இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் படங்கள் இயக்காவிட்டாலும் பிஸியாகவே இருந்து வருகிறார். முக்கியமான சில இயக்குனர் நண்பர்களுக்கு கதையில் ஏற்படும் சில சிக்கல்களுக்கு தீர்வு சொல்லி அனுப்புவார்.
இதற்கிடையே தான் இயக்கப் போகும் ஒரு படத்தின் கதை விவாதத்தை செய்து கொண்டிருக்கிறார். இன்றைய இளைய இயக்குனர்களுக்கு போட்டி போடும் விதமாக சீன்கள் புதுமையாகவும், வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என ஒவ்வொரு காட்சிகளையும் அழகாக செதுக்கி வருகிறார்.
இத்தனைப் பணிகளுக்கிடையேயும் தனது மகன் சாந்தனு, விஷ்னு, சந்தானம் மூவரும் நடிக்க, தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த சிஷ்யன் ஒருவர் இயக்கும் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி கொடுத்து, சிஷ்யனுக்கு மரியாதை செய்துள்ளார் இயக்குனர் பாக்யராஜ்.
No comments:
Post a Comment