சென்னை: அன்னக்கொடி படத்தை கண்டித்து சில அமைப்புகள் இயக்குனர் பாரதிராஜாவின் வீட்டை முற்றுகையிடப் போவதாக கிடைத்த தகவலை அடுத்து அவரின் நீலாங்கரை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுமுகம் லட்சுமண், கார்த்திகா, மனோஜ் உள்ளிட்டோர் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் அன்னக்கொடி. படத்தில் தலித் பையனான லட்சுமண், தேவர் வீட்டு பெண்ணான கார்த்திகாவை காதலிக்கிறார். இந்த சாதி கலப்புக்கு படம் வெளியாகும் முன்பே எதிர்ப்பு கிளம்பியது.
தேவர் அமைப்பு சார்பில் படத்தை தென் மாவட்டங்களில் வெளியிட தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இது தவிர படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வர்டு பிளாக் உள்ளிட்ட சில அமைப்புகள் பாரதிராஜாவின் சொந்த ஊரான தேனியில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின.
இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டை முற்றுகையிட்டு சில அமைப்புகள் போராட்டம் நடத்தப் போவதாக வந்த தகவலை அடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment