சிங்கம்-2 படத்தையடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில்தான் சூர்யா நடிப்பதாக இருந்தது. அதற்கான பூஜைகூட நடந்தது. ஆனால், அதையடுத்து, கெளதம் சொன்ன கதையில் திருப்தி இல்லாமல் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போவதாக கூறப்பட்டது. அதையடுத்து, லிங்குசாமி சொன்ன கதையும் சீமானின் பகலவன் கதை என்று வேறொரு பிரச்னை வெடிக்க, அவரும் கதையை மாற்றி வருவதாக சொன்னார்கள்.
இந்த பிரச்னைகளைத் தொடர்ந்து சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி உள்ளிட்ட சில வளர்ந்து வரும் இயக்குனர்களிடம் சூர்யா தீவிரமாக கதை கேட்டு வருவதாக கடந்த சில தினங்கள் வரை செய்திகள் புகைந்தன.
ஆனால், நேற்று முதல், கெளதம்மேனன் சூர்யா விரும்பிய வகையில் கதையை தயார் செய்து விட்டதாக ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. அதோடு இம்மாதம் 20ந் தேதியே படப்பிடிப்பை தொடங்கப்போவதாகவும் கூறுகிறார்கள். இதனால் அப்படத்தில் நடிக்க சூர்யா தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்க, கெளதம்மேனன் யூனிட் படப்பிடிபபு ஏற்பாடுகளில் தீவிரமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இதுபற்றிய முறையான அறிவிப்புகள் எதுவும் வெளியிடாமலேயே அவுட்டோர் பறக்கிறதாம் கெளதம்மேனன் டீம்.
No comments:
Post a Comment