ஐஸ்வர்யாராயைப்போலவே இந்திய சினிமாக்களில் நடித்து வந்த இன்னொரு உலக அழகி சுஷ்மிதா சென். இவர் தமிழில் நாகார்ஜூனா நடித்த ரட்சகன் என்ற படத்தில்தான் நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கியவர் பிசியான நடிகையாகி விட்டார்.
இவருக்கு குழந்தைகள் மீது அலாதி பிரியம். அதனால், திருமணம் செய்து கொள்ளாமலேயே சில குழந்தைகள் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அதன்காரணமாக, படங்களில் அதிகமாக நடிப்பதைகூட தவிர்த்து விட்டு குழந்தை வளர்ப்பிலேயே ஆர்வம் காட்டி வந்த சுஷ்மிதாசென், கடந்த 2010ம் ஆண்டு இந்தியில் நடித்த நோ ப்ராபளம் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார்.
ஆனால் இப்போது அவருக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். அதனால் தனது அபிமான பாலிவுட் இயக்குனர்களுக்கு சான்ஸ் கேட்டு தூது விட்டு வரும் சுஷ்மிதாவிடம், இப்போது அவருக்கு 37 வயதாகி விட்டதை முன்வைத்து சிலர் வித்தியாசமான கேரக்டர் ரோல்களில் நடிக்கக் கேட்டபோது தடாலடியாக மறுத்து விட்டாராம்.
கதாநாயகியாக நடிக்க வயது ஒரு தடையாக இருக்க முடியாது. எனது இளமை இன்னும் அப்படியேத்தான் உள்ளது. இப்போதும் என்னை ரசிகர்கள் முன்பு மாதிரியே ரசிப்பார்கள். அதனால் என்னை நம்பி ஹீரோயினி சான்ஸ் கொடுங்கள் என்று வம்படியாக கேட்டு வருகிறாராம். ஆனபோதும், இன்னமும் எந்த புதிய படமும் சுஷ்மிதா சென்னுக்கு புக்காகவில்லையாம்.
No comments:
Post a Comment