சினிமாவில் நடிக்க வந்து சில வருடங்களிலேயே முன்னணி நடிகையாகி விட்டவர் ஸ்ருதிஹாசன். தற்போது தெலுங்கு படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வரும் அவர், டிடே என்ற இந்தி படத்தில் விலைமாதுவாக நடித்திருக்கிறார். இப்படத்தில் அவரது பெட்ரூம் காட்சி புகைப்படங்கள் வெளியாகியிருப்பதால் பலரும் ஸ்ருதியை விமர்சித்து வருகின்றனர்.
ஆனால், அதற்கு பதிலளிக்கும் வகையில், சினிமாவில் நடிப்பவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். மேலும், நடிப்பவர்கள் எடுத்துக்கொள்ளும் கேரக்டருக்கேற்ப நடித்தாக வேண்டிய நிலை உள்ளது. அப்படி நடிக்கிறபோதுதான் அந்த கேரக்டர் முழுமை பெறும். அதனால்தான், விலைமாது ரோல் என்கிறபோது விலைமாதுவாகவே மாறி விடுகிறேன். அதனால் இதை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், என்னைப்பொறுத்தவரை வாழ்க்கை முழுவதும் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கவே ஆசைப்படுகிறேன். அதனால் எதிர்காலத்தில் நான் திருமணம் செய்து கொள்ள முற்படும்போது, என்னை புரிந்து கொண்டு, எக்காரணம் கொண்டும் என் நடிப்புக்கு தடைபோடாதவரையே திருமணம் செய்து கொள்வேன் என்கிறார் ஸ்ருதிஹாசன்.
No comments:
Post a Comment