ஜெயபாலாஜி ரியல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் கோபிசந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை கோபால் இயக்குகிறார். இப்படத்தின் தொடக்க விழா இன்று ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடந்தது. இதில் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், தரணி, நடிகர் கோபிசந்த், நடிகை நயன்தாரா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் 1-ம் தேதி சுவிட்சர்லாந்தில் ஆரம்பிக்கப் போவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். மணிசர்மா இசையமைக்கிறார். பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
நடிகர் ‘கோபிசந்த்’ தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். தமிழில் ‘ஜெயம்’ படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்றார். தற்போது இந்த படத்தின் மூலம் முதன்முதலாக நேரடியாக தமிழ் படத்தில் நடிகராக நடிக்கிறார். நயன்தாரா, அஜீத் ஜோடியாக நடித்த ‘ஆரம்பம்’ படத்தின் வேலைகள் முடிவடைந்து வெளியாக தயாராக உள்ளது. மேலும் ‘ராஜாராணி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் வேலைகள் முடிந்ததும் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment