தனுஷ் தற்போது ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை புது இயக்குனர் வேல்ராஜ் இயக்குகிறார். இவர் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனர் ஆனவர். வெற்றிமாறனின் அனைத்து படங்களிலும் ஒளிப்பதிவு செய்துள்ள இவர், தனுசின் படங்களிலும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தனுஷ் உடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பற்றி வேல்ராஜ் கூறுகையில், நானும், தனுசும் பட சூட்டிங் இடைவேளையில் நிறைய பேசிக்கொள்வோம். ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒளிப்பதிவாளராக இருக்கும் நீங்கள் கடினமான இயக்குனர் துறையை பற்றி உணர்ந்திருக்கிறீர்களா? என்று ஜாலியாக கேட்டார். மேலும், நான் தேதி ஒதுக்கி தந்தால் உங்களால் படம் இயக்க முடியுமா? என்றும் தனுஷ் கேட்டார் என்று பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
இந்த சவாலை அடுத்து புதிய இயக்குனராக வேல்ராஜ், தனுசுடன் கைகோர்த்துள்ளார்.
இந்த படத்தைப்பற்றி மேலும் வேல்ராஜ் கூறுகையில், இது ஒரு அழகான காதல் கதை. தனுஷ் ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். இவர் டாக்டராக வருகிறார். இயக்குனர் சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன் தனுசுக்கு பெற்றோராக வருகின்றனர்.
No comments:
Post a Comment