செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா- அனுஷ்கா நடித்துள்ள படம் இரண்டாம் உலகம். இரண்டு வருடங்களுக்கும் மேலாக வளர்ந்து வரும் இப்படத்தின் ஆடியோவை சமீபத்தில்தான் வெளியிட்டார்கள். ஆனால் படத்தை வெளியிடும் தேதிகள் முடிவாகவில்லை.
ஆனால், இந்த படத்துக்குப்பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்யா கமிட்டான படம் ராஜாராணி. ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் இப்படம் வேகமாக வளர்ந்து நிற்கிறது. அதனால் அடுத்த மாதம் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த செய்தியை கேள்விப்பட்ட செல்வராகவன் ஷாக் ஆகியுள்ளாராம். ஆர்யாவை முதலில் கமிட் பண்ணியது நான்தான். அதனால் என் படம்தான் முதலில் வெளியாக வேண்டும் என்கிறாராம். ஆனால், ராஜாராணி யூனிட் அதை கேட்பதாக இல்லை. இரண்டாம் உலகம் எப்போது ரிலீஸ் என்றே அறிவிக்கவில்லை. ஆனால், நாங்கள் செப்டம்பர் மாதம் கடைசியில் வெளியிட முடிவு செய்து விட்டோம் என்கிறார்கள்.
ஆர்யாவும், அதையே விரும்புகிறாராம். இரண்டாம உலகத்துக்காக ராஜாராணியை தள்ளி வைத்தால், இன்னும் ஆறு மாத காலமாவது ஆகி விடும். அதனால் ராஜாராணி முதலில் ரிலீஸ் செய்து விடுங்கள் என்று கருத்து சொல்லியிருக்கிறாராம்.
No comments:
Post a Comment