ரா-ஒன் படத்தையடுத்து ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சென்னை எக்ஸ்பிரஸ். இப்படத்தை வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் வியாபார ரீதியாக வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, ரஜினியை புகழ்ந்த ஷாரூக்கான்-தீபிகா படுகோனே இருவரும் பாடுவது போன்ற ஒரு லுங்கி டான்ஸ் பாடலும் இடம்பெற்றது.
இதற்கிடையே, தமிழில் விஜய் நடிப்பில் கடந்த 9-ந்தேதி அன்று வெளியாகவிருந்த தலைவா மற்றும் பவன் கல்யாண் நடிப்பில் ஆந்திராவில் வெளியாக இருந்த படமும் வெளியாகவில்லை. இதனால் அந்த படங்களுக்காக புக் பண்ணி வைத்திருந்த தியேட்டர்கள் அனைத்திலுமே சென்னை எக்ஸ்பிரஸ் வெளியானது. இதனால் எதிர்பாராத வகையில் அப்படம் வசூலிக்கத் தொடங்கியது.
அந்த வகையில் உலகம் முழுவதிலும் 3500 தியேட்டர்களில் திரையிடப்பட்ட அப்படம், 4 நாட்களில் 100 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாம். அதிலும் தென்னிந்தியாவில் இதுவரையில்லாத அளவுக்கு தனது படம் வசூல் சாதனை புரிந்துள்ளதால் அதிக உற்சாகத்தில் இருக்கிறாராம் ஷாரூக்கான்.
No comments:
Post a Comment