Tuesday, August 13, 2013

இரண்டாம் உலகம் வெற்றி பெற்றால் ஆர்யாவும் பெரிய ஹீரோதானாம்!




சினிமா உலகில் படங்களின் வெற்றிதான் நடிகர்களின் மார்க்கெட்டை தீர்மானிக்கிறது. அந்த வகையில் சமீபகாலமாக 100 கோடி 150 கோடி என்று மெகா பட்ஜெட்டில் தமிழ்ப்படங்களே உருவாகி வருகின்றன. அந்த மாதிரி படங்களில் நடிக்கும் நடிகர்களும் 30 முதல் 40 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள்.
இந்த நிலையில், தற்போது வளர்ந்து வரும் ஆர்யா சமீபத்தில்தான் கோடிகளை எட்டிப்பிடித்திருக்கிறார். இந்த நேரத்தில் அவர் நடித்துள்ள இரண்டாம் உலகம் படம் 60 கோடியில் தயாராகி உள்ளதாம். ஆனால் அவர் நடித்த தற்போதைய படங்கள் 10 முதல் 15 கோடிகள் வரைதான் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நேரத்தில் திடீரென்று 60 கோடி பட்ஜெட் ஆர்யாவை நம்பி படமெடுத்திருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் செல்வராகவன். அதோடு அனுஷ்கா என்ற மெகா நடிகையும் படத்தில் இருப்பதால் எப்படியும் படத்தை வியாபாரம் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் படவேலைகளை முடித்து விட்டு தற்போது வியாபாரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அதனால் தனது கேரியரில் இரண்டாம் உலகம் முக்கியமான படம் என்று நினைக்கும் ஆர்யா, வியாபார ரீதியாக இப்படம் வெற்றி பெற்றால் நாமும் முன்னணி ஹீரோவாகி விடுவோம் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்

No comments:

Post a Comment