Monday, August 12, 2013

ஆகஸ்ட் 23ம் தேதி ராஜா ராணி ஆடியோ ரிலீஸ்!



ஆர்யா – நயன்தாரா நடித்துள்ள ‘‘ராஜா ராணி’’ படத்தின் ஆடி‌யோ ரிலீஸ் விழா வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கியுள்ள படம் ‘‘ராஜா ராணி’’. இப்படத்தில் ஆர்யா – நயன்தாரா நடித்துள்ளனர்.
இவர்களுடன் ஜெய், நஸ்ரியா நஷீம், சந்தானம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த வருடத்தின் சிறந்த காதலுடன் கூடிய இசை படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் படம் ராஜா ராணி என படத்தின் இயக்குனர் அட்லீ கூறியிருந்தார்.
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இனிமையான பாடல்கள், நெஞ்சை நிறைய வைக்கும் இசை எல்லோரையும் கவர கூடியது என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இசை உரிமையை ‘திங்க் மியூசிக்’ நிறுவனம் வாங்கி உள்ளது.

No comments:

Post a Comment