Thursday, July 4, 2013

சினிமா இயக்குனர் மீது திருநங்கை ரோஸ் பரபரப்பு புகார்

டி.வி.நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் திருநங்கை ரோஸ். தற்போது ‘வாய்மை’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் இன்று மதியம் திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து சினிமா இயக்குனர் செந்தில்குமார் மற்றும் உதவி இயக்குனர் சீனு ஆகியோர் மீது பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-
நான் ‘வாய்மை’ என்ற படத்தில் திருநங்கை கலெக்டராக நடித்து வருகிறேன். இந்த படத்தை செந்தில் குமார் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை மாநிலக்கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
நேற்று காலையில் சூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது படப்பிடிப்பு குழுவினருடன் அனுமதி பெற்று காரில் வெளியில் சென்றேன். அண்ணாசாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் இன்னோரு காரில் சினிமா உதவி இயக்குனர்கள் சிலர் என்னை தொடர்ந்து வந்தனர்.
அவர்கள் எனது காரை மறித்து திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். எனது கார் கண்ணாடியை உடைத்து கொலை செய்ய முயன்றனர். இதற்கு டைரக்டர் செந்தில்குமாரும், உதவி இயக்குனர் சீனுவும்தான் காரணம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தன்னிடமிருந்த வீடியோ ஆதாரங்களையும் போலீசாரிடம் கொடுத்தார்.

No comments:

Post a Comment