கள், அறிவுக்கு வேலை என்பதே இல்லை என்று விமர்சகர்கள் பொறிந்து தள்ளினாலும் ரசிகர்கள் அதை காதில் வாங்குவதாகவே இல்லை. நீங்கள் உங்கள் பாட்டுக்கு கறித்துக் கொட்டுங்கள் நாங்கள் படத்தை பார்த்து கல்லாவை நிறப்புகிறோம் என்று தியேட்டர்களில் முந்தியடிக்கின்றனர்.
ஷாருக்கின் முந்தைய படங்களான ரா ஒன் மற்றும் ஜப் தக் ஹை ஜான் ஆகிய பாடங்கள் எதிர்பார்த்தபடி ஓடாத நிலையில் சென்னை எக்ஸ்பிரஸ் புல்லட் ரயில் வேகத்தில் ஓடுவது அவருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
சிம்புவுடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியானது எப்படி? – போலீசில் புகார் தருகிறார் ஹன்சிகா!
சென்னை; காதலன் சிலம்பரசனுடன் தான் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளிவந்தது பற்றி போலீசில் புகார் செய்யப் போவதாக நடிகை ஹன்சிகா கூறினார்.
சிம்புவும், ஹன்சிகாவும் தொடர்ந்து இரு படங்களில் ஜோடியாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பின்போதே இருவருக்கும் காதல்வந்துவிட்டது. இந்த செய்தி வெளியில் வந்ததும், முதலில் மறுத்து, பின்னர் ஒப்புக் கொண்டார்கள்.
திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தனர். சமீபத்தில் ஹன்சிகா தனது 22-வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த பிறந்த நாளை சிம்பு அனுப்பிய கேக்கை வெட்டி கொண்டாடினார் ஹன்சிகா. ஹன்சிகா
முகத்தோடு முகம்
இந்நிலையில் சிலம்பரசனும், ஹன்சிகாவும் ஒரு பார்ட்டியில் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அந்தப் படங்களில் சிலம்பரசனும் ஹன்சிகாவும் இறுக்கமாக கட்டிப்பிடித்து முகத்தோடு முகம் உரசிக் கொண்டிருந்தார்கள்.
போலீசில் புகார்
இந்தப் படங்கள் குறித்து இப்போது புகார் கூற ஆரம்பித்துள்ளார் ஹன்சிகா. அவர் கூறுகையில், “இந்தப் படத்தை யார் வெளியிட்டார்கள் அது தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட படங்கள். எப்படி வெளிவந்தது என்று தெரியவில்லை. இதுபற்றி நான் போலீசில் புகார் செய்ய முடிவு செய்துள்ளேன்,” என்றார்.
சிம்புவா?
இப்படித்தான் முன்பு நயன்தாராவைக் காதலித்த போதும், சிம்பு- நயன் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துக் கொண்டும், நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் மீடியாவில் வெளியாகின. இவற்றை சிம்புவே வெளியிட்டதாக பேச்சு நிலவியது நினைவிருக்கலாம்.
டைரக்டர் சேரன் மகள் மனம் மாறுவாரா?
காதல் விவகாரத்தில் டைரக்டர் சேரன் மகள் தாமினிக்கு மனமாற்றம் ஏற்படுமா? என பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் திடீரென போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தாமினி ஆஜராகி உதவி இயக்குனர் சந்துருவை காதலிப்பதாகவும் இதனால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சேரன் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று விளக்கம் அளித்தார். சந்துருவையும் வரவழைத்து விசாரித்தனர். சந்துருவுக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என்றும் ஏமாற்றப்பட்ட பெண்கள் அவருக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளனர் என்றும் சேரன் குற்றம் சாட்டினார்.
தனது மூத்த மகளுக்கும் பேஸ்புக்கில் ஐலவ்யூ சொன்னார் என்றும் கூறினார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோர்ட்டுக்கு இவ்வழக்கு சென்றதால் கடந்த 6–ந்தேதி இரு தரப்பினரையும் அழைத்து நீதிபதி விசாரித்தார். பின்னர் தாமினி படித்த பள்ளிக்கூடத்தின் தாளாளர் வீட்டில் அவர் தங்கி இருக்க வேண்டும் என்றும் வருகிற 21–ந்தேதி மீண்டும் தாமினியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தர விட்டார்.
இதற்கிடையில் சந்துரு மீதும் அவர் அக்காள் பத்மா மீதும் டைரக்டர் அமீர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். பத்மா ஏற்கனவே ஒரு வரை திருமணம் செய்தவர் என்றும் சந்துரு பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிப்பவர் என்றும் குற்றம் சாட்டினார். சேரன் மீண்டும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று சந்துருவுக்கு எதிரான ஆதாரங்களை கொடுத்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாமினிக்கும் படிப்பு முக்கியம் என்றும் படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து கொள் என்றும் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. தாமினியிடம் மனமாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கின்றனர். அவர் என்ன முடிவு எடுத்துள்ளார் என்பது 21–ந்தேதி கோர்ட்டு விசாரணையில் தெரிய வரும்
சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முறையாக எட்டு விருதுகளுக்கு பாலாவின் ‘பரதேசி’ படம் பரிந்துரை
தமிழ் சினிமாவில் ‘சேது’ துவங்கி ‘பரதேசி’ வரை ஆறுபடங்களை இயக்கியுள்ள பாலா, ‘நான் கடவுள்’ படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும், மற்ற படங்களுக்காக நான்கு தேசிய விருதுகளையும், ஆறு சர்வதேச தமிழ்த் திரைப்பட விருதுகளையும், பல மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
பி.எச். டேனியல் எழுதிய ‘ரெட் டீ’ என்ற ஆங்கில நாவலை மொழிபெயர்த்து தமிழில் வெளிவந்த ‘எரியும் பனிக்காடு’ என்ற நாவலை அடிப்படையாக கொண்டு ‘பரதேசி’ படத்தை பாலா உருவாக்கினார். கடந்த மார்ச் மாதம் உலகெங்கிலும் வெளியான பரதேசியின் சிறப்பைப் பார்த்து பிரமித்த இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் வடஇந்தியா முழுவதுமாக ‘பரதேசி’யை வெளியிட்டார்.
இந்நிலையில் ‘பரதேசி’ படம் வருகிற அக்டோபர் மாதம் லண்டனில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் அதிகபட்சமாக எட்டு விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடும் இதே வேளையில் இதுவரையிலான தமிழ் சினிமாவின் வரலாற்றில் எட்டு சர்வதேச விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட ஒரே படம் ‘பரதேசி’ என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த வெளிநாட்டு இயக்குனர் ஆகிய நான்கு விருதுகளுக்காக இயக்குனர் பாலாவும், சிறந்த நடிகருக்காக அத்ர்வா, ஒளிப்பதிவாளருக்காக செழியன், இசையமைப்பாளருக்காக ஜீ.வி.பிரகாஷ் குமார், உடை வடிவமைப்புக்காக பூர்ணிமா ராமசாமி என மொத்தம் எட்டு விருதுகளுக்காக பரதேசி படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்பட விழாவில் அமெரிக்கா, ரஷ்யா, லெபனான், தென்கொரியா, சிலி, ஐரோப்பிய நாடுகளின் உலகப்படங்கள் போட்டியில் கலந்து கொண்டாலும் அதிகபட்சமான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே படம் ‘பரதேசி’தான். முதன்முறையாக சர்வதேச தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இணையாக தமிழ் திரைப்படக் கலைஞர்கள் உலக அளவில் போட்டியில் கலந்து கொள்ளும் இத்திரைப்பட விருதுகள் அக்டோபர் இரண்டாம்
சுவடுகள் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு நடிகை கே.ஆர்.விஜயா, மோனிகா உயிர் தப்பினார்கள். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி ஜெய்பாலா இயக்குகிறார். இவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். நாயகியாக மோனிகா நடிக்கிறார். கே.ஆர்.விஜயா முக்கிய கேரக்டரில் வருகிறார்.
எம்.எஸ்.விசுவநாதன் இசையமைக்கிறார். தற்கொலை முடிவுகளை சாடும் கதையம்சத்தில் இப்படத்தை எடுக்கின்றனர். இதன் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்தது. 40 அடி உயர கிரேனில் கேமராவை பொருத்தி கே.ஆர்.விஜயா, மோனிகா நடித்த காட்சிகளை ஜெய்பாலா படமாக்கிக் கொண்டிருந்தார். அப்போது மழையில் மண் ஈரமாகி இருந்ததால் `கிரேன்’ பிடிப்பை இழந்து திடீரென சரிந்தது. கே.ஆர்.விஜயா, மோனிகா தலையில் அது விழப்போனது. உடனே படக்குழுவினர் அலறி சத்தம் போட்டார்கள் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த 200 பேர் ஓடிச்சென்று கிரேனை தாங்கி பிடித்தனர். இதனால் கே.ஆர்.விஜயா, மோனிகா உயிர் தப்பினார்கள். கிரேன் பழுதாகியது.
இதுகுறித்து ஜெய்பாலா கூறும்போது, விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் தப்பினோம். இக்கட்டான சூழலிலும் காட்சிகள் அழகாக படமாகியுள்ளன என்றார். இப்படத்தில் மோகன்சர்மா, கலைஞானம் போன்றோரும் நடிக்கின்றனர். காதல், காமெடியும் படத்தில் இருக்கும். தற்கொலை முடிவுகளை தடுப்பதாக இப்படம் இருக்கும் என்றும் இயக்குனர் கூறினார்.
Tuesday, August 13, 2013
கணவருடன் ஜோடி சேருகிறார் சினேகா
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில், ஜோடி சேர்ந்து நடித்த போது தான், பிரசன்னா – சினேகாவுக்கிடையே காதல் மலர்ந்தது என்றாலும், அதை உடனடியாக வெளிப்படுத்தாமல், பல ஆண்டுகளுக்கு பின் பகிர்ந்து கொண்டு, திருமண வாழ்க்கையில் இணைந்தனர்.
திருமணத்துக்கு பின் வழக்கம் போல, கலைச் சேவையை தொடர்ந்துள்ள சினேகா, இப்போது , “உன் சமையல் அறையில், பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில், நாயகியாக நடித்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து, கணவர் பிரசன்னாவுடனும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கிறார் சினேகா. இவர்களை வைத்து, ஏற்கனவே, “அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தை இயக்கியவரே இந்த படத்தையும் இயக்குகிறார்.
16 வயதினிலே மயிலுக்கு 50 வயது
16 வயதினிலே படத்தில் மயிலாக வந்த ஸ்ரீதேவிக்கு இன்று(ஆகஸ்ட் 13ம் தேதி) 50 வயது. அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில், சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி, தனது நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தனது 13-ம் வயதில் மூன்று முடிச்சு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
பிறகு 16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், மூன்றாம் பிறை, பிரியா, கல்யாண ராமன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். ரஜினி, கமல் என இரண்டு நாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்த ஸ்ரீதேவி 1970-80-களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வெற்றி பெற்றார்.
பிறகு இந்தியிலும் அதிரடியாக பிரவேசித்து அங்கும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் போது பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை மணந்த ஸ்ரீதேவி, பின்னர் சினிமா வாய்ப்புக்களை குறைத்து கொண்டார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் தோன்றிய ஸ்ரீதேவி, சமீபத்தில் இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்தப்படமும் ஹிட்டாக இப்போது மீண்டும் நல்ல வேடங்களில் நடிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார். தேசிய விருது, பல்வேறு மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி குவித்த ஸ்ரீதேவிக்கு இன்று 50வது பிறந்தநாள்.
வயது 50-ஆனாலும் இப்போதும் இளமையாக காணப்படுகிறார். இந்த பிறந்தநாளில் ஸ்ரீதேவிக்கு திரையுலகை சேர்ந்த பிரமுகர்களும், அவரது ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்திய விருதை விட ஆஸ்கர் விருது ஒன்றும் பெரிதல்ல! நாசர் பேச்சு
கோலிவுட்டின் குணசித்ர நடிகர்களில் நாசர் குறிப்பிடத்தக்கவர். இவர், இந்திய அரசு வழங்கும் தேசிய விருதினை விட அமெரிக்க அரசு கொடுக்கும் ஆஸ்கர் விருது ஒன்றும் பெரிதல்ல என்று கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோட்டில் ஒரு புத்தக திருவிழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் நாசரிடம் வாசகர்கள் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். அந்த கேள்விகளுக்கு அவர் ஆர்வமாக பதிலளித்தார்.
அப்போது, ஆஸ்கர் விருது பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட படங்களில் சிறந்ததை தேர்வு செய்து இந்திய அரசு தேசிய விருது கொடுக்கிறது. அதேபோல் அமெரிக்க அரசு அந்நாட்டில் பதிவு செய்யப்பட்டு படமாக்கப்படுவதில் சிறந்த படத்தை தேர்வு செய்து கொடுப்பதுதான்ஆஸ்கர் விருது. அந்த வகையில், இந்திய அரசு தரும் விருதினை போல்தான் ஆஸ்கர் விருதும். நமது தேசிய விருதினை விட அது எந்த வகையிலும் சிறந்ததல்ல.
மேலும், அவர்களெல்லாம் இந்திய அரசு விருது கிடைக்கவில்லையே என்று யாரும் கூறுவதில்லை. அப்படியிருக்க நம்முடைய கலைஞர்கள் மட்டும் எதற்காக அந்த விருதினை பெரிதாக மதித்து அதற்காக ஏங்க வேண்டும்,’’ என்றும் கூறியுள்ளார் நாசர்.
மேலும், நம்முடைய நடிப்பு மேதை சிவாஜிகணேசன், அவருக்கே சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லை. அதனால் இந்த விருதுகளை எப்போதுமே நான் பெரிதாக மதிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.
இரண்டாம் உலகம் வெற்றி பெற்றால் ஆர்யாவும் பெரிய ஹீரோதானாம்!
சினிமா உலகில் படங்களின் வெற்றிதான் நடிகர்களின் மார்க்கெட்டை தீர்மானிக்கிறது. அந்த வகையில் சமீபகாலமாக 100 கோடி 150 கோடி என்று மெகா பட்ஜெட்டில் தமிழ்ப்படங்களே உருவாகி வருகின்றன. அந்த மாதிரி படங்களில் நடிக்கும் நடிகர்களும் 30 முதல் 40 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள்.
இந்த நிலையில், தற்போது வளர்ந்து வரும் ஆர்யா சமீபத்தில்தான் கோடிகளை எட்டிப்பிடித்திருக்கிறார். இந்த நேரத்தில் அவர் நடித்துள்ள இரண்டாம் உலகம் படம் 60 கோடியில் தயாராகி உள்ளதாம். ஆனால் அவர் நடித்த தற்போதைய படங்கள் 10 முதல் 15 கோடிகள் வரைதான் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நேரத்தில் திடீரென்று 60 கோடி பட்ஜெட் ஆர்யாவை நம்பி படமெடுத்திருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் செல்வராகவன். அதோடு அனுஷ்கா என்ற மெகா நடிகையும் படத்தில் இருப்பதால் எப்படியும் படத்தை வியாபாரம் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் படவேலைகளை முடித்து விட்டு தற்போது வியாபாரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அதனால் தனது கேரியரில் இரண்டாம் உலகம் முக்கியமான படம் என்று நினைக்கும் ஆர்யா, வியாபார ரீதியாக இப்படம் வெற்றி பெற்றால் நாமும் முன்னணி ஹீரோவாகி விடுவோம் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்
100 கோடி வசூலித்த சென்னை எக்ஸ்பிரஸ்!
ரா-ஒன் படத்தையடுத்து ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சென்னை எக்ஸ்பிரஸ். இப்படத்தை வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் வியாபார ரீதியாக வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, ரஜினியை புகழ்ந்த ஷாரூக்கான்-தீபிகா படுகோனே இருவரும் பாடுவது போன்ற ஒரு லுங்கி டான்ஸ் பாடலும் இடம்பெற்றது.
இதற்கிடையே, தமிழில் விஜய் நடிப்பில் கடந்த 9-ந்தேதி அன்று வெளியாகவிருந்த தலைவா மற்றும் பவன் கல்யாண் நடிப்பில் ஆந்திராவில் வெளியாக இருந்த படமும் வெளியாகவில்லை. இதனால் அந்த படங்களுக்காக புக் பண்ணி வைத்திருந்த தியேட்டர்கள் அனைத்திலுமே சென்னை எக்ஸ்பிரஸ் வெளியானது. இதனால் எதிர்பாராத வகையில் அப்படம் வசூலிக்கத் தொடங்கியது.
அந்த வகையில் உலகம் முழுவதிலும் 3500 தியேட்டர்களில் திரையிடப்பட்ட அப்படம், 4 நாட்களில் 100 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாம். அதிலும் தென்னிந்தியாவில் இதுவரையில்லாத அளவுக்கு தனது படம் வசூல் சாதனை புரிந்துள்ளதால் அதிக உற்சாகத்தில் இருக்கிறாராம் ஷாரூக்கான்.
Monday, August 12, 2013
நான் அரசுக்கு எதிரானவன் அல்ல: தனுஷ்
தனுஷ் இப்போது சுவிட்சர்லாந்தில் இருக்கிறார். தலைவா படம் சில காரணங்களால் கடந்த 9ந் தேதி ரிலீசாகவில்லை. இதற்கு தமிழக அரசு தான் காரணம் என்று பொதுவான அபிப்ராயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தனுஷ் தனது டுவிட்டரில் “தலைவா படத்துக்கு இடையூறு செய்வதை விட்டுவிட்டு அரசு மக்கள் நலனில் கவனம் செலுத்தலாம்” என பொருள்படும்படியாக குறிப்பிட்டிருந்தார். அவர் தமிழக அரசை கடுமையாக விமர்சிக்கிறார் என்று இணைய தளங்களில் பலரும் எழுதத் தொடங்கினார்கள். சில பத்திரிகைகளிலும் செய்தியாக வெளிவந்தது. இது ஆளும் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தனுஷ் “நான் டுவிட்டரில் எழுதியதின் ஒரு பகுதியை மட்டும் சில பத்திரிகைகள் எடுத்துப் போட்டு நான் அரசை விமர்சனம் செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. நான் அரசுக்கு எதிரானவன் அல்ல” என்று மீண்டும் டுவிட்டரில் எழுதியிருக்கிறார்.
தலைவா பிரச்னையில் முதல்வர் தலையிடுவார்: நடிகர் விஜய் நம்பிக்கை
சில பல பிரச்னைகளால் தமிழகத்தில் திட்டமிட்டபடி தலைவா படம் ரிலீஸ் ஆகவில்லை. படத்தை ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்தேறி வருகிறது. இந்தநிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடநாடு பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்புகிறார். சென்னை திரும்பியவுடன், “தலைவா திரைப்படம் விரைவில் வெளிவர, முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என, நடிகர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் விஜய் பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். என்.எல்.சி., பிரச்னை, காவிரி நீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு நல்ல முறையில் தீர்வு கண்டுள்ளார்.
அம்மா உணவகம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, இப்படி எத்தனையோ நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார். எல்லோருக்கும் நல்லது செய்யும் நமது முதல்வர், “தலைவா திரைப்படம் வெளியாவதில் உள்ள பிரச்னையிலும் தலையிட்டு, விரைவில் தமிழகமெங்கும் திரைப்படம் வெளிவர நடவடிக்கை எடுப்பார். அதுவரை, என்னை நேசிக்கும் ரசிகர்கள் பொறுமையோடு காத்திருக்குமாறு கேட்டுகொள்கிறேன். இவ்வாறு நடிகர் விஜய் கூறினார்.
உலக இசை அமைப்பாளர்களுக்கு இளையராஜா சவால்
வருகிற ஆகஸ்ட் 24ந் தேதி சனிக்கிழமை இசைஞானி இளையராஜா முதன் முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் 19 டாப் பாடகர், பாடகிகளும், 75 இசைக் கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஒத்திகை பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் தீவிரமாக நடந்து வருகிறது. ஜயங்கரன் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
லண்டனிலேய மிகப்பெரிய உள்ளரங்கான ஓ2 வில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இது தொடர்பாக இளையராஜா சென்னையில் பேட்டி அளித்தபோது உலக இசை அமைப்பாளர்களுக்கு ஒரு சவால் விட்டார் அது இதுதான்.
“நான் இசை அமைத்த ப்ரியா படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் சிங்கப்பூரை சுற்றி பார்ப்பது போன்று பத்து நிமிடங்களுக்கு காட்சி வைத்திருப்பார்கள். தெருவில் நடப்பது, ஷாப்பிங் பண்ணுவது, டால்பின் ஷோ பார்ப்பது, இப்படி அந்த காட்சிகள் இருக்கும். இதற்கு பத்து நிமிடம் தொடர்ந்து பின்னணி இசை அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஷாட்டுக்கும் அது தனித்தனியாக இருக்க வேண்டும். அதற்கு நான் ஒரு மணி நேரத்தில் இசை அமைத்தேன்.
இப்போதுள்ள இசை அமைப்பாளர்கள் ஏன் உலகதில் உள்ள எந்த இசை அமைப்பாளரிடமும் இந்தக் காட்சியை கொடுங்கள் குறைந்தது ஒரு மாதம், இரண்டு மாதம் எடுத்துக் கொள்வார்கள். நான் எந்தப் படத்திற்கும் மூன்று நாட்களுக்கு மேல் இசை அமைத்தது இல்லை. 750 படங்களுக்கு இசையை அப்படித்தான் அமைத்திருக்கிறேன்.
இப்போது இசைக்குள் கம்ப்யூட்டர் வந்து விட்டது. கம்யூட்ரைக் கொண்டு புத்திசாலித்தனமாக அமைக்கப்படும் இசை மூளைக்குத்தான் செல்லுமே தவிர மனசுக்குள் தங்காது. இசை அமைப்பின் வேலைகளை கம்ப்யூட்டர் செய்து விடுவதால் இசை அமைப்பாளர்கள் சோர்ந்து விடுகிறார்கள். அன்று நான் அரை மணிநேரத்தில் நோட்ஸ் எழுதி இரண்டு மணிநேரத்தில் ரெக்கார்ட் செய்த பாடலை இன்று ரீகிரியேட் செய்ய இரண்டு நாட்கள் ஆகிறது.
இப்போதுள்ளவர்கள் இது எப்படி அன்று உங்களால் செய்ய முடிந்தது என்று ஆச்சர்யப்படுகிறார்கள். அதுவாக வந்தது, நான் உங்களுக்குத் தந்தேன். இது இறைவன் தந்தது வேறென்ன சொல்ல என்றார்.
ஆகஸ்ட் 23ம் தேதி ராஜா ராணி ஆடியோ ரிலீஸ்!
ஆர்யா – நயன்தாரா நடித்துள்ள ‘‘ராஜா ராணி’’ படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கியுள்ள படம் ‘‘ராஜா ராணி’’. இப்படத்தில் ஆர்யா – நயன்தாரா நடித்துள்ளனர்.
இவர்களுடன் ஜெய், நஸ்ரியா நஷீம், சந்தானம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த வருடத்தின் சிறந்த காதலுடன் கூடிய இசை படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் படம் ராஜா ராணி என படத்தின் இயக்குனர் அட்லீ கூறியிருந்தார்.
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இனிமையான பாடல்கள், நெஞ்சை நிறைய வைக்கும் இசை எல்லோரையும் கவர கூடியது என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இசை உரிமையை ‘திங்க் மியூசிக்’ நிறுவனம் வாங்கி உள்ளது.
Subscribe to:
Posts (Atom)