கார்த்தி நடிக்க வெங்கட்பிரபு பிரியாணி கிண்டிக் கொண்டிருக்கிறார். அதற்கிடையில் பீட்சா வந்து எல்லோருக்கும் ஷாக் கொடுத்தது. பீட்சாவ இயக்கியவரே இப்போது ஜிகிர்தண்டா டைரக்ட் செய்து கொண்டிருக்கிறார்.
ஆசை தோசை என்று டி.பி.கஜேந்திரன் ஒரு படம் டைரக்ட் செய்கிறார். பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்த கல்யாண சமையல் சாதம் என்ற படம் ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது.
இந்த நிலையில் சென்னையின் பாப்புலரான வடகறி என்ற புதிய படத்தை மேகா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இதில் ஜெய் ஹீரோ. ஹீரோயின் சுவாதி. சரவணராஜன் டைரக்ட் செய்கிறார். ஆகஸ்ட் 19ந் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. மற்ற நடிகர் நடிகைகள் செலக்ஷன் நடந்து வருகிறது.
ஒரு ஸ்பெஷல் தகவல் என்னவென்றால் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் அனுஷா தயாநிதி.
No comments:
Post a Comment