Thursday, July 4, 2013

உதயநிதி, சந்தானம் நடிக்கும் நண்பேன்டா

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு நண்பேன்டா டைட்டில்தான் முதலில் பரிசீலனையில் இருந்தது. இப்போது அதே பெயரில் அதே உதயநிதி நடிக்க விரைவில் ஒரு படம் ஆரம்பமாகிறது.
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்து வரும் உதயநிதி மீண்டும் அவரது இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். அதற்கு முன் அவர் நடிக்கயிருக்கும் படம்தான் நண்பேன்டா.
இந்தப் படத்தை ராஜேஷின் அசிஸ்டெண்ட் ஜெகதீஷ் இயக்குகிறார். உதயநிதியுடன் சந்தானமும் முக்கியமான வேடத்தில் (என்ன முக்கியமான… வழக்கமான நண்பன் வேஷம்தான்) நடிக்கிறார். ஹீரோயின் மற்றும் பிற விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை.
உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நண்பேன்டாவை தயாரிக்கிறது

No comments:

Post a Comment