சென்னை: விஸ்வரூபம் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பின் போது தாடையில் அடிபட்டுள்ளது. ஆனால் அந்த காயத்தோடு அவர் இளையராஜாவின் லண்டன் இசை நிகழ்ச்சி குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார்.
அதில் “அது என்ன மாயமோ தெரியல.. இளையராஜா இசைன்னாலே காயம் கூட ஆறிடும்” என்று குறிப்பிட்டுள்ளார். இசைஞானி இளையராஜா முதல் முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
இதில் எஸ்பி பாலசுப்ரமணியம், ஜெயச்சந்திரன், சாதனா சர்க்கம் உள்பட முன்னணி இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் தீவிர ரசிகரான கமல்ஹாஸனும் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தான் பங்கேற்பது குறித்து விஸ்வரூபம் 2 படப்பிடிப்பிலிருந்த கமல் அளித்துள்ள வீடியோ பேட்டியில், “விஸ்வரூபம்-2 கிட்டத்தட்ட 90% முடிந்துவிட்டது. இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன. இருந்தாலும் இந்தப் பேட்டியைக் கொடுக்கிறேன். தாடையில் இருக்கும் இந்தக் காயம் கூட விஸ்வரூபத்தில் பட்டுக்கொண்டதுதான்.
ஆனால் அது அங்கே வரும்போது ஆறிடும். அது என்னவோ தெரியல.. என்ன மாயமோ தெரியல.. என்ன மேஜிக்கோ தெரியல… இளையராஜா இசைன்னாலே காயம் கூட தன்னால ஆறிடும் (குணா பாடல் பாணியில் பேசிக் காட்டினார்!). ஆகஸ்ட் 24.. ஓ2 லண்டன்… உங்களுடன் நானும்.. இளையராஜாவின் ரசிகனாக.. அங்கே அமர்ந்திருப்பேன். வணக்கம்”, என்றார்.
No comments:
Post a Comment