Saturday, August 10, 2013

ரசிகர்களுக்காக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை!



தலைவா திரைப்படம் விரைவில் வெளியாகும்.. அதுவரை விரும்பத்தகாத காரியங்களில் ஈடுபடாமல் பொறுமையோடும் கண்ணியத்துடனும் இருக்க வேண்டும் என்று ரசிகர்களை நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நான் நடித்த தலைவா திரைப்படம் இந்த வாரம் 9.8.2013 அன்று திரைக்கு வருவதற்காக திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த தேதியில் படம் வெளியாகவில்லை.

என் மீது பாசமும் அன்பும் கொண்ட ரசிகர்கள், ரசிகைகள், தாய்மார்கள் உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்வது என்னவென்றால், ஏமாற்றினால் சில ரசிகர்கள் விரும்பத்தகாத சில காரியங்களில் ஈடுபடுவதாக நான் அறிகிறேன். இது நமக்கு நல்லதல்ல. மிக விரைவில் தலைவா திரைப்படம் வெளியாகும். அதுவரை பொறுமையோடும் கண்ணியத்தோடும் அமைதியாக இருக்க வேண்டுமென்று என் நெஞ்சில் குடியிருக்கும் அத்தனை பேரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கண்ட மேனிக்கு இயக்குனர்களை கடுப்பாக்கும் சூர்யா!






New 0 0 0

- See more at: http://www.tamilspace.com/2013/08/surya-temple-which-saw-a-bitter-directors.html#sthash.qWNmpQKl.HVwrVNvn.dpuf
New 0 0 0

- See more at: http://www.tamilspace.com/2013/08/surya-temple-which-saw-a-bitter-directors.html#sthash.qWNmpQKl.HVwrVNvn.dpuf
New 0 0 0

- See more at: http://www.tamilspace.com/2013/08/surya-temple-which-saw-a-bitter-directors.html#sthash.qWNmpQKl.HVwrVNvn.dpuf

Mano Bala Reveals Thalaiva Story | Vijay Birthday Celebration 2013 | Comedy, Trailer



Kamal Haasan - Teaser for Ilayaraja's "Raja the Raja" (Rajathi Raja)


Friday, August 9, 2013

'Chennai Express' Public Review


சென்னையில் திரியும் நாய்களை பட்டிகளில் அடைக்க கூடாது: நடிகை திரிஷா வற்புறுத்தல்

நாய்களை பிடித்து பட்டிகளில் அடைக்கும் நடவடிக்கைக்கு நடிகை திரிஷா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மேயர் சைதை துரைசாமிக்கு திரிஷா எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
30 ஆயிரம் நாய்கள் தெருக்களில் இருந்து கிட்டத்தட்ட 30,000 நாய்களை பிடித்து அவைகளை சென்னையில் 15 புதிய பட்டிகளில் சிறைவைக்கும் ‘பி’ திட்டத்தை கைவிடுமாறு நான் உங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நாய்கள், அவை சுகவீனமாக அல்லது வயதானதாக இருந்தாலும்கூட, அவற்றின் ஆயுள்காலம் முழுவதும் பட்டிகளில் அடைத்து வைப்பது கொடுமையானது. அனைத்து வயதில் உள்ள நாய்களுக்கும் அன்றாடம் உடற்பயிற்சி, மன தூண்டுதல் மற்றும் புதிய மணங்களை ஆராயும் வாய்ப்பு மற்றும் இதர நாய்களுடன் சமூக பிணைப்பை உருவாக்குவது தேவைப்படும்.
ஒரு பட்டியில் இந்த விஷயங்கள் எதையும் அவைகளால் செய்ய முடியாது. மற்றும் அதுபோன்ற சூழ்நிலைகளில் பல நாய்கள் கடுமையான சோர்வுக்கு ஆளாகின்றன. மற்றும் அவற்றின் மனங்களை இழக்கின்றன.
இந்த அணுகுமுறையை ஜோத்பூரில் முயற்சித்தபோது, விளைவுகள் பயங்கரமாக இருந்தது. அடைத்து வைத்தது பல நாய்களை முரட்டுத்தனமாக மாற்றியது. சண்டைகள் மற்றும் பட்டினியால் இறந்தன. இதேபோன்ற ஒரு நிலை, பூட்டானில் தெரு நாய்களை சிறைப்படுத்த அந்நாடு முயற்சித்த போது ஏற்பட்டது.
நாய்களை அவற்றின் ஆயுள் முழுவதும் பட்டிகளில் அடைத்து வைப்பது மிகவும் குரூரமானது மற்றும் இது நாய்களை அவற்றுக்கு சிகிச்சை அளித்தப்பிறகு அல்லது கருத்தடை செய்தப்பிறகு அவைகள் கண்டறியப்பட்ட இடத்திலேயே விட வேண்டும் என உத்தரவிடும் விலங்கு கருத்தடை (நாய்கள்) விதிமுறைகள், 2001-ஐ மீறிய ஒரு செயலாகும்.
கடந்த காலத்தில் சென்னையில் நாய் பட்டிகள் பயன்படுத்தப்பட்டன. மற்றும் இந்த அணுகுமுறையானது நாய்கள் பெருக்கத்தையோ அல்லது ரேபிஸ் பரவலையோ கட்டுப்படுத்த தவறி விட்டது. தெருக்களில் இருந்து நாய்களை அப்புறப்படுத்துவதால் அவைகள் இருந்த இடம் காலியாகின்றன. இது அக்கம் பக்க பகுதிகளில் இருந்து வேறு நாய்கள் அங்கு வர வழிவகுக்கிறது.
மேலும் நாய்கள் இனப்பெருக்கம் வேகமாக நடக்கிறது. ஆகவே கருத்தடை செய்யப்படாத நாய்கள் தெருக்களில் இருக்கும் வரை தெரு நாய் பிரச்சினை நீடிக்கத்தான் செய்யும். சிறைக்கைதிகளை போல் நாய்களை அடைத்து வைப்பது சென்னையின் அளவுக்கதிகமான விலங்குகள் பிரச்சனையை ஒருபோதும் தீர்க்காது.
இந்த பிரச்சினைக்கு அதன் மூல ஆதாரத்திலிருந்து நிறுத்துவதன் மூலம் புத்திசாலித்தனமாக மற்றும் மனிதாபிமான முறையில் தீர்வு காண நான் பணிவுடன் உங்களை கேட்டுக் கொள்கிறேன். சென்னையில் தீவிரமான விலங்கு கருத்தடை மற்றும் ரேபிஸ்-எதிர்ப்பு திட்டத்தில் கவனம் செலுத்த தயவுசெய்து முயற்சியுங்கள்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழகம் முழுவதும் ‘தலைவா’ படம் இன்று ரிலீசாகவில்லை: விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்


விஜய், அமலாபால் ஜோடியாக நடித்த ‘தலைவா’ படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ரசிகர்கள் தியேட்டர்களில் விஜய்யின் கட்–அவுட்கள் மற்றும் கொடி தோரணைகள் அமைத்து ரிலீசை கொண்டாட காத்து இருந்தனர்.
இந்த நிலையில் ‘தலைவா’ படத்தை திரையிடக்கூடாது என்று தியேட்டர்களுக்கு திடீரென்று வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் வந்தன. இதனால் தியேட்டர் அதிபர்கள் அதிர்ச்சியானார்கள். பாதுகாப்பு இல்லாமல் படத்தை திரையிட இயலாது என மறுத்தனர். தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம் அபிராமி ராமநாதன் தலைமையில் இரு முறை கூடி இப்பிரச்சினை குறித்து விவாதித்தது. நேற்று நள்ளிரவு வரை கூட்டம் நடந்தது. இதற்கிடையில் ‘தலைவா’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் அளித்திருந்ததால் வரிவிலக்கு குழுவினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது.
படம் பார்த்த அக்குழு உறுப்பினர்கள் சில காட்சிகளுக்கும், விஜய் பேசும் சில வசனங்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்தனர். தியேட்டர் அதிபர்களும் படத்தை திரையிட மறுத்தனர். இதனால் ‘தலைவா’ இன்று தமிழகம் முழுவதும் ரிலீசாகவில்லை. பாண்டிச்சேரியிலும் வெளியாக வில்லை. தமிழகம் முழுவதும் சுமார் 500 தியேட்டர்களில் படத்தை திரையிட திட்டமிட்டு இருந்தனர்.
கேரளா, ஆந்திரா, கர்நாடகம், மும்பையில் ‘தலைவா’ படம் இன்று திரையிடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் இருந்து விஜய் ரசிகர்கள் கார், வேன்களில் கேரளா, ஆந்திராவுக்கு படம் பார்க்க புறப்பட்டு சென்றனர். இதனால் இரு மாநிலங்களின் எல்லையோர தியேட்டர்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதியது. வசூலை வாரி குவித்தது. சுமாராக ஓடிய தெலுங்கு மலையாள படங்களை தூக்கி விட்டு பல தியேட்டர் அதிபர்கள் ’தலைவா’ படத்தை திரையிட்டனர்.
வெளிநாடுகளிலும் ‘தலைவா’ வெளியானது. தமிழ் நாட்டில் ‘தலைவா’ படம் எப்போது வெளியாகும் என்று உறுதியாக தெரிய வில்லை. வெளி மாநிலங்களில் இருந்து ‘தலைவா’ படத்தின் திருட்டு சி.டி. உள்ளே வரலாம் என்று தயாரிப்பு தரப்பில் அச்சம் ஏற்பட்டு உள்ளது. படத்தை வெளியிட தீவிர முயற்சிகள் நடக்கின்றது.

இன்று பிறந்த நாள்: 23–வது குழந்தையை தத்தெடுத்த ஹன்சிகா



நடிகை ஹன்சிகா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஒரு குழந்தையை ஹன்சிகா தத்து எடுப்பது வழக்கம். ஏற்கனவே 22 குழந்தைகள் தத்து எடுத்து உள்ளார். அவர்கள் அனைவரையும் தனது சொந்த செலவில் வளர்த்து வருகிறார். படிக்கவும் வைக்கிறார்.
இன்று தனது பிறந்த நாளையொட்டி 23–வது குழந்தையாக பெண் குழந்தையொன்றை தத்து எடுத்தார். தத்து எடுக்கப்பட்ட 23 குழந்தைகள் மத்தியில் ‘கேக்’ வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அக்குழந்தைகளுக்கு ‘கேக்’கும் ஊட்டி விட்டார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட 10 ஏழை பெண்களுக்கான மருத்துவ செலவையும் ஹன்சிகா இன்று ஏற்றார்.
பிறந்த நாளையொட்டி ஹன்சிகா கூறும் போது:–
இந்த வருடம் பல வகையில் எனக்கு விசேஷமானது. என் வளர்ச்சியில் சந்தோஷப்படுகிறேன். சாதித்த மகிழ்ச்சியும் உள்ளது. பத்திரிகைகள் ஆதரவு இல்லாமல் இதை நிகழ்த்தி இருக்க முடியாது. என் வளர்ச்சிக்கு உதவிய எல்லோருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். ஹன்சிகாவுக்கு நடிகர் சிம்பு வாழ்த்து தெரிவித்தார்.

பரத் நடிக்கும் ‘555’ படம் நாளை வெளியாகிறது



விஜய் நடிப்பில் உருவான ‘தலைவா’ படம் இன்று வெளியாவதாக இருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மற்றும் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் என அடுத்தடுத்து பிரச்சினை கிளம்பியுள்ளதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
‘தலைவா’ இன்று வெளியாவதாக இருந்ததால், இயக்குனர் சசி இயக்கத்தில் பரத், சந்தானம் மற்றும் மிருத்திகா நடிக்கும் ‘ஐந்து ஐந்து ஐந்து’ படத்தை ஆக.15-ந் தேதிக்கு தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில், ‘தலைவா’ வெளியாவதில் தாமதம் ஏற்பட்டத்தையடுத்து இப்படத்தை நாளை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஏற்கெனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகி உள்ளன. மேலும், பரத் இப்படத்தில் சிக்ஸ் பேக் உடற்கட்டில் நடித்து உள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோனியா அகர்வால் குத்தாட்டம்


சோனியாஅகர்வால் தெலுங்கு படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட துவங்கியுள்ளார். 7 ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட பல தமிழ்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக இருந்த அவர் திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
கணவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் ஒரு நடிகையின் வாக்கு மூலம் படத்தில் நடித்தார். கிருகநாதன் என்ற மலையாள படத்திலும் நடித்தார். விவேக் ஜோடியாக பாலக்காட்டு மாதவன் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
‘அம்மா நானா ஊரிலேதே’ என்ற தெலுங்கு படம் உள்ளிட்ட சில படங்களில் கவர்ச்சியாக குத்தாட்டம் ஆடி உள்ளார். தமிழ் படங்களிலும் ஒரு பாடலுக்கு அவரை குத்தாட்டம் ஆட வைக்க முயற்சிகள் நடக்கின்றன

கவுண்டமணி கதாநாயகனாகும் ‘49ஓ’



1990-களில் தமிழ் சினிமாவில் காமெடியில் கொடிகட்டிப் பறந்தவர் கவுண்டமணி. இவரும், செந்திலும் இணைந்து நடித்த படங்கள் காமெடியில் களைகட்டின.
இந்நிலையில், உடல்நிலை காரணமாக கடந்த 8 வருடங்களாக படங்கள் எதிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது முழு ஆரோக்கியத்துடன் இருப்பதால் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
தற்போது சாந்தனு நடிக்கும் ‘வாய்மை‘ என்ற படத்தில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து கதாநாயகனாகவும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
இயக்குனர் கவுதம் மேனனின் உதவியாளர் ஆரோக்கியதாஸ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகான நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு ‘49ஓ’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
‘49ஓ’ என்பது தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்கள் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டிய படிவம். அதைத்தான் படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். அதற்காக, இது அரசியல் படம் என்று கூறமுடியாது. இந்த படத்தில் கவுண்டமணி விவசாயியாக நடிக்கிறாராம்.
இதுதவிர, இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கும் ஒரு படத்திலும் கவுண்டமணி நாயகனாக நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, August 8, 2013

Irandam Ulagam Movie Gallery
























Thalaiva Release the latest News


ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பொருத்தமான நடிகை அனுஷ்கா தான்: ஆர்யா புகழாரம்


சென்னை: சினிமாவில், ஆக்‌ஷன் என்றாலே ஆண்கள் தான் என்ற பிம்பத்தை உடைத்தவர் விஜயசாந்தி. அவருக்குப் பின் சொல்லிக் கொள்கிற மாதிரி எந்த நடிகையும் ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கவில்லை என்ற போதும், குதிரையேற்றம், வாள் சண்டை என புராண காலத்து ஆக்‌ஷன் படங்களில் கலக்கி வருகிறார் அனுஷ்கா.
அருந்ததி தான் அனுஷ்காவின் அழகை மட்டுமல்ல, அவரது ஆக்‌ஷனையும் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டிய முதல் படம். தற்போது ‘ருத்ரமாதேவி’ மற்றும் ‘பாகுபலி’யிலும் ஆக்‌ஷனில் கலக்கி வருகிறாராம் அனுஷ்கா.
தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் அனுஷ்கா நடித்து விரைவில் ரிலீசாக இருக்கும் படம் ‘இரண்டாம் உலகம்’.இதிலும் அவருக்கு ஆக்‌ஷன் காட்சிகள் உண்டாம். இது குறித்து அப்படத்தின் ஹீரோவான ஆர்யா, தன் ஹீரோயின் பற்றி படத்தின் ஆடியோ ரிலீசில் புகழ்ந்து தள்ளி விட்டார்.

என்ன கொடுக்க ஹன்சிகாவுக்கு என்ன கொடுக்க: மண்டையை உடைக்கும் சிம்பு


சென்னை: தனது காதலி ஹன்சிகாவின் பிறந்தநாளன்று அவருக்கு என்ன பரிசு கொடுப்பது என்று தெரியாமல் சிம்பு மண்டையை போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறாராம்.
ஹன்சிகா தான் சிம்புவை காதலிப்பதை அண்மையில் தான் ஒப்புக் கொண்டார். மேலும் 5 ஆண்டுகள் கழித்து அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹன்சிகாவின் பிறந்தநாள் நாளை வருகிறது.

‘ஜாக்பாட்’காக பரத்க்கு ஹிந்தி டியூஷன் எடுத்த தனுஷ்


மும்பை: பரத் தற்போது ஷிந்தி படமான ஜாக்பாட்டில் நடித்து வருகிறார். அவருடன் படத்தில் நஸ்ருதீன் ஷா, சச்சின் ஜோஷி மற்றும் சன்னி லியோன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்கள் நால்வரைப் பற்றி மட்டுமே, சுற்றி வரும் கதையோட்டமாம். ஒருவரை ஒருவர் எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொள்கின்றனர் என்பது படத்தின் கதைக் கருவாம்.
ஹிந்தியில் பரத்துக்கு இது முதல்படம். 555ல் பரத்தின் டெடெகேஷனைப் பார்த்து வலிய வந்து அமைந்த் அதிர்ஷ்டம் தான் இந்த ஜாக்பாட். சமீபத்தில் தனுஷின் முதல் ஹிந்தி படமான ராஞ்ச்னா வெற்றியையும், வசூலையும் வாரிக் குவித்துக் கொண்டிருக்கையில், அடுத்த தமிழ் ஹீரோ பரத்தின் எண்ட்ரி.
ஹிந்தியில் தான் கற்ற அனுபவத்தை எல்லாம், பரத்திரம் பகிர்ந்து கொண்டாராம் தனுஷ். ஹிந்தி பேசுவது பற்றி சில டிப்ஸ்களையும் வழங்கியுள்ளாராம். அத்தோடு, எந்த ஒரு காட்சியிலும் நடிப்பதற்கு முன்னர், வசனங்களைத் தெளிவாக படித்து விடும்படி அறிவுரை கூறினார் தனுஷ் எனத் தெரிவித்துள்ளார் பரத்.

தேசிங்கு ராஜா: 350 அரங்குகளில் வெளியாகும் விமலின் முதல் படம்!


சென்னை: எஸ் எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள தேசிங்கு ராஜா படம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மதன் வழங்க ஒலிம்பியா மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “தேசிங்கு ராஜா”.

தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் ஜெய், சுவாதி


சுப்பிரமணியபுரம் படத்தில் ஜெய்யுடன் ஜோடியாக நடித்த சுவாதி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜெய்யுடன் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை தயாரிப்பது தயாநிதி அழகிரி.
சுப்பிரமணியபுரம் சுவாதிக்கு தமிழில் சுக்கிரதிசையாக அமையவில்லை. படம் சூப்பர்ஹிட். ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள்தான் வரவில்லை. அதன் பிறகு உருப்படியாக கிடைத்தது போராளி மட்டுமே. அதேநேரம் மலையாளத்தில் பல பெரிய வாய்ப்புகள். பகத் பாசில் ஜோடியாக இவர் நடித்த ஆமென் ஹிட்டானதால் மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
தமிழில் அத்தி பூத்தது போல் மீண்டும் ஒரு வாய்ப்பு. அதே ஜெய்யுடன். தயாரிப்பு தயாநிதி அழகிரி. இசை அனிருத்.
இந்தப் படமாவது சுவாதிக்கு தமிழில் தொடர் வாய்ப்புகளை பெற்றுத் தருமா?

தியேட்டர் அதிபர்கள் அவசர கூட்டம்: விஜய்யின் தலைவா படம் நாளை ரிலீசாகுமா?


விஜய், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள தலைவா படம் நாளை (9–ந்தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தை மதராச பட்டணம் விஜய் இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை மற்றும் உலகம் முழுவதிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படும் என்று சந்திர பிரகாஷ் ஜெயின் கூறினார்.
நேற்று காலை தியேட்டர்களில் முன்பதிவு துவங்க இருந்தது. இந்த நிலையில் திடீரென்று தலைவா படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் மாணவர் புரட்சிப்படை என்ற பெயரில் தியேட்டர்களுக்கு வந்த மர்ம கடிதத்தில் தலைவா படத்தை திரையிட்டால் உங்கள் தியேட்டரில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. போன் மூலமும் மிரட்டல்கள் வந்தன.
இதையடுத்து டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் தலைவா படம் திட்டமிட்டபடி நாளை ரிலீசாகுமா என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. தலைவா அரசியல் படம் அல்ல என்றும் வதந்திகள் பரப்பப்படுவதை நம்ப வேண்டாம் என்றும் விஜய் அறிவித்தார். இப்பிரச்சினை குறித்து விவாதிக்க தியேட்டர் அதிபர்கள் சங்கம் கூட்டம் நேற்று மாலை பிலிம்சேம்பரில் நடந்தது. சங்க தரைவர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார். இதில் தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர்.
நள்ளிரவுவரை கூட்டம் காரசாராக நடந்தது. தலைவா படத்துக்கு மறு தணிக்கை குழு யூ சான்றிதழ் அளித்துள்ளது. வரி விலக்கு குழுவினருக்கு படத்தை திரையிட்டு காட்டி வரி விலக்கு பெற்று தர வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டது. தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. தயாரிப்பாளர் தரப்பில் வரி விலக்கு குழுவுக்கு படத்தை திரையிட்டு காட்ட ஏற்பாடு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது.
வரி விலக்கு குழுவினர் இன்று படம் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரி விலக்கு அளிக்கலாம் என அவர்கள் சான்றிதழ் அளித்தால் படம் நாளை ரிலீசாகும் என கூறப்படுகிறது.

தலைவா அரசியல் படமல்ல: நடிகர் விஜய்


‘தலைவா’ படம் நாளை மறுநாள் (9–ந்தேதி) தமிழகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் ‘தலைவா’ படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இப்படம் அரசியல் படம் என்றும் செய்தி வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
‘தலைவா’ படம் குடும்பத்தோடும், குழந்தைகளோடும் எல்லோரும் ரசிக்க கூடிய ஜனரஞ்சகமான படம். இந்த படத்தில் ‘காதல்’ ஆக்ஷன், காமெடி போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் அல்ல.
யாரோ சிலர் இது அரசியல் படம் என்று வதந்திகள் பரப்பி வருகிறார்கள். யாரும் இதை நம்ப வேண்டாம். துளி கூட அரசியல் இல்லாத ஒரு சமூக படம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
இது போல் டைரக்டர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோரும் தலைவா அரசியல் படம் அல்ல என்று அறிவித்து உள்ளனர்.

அஜித்தின் ‘ஆரம்பம்’ பட காட்சி இன்டர்நெட்டில் வெளியானது: படக்குழுவினர் அதிர்ச்சி


அஜீத், நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘ஆரம்பம்’ படத்தில் ஆர்யா, டாப்சி போன்றோரும் நடித்துள்ளனர். விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். இப்படத்தின் டப்பிங், ரீரிக்கார்டிங், மிக்சிங் பணிகள் தற்போது நடந்து வருகின்றது. அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.
இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் ஸ்டில்கள் கடந்த வாரம் வெளியானது. அவற்றுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆரம்பம் பட காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஜீத் முக்கிய சீன் ஒன்றில் நடித்துக் கொண்டு இருப்பதுபோல் இக்காட்சி உள்ளது. படப்பிடிப்பு நடந்தபோது யாரோ திருட்டுத்தனமாக படம் பிடித்து இன்டர்நெட்டில் வெளியிட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஸ்டுடியோவில் இருந்து யாரேனும் திருடி வெளியிட்டு இருக்கலாமோ என்ற ஐயப்பாடும் எழுந்துள்ளது.
படக்காட்சிகள் இன்டர்நெட்டில் பரவியுள்ளதால் ‘ஆரம்பம்’ படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்னர். விஷமிகளை கண்டுபிடிக்க விசாரணை நடக்கிறது. ‘ஆரம்பம்’ பட சீன்கள் இன்டர்நெட்டில் வெளியானதை டைரக்டர் விஷ்ணுவர்தனும் உறுதி செய்துள்ளார்.
டுவிட்டரில் இதுகுறித்து அவர் கூறும்போது, இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. என்னுடைய படக்குழுவினர் யாரும் இந்த காட்சியை வெளியிடவில்லை. அதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். இதை கண்டுபிடிக்க விசாரணை நடக்கிறது என்றார்.

ஜெயலலிதாவை சந்திக்க சென்ற நடிகர் விஜய்க்கு அனுமதி மறுப்பு!




சென்னை: 'தலைவா' படப்பிரச்னை குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் விஜய் ஆகியோர் முயற்சி செய்ததாகவும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடித்த 'தலைவா' படம் நாளை (9.8.2013) வெளியாக இருந்த நிலையில், இந்தப் படம் அரசியல் படம் என்றும், அதனை திரையிட்டால் திரையரங்குகளில் குண்டு வைப்போம் என்றும் மிரட்டல் வந்ததை அடுத்து படம் திரையிடுவதில் சிக்கல் எழுந்தது.

மேலும், போலீஸார் தங்கள் தரப்பில் அத்தனை திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு அளிக்க இயலாது என்று கூறியிருந்தனர்.

இதையடுத்து விஜய், 'தலைவா' படம் அரசியல் படமல்ல. குழந்தைகளோடு குடும்பமாக ரசிக்க வேண்டிய ஜனரஞ்சகமான படம் என அறிக்கை விட்டிருந்தார்


இந்தநிலையில், கொடநாட்டில் தங்கியுள்ள முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், படத்தின் இயக்குனர் விஜய் ஆகியோர் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கொடநாடு செல்வதற்கு முன்பே கெரடாமட்டம் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடி பகுதியிலேயே இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

'தலைவா' படத்திற்கு பாதுகாப்பு கேட்பது தொடர்பாக முதல்வரைச் சந்தித்து விளக்கம் அளிக்க நினைத்து கொடநாடு சென்றார்களாம். இந்த தகவலை உறுதிப்படுத்துவதற்காக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை தொடர்பு கொள்ள முயன்றபோது அவருடைய செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. முதல்வரை சந்திக்க சந்திரசேகரும், இயக்குனர் விஜய்யும் மட்டுமே சென்றதாகவும், நடிகர் விஜய் செல்லவில்லை என்று மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

Wednesday, August 7, 2013

Selvaraghavan speaks about present days of Tamil cinema | Irandam Ulagam Audio Launch


Ameer and karupalaniaapan: Proof's Regarding Director Cheran's Daughter Issue | Press Meet


‘தலைவா’ டிக்கெட் முன்பதிவை திடீர் என்று நிறுத்திய சென்னை தியேட்டர்கள்



சென்னை தியேட்டர்களில் தலைவா படத்திற்கான டிக்கெட் முன்பதிவு திடீர் என்று நிறுத்தப்பட்டுள்ளது.
விஜய்யின் தலைவா படம் ரம்ஜான் பண்டிகை தினமான நாளை மறுநாள் உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது. விஜய் ரசிகர்கள் தலைவா படத்தின் முதல்நாள் முதல் காட்சியை பார்க்க டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை நகரில் உள்ள தியேட்டர்கள் தலைவா பட டிக்கெட் முன்பதிவை திடீர் என்று இன்று நிறுத்தியுள்ளன. இதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த பிரச்சனைக்கான காரணம் விரைவில் தெரிய வரும்.
தலைவா தமிழகத்தில் மட்டும் 978 ஸ்கிரீன்களில் ரிலீஸ் ஆகிறது என்று தகவல் கிடைத்துள்ளது.

ஹாலிவுட் படமாகும் ரஜினியின் கோச்சடையான்!


இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். இப்படத்தில் அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் ரஜினி. இப்படத்தின் ட்ரெய்லர் உலகத்திரைப்பட விழாவின்போதே வெளியாவதாக இருந்தது. ஆனால் ட்ரெய்லர் எதிர்பார்த்தபடி இல்லாததால் ட்ரெய்லர் வெளியிடுவதை அப்போதைக்கு நிறுத்தி வைத்தார் ரஜினி. அதையடுத்து இப்போது அதிரடியான ட்ரெய்லர் ஒன்றை தயார் செய்து கொண்டிருக்கிறார்களாம்.
இதற்கிடையே, தமிழ், தெலுங்கு, இந்தி, ஜப்பான், ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உருவாகும் கோச்சடையான் படத்தின் ஆங்கில டப்பிங் வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. லண்டனில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் டப்பிங் மற்றும் இசைக்கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக லண்டனில் முகாமிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், பின்னணி இசைப்பதிவை முடித்து விட்டவர், எபக்ட்ஸ், மிக்ஸிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
ஆரம்பத்தில் தமிழ் படம் என்று உருவான கோச்சடையான் இப்போது ஹாலிவுட்டில் உருவான அவதார் படத்துக்கு இணையானதாகி விட்டதால், ஹாலிவுட் படம் போன்றே வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
அதேசமயம், இன்னும் ஓரிரு மாதங்களில் படத்தை திரைக்கு கொண்டு வந்து விடுவோம் என்று தயாரிப்பு தரப்பு அவ்வப்போது செய்தி வெளியிட்டு வந்தபோதிலும், விசாரித்ததில், இந்த ஆண்டு இறுதியில்தான் கோச்சடையான் திரைக்கு வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.