Thursday, July 4, 2013

சமுத்திரம் தாண்டும் சரஸ்வதி சபதம்

சிவா‌ஜி கணேசனின் மறக்க முடியாத காவியம் சரஸ்வதி சபதம். அந்தப் பெயரை வேறொரு படத்துக்கு வைப்பதா என்று சில முரட்டு நடிகர் திலகம் பக்தர்கள் கோபப்பட்டதுடன் போராட்டமும் நடத்தினர். படத்தின் பெயரை உடனே மாற்றுவார்கள் என்றே பலரும் நம்பினர். ஆனால் புதிய சரஸ்வதி சபதம் டீம் டபுள் ஸ்ட்ராங். அதே பெயரில் படப்பிடிப்பை தொடர்கிறார்கள்.
பாங்காங்கில் படப்பிடிப்பு நடத்தவில்லையென்றால் சென்சார் கிடையாது என்று புதிய விதி எதுவும் வைக்கப்பட்டிருக்கிறதா தெரியவில்லை. தமிழில் படம் எடுக்கிற எல்லோரும் ஒரு ட்‌ரிப் பாங்காக் போய்விடுகிறார்கள். என்ன ரகசியம்… கண்டுபிடிப்பவர்களுக்கு பாங்காக் விமான டிக்கெட் பாpசு தரலாம்.
சரஸ்வதி சபதம் படத்துக்காக சமுத்திரம் தாண்டி பாங்காக், மலேசியா எல்லாம் செல்லவிருப்பதாக படத்தின் இயக்குனர் சந்துரு தெரிவித்தார். ஜெய், சத்யன், விடிவி கணேஷ் அப்புறம் ரா‌ஜ்குமார். இந்த நால்வரை பற்றிய கதைதான் சரஸ்வதி சபதம். முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.


ஏ‌ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் படத்தை தயா‌ரிக்கிறது.

No comments:

Post a Comment