சென்னை: அஜித் நடிக்கும் 54 வது படமான வீரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சென்னை மாநகரமெங்கும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
நாகி ரெட்டியின் விஜயா வாகினி நிறுவனம் தயாரிக்கும் 100 வது படத்தில் அஜித் நடிக்கிறார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்திற்கு விநாயகம் பிரதர்ஸ்' என டைட்டில் வைக்கப்பட உள்ளதாக பேசப்பட்டது.
ஆனால் ரொம்பவும் தாமதம் செய்யாமல் கடந்த வாரம் படத்திற்கு ‘வீரம்‘ என டைட்டில் அறிவிக்கப்பட்டது. சுதந்திர தினமான இன்று சென்னை நகரம் முழுவதும் பட்டு வேட்டி, பட்டு சட்டை பளபளக்க அஜீத் ஸ்டைலாக சிரித்தபடி அமர்ந்திருக்கும் போஸுடன் கூடிய ‘வீரம்' பட போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது
வீரம் போஸ்டர் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. காரணம், ‘ஆரம்பம்‘ படத்துக்குதான் டைட்டில் மாற்றி இருக்கிறார்கள் என்று சிலர் பேச ஆரம்பித்துவிட்டனர்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ‘ஆரம்பம்' கடந்த ஒரு வருடமாக இதன் ஷூட்டிங் நடந்தபோதிலும் டைட்டில் வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
போஸ்டரைப் பார்த்த சிலரோ ‘ஆரம்பம்' படத்துக்கு முன் ‘வீரம்'படம் தான் முதலில் திரைக்கு வரும் என்று சிலர் பேசிக்கொண்டனர். காரணம் ஆரம்பம் பட போஸ்டர் ஒரு இடத்தில் கூட காணப்படவில்லை. வீரம் போஸ்டர்தான் நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ளது.
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தின் அஜித்தின் 53 வது படத்திற்கு ‘வலை', ‘பறவை', ‘தல' என பல்வேறு டைட்டில்கள் ஆலோசிக்கப்பட்டது. ஒரு வழியாக ஆரம்பம் படத்தின் டைட்டிலை இயக்குனர் அறிவித்தார்
வீரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்போது வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தினாலும் ‘ஆரம்பம்' படம்தான் முதலில் திரைக்கு வரும். வீரம் அடுத்த ஆண்டு பொங்கலுக்குதான் ரிலீஸ் என்கின்றனர் பட யூனிட்டார்.
No comments:
Post a Comment