இரண்டாவது இன்னிங்சில் என்ட்ரி ஆனபோது, படப்பிடிப்பு தளங்களில் மூடியாக அமர்ந்திருப்பார் நயன்தாரா. கேட்டால், பிரபுதேவாவின் பிரிவை மனதில் வைத்துக்கொண்டு இப்போது ஆண்களையே எனக்குப்பிடிக்கவில்லை என்று விரக்தியாக பதிலளித்து வந்தார்.
ஆனால், காலப்போக்கில் நடிகர்களை விட்டு விலகி நிற்பது மார்க்கெட்டுக்கே ஆப்பு வைத்து விடும் என்பதை புரியத் தொடங்கினார் நயன்தாரா.
அதனால், இப்போது பப்ளிக்காக நடிகர்களுடன் அரட்டையடிப்பதை தவிர்த்து விட்டு, தனிமையில் சந்திக்கும் வேளைகளில் சகஜமாக பேசுகிறாராம். அதிலும் முன்பைவிட அளவுக்கதிகமான நெருக்கமும், அந்நியோன்யமும் காட்டுகிறாராம்.
இதனால், இன்ப அதிர்ச்சியடையும் நடிகர்கள், தங்களை புக் பண்ண வரும இயக்குனர்களிடம், புதுமுகங்களை நடிக்க வைப்பதோடு, நயன்தாரா மாதிரி திறமையான நடிகைகளை நடிக்க வைத்தால், காட்சிகள் நன்றாக வரும். அதோடு, ஓரிரு டேக்கிலேயே ஒவ்வொரு ஷாட்டும் ஓ.கேவாகி விடும் என்று மறைமுக சிபாரிசு செய்கிறார்களாம்.
மேலும், ஆரம்பம் படத்தில் மீண்டும் நயன்தாரா கவர்ச்சி கோதாவில் இறங்கியிருப்பதை அறிந்த சில ஆந்திர ஹீரோக்கள்,மறுபடியும் அவருடன் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்களாம். அதனால் அனாமிகா படத்தை முடித்ததும், அடுத்த ரவுண்டை ஆந்திராவில் அமோகமாக ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளாராம் நயன்தாரா.
No comments:
Post a Comment