தூத்துக்குடியில் திரைப்பட பாடகி பி.சுசீலாவுக்கு வருகிற 11ந்தேதி பாராட்டு விழா நடக்கிறது. தூத்துக்குடி மாநகர காந்திய சேவாமன்ற தலைவர் தெ.பரமசிவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்ட பின்னணி பாடகி பி.சுசீலா பாடல் ரசிகர்கள் சார்பில், பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு வருகிற 11ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு தூத்துக்குடி ஏ.எஸ்.கே.ஆர். மகாலில் பாராட்டு விழா நடக்கிறது. இவர் 60 ஆண்டுகளுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி கோடான கோடி உள்ளங்களை கவர்ந்தவர். விழாவில் பாடகி பி.சுசீலா தனது குடும்பத்தினருடன் கலந்து கொள்கிறார். அலெக்ஸ் கைலாஷ் இசைக்குழுவினரின் இசையில் 10க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடுகிறார். விழாவில் கலைத்துறை சாதனையை கவுரவித்து பி.சுசீலாவுக்கு 5 பவுன் தங்க சங்கலி அணிவிக்கப்படுகிறது.
விழாவுக்கு காந்திய சேவாமன்ற நிறுவனரும், விழாக்குழுத் தலைவருமான என்.வீ.ரஜேந்திரபூபதி தலைமை தாங்குகிறார். முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தூத்துக்குடி மாநகர காந்திய சேவாமன்ற தலைவர் தெ.பரமசிவன் தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment