Tuesday, August 13, 2013

இந்திய விருதை விட ஆஸ்கர் விருது ஒன்றும் பெரிதல்ல! நாசர் பேச்சு



கோலிவுட்டின் குணசித்ர நடிகர்களில் நாசர் குறிப்பிடத்தக்கவர். இவர், இந்திய அரசு வழங்கும் தேசிய விருதினை விட அமெரிக்க அரசு கொடுக்கும் ஆஸ்கர் விருது ஒன்றும் பெரிதல்ல என்று கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோட்டில் ஒரு புத்தக திருவிழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் நாசரிடம் வாசகர்கள் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். அந்த கேள்விகளுக்கு அவர் ஆர்வமாக பதிலளித்தார்.
அப்போது, ஆஸ்கர் விருது பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட படங்களில் சிறந்ததை தேர்வு செய்து இந்திய அரசு தேசிய விருது கொடுக்கிறது. அதேபோல் அமெரிக்க அரசு அந்நாட்டில் பதிவு செய்யப்பட்டு படமாக்கப்படுவதில் சிறந்த படத்தை தேர்வு செய்து கொடுப்பதுதான்ஆஸ்கர் விருது. அந்த வகையில், இந்திய அரசு தரும் விருதினை போல்தான் ஆஸ்கர் விருதும். நமது தேசிய விருதினை விட அது எந்த வகையிலும் சிறந்ததல்ல.
மேலும், அவர்களெல்லாம் இந்திய அரசு விருது கிடைக்கவில்லையே என்று யாரும் கூறுவதில்லை. அப்படியிருக்க நம்முடைய கலைஞர்கள் மட்டும் எதற்காக அந்த விருதினை பெரிதாக மதித்து அதற்காக ஏங்க வேண்டும்,’’ என்றும் கூறியுள்ளார் நாசர்.
மேலும், நம்முடைய நடிப்பு மேதை சிவாஜிகணேசன், அவருக்கே சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லை. அதனால் இந்த விருதுகளை எப்போதுமே நான் பெரிதாக மதிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment