Thursday, August 15, 2013

நான் ரஜினி ரசிகன், ஆனால் 'தல' ரசிகனும் கூட: வெங்கட் பிரபு



சென்னை: தான் அஜீத் குமாரை புகழ்வதில் சிலருக்கு பிரச்சனையாக இருந்தால் தான் என்ன செய்ய முடியும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். 

அஜீத்தும், விஜய்யும் தனது நண்பர்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு அஜீத் குமாரை புகழ்ந்து வருகிறார். திரைத்துறையில் எத்தனையோ நடிகர்கள் இருக்கையில் அவர் ஏன் அஜீத் புகழ் பாடுகிறார் என்று ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது.

 அதற்கு அவர் என்ன பதில் அளித்தார் என்று பார்ப்போம்.

நான் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன். ஆனால் எனக்கு அஜீத்தும் பிடிக்கும் என்றார் வெங்கட் பிரபு.

என்னைவிட எஸ்.பி.பி. சரண் தான் அஜீத்துக்கு நெருக்கமானவர். அவர்கள் இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்று வெங்கட் கூறினார்.

நான் அஜீத்துடன் படம் பண்ணும் முன்பே அவருடைய ரசிகன்.


 சென்னை 28 போன்ற லோக்கல் படத்தை எடுத்த என்னுடன் பணியாற்ற எந்த நடிகரும் முன் வரவில்லை. ஆனால் அஜீத் குமாரோ கதையைக் கூட கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்டார்.

அஜீத் என்னுடைய நண்பரும் கூட. நாங்கள் ஜி படத்தில் ஒன்றாக நடித்தோம். விஜய், சூர்யா, சிம்பு, விஷால் ஆகியோரும் எனது நண்பர்கள். நான் அஜீத்தை புகழ்வதில் அவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. சிலருக்கு அது பிரச்சனையாக இருந்தால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? என்றார்.

No comments:

Post a Comment