Sunday, August 11, 2013

100 நாளை கடந்தது எதிர்நீச்சல்


தனுஷ் முதன் முதலாக தயாரித்த எதிர்நீச்சல் படம் 100 நாட்களைத் தாண்டி சென்னையில் இன்னும் ஒருசில தியேட்டர்களில் ஒரு காட்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தனுசை தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக்கியது.
அறிமுக இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமாருக்கு நல்ல இயக்குனர் அந்தஸ்தை தேடிக் கொடுத்திருக்கிறது. பத்து லட்சத்துக்குள் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த பிரியா ஆனந்த் சம்பளத்தை அரைக்கோடி ஆக்கிவிட்டிருக்கிறது.
கொலைவெறி அனிருத்துக்கு அடுத்த வெற்றி ஆல்பம் அமைந்து அவரையும் பிசியாகிவிட்டது. படத்தை வாங்கிய வேந்தர் மூவீசின் பேங் பேலன்சை எகிற வைத்தது.
6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 42 கோடி வசூலித்திருப்பதாக கணக்கு சொல்கிறார்கள். இணை ஹீரோ, செகண்ட் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை சோலோ ஹீரோவாக்கி தைரியமாக ஒரு கோடி சம்பளம் கேட்க வைத்திருக்கிறது. ஆக மொத்தம் வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடித்தால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தியிருக்கிறது.

No comments:

Post a Comment