சென்னை: தெய்வத்திருமகள் வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் விஜய், பேபி சாராவை வைத்து ‘சைவம்’ என்ற பெயரில் அடுத்த படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார்.
‘தலைவா’ படத்திற்குப் பிறகு விஜய்யை வைத்தே அடுத்த படத்தை இயக்கப் போகிறார் விஜய் என பரவிக் கொண்டிருந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் டைரக்டர் விஜய்.
இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாம். பெரிய, பிரபலமான நடிகர்களை வைத்து படம் பண்ணியவர்கள் மீண்டும் அது போன்ற படங்களைத் தயாரிக்கவே விரும்புவர். ஆனால், விஜய் இதிலிருந்து வேறு பட்டுள்ளார்.
No comments:
Post a Comment